Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

 

p52a.jpg

டியர், டார்லிங், அம்முக்குட்டி, புஜ்ஜிக்குட்டி... இதெல்லாம் காதலன், காதலிக்கு அல்லது கணவன், மனைவிக்கு மொபைலில் பதிந்து வைக்கும் செல்லப்பெயர்கள். சில பேர் இம்சை, டார்ச்சர், தொல்லைனுகூட வெச்சிருப்பாங்க. நண்பர்கள்? பீஸு, 420, நல்ல நண்பன் இன்னும் பல இம்சையான பெயர்கள்ல பதிஞ்சு வெச்சிருப்பாங்க. அடிக்கடி போன் பண்ணி மொக்கை போடுற கேரக்டர்களை, ‘நோ ஆன்சர்’னு வெச்சிருக்கிறவனைக்கூட பார்த்திருக்கேன். ரைட்டு... விஷயத்துக்கு வருவோம். உங்க போன்ல இருக்கிற தொடர்புகளுக்கு நீங்க வெச்சிருக்கிற பெயர்கள் ஓகே. உங்களோட பெயரை மத்தவங்க எப்படிப் பதிவு பண்ணி வெச்சிருக்காங்கனு தெரியுமா? ‘மீ - சிம்ப்ளி சீ’ அப்ளிகேஷன் அதைத்தான் காட்டிக்கொடுக்குது!

p52.jpg

அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து மொபைலில் உங்களது மொபைல் நம்பரைப் பதிவு செய்யுங்கள். ஒன்-டைம் பாஸ்வேர்டு உங்கள் மொபைலுக்கு மெசேஜாக வரும். அந்த பாஸ்வேர்டைப் பதிவு செய்து அப்ளிகேஷனைப் பயன்படுத்தத் தொடங்கலாம். எப்படி? அப்ளிகேஷனில் இருக்கும் பல பகுதிகளில் ‘மீ நேம்ஸ்’ பகுதிக்குச் சென்றால், உங்கள் பெயரை மற்றவர்கள் எப்படிப் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம். ஆனால், நீங்கள் நீண்ட நாட்களாக அழைப்பை ஏற்காத ஒருவர் உங்கள் பெயரைப் பாசமான அடைமொழியோடு பதிவுசெய்து பாவமாகக் காத்திருக்கலாம். அடிக்கடி நீங்கள் அழைக்கும் நபர் உங்கள் பெயரை ‘டார்ச்சர் பார்ட்டி’ என்று பதிவுசெய்து, அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் நெஞ்சில் கடப்பாரையை இறக்கியிருக்கலாம். உங்களைக் காதலிக்கிறாரா, இல்லையா? என கன்ஃபியூஷனில் வைத்திருக்கும் ஆண் அல்லது பெண் உங்கள் பெயரை ‘காதலன் / காதலி’ என்றே பதிவு செய்து வைத்திருப்பதைப் பார்த்து பூரிப்படைய வைக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

p52b.jpg

இது தவிர, தெரியாத எண்ணில் இருந்து வரும் மொபைல் எண் யாருடையது என்பதைக் கண்டுபிடிக்கும் வசதி, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நோட்டிஃபிகேஷன்கள் என இதர வசதிகளும் இதில் அடக்கம். சிம்பிளா சொன்னா, மத்தவங்ககிட்ட நீங்க கெத்தா, வெத்தானு ஈஸியா கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் உதவும். அப்புறமென்ன? அப்ளிகேஷனை டவுன்லோடு பண்ணி, யார் உங்க பெயருக்கு களங்கம் விளைவிக்கிறாங்கனு கண்டுபிடிங்க பாஸ்!

p52c.jpg

 

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

13332815_1054770707904956_39430424428112

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கலக்கல் தலைவர், உலகின் முன்னணி இளைய துடுப்பாட்ட நட்சத்திரம், இளம்புயல் ஸ்டீவ் ஸ்மித்தின் பிறந்தநாள்.
Happy Birthday Steve Smith

  • தொடங்கியவர்

கரிபால்டி சிறப்பு பகிர்வு..

 

13327443_1148545585204230_51214537332232

இத்தாலிய புரட்சியில் மாஜினி ஆத்மாவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும், கோவர் அறிவாகவும் இருந்தார்.

