Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

13012769_1173306869370414_28629023632316

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன் அம்பேத்கர் பிறந்தநாள் பகிர்வு

 

 

ambedkar.jpg

 

அம்பேத்கர் இந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர்.. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே போராடினார் அவர் என்கிற பொது பிம்பத்தில் இருப்பதுவருத்தத்துக்குரியது.  எண்ணற்ற இன்னல்களுக்கு உள்ளாகி இருட்டில்,துன்பத்தில்,அடக்குமுறையில் உழன்று கொண்டிருந்த இந்த தன் சக மக்களின் துயரத்துக்கு என்ன காரணம் ,சாதிகள் எப்படி தோன்றின ,சாதியம்
எப்படி சக மனிதனை சமமானவனாக கருதாத துயர் மிகுந்த போக்கை வளர்த்தது என்பதைப்பற்றி அவர் செய்த ஆய்வு அதைத்தொடர்ந்து எழுதிய நூல்கள் எல்லாமும் அசாத்தியமானவை.

எந்த இடத்திலும் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது என்பதற்காக வரிக்கு வரி அவர் கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் உண்மையை மட்டும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் தீனக்குரலாக எழுப்பிய அற்புதம் அவரால் செய்யப்பட்டது.  வர்க்கத்துக்கும் வர்ணத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஆங்கிலேயருக்கு
அவர் எடுத்துக்காட்டும் புள்ளி அற்புதமானது. அது சமூகத்துக்கு எதிரானது அல்ல,பணம் பெற்றால் ஒருவர் முன்னேறி வர்க்க அடுக்கில் மேலே போய் விடலாம்-இங்கே அது சாத்தியம் இல்லை என்று தெளிவாக பதிவு செய்தார் அண்ணல்.

எப்படி கல்விக்கூடங்கள், அரசின் கவுன்சில்கள், வேலை செய்யும் இடங்கள்,வர்த்தகம் என்று பல்வேறு புள்ளிகளில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ஆதாரங்களோடு அவர் அடுக்கும் பொழுது அட போடுவீர்கள் நீங்கள் பலருக்கு தெரியாத தகவல் இந்தியாவின் ரிசர்வ் வங்கி உருவானது அண்ணலின் வழிகாட்டுதலில் தான். காந்தி தேசத்தின் விடுதலைக்கு பின் சமூகம் சார்ந்த விடுதலையை முன்னெடுப்பதை பார்ப்போம் என்ற பொழுது அவரோடு எண்ணற்ற உரையாடல்கள் நிகழ்த்திய அண்ணலின் பொறுமையை நாம் கற்க வேண்டும்  .பூனா ஒப்பந்தத்தை காந்தி தன் உண்ணா நோன்பின் மூலம் மாற்ற முயன்ற பொழுது துயரத்தோடு விட்டு கொடுத்த அண்ணலின் கருணை பெரும்பாலான தலைவர்களுக்கு இல்லாதது.

அவருக்கிருந்த பல்துறை புலமை இன்றைக்கும் சிலிர்ப்பை உண்டு செய்கிறது .பொருளாதாரம், சட்டம், வரலாறு, சமூகவியல், புவியியல் என எண்ணற்ற துறைகளில் தனக்கான தேடலை விடாமல் செய்தவர் அவர்.  இந்திய அரசியல் சட்டத்தை உடனிருந்த உறுப்பினர்கள் பலர் நகர்ந்து கொள்ள ஒற்றை ஆளாக கிட்டத்தட்ட செதுக்கி உருவாக்கிய பெருமை அண்ணல் அவர்களையே சாரும். அதற்கு பின்னும் ஒரு முன்கதை உண்டு. இந்தியாவின் முதல் அமைச்சரவை பட்டியலோடு காந்தியை பார்க்க நேரு போன பொழுது அதில் அண்ணலின் பெயர் இல்லை. "எங்கே 'அம்பேத்கர்' அவர்களின் பெயர் ?"என காந்தி கண்களை குறுக்கி கேட்டார். நேரு அண்ணலை சட்ட அமைச்சராக ஆக்கினார்.

கிராம சுயராஜ்யம் என்கிற காந்தியின் வழியில் போனால் சாதியம் ஊற்றெடுக்கிற மண்ணாக இம்மண் போய் விடும் என்பதில் அண்ணல் தெளிவாக இருந்தார். அவர் இயற்றிய சட்டங்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு எனும் கனி கிடைக்கபெற்றது. அதையும் தொடர்ந்து அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அண்ணல் சொல்லவில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். அவர் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் தான் இந்த நாட்டை செலுத்தும் வாகனம் என்றால் அது மிகையில்லை. இந்த நாட்டின் ஜனநாயகம் இன்னமும் உயிர்திருப்பதற்கு அண்ணலின் தொலைநோக்கு முக்கிய காரணம்.


பொதுவான இந்து சிவில் சட்டத்தை கொண்டு வர அவர் எடுத்த முயற்சிக்கு மதவாத சக்திகள் கடும் எதிர்ப்பை கிளப்பின. நேருஒத்துழைக்க வில்லை என எண்ணி அண்ணல் பதவி விலகினார். அவர் மரணமடைந்த சில மாதங்களில் அதை நேரு ஆறு தனித்தனி சட்டங்களின் மூலம் செய்து அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தினார் அண்ணலிடம் இருந்து படிக்கவேண்டிய மிகமுக்கிய பாடம் உண்டு. எதையும் அறிவுப்பூர்வமாக அவர் கையாண்டார். வெறுப்பால் எதையும் கட்டமைக்கவில்லை அவர். அவர் எழுதிய எந்த கட்டுரையிலும் இந்த நாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிற வார்த்தைகளை நீங்கள் பார்க்க முடியாது. மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்கிற முனைப்பு அவரின் எழுத்தில் சிந்தனையில் தெரியும். சமூக விடுதலைக்காக ஏன் இந்த நாட்டின் இயக்கத்துக்கான விதை போட்ட அண்ணலை நினைவு கூர்வோம்.

vikatan

  • தொடங்கியவர்

இந்தியாவின் இரும்பு பெண் யாஸ்மின் மனாக்!

 

yasminvc11.jpg

யாஸ்மின் மனாக், இவர் 36 வயதுடைய பெண் மட்டுமல்ல IBBF (Indian Body Building Federation) ஆல் மிஸ் 2016ஆக தேர்வு செய்யப்பட்ட பெண்.

ஒரு சராசரி பெண்ணைப் போல காட்சியளிக்கும் இவர், கடந்த 17 வருடமாக பளுதூக்குதலில் (weight lifting) ஈடுபட்டு வருகிறார். இதுவரை யாஸ்மின் 2 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார்.


இவர் கூறுகையில்," ஆண்கள் மட்டுமே அநேகமாக இருக்கும் இத்துறையில் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், என் வீட்டாரும், நண்பர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். பல பேர் என்னை பற்றி பல விதமாகப் பேசினாலும் நான் அதை கண்டுகொள்ளாமல் வந்ததே என் வெற்றிக்கு காரணம்". மேலும், "சராசரி பெண்ணாக இருப்பது மிகவும் போர் அடிக்கும் ஒரு விஷயம். எனக்கு பளுதூக்குதல் மிகவும் பிடிக்கும். ஏற்கெனவே மற்ற ஆண்களைவிட அதிக சதை உள்ளது".

தற்போது யாஸ்மின் குர்கௌனில் 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி அளிக்கும் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் இப்போது 2016-ல் பூட்டானில் நடக்கவிருக்கும் Asian Bodybuilding and Physique Championshipல் கலந்து கொள்வதற்கு கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்னும் பல தங்க பதக்கங்களை வெல்ல வாழ்த்துக்கள்!



vikatan

  • தொடங்கியவர்

வசந்த மாளிகை படப்பிடிப்பு தளத்தில் (On the set).

  • தொடங்கியவர்

12990960_1701098323482707_86179120607459

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

மனம்... திருமணம்

p961.jpg

மேட்ரிமோனியல் வலைதளம் உருவாக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சார்லஸுக்கும் வினிதாவுக்கும் காதல் திருமணம் நடந்தது.

- அ.மணிமாறன்

வேண்டுதல்

p962.jpg

அடுத்த ஆண்டுக்குள் மாடி வீடு கட்ட வேண்டும் என்று மரத்தடிப் பிள்ளையாரிடம் கோரிக்கைவைத்தான் செந்தில்.

- தங்க.நாகேந்திரன்

ஜன்னல் ஸீட்

p963.jpg

ரயிலில் கூட்டத்தில் முண்டியடித்து ஏறி ஜன்னல் ஸீட்டாகப் பிடித்து உட்கார்ந்தவன், இறங்கும் வரை செல்போனில் மூழ்கியிருந்தான்.

- ஜோஷனா

நிலாப் பாட்டி

p964.jpg

`நிலாவில் பாட்டி இப்போது பர்கர் சுட்டு விற்கிறாளாம்...’  - என் பேத்தி எனக்குச் சொன்னாள். 

- எஸ்கா 

தலைவர்

p965.jpg

தன் உயிருக்குப் பயந்து ஃபைட் சீன்களில் டூப் நடிகரை நடிக்கவிட்ட ஹீரோ, தமிழக மக்களைக் காப்பாற்ற தனிக்கட்சி தொடங்கினார். 

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஐடியா... ஆபரேஷன்

p966.jpg

நீண்ட நாட்களாகப் பிடிபடாமல் தண்ணிகாட்டிய பயங்கர ரெளடியைப் பிடிக்கத் திட்டம் வகுத்த புது இன்ஸ்பெக்டர், ஏட்டய்யாவுக்கு ஒரு வேலை கொடுத்து வெளியூர் அனுப்பினார்.

- இரா.இரவிக்குமார்

அல்வா

“அல்வா விற்கிறதுக்கு ஆம்னி வேன் எதுக்கு?'' என்றாள் மனைவி.

p967.jpg

“இல்லேன்னா, `திருநெல்வேலி அல்வா’னா, எவனும் நம்ப மாட்டானே!” என்றான் கணவன். 

- பிரகாஷ் ஷர்மா

ரிசல்ட்

p968.jpg

தேறுவது கடினம் என்ற முடிவுடன்  “கடவுளே... எப்படியாவது காப்பாற்று” என்று வேண்டிக்கொண்டு தேர்வு அறையில் இருந்து வெளியில் வந்தபோது, அவனிடம் டுட்டோரியல் கல்லூரியின் விளம்பர நோட்டீஸை யாரோ திணித்தார்.

- தங்க.நாகேந்திரன்

குளிர்

p969.jpg

``குளிர் அதிகமா இருக்கும்மா... பெட்ஷீட்டைப் போத்திக்கோ’’ - அப்பா சொன்னவுடன், குழந்தை ஒரு பெட்ஷீட்டை வாங்கிப் போத்தியது பக்கத்தில் படுக்கவைத்திருந்த தன் பொம்மைக்கு.

- வேம்பார் மு.க.இப்ராஹிம்

யூ ஆர் அப்பாய்ன்டட்!

p9610.jpg

வேலை தேடும் பையனுக்கு எளிதாக பெண் கிடைத்துவிடுகிறது... சினிமாவில்.

- பெ.பாண்டியன்

vikatan

  • தொடங்கியவர்

ஜேம்ஸ் பாண்ட் பொருட்காட்சி
==============================
ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்காக பாரிஸில் ஒரு பொருட்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இருந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜேம்ஸ் பாண்ட்டின் முதல் திரைப்படம் 1962இல் வெளியானது.

  • தொடங்கியவர்

ஆனி சலிவன்

 

 
 
salivan_2813696h.jpg
 

பார்க்கவும் கேட்கவும் இயலாத ஹெலன் கெல்லர் வாழ்க்கையில் புதிய விடியல் பிறக்க வழிவகுத்துத் தந்தவரும் தலைசிறந்த ஆசிரியருமான ஆனி சலிவன் ( Anne Sullivan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.

* மசாசூசெட்ஸ் மாநிலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த (1866) ஜொஹான்னா மான்ஸ்ஃபீல்ட் சலிவன், ஆனி என்று அழைக்கப்பட்டார். பெற்றோர் கல்வியறிவு இல்லாதவர்கள். இவருக்கு எட்டு வயதாக இருந்தபோது டிராக்கோமா என்ற கண் நோயால் பீடிக்கப்பட்டு கண் பார்வை போய்விட்டது.

* அம்மாவும் அதே வருடத்தில் இறந்தார். குடிகார அப்பாவோ தன்னால் இரண்டு குழந்தைகளையும் நெருக்கடி மிகுந்த ஒரு இலவச விடுதியில் சேர்த்துவிட்டார். அங்கு போய்ச் சேர்ந்த மூன்றே மாதங்களில் இவளது தம்பி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான்.

* பார்வையை இழந்ததால் எழுதப் படிக்கவோ அல்லது வேறு திறன்களையோ கற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த இடத்தைப் பார்வையிட வந்த ஒரு அதிகாரி அவளை பாஸ்டனில் உள்ள பெர்கின்சன் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

* 1880-ல் சலிவன் தன் படிப்பைத் தொடங்கினார். படிப்பில் கவனம் செலுத்தி விரைவில் நல்ல முன்னேற்றம் கண்டார். அங்கு பயின்று முதன் முதலாகப் பட்டம் பெற்ற லாரா பிரிட்ஜ்மான் என்ற கண் பார்வையற்ற, காது கேளாத பெண்மணியிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டார்.

* அங்கிருந்த சமயத்தில் இவரது கண்ணில் தொடர்ச்சியாகப் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இவை குறிப்பிடத்தக்க வகையில் இவரது பார்வையை மீட்டன. 20 வயதில் பட்டம் பெற்றார். கண் பார்வையற்ற, காது கேளாத தனது ஏழு வயதுக் குழந்தை ஹெலனுக்கு ஆசிரியர் தேவை என ஆர்தர் கெல்லர் என்பவர் இவர் பயின்ற நிறுவனத்தின் இயக்குநரிடம் கேட்க, அவர் அந்த வேலைக்கு இவரை சிபாரிசு செய்தார். 1887-ல் சலிவன் அலபாமாவில் இருந்த அவர்கள் வீட்டுக்குச் சென்றார்.

* ஹெலனை இவர் சந்தித்த கணத்தில் இருவருக்குமிடையே அற்புதப் பிணைப்பு மலர்ந்தது. 49 ஆண்டு காலம் நீடித்த இந்த மகத்தான உறவில் முதலில் ஹெலனுக்கு இவர் ஆசிரியராகவும், பின்னர் நல்ல துணையாகவும் இறுதியில் நண்பராகவும் மாறினார்.

* குழந்தைக்கு புரியும் வகையில் தன் போதனை முறையை மாற்றினார். தண்ணீர் கொட்டும் குழாயின் அடியில் அவள் கையை நீட்டிப் பிடித்து, உள்ளங்கையில் water என்று மீண்டும் மீண்டும் எழுதினார். அப்போதுதான் அந்தக் குழந்தைக்கு, தன் கையில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளுக்கு ஒரு பெயர் உள்ளது, அதுதான் இது என்பது புரியத் தொடங்கியது.

* ஆறே மாதங்களில் இவர் ஹெலனுக்கு 575 வார்த்தைகள், ஒரு சில பெருக்கல் வாய்ப்பாடுகளையும் பிரைய்லி முறையையும் கற்றுக்கொடுத்தார். 1888-ல் ஹெலனை பாஸ்டனுக்கு அழைத்துச் சென்று பெர்கின்சன் பள்ளியில் சேர்த்து அவருடனே தங்கி, கற்பித்துவந்தார்.