கரிபால்டியின் வாழ்க்கை ஓயாத மன உறுதி இருந்தால் எந்த சிக்கலில் இருந்தும் மீண்டு சாதிக்க முடியும் என்று காட்டும். இன்றைக்கு இருக்கும் இத்தாலி தேசம் கரிபால்டி பிறந்த பொழுது உருவாகி
இருக்கவில்லை. போப் படைகள் ஒரு புறம்,ஆஸ்திரியாவின் ஆதிக்கம் இன்னொரு புறம் என்று இத்தாலி என்கிற தேசம் உருவாகாமல் எண்ணற்ற சக்திகள் தடுத்துக்கொண்டு இருந்தன. கப்பல்
மாலுமியாக உருவெடுத்து இருந்த கரிபால்டி மாஜினியின் இளைய இத்தாலி அமைப்பினரோடு இணைந்து ஜெனோவாவில் நடந்த புரட்சி முயற்சியில் பங்கு கொண்ட கரிபால்டிக்கு தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை விதிக்கப்படுவதற்குள் கரிபால்டி தப்பி அமெரிக்கா போயிருந்தார். அங்கே எளிய விவசாய வேலைகள் செய்தவாறே இத்தாலி தேசத்தை மீட்க வேண்டும் என்கிற கனவை உள்ளுக்குள்
செலுத்தி வளர்த்துக்கொண்டு
இருந்தார் கரிபால்டி. உருகுவே நாட்டில் மானுவேல் ரோசஸ் என்கிற சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்களுக்கு உதவினார்.

பதினான்கு வருடங்கள் தென் அமெரிக்காவில் காத்துக்கொண்டு இருந்த அவருக்கு வடக்கு இத்தாலியில் ஆஸ்திரிய அரசுக்கு எதிராக புரட்சிக்கனல் மூண்டிருக்கிறது என்று தெரிந்ததும் மீண்டும் நாட்டை
நோக்கி வந்தார்.. கோவர் என்பவர் விக்டர் இம்மானுவேல் எனும் செனிடியா அரசரின் முதலமைச்சர்
ஆகியிருந்தார்.

அவருடன் கரிபால்டி மற்றும் மாஜினி இணைந்து இத்தாலியை மீட்பதை நோக்கி பயணமானார்கள். ஆஸ்திரியா செனிடியா யுத்தத்தில் கரிபால்டி,மாஜினி ஆகியோரின் வீரம் பொருந்திய தலைமை பெரும்
வெற்றியை பெற்று தந்தது.
நேப்பல்ஸ் பகுதியை தன்னுடைய வீரம் செறிந்த விவேகமான வழிகாட்டுதலின் மூலம் கைப்பற்றினார் கரிபால்டி. இத்தாலிய புரட்சியில் மாஜினி ஆத்மாவாகவும், கரிபால்டி ஆயுதமாகவும், கோவர்
அறிவாகவும் இருந்தார்.

ரோம் நோக்கியும் அவர் படைகளை செலுத்தினாலும் கோவர் இப்பொழுது அதற்கு காலம் கனியவில்லை என்று அவரை தடுத்து நிறுத்தினார். போப்புக்கு பிற ஐரோப்பிய நாடுகள் உதவிக்கு வரலாம்
என்கிற கொவரின் அச்சமே இப்படியொரு
முடிவுக்கு காரணமாக இருந்தது. பின்னர் இத்தாலிய நாடாளுமன்றத்தில் நுழைந்த கரிபால்டி அமைதியாக இத்தாலி ஒரு தேசமாக முழுமை பெறுவதை பார்த்துவிட்டே மரணமடைந்தார். அவரின்
நினைவு தினம் இன்று..

vikatan

  • தொடங்கியவர்

கொலைநாயகிகள்!

 

p38a.jpg

‘சீரியல் கில்லர்கள்’ - இந்த வார்த்தையைக் கேட்டதும் சீரியல்களில் வரும் கில்லர் கதாபாத்திரங்கள் என தப்பா நினைச்சுடாதீங்க சகோதர, சகோதரிகளே... சீரியல் கில்லர்கள்னா தொடர் கொலைகாரர்கள்னு அர்த்தம். இன்னும் புரியற மாதிரி சொல்லணும்னா, பல பேரைக் கொலை செய்தவர்கள். அப்படிப் பல பேரைக் கொன்றவர்கள் சிலரைப் பற்றிய ஷாக்கிங் வரலாறு.