* ஹெலன் ரெட்க்ளிஃப் கல்லூரியில் பட்டம் பெறும்வரை அவருக்கு இவர் உறுதுணையாக நின்றார். எஜுகேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்காட்லாந்து சலிவனுக்கு ஃபெலோஷிப் வழங்கியது. டெம்பிள் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகங்கள் கவுரவப் பட்டங்களை வழங்கின. இவரைக் குறித்து ஹெலன் கெல்லர் எழுதிய ‘மை டீச்சர்’ என்ற நூல் மிகவும் பிரசித்தம்.

* சுய முனைப்பால் மகத்தான உயரங்களை எட்டியவரும் உலகுக்கே ஒரு முன்னுதாரண ஆசிரியராகவும் பரிணமித்த ஆனி சலிவன் 1936-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 70-வது வயதில் காலமானார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

சொல்வனம்

 

ஒளி

முறைத்தபடியே செல்லும்
வாகனங்களைப் பார்த்து
சிரித்துக்கொண்டே கடக்கிறது.
பகலில்
விளக்கெரிந்து செல்லும்
பைக் ஒன்று.

தரிசனம்

யானைச் சாமிக்கு
கழுத்தில்
தங்கச் சங்கிலி
சாமி யானைக்கு
காலில்
இரும்புச் சங்கிலி.

    - ந.சிவநேசன்.

தொலைந்துபோனவன்

அரவமற்ற ரயில்நிலையத்தின்
சிமென்ட் இருக்கையில்
அழுக்கேறிய கறுப்பு உடையில்
பரட்டைத்தலையுடன் வீச்சமடிக்க
அவன் படுத்துக்கிடக்கிறான்.

அவன் உடை வண்ணமாகயிருந்திருக்கலாம்.
யாரோ எறிந்துவிட்டுச் சென்ற
பழைய துணி கறைகளின்
படிமங்களாகிக் கறுத்துவிட்டது.

அவன் இதுவரை பேசியதில்லை.
ஆதி மனிதனாகவே இருந்தான்
மொழிகள் அறியாததால்.

மழையும் வெய்யிலும்
குளிரும் உஷ்ணமும் பசியும்கூட
அவனின் நண்பர்களாகவே இருந்தன.

அவன் உண்கிறானா உறங்குகிறானா
உயிருடனிருக்கிறானா...
யாருக்குமே அக்கறை இல்லை.

ரயில் வரும் சமயங்களில் மட்டும்
ஆட்கள் வருவதும் போவதுமாகயிருந்தார்கள்
மனசில் நிறைந்த அழுக்குகளுடன்.

அந்த நேரங்களில் மட்டும்
படபடப்புடன் தேடத் தொடங்கும்
அவன் கண்கள்.
ரயில் போகும் வரையில் தேடுதல் நீடிக்கும்.

இப்படித்தான் நாட்களெல்லாம்
பல வருடங்களாகிவிட்டன.
அவன் உயிருடன் இருக்கும் வரையில்
தேடத்தான் போகிறான்.

கறுப்பு வெள்ளைக் காலத்தின்
பால்ய வயது ரயில் பயணமொன்றில்
தொலைந்துபோன/தொலைக்கப்பட்ட தன்னை.

- வலங்கைமான் நூர்தீன்

லட்டு மாதிரி இருப்பது...

p56a.jpg

காலையில் வேலைக்குக் கிளம்புகையில்
இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி
‘அங்கிள்... லட்டு மாதிரி இருக்கீங்க’ என அதிரடித்தாள்.
‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று
சொல்லிவிட்டு வரும் வழியில்,
பருத்த உடலா,
மஞ்சள் சட்டையா
என் கொஞ்சல் பேச்சா
லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி,
லட்டுகள் உருளும் சாலையில் ஓடி
லட்டைக் குடித்து
லட்டை உண்டு,
லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில்,
வீடு திரும்பும் வரை
சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது.
லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால்
யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது.#

vikatan

  • தொடங்கியவர்

நோ வாட்டர்... நோ சாப்பாடு!

 

 

பிரகலாத் ஜனி! இவரைப்பற்றி செய்தி வெளியிடாத வடநாட்டு டி.வி, பேப்பரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ரொம்பப் பிரபலம். அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா?

p106a.jpg

பிரகலாத்தின் ஒரிஜினல் பெயர் சுன்ரிவாலா. ஊர் ராஜஸ்தான். ஏழு வயதில் வீட்டைவிட்டு ஓடிவந்து காட்டில் வாழத் தொடங்கினார். 11 வயதாகும்போது ஆன்மிகத்தில் இறங்கியவர், துர்க்கையை வழிபடத் தொடங்கினார். தானும் சிகப்பு நிற சேலை உடுத்தி, நீளமாக முடி வளர்த்து, ஏகப்பட்ட நகைகளையும் போட்டு துர்க்கை கெட்டப்புக்கு மாறினார். இதனால் எல்லோரும் அவரை மாதாஜி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஆன்மிகத்தில் தீவிரமாக இறங்கியவர் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். தன்னுடைய தியான சக்தியின் மூலம் சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருந்து காட்டுகிறேன் என்று 1940-ம் வருடம் சவால் விட்டவர் 76 வருடங்களாகத் தொடர்ந்து சாப்பிடாமலேயே இருக்கிறாராம். அடர்ந்த காட்டுப்பகுதில் இருக்கும் ஹெர்மிட் என்ற கோயிலுக்கு அதிகாலை நான்கு மணிக்கு வரும் அவர் நாள் முழுக்க தியானத்திலேயே இருப்பாராம். இப்போ இவருக்கு வயது 86. குஜராத்தில் வாழ்ந்து வருகிறார்.

இவர் சொல்றது உண்மையா இல்லை கதை விடுகிறாரா என்று கண்டுபிடிக்க நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் ஷா என்பவர் அஹமதாபாத்தில் இருக்கும் ஸ்டெர்லிங் மருத்துவமனைக்கு இவரைக் கூட்டிவந்து தனி அறையில் 10 நாட்கள் அடைத்துவைத்து ஆராய்ச்சி செய்தார். இதில் ரத்த டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஸ்கேன் டெஸ்ட் என்று நிறைய டெஸ்ட்களை எடுத்தார். அதுபோக யாருக்கும் தெரியாமல் ஏதாவது சாப்பிடுகிறாரா என்று கண்டுபிடிக்க ரூமைச் சுற்றி சி.சி.டி.வி கேமராவும் மாட்டிவைத்தார். 10 நாட்கள் 24 மணி நேரத் தொடர் கண்காணிப்பில் இருந்தும் பிரகலாத் எமாற்றுகிறார் என்று நிரூபிக்க டாக்டர்களுக்கு ஒரு பாயின்ட் கூடக் கிடைக்கவில்லை. ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் ஹுமானிடிடேரியன் இன்ஷியேடிவ் என்ற அமைப்பின் இயக்குநர் டாக்டர் மைக்கேல் என்பவர் பிரகலாத் சாமியார் ரீல் விடுகிறார் என்று சொல்கிறார். ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்து இல்லாமல் போனா, முதலில் கல்லீரல் செயலிழக்கும், அடுத்து இதயத்துடிப்பு அதிகமாகும், சீக்கிரமே இறந்துபோய் விடுவார்கள். அதனால் இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்கிறார். அமெரிக்க ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் கிளிப்டன் என்பவரும் ஒரு மனிதன் அதிகபட்சம்  20 நாட்களுக்கு மேல் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உயிர் வாழ முடியாது என்கிறார். பிரகலாத்தை ஆராய்ச்சி செய்த அஹமதாபாத் டாக்டர்களிடம் இந்த அமெரிக்க டாக்டர்ஸ் கேட்பது ஒன்றுதான். ‘அவர் உங்க முன்னால் சாப்பிடாமல் இருக்கிறது ஓகே. ஆனால் அவர் குளிக்கும்போது பல் விளக்கும்போது பாத்ரூம்ல என்ன செய்கிறார் என்று கண்டுபிடியுங்கள்’ என்கிறார்கள். இந்த அமெரிக்க டாக்டர்ஸ் மட்டும் இல்லை. பகுத்தறிவாளர்களும் இதை நம்பத் தயாராக இல்லை.