மேக்டலினா சோலிஸ்: இரத்தங்களின் கடவுள் என்று அழைக்கப்பட்ட மெக்ஸிகோவைச் சேர்ந்த இந்தப் பெண் வாழ்ந்தது முழுக்க முழுக்க இரத்தத்துடன் மட்டுமே.சிறு வயதிலேயே கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்பட்ட  சோலிஸ் பலவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் ஹெர்னான்டஸ் பிரதர்ஸ் என்ற லோக்கல் தாதாக்களால் மீட்கப்பட்டவருக்கு வாழ்க்கை மொத்தமாக மாறியது என்று சொல்வதைவிட இரத்தமாக மாறியது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

p38b.jpg

ஹெர்னான்டஸ் பிரதர்ஸ் தங்களுடைய செல்வாக்கை அதிகரிக்க இந்தப் பெண்னை கடவுளின் வாரிசு என மக்களிடம் நம்ப வைத்துள்ளனர். இதைப் பயன்படுத்திய சோலிஸும் இரத்தத்தைக் காணிக்கையாகக் கேட்டுள்ளார்.காலப்போக்கில் மனித உடல்களையும் காணிக்கை கேட்கத் தொடங்கியுள்ளார். எத்தனைப் பேரைக் கொன்று காணிக்கை சமைக்கப்பட்டது என்றுகூட தெரியாத  அளவிற்கு கொலைகள் நடந்துள்ளன. இதிலிருந்து தப்பித்த 14 வயது சிறுவன் ஒருவன் போலீஸில் சொல்ல, கைது செய்யப்பட்டார் இரத்தத்தின் கடவுள். ஆனாலும் கடைசியாக செய்த இரண்டு கொலைக்கு மட்டுமே சாட்சி இருக்கிறது என்று கூற அம்மணி தூக்கில் இருந்து எஸ்கேப். கடைசியாகக்  கொல்லப்பட்ட அந்த இரண்டு பேரும் யார் தெரியுமா? அந்தப் பெண்ணைக் கடவுளாக்கிய அதே ஹெர்னான்டஸ் பிரதர்ஸ்தான். ‘ஆரண்யகாண்டம்’ சாயல் அடிக்குதே.

வேரா ரென்சி: ரோமானியா நாட்டைச் சேர்ந்த பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண் சிறுவயதில் முழுக்க முழுக்க தன்னைவிட  பெரியவர்களிடம் மட்டுமே பழகியுள்ளார். தன் வயதுடையவர்களுடன் எப்போதும் சண்டை போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

p38c.jpg

பணக்காரத் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு சந்தோசமாகக் குடும்பம் நடத்திய இந்தப் பெண், முதல் குழந்தை பிறந்த சில நாட்களில் கணவன் மீது சந்தேகப்பட்டு மதுவில் விஷம் வைத்துக் கொன்றுள்ளார். (முதல் பாயசம்) சில மாதங்களுக்குப் பின் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரென்சி மீண்டும் அதே போன்று குழந்தை பிறந்த உடன் மதுவில் விஷம் கலந்து இரண்டாவது கணவரையும் கொன்றுவிட்டார். (இரண்டாவது பாயசம்) பின்னர், ஏற்கெனவே திருமணம் ஆன ஆண்களை பாய் ஃப்ரெண்டாக்கி கொஞ்ச நாளில் அதே போல் தன்னுடைய பராம்பரிய பாயச முறையில் கொன்றுள்ளார். இதில்  இறந்த ஒருவரின் மனைவி இவர் மீது புகார் தெரிவிக்க, அதைக் கொண்டு போலீஸ் ரென்சி வீட்டை சோதனை செய்தபோது ஆங்கில நாவல்களில் வருவது போல 32 ஒயின் பேரல்களில் 32 பிணங்கள் மிதந்திருக்கின்றன. அதில் ஒன்று அவர் மகனுடைய பிணம். ஆத்தி!