எது உண்மைனு தெரியலையே!

vikatan

  • தொடங்கியவர்

ஏப்ரல் 15: உலக புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு

12985444_1116208728437916_30673601171506

 

அறிவியல் கலைஞன்!

கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்றுவாழ்வில் முன்னேறிய வர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். இதோ அந்தப் பட்டியலில் இன்னொருவர்...

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி.

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.

டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.

டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார்.

மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார்.

ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். டாவின்சிக்கு குதிரைச் சவாரி மிகவும் பிடித்த விளையாட்டு.

கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார்.

மிலன் நகரத்தில் ஆட்சி செய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டாவின்சி. ஸ்பார்ஸா கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். ஆல்பஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்க சென்றார் டாவின்சி. மலையின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ட காட்சிகளை வரைந்தார். அந்த ஓவியம் மதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அதை ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் அதிக விலை கொடுத்து வாங்கி தன் அரண்மனையில் காட்சிக்கு வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஏசுநாதர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியான ‘கடைசி இரவு விருந்து’ எனும் நிகழ்ச்சியை கன்னிமாடத்தின் சுவரில் வரைந்தார். சுவரின் உறுதியற்ற தன்மையின் காரணமாக அந்த ஓவியம் பழுதடைந்தது.
டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார். கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.

மிலன் நகர் மீது ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது ஸ்பார்ஸாவையும் அவரது ஆட்களையும் நகரத்தை விட்டு விரட்டினார்கள். டாவின்சியும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வெனிஸ் மற்றும் ரோம் நகரில் சில காலம் தங்கி இருந்தார். மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால் டாவின்சியும் திரும்பினார்.

டாவின்சிக்கு சம்பளமாகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்தான் ஸ்பார்ஸா. இதனால் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் டாவின்சி.

தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும்.

பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்.

லியானர்டோ டாவின்சியின் புகழை, காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘மோனலிசா’ ஓவியம் இன்று மட்டுமின்றி என்றும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும்.

vikatan

  • தொடங்கியவர்

'நான் பயந்தது இதற்காகத்தான்'- ரகசியத்தை உடைத்த சச்சின்!

 

sachinflim.jpg

 

உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதை விட கேமராவை எதிர்கொள்வதே பயத்தை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் முகமது அசாருதீன், மகேந்திரசிங் தோனி ஆகியோரை தொடர்ந்து, சச்சினின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. 'சச்சின்: ஏ பில்லியன் டிரீம்ஸ்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி இயக்குனர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் சச்சின் நடிகராகவும் அறிமுகமாகிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சச்சினிடம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது, உலகின் தலைசிறந்த பவுலர்களை எதிர்கொள்வதை விட, கேமராவை எதிர்கொள்வது மிகுந்த பயத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார்.

vikatan

  • தொடங்கியவர்

தமிழ், சிங்களம் அடங்கலாக 11 மொழிகளில் ஷாருக்கானின் Fan Anthem

 


தமிழ், சிங்களம் அடங்கலாக 11 மொழிகளில் ஷாருக்கானின் Fan Anthem

பொலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ள Fan படத்தில் இடம்பெரும் பாடல் ஒன்று தமிழ், சிங்களம் அடங்கலாக 11 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, அரபிக், ஒடியா ஆகிய மொழிகளிலும் தனித்தனியாக ஒரே அர்த்தம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Fan Anthem என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், 11 மொழிகளை உள்ளடக்கி ஒரே பாடலாகவும் (Mashup) வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

மனிஷ் சர்மா இயக்கத்தில் சேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

  • தொடங்கியவர்

12 நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டால் என்ன ஆகும்?

 

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட  பல சத்துக்களை கொண்டது.  ஆனால் அதனை மட்டுமே உண்டால் என்ன ஆகும்? அப்படி 12 நாட்கள் வெறும் வாழைப்பழம் மட்டுமே உண்டிருக்கிறார் ஒரு பெண்.

அரிசி, கோதுமை, சோளத்திற்க்கு அடுத்தபடியாக பலரால் உண்ணப்படும் உணவு வகையாக இது விளங்குகிறது. அதிக நுண்ணூட்டச் சத்துகள், குறைந்த விலை, இதையெல்லாம் தாண்டி, எளிதாக கிடைக்கும் உணவாக இது இருப்பதால், அன்றாட உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது நல்லது. மற்ற உணவுகளை விடுத்து, வெறும் வாழைப்பழத்தை மட்டுமே உண்டு வந்தால் உடல் எடை குறையும். ஆனால், அன்றாட உணவுடன் சேர்த்து, வாழைப்பழங்களை உண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

storyimg1439795251.jpg

உடலை டீடாக்ஸ் செய்வதற்கும், உடல் எடையை இயற்கையாக குறைப்பதற்கும் யூலியா டர்பத் எனும் ஊட்டச்சத்து நிபுணர், 12 நாட்கள் வெறும் வாழைப்பழத்தையே உண்டு வந்துள்ளார்.

என்ன செய்தார்?

யூலா டர்பத்தும், அவரது பயிற்சியாளரும் இணைந்து "ஒரு கனி உணவு" முறையை முயன்றனர். இதன்படி, ஏதாவது ஒரு கனியை (இவர்கள் பயன்படுத்தியது வாழைப் பழம்) மட்டுமே ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உணவாக உட்கொண்டு இருக்க வேண்டும்.

பனானா டயட்!

எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அத்தனை பழங்களை சாப்பிடலாம், ஆனால் வேறெதுவும் சாப்பிடக் கூடாது. (வாழைக்கு பதிலாக வேறு பழத்தையும் சாப்பிடலாம்.) சிலர், நாள் முடிவில் உண்ணும் உணவில் ஏதேனும் கீரை வகைகளை சேர்த்துக் கொள்வதும் வாடிக்கை.

நன்றாக பழுத்த பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். எவ்வளவு உண்டால் போதும் என்று தோன்றுகிறதோ அவ்வளவு பழம் உண்ணலாம். குறைவாக உண்ண வேண்டிய அவசியமில்லை.

குறைந்தது 3 லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.

சாதாரண அளவு உடற்பயிற்சி செய்யலாம்.

இந்த சில நாட்களில் உடலில் ஆழமான டீடாக்ஸ் மற்றும் மறுசீரமைப்பு நடக்கும்.  எனவே தேவையான அளவு ஓய்வு அவசியம்.

 


இந்த நாட்களில் என்ன நடந்தது?

டீடாக்ஸ் நடப்பதற்கான ஒரு பெரிய அறிகுறி கூட இல்லாமல் இருந்தது. இந்த "பயணம்" முழுவதும் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

ஒரு தெளிவான சிந்தனை தெரிந்தது, வேலைகளை சுலபமாக மறுசீரமைக்க முடிந்தது.

உடல்நிலை சமச்சீராகவும் நேர்மறையாகவும் இருந்தது.

எனது தோல் இயற்கையாகவே பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறியது.

22 கிலோ மீட்டர்கள் ஓடிவிட்டு வந்த பிறகு, முன்பை விட குறைந்த நேரத்தில் சகஜ நிலைக்கு வர முடிந்தது, அதுவும் கால்களில் வழக்கமாக தெரியும் வலிகள் தெரியாமல். உடலின் வளைந்து கொடுக்கும் தன்மை உயர்ந்து இருந்தது.