மரியா ஸ்வானன்பர்க்: நெதர்லாந்தைச் சேர்ந்த இவர் நான் கடவுள் என தனக்குத்தானே பெயர் வைத்துக்கொண்ட பெண். கடவுள் என்றவுடன் பெண் சாமியார் என நினைக்க வேண்டும். இவர் முழுக்க முழுக்க சேவை உள்ளம் கொண்டவர். சிறு வயதில் இருந்தே பலருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே வளர்ந்ததால் என்னவோ வளர்ந்தபின்பும்கூட வயதானவர்களுக்காக இல்லம் நடத்தியுள்ளார்.

p38d.jpg

விக்ரமன் படம் மாதிரி அழகா போய்க்கிட்டு இருந்த இவர் வாழ்க்கை ராம் கோபால் வர்மா படம் மாதிரி ரத்த சரித்திரமா மாறிடுச்சு. மூன்று வருடங்களுக்கு முன் தன்னுடைய இல்லத்தில் சேர்ந்தவர்கள் எல்லோரையும் விஷம் வைத்துக் கொன்றுள்ளார். பின் அவர்களுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாளர் என்ற பெயரில் தன்னுடையதாக்கி உள்ளார். இப்படியே அடுத்தடுத்த வருடங்களில் கொலைகளின் எண்ணிக்கை கணக்கில்லாமல் சென்றுள்ளன. இவர் சேவை இல்லத்தில் கை கால்கள் மட்டும் இழந்து தப்பித்த சிலர் போலீஸில் புகார் தெரிவிக்க, மூன்று வருட சிறைத்தண்டனை பெற்று பின் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். கடவுள் இல்லைனு சொல்றவனை நம்பு. ஏன், கடவுள் இருக்கார்னு சொல்றவனைக்கூட நம்பலாம், ஆனால், நான்தான் கடவுள்னு சொல்றான் பார். அவனை மட்டும் நம்பாதே.

ஹெலன் ஜெகாடோ: அமெரிக்காவைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத்தில் பிறந்த ஹெலன் எல்லா சிறுமிகளையும் போல் தன் சிறு வயதில் இயல்பாகவே இருந்துள்ளார். வளர்ந்த பின் தன் தோழிகளுடன் வீட்டு சாமான்களை டோர் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். தொடக்கத்தில் நன்றாக வேலை செய்தவர் கொஞ்ச நாட்களிலேயே தீயாக வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்.

p38e.jpg

தான் பொருட்கள் எடுத்துச் செல்லும் வீட்டில் வாடிக்கை யாளர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆர்சனிக் கொடுத்துக் கொன்றுள்ளார். இப்படி மூன்று மாத்தில் ஏழு பேரைக் கொன்றுள்ளார். இதில் ஒரு சர்ச் பாதிரியாரும் ஹெலனின் தங்கையும் அடக்கம். இந்தப் பெண்ணுடைய வாடிக்கையாளர்கள் மட்டும் இறப்பதைக் கண்டு விசாரித்தபோது தான் செய்த அத்தனைக் கொலைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார் ஹெலன்.இருபதுக்கும் மேல் கொலைகள் செய்தாலும் மூன்று கொலைகளுக்கு மட்டும்  தூக்குத் தண்டனை பெற்றார். ஆனால் அந்த அம்மா எதற்கு கொலை பண்ணுச்சுனுதான் தெரியலை!

ஜவ்னா பராசா: பிரேசிலைச் சேர்ந்த சிறு வயதில் குடிகாரத் தாயிடம் நிறையக் கொடுமைகளை அனுபவித்த ஜவ்னா மூன்று பீர் பாட்டில்களுக்காக ஓர் ஆணிடம் விற்கப்பட்டார். கொஞ்சநாள் நல்லவனாக இருந்த அவனும்  கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறான். அவனுடைய பாலியல் துன்புறுத்தல்களால் வரிசையாக நான்கு குழந்தைகள் பிறக்க மனம் முழுக்கக் கோபத்தை தேக்கிவைத்திருக்கிறார்.