வாழைக்கு உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உள்ளது. இதில் இருக்கும் கலோரிகள், நாம் உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டுகளின் கலோரிகளுக்கு நிகரானது, ஆனால் இதில் நார்சத்து, தாதுக்கள்,  புரதம் என்று இருப்பதால் உடல் எடையை கூட்டாது. மேலும் பெக்டின் எனும் வேதிப் பொருள் இதில் அடங்கியிருப்பதால்,  வாழையை சாப்பிட்டு பல மணி நேரங்களுக்கு நமக்கு பசி வராமல் இருக்க முடியும்.

உடலில் சர்க்கரை அளவு ஏறாமலும் வாழைப்பழங்கள் பார்த்துக் கொள்ளும்.

vikatan

  • தொடங்கியவர்

வெயில் இப்படி அடிச்சா, ஆம்லெட்டே போடலாம்! (வீடியோ)

 

ழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிறது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தற்போது அடித்து வரும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் வகையில்,  தெலங்கானாவில் பெண் ஒருவர், வெயிலில் ஆம்லெட்டே போடுகிறார்.

அந்த வீடியோ இங்கே...

vikatan

  • தொடங்கியவர்

உடைச்சு உடைச்சு விளையாடலாமா?

 

 

p96a.jpg

ந்தியாவில் கிரிக்கெட் எப்படியோ ஜப்பானில் சுய்காவரி விளையாட்டும் அப்படித்தான், செம ஃபேமஸ்!

‘பேரே வித்தியாசமா இருக்கே, என்னய்யா அந்த விளையாட்டு?’னு கேட்கிறீங்களா? பெரிசா ஒண்ணும் இல்லை பாஸ், தர்ப்பூசணிப் பழத்தைத் தரையில வெச்சு ஒரு பெரிய கம்பை எடுத்து அதை அடிச்சு துவம்சம் பண்ணினா அதுதான் சுய்காவரி. வெயில் காலம் வந்தாலே ஜப்பானில் சுய்காவரி ஃபீவர் ஸ்டார்ட் ஆகிடும்.

காலையில இருந்து கண்டதையும் தின்னுட்டு அது செரிக்க சாயந்தரம் ஆனதும் சுய்காவரி விளையாடுறாங்க. குறிப்பா மேற்கு டோக்கியோவுக்குப் பக்கத்துல இருக்கும் ஒகுடமாங்கிற இடத்துல சுய்காவரி விளையாட தினமும் பெருங்கூட்டம் கூடுது. அந்த இடம் முழுக்கத் தர்ப்பூசணியும் கையுமாவே ஆட்கள் சுத்தி வர்றாங்க. இது தவிர வருஷா வருஷம் சுய்காவரியை ஒரு திருவிழாவாவாகக் கொண்டாடி ஜப்பான் மக்கள் ஜாலியா இருக்காங்க.

p96b.jpg

ஆனாலும் இதுக்கு சில ரூல்ஸ் இருக்கு பாஸ். முதல்ல கண்ணைக் கட்டி விடுறாங்க, அடுத்து தர்ப்பூசணிப் பழத்தை மண்ணுல படாம பெட் ஷீட், காக்கி அட்டை மாதிரி ஏதாவது ஒண்ணை விரிச்சு அது மேல அலுங்காம குலுங்காம வைக்கிறாங்க. இப்போ கம்பு, குச்சி, துடைப்பம்னு கையில எது கிடைக்குதோ அதை வெச்சு உடைக்கலாம். ஆனா அந்த கம்பு ஒரு மீட்டர் நீளமாவும் ஐந்து சென்டிமீட்டர் அகலமாகவும் மட்டும்தான் இருக்கணும். இல்லேன்னா நீங்க எலிமினேட்தான் (என்னய்யா ரூல் இது!). அதிகபட்சமா மூணு நிமிஷத்துல பழத்தை உடைச்சிடணும். கிட்டத்தட்ட நம்ம ஊர் பானை உடைக்கும் போட்டி மாதிரிதான் இதுவும்.

p96c.jpg

இந்த விளையாட்டைப் பாதுகாக்க ஜப்பான் சுய்காவரி அசோசியேஷன் அப்படின்னு ஒரு அமைப்பே இருக்குனா பார்த்துக்கோங்க. 1991-ம் வருஷத்தில் இருந்து இந்த அமைப்பு ஆக்டிவா இருக்கு. நல்லா வருவீங்க பாஸ்!

2 hours ago, நவீனன் said:

வெயில் இப்படி அடிச்சா, ஆம்லெட்டே போடலாம்! (வீடியோ)

அவனவன் இஞ்ச ஒம்லேட்டாவே போகிறான் அதுக்குள்ளே இதுவா . ஒரு நாளைக்கு மின்சாரம் இல்லையெண்டா கருகி சாம்பலாயிடுவோம் .  போர்காலத்தில் 8 வருடம் மின்சாரமில்லையாம் 

  • தொடங்கியவர்

இவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'!

 

`அவ்ளோதாங்க உலகம்’னு சொல்லலாம். இந்த உலகத்துல தெரிஞ்சிக்க ’அவ்ளோ இருக்கு’னும் சொல்லலாம். அப்படியான  இந்த உலகத்தை நெட்டில் சுற்றி வந்து பார்த்தால், பல கண்மணிகள் தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவங்கள்ல சிலரைப் பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க!

அடிச்சாலே  கோலுதான்!

p112a.jpg

`ஒரே கல்லுல மூணு மாங்காய்’னு சொல்வோம்ல... அந்த மாதிரி ஒரே போட்டியில மூன்று கோல் அடித்து `தம்ஸ் அப்' காட்டியவர்தான் காட்லி லாய்டு. யார் இவங்கன்னு கேக்குறீங்களா? அமெரிக்க மகளிர் கால்பந்து அணியின் கலக்கல் கேப்டன்! உலகக்கோப்பை, ஒலிம்பிக் போட்டிகள்னு இதுவரைக்கும் 200 போட்டிகள்ல கலந்துக்கிட்டு 70 கோல்களை விளாசியிருக்கிறார் இந்த அம்மணி. 2008, 2012, 2015-ம் ஆண்டுகள்ல தங்கம் வென்று, மகளிர் உலகக்கோப்பை வரலாற்றிலேயே  இறுதிப்போட்டியில் மூன்று கோல்கள் அடித்த முதல் பெண்மணினு பேர் எடுத்திருக்காங்கன்னா பாருங்களேன்.

இவங்க சாதனையைப் பாராட்டுற வகையில் இவருக்கு கோல்டன் பால் விருதும், வெள்ளி பூட்ஸ்ஸும் வழங்கப்பட்டிருப்பது ஹைலைட். நேஷனல் அத்லெட் ஆஃப் தி இயர் 2008, FIFA கோல் ஆஃப் தி டோர்னமென்ட் விருது 2015, சர்வதேச மகளிர் விளையாட்டு அமைப்பின் சிறந்த வீராங்கனை விருது 2015 மற்றும் 2015-ம் ஆண்டுக்கான மிகச்சிறந்த கால்பந்து வீராங்கனை விருதுன்னு குவிச்சிட்டே இருக்காங்க!

இவங்க சாதனையை சொல்லி முடிக்குறதுக்குள்ள மூச்சு முட்டுதே!

`டிஜே' பொண்ணு.. நீ கலக்கு கண்ணு!

p112c.jpg

`வாழ வைக்கும் காதலுக்கு ஜே’னு சொல்லுறது நம்ம ஊர் ஸ்டைல். ’வாழ வைக்கும் இசைக்கு ஜேஜே’னு சொல்றாங்க டாட்டியானா அல்வாரேஸ். உலகின் அனைத்து டாப் ஷோக்களிலும் கலக்கிக்கொண்டிருக்கும் க்யூட் `டிஜே' இவர்!