p38f.jpg

பின் அவனை விட்டு விலகியவர் தனியாக வீடு எடுத்து அரசு நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். அதைப் பயன்படுத்தி கொஞ்ச நாட்களில் 60 வயதுக்கு மேல் தனியாக உள்ள பெண்களை எல்லாம் கண்டுபிடித்து வரிசையாகக் கொலை செய்யத் தொடங்கியுள்ளார் ஜவ்னா. கொலை செய்வது பிடித்துப் போகவே கொலை செய்யும் வேகத்தை அதிகரித்து கிட்டத்தட்ட  40 பேரைக் கொன்றுவிட்டார். இவர் மீது சந்தேகப்பட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் கொடுக்கவும் ஜவ்னா கைது செய்யப்பட்டார். மூன்று கொலைகளை மட்டும் ஒப்புக் கொண்ட ஜவ்னா பின் 16 கொலைகள் நிரூபிக்கப்பட்டதால், 759 வருட சிறைத் தண்டனைக்கு அனுப்பப்பட்டார். ஜவ்னா ஒரு மல்யுத்த வீராங்கனை என்பது கூடுதல் தகவல்!

vikatan

  • தொடங்கியவர்

13301529_1054767837905243_10527231273123

 
 
தமிழ்த் திரையுலகின் முத்திரை பதித்த முன்னணி இயக்குனர் மணி ரத்னம் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
Happy Birthday Maniratnam

பகல் நிலவு முதல் அண்மையில் வெளிவந்த ஓ காதல் கண்மணி வரை அற்புதத் திரைப்படங்கள் தந்த மணி ரத்னத்துக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
  • தொடங்கியவர்
 

வரலாற்றில் இன்று

ஜுன் - 03

 

1326 : ரஷ்­யா­வுக்கும் நோர்­வேக்கும் இடை­யி­லான எல்லை தொடர்­பான நோவ்­கோரட் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

1539 : அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநிலம் ஸ்பெய்­னுக்கு உரி­யது என ஸ்பானிய கட­லோ­டி­யான ஹேர்­னடோ டி சோட்டோ உரிமை கோரினார்.

 

739varalaru-june-03.jpg1839 : சீனாவில் பிரித்­தா­னிய வர்த்­த­கர்­க­ளி­ட­மி­ருந்து 12 லட்சம் கிலோ­கிராம் ஓபியம் போதைப்­பொ­ருளை சீன அதி­கா­ரிகள் கைப்­பற்­றினர். இதைத் தொடர்ந்து இரு­நா­டு­க­ளுக்கும் இடையில் “முத­லா­வது ஓபியம் யுத்தம்” நடை­பெற்­றது.

 

1885 : கனே­டிய மண்ணில் கடைசி இரா­ணுவ சமர் நடை­பெற்­றது. பழங்­குடி இனத் தலை­வ­ரான மிஸ்­டாகி மஸ்க்வா பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து தப்­பிச்­சென்றார்.

 

1889 : கன­டாவின் கிழக்கு மேற்கு பிராந்­தி­யங்­களை இணைக்கும் கனே­டிய பசுபிக் ரயில்­பாதை  நிர்­மாணம் ப+ர்த்திய­டைந்­தது.

 

1916 : அமெ­ரிக்க தேசிய பாது­காப்புப் படை­யி­னரின் எண்­ணிக்கை 450,000 ஆக அதி­க­ரிக்­கப்­பட்­டது.

 

1935 : கன­டாவில் வேலை­யற்ற ஒரு லட்சம் பேர் வன்­கூவர் நக­ரி­லி­ருந்து ஒட்­டோவா நகரை நோக்­கிய வாகனப் பேர­ணியை ஆரம்­பித்­தனர்.

 

1937 : பிரித்­தா­னிய மன்னர் 8 ஆம் எட்வர்ட் வல்லிஸ் சிம்ஸன் எனும் பெண்ணை திரு­மணம் செய்தார். இத்­தி­ரு­மணம் கார­ண­மாக மன்னர் பத­வியை 8 ஆம் எட்வர்ட் துறக்க நேரிட்­டது.

 

1941 : ஜேர்மன் படைகள், கிறீஸின் கென்­டனோஸ் கிரா­மத்தை அழித்து அங்­கி­ருந்த 180 பேரையும் கொலை செய்­தன. 