உலகின் டாப் `டிஜே' ஷோக்களில் இவர் வாய்ஸும், மியூசிக்கும் `சும்மா அதிருதுல்ல...' ரகம் . இவரது பவர் டூல்ஸ் இசை நிகழ்ச்சியைக் கேட்காதவர்கள் அமெரிக்கவாசிகளாகவே இருக்க முடியாது என்று இசைப்பிரியர்கள் வர்ணிக்கிறார்கள். பள்ளி காலங்களிலிருந்தே மியூசிக் மிக்ஸில் கைதேர்ந்த டாட்டியானா, பல நாடுகளிலும் `டிஜே'வாக கால் பதித்திருக்கிறார். லண்டன்வாசியான இவர் ஒரு பிரபல மாடலும்கூட!

நீ கலக்கு செல்லம்!

ராக் வாக் கண்மணி!

இப்ப சொல்லப்போற கதையைக் கேட்டு யாரும் வாய்பிளக்க கூடாது. ஏன்னா, இவங்க வாங்குற சம்பள மேட்டர் அப்படி! ஒரு வருஷத்துக்கு 42 மில்லியன் டாலர்னா சும்மாதானா?! 2004-ல் இருந்து உலகில் அதிகம் சம்பாதிக்கும் நம்பர் 1 மாடல் இடத்தை பத்திரமா தன்னோட இடுப்புல முடிஞ்சு வெச்சிருக்காங்க இந்த பியூட்டி குயின் ஜிசெல் பண்ட்ச்சன்.

p112b.jpg

மைக்கேல் ஜாக்சனுக்கு எப்படி `மூன் வாக்'கோ... அந்த மாதிரி ஜிசெலுக்கு `ஹார்ஸ் வாக்'. யெஸ்... ஹார்ஸ் வாக்னு சொல்லப்படுற குதிரை நடை நடந்து ரசிகர்களைக் கட்டி வைத்திருக்கார் இந்தக் கண்மணி. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் சிறந்த ஆடை அணிபவர் பட்டியலிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்.

அப்போ இவங்களப் பார்த்து `வாக் வாக் ராக் வாக்’னு ஒரு ஹேண்ட் ஷேக் கொடுக்கலாமே!

ஃப்ரீ பேர்டு சமந்தா!

p112d.jpg

இத்தாலி நாட்டுக்காரரான சமந்தா க்ரிஸ்டோஃபொரெட்டி (அட, நம்ம செல்ஃபி புள்ள சமந்தா இல்லீங்க), சுமார் ஏழு மாசம் பூமியிலே இல்ல. நவம்பர் மாசம் விண்வெளிக்கு போனவங்க ஜூன் மாசம்தான் திரும்பி வந்துருக்காங்க. விண்வெளிக்கு போறப்ப சாப்பாடுங்கிறது ஒரு மாத்திரை மாதிரிதான் இருக்கும்னு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகமே ஆச்சரியப்பட, அங்க காபி குடிச்சிருக்காங்க சமந்தா!  ஸ்பேஸ்ல காபிய ரொம்ப மிஸ் பண்ண இவங்க, ஒரு தனி ராக்கெட் மூலமா காபி மெஷினை வரவழைச்சு அதுல எக்ஸ்பிரஸோ காபி போட்டு குடிச்சு, அது கூட ஒரு செல்ஃபியும் எடுத்துருக்காங்க.

அட, வாழ்க்கை வாழறதுக்குத்தானே!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வாட்ஸ் அப் கலக்கல்: சிஎஸ்கே இல்லாத ஐபிஎல்

 
 
meme_2815255h.jpg
 

m5_2815256a.jpg

 

m4_2815257a.jpg

 

m3_2815258a.jpg

 

m2_2815259a.jpg

  • தொடங்கியவர்

THE GREAT DICTATOR படத்தில் சாப்ளின் இறுதியில் பேசும் சிலிர்க்க வைக்கும் வசனம் - சிறப்பு பகிர்வு

 

சார்லி சாப்ளின் பிறந்த தினம் :

ph1%281%29.jpg

இன்றைக்கு தான் அமெரிக்கா தன் தேசத்தை விட்டு நகைச்சுவை மன்னர் சாப்ளினை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி வெளியேற்றியது !)

என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு ஆட்சியாளனாக இருக்க பிடிக்கவில்லை. அதுஎன் வேலையும் அல்ல, ஆட்சி செய்யவோ ஆக்கிரமிப்பு செய்யவோ எனக்குவிருப்பமில்லை. ஒரு பகுதி மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவோ என்னால்
முடியாது.எல்லாரையும் அன்பால் நிறைக்கவே நான் விரும்புகிறேன். இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான இடமொன்று ஒன்று உள்ளது.

எல்லா வளங்களையும் செழிப்புகளையும் அனுபவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் நமது அறிவு நம்மை கடுமையான மனிதர்களாக மாற்றி விட்டது. ஒரு இயந்திரத்தைப் போல அன்பற்ற மனிதர்களாக வாழத்தூண்டுகிறது. சர்வாதிகாரிகளின் நோக்கத்திற்கு நீங்கள் பலியாகாதீர்கள்

நாம் வேகத்தை வளர்த்துள்ளோம்
ஆனால் நம்மை உள்ளே அடைத்துள்ளோம்
பெருவளம் கொழிக்கும் இயந்திரங்கள்
நம்மை போதாமையில் விட்டுள்ளன.
நமது அறிவு நம்மை வெறுப்புடையோராக்கியுள்ளது.
நமது கெட்டித்தனம் நம்மை
கடுமையானோராயும், இரக்கமற்றோராயும் ஆக்கியுள்ளது.

மிக அதிகம் சிந்திக்கிறோம்; மிகச் சிறிதே உணர்கிறோம்.
இயந்திரங்களை விடவும் நமக்குத் தேவையானது மனிதத்தன்மை.
கெட்டித்தனத்திலும் மேலாக நமக்குத் தேவையானவை
இரக்கமும், மென்மையும்.
இப்பண்புகளின்றி வாழ்க்கை வன்முறையானதாகும்,
யாவும் இழக்கப்பட்டுவிடும்.
………….
எனக்குச் செவி கொடுப்பவர்களுக்குச் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்:

ph2%281%29.jpg

‘துயரப்படாதீர்கள்’ இத்துன்பம், இத்துயரம் பேராசைக்காரர்களால் வந்தது. அது பனிபோல் நீங்கிவிடும். மனித குலம் முன்னேறும் வேகத்தைக் கண்டு அஞ்சிக்குலை நடுங்கும் அற்பமனிதர்களால்தான் துன்பம் வருகிறது.

இனி மனிதர்களுக்கு இடையே உள்ள விரோதங்கள் மறைந்து விடும்; சர்வாதிகாரிகள் செத்து விழுவார்கள். மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரம் மக்களுக்கே திரும்ப வந்து சேரும். இந்த லட்சியத்துக்காக மக்கள் போரிட்டுப் பல தியாகங்கள் செய்கிறார்கள். அவர்கள் காப்பாற்றித்தரும் விடுதலை என்றுமே அழியாது!

எல்லாருக்கும் வேலை செய்யும் வாய்ப்பை வழங்கும் உலகாகும் அது. இளையவருக்கு எதிர்காலமும்,மூத்தோருக்கு பாதுகாப்பும் தரும் உலகை உருவாக்குவோம் என்று சொல்லித்தான் சர்வாதிகாரிகள் எழுகிறார்கள். அப்படி ஒன்று நடப்பதே இல்லை. பெரும் பொய் அது,அது அவர்களால் நடக்காது. ஜனநாயகத்தின் பெயரால் நாம் ஒன்று சேர்வோம்;புத்தம் புது உலகை படைப்போம் -

வீரர்களே! அடிமை வாழ்வுக்காகச் சண்டை போடுங்கள்! வெறுப்பு,பேராசை, பொறுமையின்மை ஆகியவற்றை கடந்த தேச எல்லைகளை துறந்த புத்துலகை உருவாக்க முயல்வோம் நாம். விஞ்ஞானமும் முன்னேற்றமும் மனித இனத்தை உந்தித்தள்ளும் ஒரு புது உலகத்துக்காகப் போரிடுவோம்! வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால் நாம் ஓரணி சேருவோம்!

ஹான்னா ! நான் பேசுவது உனக்கு கேட்கும் என்று நினைக்கிறேன். மேகங்கள் விலகி சூரியன் இருட்டை விரட்டும் பேரொளியோடு உதிக்கும் அந்த புத்துலகு. வெறுப்பு,பேராசை,மிருகத்தனங்களை கடந்து மனிதர் எழப்போகும் கருணை உலகம் அது. ஒவ்வொரு ஆன்மாவுக்கு சிறகு முளைக்கட்டும். அவன் பறக்கட்டும். அவன் வானவில்லை நோக்கிச் செல்வான். அந்தப் பயணம் அவனை நம்பிக்கையின் வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும். ஒளிமயமான மாட்சிமை மிகுந்த எதிர்காலம் உனக்கும் எனக்கும் நமக்கும் உரியதாகும்

vikatan

  • தொடங்கியவர்

ருமேனியாவை தெறிக்கவிடும் விஜய்யின் ‘செல்ஃபி’ பாடல்!

 

ருமேனியாவின் செக்டார்7 டிவியில் Nimic Nou என்றொரு நிகழ்ச்சி. நம்ம ஊர் சினி பைட்ஸ் மாதிரி, டிட்பிட்ஸ்களை அலசும் அந்த நிகழ்ச்சியில், ‘செல்ஃபி புள்ள’ பாடலைப் பற்றி பேசியிருக்கிறார்கள். கீழுள்ள வீடியோவில் 4.12 நிமிடத்திலிருந்து பேச ஆரம்பித்து கொஞ்ச நேரம் இந்தப் பாடலைப் பற்றிய உரையாடல் போகிறது!



    

 

வெறும் 15 செகண்டுகள் ‘செல்ஃபு புள்ள.. உம்மா உம்மா’ வை ஒளிபரப்பியும் இருக்கிறார்கள். இப்போது ருமேனியாவே ‘என்ன பாட்டுடா இது’ என்று தேடி அந்தப் பாடலை டிரெண்டாக்கிக் கொண்டிருக்கிறது.



ஏன் அந்தப் பாடலைத் தேடி தேடி பார்க்கிறார்கள். காரணம், ‘புள்ள’ வார்த்தைக்கு ருமேனிய மொழியின் அர்த்தம். அதை எப்படி இங்கே சொல்ல முடியும்!? நீங்களே கூகுளிட்டுக் கொள்ளுங்கள்..! 

எப்படியோ, அதைத் தேடித் தேடி, விஜய் படங்களை அவர்கள் பார்க்கலாம். டான்ஸிங் மஹாராஜாவாக ஜப்பானில் ரஜினி கொடிநாட்டியதைப் போல விஜய்யும் மொழிதெரியாத வெளிநாடுகளில் எல்லாம் காலூன்ற ஆரம்பித்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது!

vikatan

  • தொடங்கியவர்

ஜிம்முக்கு போகாமல் ஃபிட்டாக இருக்க‌ இதை செய்யுங்கள்!

 

 

health-tech-100637088-orig.png

ஆரோக்கியம் என்பது மாறி வரும் இன்றைய சூழலில் ஒரு அரிய வார்த்தையாக மாறி விட்டது. பெருகி வரும் நோய்களுக்கு தடா சொல்ல உடற்பயிற்சி நமது வாழ்க்கை முறைகளில் கட்டாயப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. பலரும் வாக்கிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் என  இருக்க செய்வது போல இப்போது ஜிம்மிற்க்கு செல்வதும் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க உடற்பயிற்சிகள் தவிர்த்து நாம் அன்றாடம் உணவு முறைகளிலும் ஆரோக்கியத்தை பேணலாம். அதற்கான எளிய வழிகள் இதோ,

வீட்டுத்தோட்டம் போடுங்கள்:
வெளியே சென்று மார்க்கெட்டில் செயற்கை உரங்கள், ஹைபிரிட் காய்கறிகள் வாங்குவதற்கு பதில் நமது வீட்டிலேயே எளிய முறையில் காய்கறி தோட்டம் போடலாம். நமது பராமரிப்பில் வளருவதோடு மட்டுமல்லாமல், நமது செலவையும் கணிசமாக குறைக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் க்யாரண்டி.

கடை உணவை தவிருங்கள்:
முடிந்த அளவு கடைகளில் துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவதை தவிருங்கள். உணவின் ருசிக்காக அதில் சேர்க்கப்படும் பொருட்களால் நமது உடல் ஆரோக்கியம் கெடுவதோடு மட்டுமல்லாமல் செரிமான மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும். இது மட்டுமல்லாமல் உடல் பருமனில் ஆரம்பித்து கேன்சர் வரையிலான நோய்களுக்கு இது வழி திறக்கும்.

எளிய பயிற்சிகள் செய்யுங்கள்:
வேலை எதுவும் செய்யாமல் இருப்பது சோம்பேறி தனமாக இருக்காதீர்கள். வீடு சுத்தம் செய்வது, பக்கத்தில் கடைகளுக்கு செல்வது, நண்பர்களை நேரில் சந்தித்து பேசுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, சைக்கிளிங் செய்வது, தோட்ட வேலைகள் போன்ற வகையில் நேரத்தை செலவிடுங்கள். 

health-and-wellness-apps.jpg

 

விளையாடுங்கள்:
வார இறுதி நாட்களில் விளையாடுவதற்கென நேரம் ஒதுக்குங்கள். விளையாடுவதென்றால் மொபைல் கேம்ஸோ, வீடியோ கேம்ஸோ கிடையாது. உடல் ஆரோக்கியம் மேம்பட களத்தில் இறங்கி விளையாடுங்கள். அதோ போல் உங்கள் மூளைக்கு வேலை வைக்கும் விளையாட்டுகளையும் உங்கள் ப்ளே லிஸ்ட்டில் டிக் செய்யுங்கள்.

இயற்கை உணவுகளை தேர்ந்தெடுங்கள்:
கூடுமானவரை இயற்கை உணவுகளை தேர்ந்தெடுங்கள். உணவே மருந்து என்பதை மறக்காதீர்கள். அதே போல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய வைத்தியம் செய்வதை தவிருங்கள்.

எலக்ட்ரானிக் பொருட்கள் தவிர்:
மொபைல், கம்ப்யூட்டர், இணையம் போன்ற உங்கள் நேரத்தையும், ஆரோக்கியத்தையும் கொல்லும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையானவற்றிற்க்கு உபயோகிப்பது தவறில்லை. அதிலேயே மூழ்கி கிடப்பது என்பது பல்வேறு நோய்களுக்கான வடிகால்.

vikatan

  • தொடங்கியவர்

மாடித்தோட்ட மகிமை: 8 ஆண்டுகளாக மார்க்கெட் போகாத குடும்பம்

 

 

terracegarden6001.jpg

ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில் வீட்டிலேயே விவசாயம் செய்யும் முறைதான் மாடித்தோட்டம். தமிழ்நாட்டில் பெருநகரங்கள் மட்டுமில்லாமல் சிறுநகரங்களிலும் மாடித்தோட்டம் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை,  மாடித்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகளையும், செடி வளர்க்கும் பைகளையும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.