 

1950 : நேபா­ளத்­தி­லுள்ள  8091 மீற்றர் உய­ர­மான மலைச்­சி­க­ர­மான அன்­னபூர்ணாவின் உச்­சியை பிரான்ஸை சேர்ந்த மொரிஸ் ஹேர்ஸோக், லூயிஸ் லாச்னெல் ஆகியோர் அடைந்து சாதனை படைத்­தனர். 8000 மீற்றர் உய­ர­மான மலைச்­சி­க­ர­மொன்றை மனி­தர்கள் அடைந்­தமை அதுவே முதல் தட­வை­யாகும்.

 

1969 : தென் வியட்நாம் கரை­யோ­ரத்தில் நடை­பெற்ற கூட்டுப் பயிற்­சி­யொன்­றின்­போது, அவுஸ்­தி­ரே­லிய விமா­னம்­தாங்கி கப்­ப­லான எச்.எம்.ஏ.எஸ். மெல்­பேர்­னுடன் தற்­செ­ய­லாக மோதி­யதால் அமெ­ரிக்க நாச­காரி கப்­ப­லான யூ.எஸ்.எஸ். பிராங் ஈ இவான்ஸ் இரண்­டாக உடைந்­தது. அக்­கப்­ப­லி­லி­ருந்த 74 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1979 : மெக்­ஸிகோ வளை­கு­டாவில் எண்ணெய் கிணறு ஒன்றில் கசிவு ஏற்­பட்­டதால் சுமார் 30 லட்சம் பீப்பாய் எண்ணெய் கடலில் கசிந்­தது.

 

1982 : லண்­டனில் இஸ்­ரே­லிய தூதுவர் ஷ்லோமோ ஆர்கோவ் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதனால் அவர் பக்­க­வா­தத்­திற்­குள்­ளானார்.

 

1984 : இந்­தி­யாவின் அமிர்­சரஸ் நகரில் சீக்­கி­யர்­களின் பொற்­கோயில் மீது “ஒப­ரேஷன் புளு ஸ்டார்” எனும் இரா­ணுவ நட­வ­டிக்கை ஆரம்­ப­மா­னது.

 

1989 : 7 வார கால­மாக மாண­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த திய­னமென் சதுக்­கத்தை கைப்­பற்­று­வ­தற்­காக சீன அர­சாங்கம் இரா­ணு­வத்­தி­னரை அனுப்­பி­யது.

 

1991 : ஜப்­பானின் உன்ஸென் எரி­மலை வெடித்ததால் 43 பேர் உயி­ரி­ழந்­தனர். இவர்கள் அனை­வரும் ஆராய்ச்­சி­யா­ளர்­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் ஆவர்.

 

1998 : ஜேர்­ம­னியில் இடம்­பெற்ற ரயில் ­வி­பத்தில் 101 பேர் உயிரிழந்தனர்.

 

2006 : சேர்பியா – மொன்டேனெக்ரோ கூட்டமைப்பிலிருந்து  மொன்டேனெக்ரோ பிரிந்தது.

 

2012 : நைஜீரியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 163 பேர் உயிரிழந்தனர்.

 

2013 : சீனாவில் கோழிப் பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 பேர் உயிரிழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13346197_1055482217833805_19571822692494

தமிழின் மூதறிஞர்களில் ஒருவர், கலைத்துறையிலும் அரசியலிலும் நீண்ட கால அனுபவம் கொண்டவருமான முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் இன்று.

திரையுலகில் மிகச் சிறந்த கதை வசனகர்த்தாவாகவும், அற்புதமான கவிஞராகவும் திகழ்ந்தவர்.
இன்று 93 வயதாகும் கலைஞர் இன்னமும் ஓயாமல் எழுதிக்கொண்டே இருக்கிறார். அரசியலிலும் ஓய்வில்லாமல் இயங்குகிறார்.

கருணாநிதி பி.ஏ.!

 

Kalaigner1.jpg

மு.கருணாநிதி 93 - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க.

ந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் என்று  நெடிய பயணத்திற்கு சொந்தக்காரர் கருணாநிதி.

ஓலைச்சுவடி காலத்தில் ஆரம்பித்து இன்றைய ட்விட்டர், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் யுக இளைஞர்களுக்கும் ஈடு கொடுத்து ஸ்டேட்டஸ் தட்டுகிற அரசியல் தலைவர். இந்த 93 வயதிலும் தமிழக அரசியல் சக்கரம் தன்னைச் சுற்றியே சுழல வைத்துக்கொண்டிருக்கும் அவரது அரசியல் நடவடிக்கைகளில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், அவரது மேடைப்பேச்சு எப்பொழுதுமே நினைத்து நினைத்து ரசிக்க வைப்பவை.

அப்படி நான் திருவாரூரில்,  கால்சட்டை பிராயத்தில் இருந்தபோது கருணாநிதி கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளின் நினைவுக்குறிப்புகள் இங்கே....
                                 
ஒருமுறை  தஞ்சாவூரிலும், மயிலாடுதுறையிலும் இடைத்தேர்தல் நடந்து தஞ்சையில் தி.மு.க தோற்றது, மயிலாடுதுறையில் வென்றது. அப்போது ரயிலில் தஞ்சாவூரில் இறங்கி திருவாரூருக்கு கருணாநிதி வந்தார். அவரது ஆசான் தண்டபாணி தேசிகருக்கு  கருணாநிதி படித்த வடபாதி  மங்கலம் சோமசுந்தரம் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. 

அப்போது பேசிய கருணாநிதி,  " திருவாரூர் மாளவந்தியார் தெருவில்தான் அண்ணாவை முதன்முதலாக சந்தித்தேன். 'இவன்தான் விடுதலை இதழில் சிறுகதை எழுதிய  கருணாநிதி'  என்று மன்னை, என்னை அறிமுகம் செய்தார். 'கருணாநிதி  என்றால் ஏதோ பெரிய ஆள் என்று நினைத்தேன். நீ சிறுவனாக இருக்கிறாயே. முதலில் ஒழுங்காக படி, அப்புறமாய் சிறுகதை எல்லாம் எழுதலாம்' என்று அண்ணா என்னை கண்டித்தார்.  அண்ணா சொன்னா எல்லாவற்றையும் கேட்ட இந்த கருணாநிதி, அது ஒன்றை மட்டும் கேட்கவில்லை, கேட்டிருந்தால் இன்றைக்கு கருணாநிதி  உங்கள் முன்னால் ஒரு பட்டதாரியாக நின்று கொண்டிருப்பான்.  சரியாக படிக்கவில்லை என்றால் நாமும் கருணாநிதி மாதிரி முதலைமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள். விதிவிலக்கு என்றைக்கும் வழிகாட்டியாகாது." என்று கூறியவர் தன் ஆசானுக்கு நினைவுப் பரிசாக ஒரு தஞ்சாவூர் தட்டை வழங்கி, " இந்த தட்டில் தோகை விரித்து மயில் ஆடுவதை பார்க்கும்போது மயிலாடுதுறை வெற்றி நினைவு வந்தாலும், தட்டு என்னவோ தஞ்சாவூர் தட்டுதான்" என்று டைமிங்காக பேசினார்.

 

Kalaigner2.jpg

மு.கருணாநிதி 93 - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க.

 

ஒருமுறை நன்னிலத்தில் தி.மு.க பிரமுகர் வீட்டுத் திருமணத்துக்கு கருணாநிதி வந்தார்.  மணமகள் பி.காம் படித்தவர், மணமகனோ ஒன்பதாம் வகுப்பு பெயில்.  திருமண அழைப்பிதழில் மணமகன் பெயருக்கு பக்கத்தில் பி.ஏ என்று போட்டிருந்தனர். இதுகுறித்து கல்யாண மண்டபத்தில் எழுந்த சலசலப்பு, மெல்ல மெல்ல நகர்ந்து கலைஞர் காதுக்குள் புகுந்தது. மணவிழாவை முடித்த கருணாநிதி மைக்கை பிடித்தார். "இந்த மணவிழாவின் மாப்பிள்ளை குறித்து எனக்கொரு தகவல் வந்தது. எனக்கு முன்னால் பேசிய, 'தஞ்சை பெரியார்' என்று நான் அன்போடு அழைக்கும் மன்னையார் ஒரு பி.ஏ, அதன்பின் பேசிய மாவட்டச் செயளாளர் கோ.சி.மணிகூட ஒரு பி.ஏ.,  ஏன் உங்கள் முன்னால் பேசிக்கொண்டு இருக்கும் நான்கூட ஒரு பி.ஏ.தான். ஆமாம் எங்களுக்கு எல்லாம் 'ப்ரதர் ஆப் அண்ணா' என்று சமயோஜிதமாக பேச, கல்யாண வீட்டில்  இருந்த இறுக்கம் தளர்ந்தது, இணக்கம் பிறந்தது.