மாடித்தோட்டத்தில் சிறப்பு என்னவென்றால், பாரம்பர்ய விதைகளையும், வெப்பநிலைக்கு ஏற்ற காய்கறிகளையும், பழங்களையும் வளர்க்க முடியும். எந்தவித ரசாயனமும் கலக்காமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்து கொள்ள முடியும். இந்த அம்சங்கள் இருப்பதால்தான் மாடித்தோட்டம் மக்களின் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது.

இதை உணர்ந்து இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தை சேர்ந்த பொறியாளர் ராதாகிருஷ்ணன்.

அவர் தன்னுடைய மாடித்தோட்டம் குறித்து பேசியபோது, "விவசாயம் எனக்கு பரம்பரைத் தொழில். அதனால் சிறு வயதிலிருந்தே செடிகள், உயிரினங்கள் மீது பிரியம் அதிகம். நான் படித்து முடித்து வெளிநாட்டில் பணியாற்றி வந்தேன். திரும்பவும் இங்கே வந்து சொந்த வீடு கட்டினேன். கட்டும் பொழுதே மொட்டை மாடியில் 600 சதுர அடியில் மாடித்தோட்டம் அமைத்துவிட்டேன்.

terracegarden60021.jpg

ஆரம்பத்தில் குறைந்த நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய காய்கறிகளை பயிரிட்டு அறுவடை செய்து சாப்பிட்டு வந்தேன். அந்த காய்கறிகளின் சுவைக்கும், மார்கெட்டில் வாங்கும் காய்கறிகளின் சுவைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தேன். பிறகு, வீட்டுக்குத் தேவைப்படும் அனைத்து காய்கறிகள், பழங்களையும் நானே பயிர் செய்ய ஆரம்பித்தேன்.

இப்போது 6 வகையான அவரைக்காய்கள், நான்கு வகையான கத்திரிக்காய்கள் என்று பயிர் செய்கிறேன். பழங்களில் மாதுளை, தர்ப்பூசணி, பப்பாளியும், காய்கறிகளில் சுரைக்காய், தக்காளி, முட்டைக்கோஸ் என்றும் பயிர் செய்கிறேன். அம்மான்பச்சரிசி, பூனைமீசை, முடக்கத்தான், தவசிக் கீரை, ஆடாதொடா, மஞ்சள் கரிசலாங்கண்ணி, விபூதிபச்சிலை, மருதாணி, வெற்றிலை என மருத்துவக் குணங்கள் கொண்ட மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறேன்.

கடந்த 8 ஆண்டுகளாக, எங்கள் இல்லத்தில் மார்க்கெட்டில் போய் காய்கறிகளை வாங்கி பயன்படுத்துவது இல்லை. அரிசி, பருப்பு, எண்ணெய் ஊரிலிருந்து வந்துவிடும். நான் இங்கே உணவுக்கு தேவையான கீரை, காய்கறிகளை உற்பத்தி செய்து கொள்கிறேன். மொத்தத்தில் எங்கள் குடும்பமே முற்றிலும் இயற்கையான மாடித்தோட்டத்தில் விளையும் காய்கறிகளை உண்டு வாழ்ந்து வருகிறோம்” என்றவர் தொடர்ந்தார்.

மாடித்தோட்டத்துக்கு முதலில் பொறுமையும், இயற்கையின் புரிதலும் அவசியம்.

terracegarden60022.jpg

காலையில் எழுந்த உடனே மாடியில் இருக்கும் செடிகளை பராமரிப்பதுதான் என் முதல் வேலை. செடிகளில் பூச்சி தாக்குதல் இருந்தால், அந்த பகுதிகளை தண்ணீரில் நன்றாக அலசி வேப்ப எண்ணையை நோய்த் தாக்கமுள்ள பகுதிகளில் தெளிப்பேன். இதற்கும் நோய்த்தாக்குதல் குணமாகவிடில், பஞ்சகவ்யாவை தெளிப்பேன்.

செடிகளில் நோய்த்தொற்றுகளை மட்டும் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டால் போதும். மாடித்தோட்டம் எளிமையான ஒன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் என் மனைவியும், குழந்தைகளும் கூட மாடித்தோட்டத்தை பாசமாக பார்த்து கொள்கிறார்கள். நான் கவனிக்காமல் விட்டாலும் அவர்கள் செடிகளின் நோய்த்தாக்குதலை கண்டுபிடித்து விடுவார்கள்.

செடிகளுக்கு தொட்டியை தயார் செய்யும்போது, மண்புழு உரம், தேங்காய் நார், வேப்பம் புண்ணாக்கு கலப்பேன். இந்த கலவையில் செடிகளை வைக்கும்போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். விளையும் காய்கறிகளும் இயற்கையானதாக இருக்கும். கட்டுமான தொழிலில் இருப்பதால் வீடு கட்டிக் கொடுப்பவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறேன். ஆர்வம் உள்ளவர்களுக்கு வீட்டில் தோட்டம் அமைக்கவும் உதவி செய்து வருகிறேன்" என்கிறார்.

vikatan

  • தொடங்கியவர்

:grin:

  • தொடங்கியவர்

ஹா[லிவு]ட் டைரி

 

 

p58.jpg

‘10,000 பிசி’, ‘வென் எ ஸ்ட்ரேஞ்சர் கால்ஸ்’, ‘தி கொயட்’ ஆகிய படங்களில் கலக்கிய கேமில்லா பெல்லியின் ஹாட் பக்கங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

p58a.jpg

கேமில்லாவின் அம்மாவுக்கு ‘கேவலோ டி அகோ’ என்ற நாடகம் மிகவும் பிடிக்குமாம். அதில் வரும் கதாபாத்திரம் ஒன்றின் பெயரைத்தான் கேமில்லாவிற்கு வைத்தார்களாம். சீரியல் விரும்பி போல!

பள்ளி நாட்களில் தொடர்ந்து படங்களில் நடித்ததால், ஓர் ஆண்டுகூட பள்ளிக்கு முழுவதுமாய் போனதில்லையாம். அதுவா பாஸ் முக்கியம்?

p58b.jpg

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், பொண்ணு சரளமா போர்ச்சுகீஸ் பேசுமாம். எப்படினே தெரியலை பாஸ்!

ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தபோதே செய்தி விளம்பரம் ஒன்றில் நடித்தார் கேமில்லா. அச்சில் வார்த்த பதுமையே!

p58c.jpg

‘தி லாஸ்ட் வேர்ல்டு’ படத்தில் குட்டி டைனோசர்கள் ஒரு சிறுமியைச் சூழ்ந்து நிற்கும் காட்சி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. அந்தச் சிறுமிதான் கேமில்லா. டைனோசருக்கே பிடிச்சு இருக்கு!

பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் காதலர் ஜோ ஜொனாஸுடன் சில காலம் டேட்டிங் போனார் கேமில்லா. அந்தக் கடுப்பில் கேமில்லாவை குறியீடுகளால் திட்டி, ‘ரிவஞ்ச்’ என்ற பாடலை வெளியிட்டர் டெய்லர். இதுக்கெல்லாமா பாட்டு ரிலீஸ் பண்றீங்க?

p58d.jpg

அமெரிக்கப் பாடகர் ஜோ ஜொனாஸிற்காக ‘லவ்பக்’ என்ற பாடலுக்கு வேலை செய்யும்போதுதான் அவரோடு காதல் ஆனார் கேமில்லா. அவரைப் பிரிந்த கேமில்லா, தற்போதைக்கு சிங்கிள்தான். சிங்கிள் சிங்காரி!

2011-ம் ஆண்டு பீப்பிள் இதழ் வெளியிட்ட அழகானவர்கள் பட்டியலில் கேமில்லாவும் ஒருவர். அழகாத்தான் இருக்கீங்க!

p58e.jpg

இந்த ஆண்டு மட்டும் கேமில்லாவிற்கு நாலு படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. பிஸி பொண்ணு!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.