 

Kalaigner3.jpg

மு.கருணாநிதி 93 - சிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க.

இன்னொருமுறை மன்னார்குடி பள்ளியில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொள்ள  வந்தார்.  அழைப்பிதழில் 'சிறப்பு விருந்தினர் கலைஞர் மு. கருணாநிதி' என்று அச்சிட்டு இருந்தனர். இலக்கிய நிகழ்ச்சியில் பேசிய சிலர், 'கலைஞர் இலக்கிய விருந்து படைக்க வேண்டும்' என்று பேசினர். இன்னும் சிலர், 'இது இலக்கிய விழா. அதனால் அரசியல் பேசாதீர்கள்' என்று வேண்டுகோள் விடுத்தனர். 

இறுதியாக மைக் பிடித்த கருணாநிதி, " என்னை அழைப்பிதழில் 'சிறப்பு விருந்தினர்' என்று விளித்து இருக்கிறார்கள். ஆனால் பேசிய அனைவரும் விருந்து படையுங்கள் என்று சொன்னீர்கள். தமிழன் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் வீட்டில் உள்ளவன்தான் வந்தவருக்கு விருந்து பரிமாற வேண்டும் அதுதான் தமிழ் பண்பாடு, கலாச்சாரம். சரி போகட்டும், நானே விருந்து பரிமாறுகிறேன். முதலில் இலையைப் போடுகிறேன். அடுத்து பதார்த்தங்களை ஒவ்வொன்றாய் வைக்கிறேன். அனைத்தையும் சுவைத்து உண்டு முடித்துவிட்டு,  'இலையை தூக்கி... இலையைத் தூக்கி' தூர எறிந்து விட்டு, இரவு நன்றாக உறங்கி காலையில் உதயசூரியன் முகத்தில் விழியுங்கள் என்று என்னால்  இலக்கிய விழாவில் அரசியலும் பேசமுடியும். அதற்காக நான் இங்கு வரவில்லை" என்று சொல்ல அரங்கமே அதிர்ந்தது

vikatan

  • தொடங்கியவர்

13307454_643061269177548_486439431047311

இன்றைய நிலை

  • தொடங்கியவர்
செல்பீ சிலை
 

17077selfie.jpgஅமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

 

எனினும் மக்களின் செல்பீ ஆர்வம் குறையவில்லை.


இந்நிலையில், அமெரிக்க, புளோரிடா மாநிலத்தின்  சுகர் லேண்ட் எனும் நகரில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 

பெண்கள் இருவர் சிரித்தவாறு செல் லிடத் தொலைபேசி மூலம் தம்மை படம்பிடித்துக் கொள்வதைப் போன்று இச் சிலை நிர்மாணிக் கப்பட்டுள்ளது.


நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் நகர சபை அதிகாரிகளால் இச் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எனினும், இச் சிலை குறித்து உள்ளூர் மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
நீங்கள் நம்ப மறுப்பீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் கட்டாயம் பாருங்கள்.
  • தொடங்கியவர்

13301468_1055483637833663_55722744114300

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளராகக் கருதப்படும், பாகிஸ்தானிய முன்னாள் அணித் தலைவரும் சகலதுறை வீரருமான வசீம் அக்ரமின் பிறந்தநாள் இன்று.

Happy Birthday Wasim Akram Live

  • தொடங்கியவர்

பிட்ஸ் பிரேக்

 

p22a.jpg

அமிதாப் பச்சன், நவாஸுதின் சித்திக்கி, வித்யா பாலன்... என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படம் `Te3n' (ஆமா, இதை எப்படி உச்சரிக்கிறது?). அமிதாப்புக்கு ஜோடி ஒரு பழையமாடல் பஜாஜ் ஸ்கூட்டர். படத்தின் போஸ்டர், ட்ரெயிலர் என அனைத்திலும் அமிதாப்புடன் நீல வண்ண ஸ்கூட்டரும் வர, இப்போது ஸ்கூட்டருக்கு செம டிமாண்ட். ஸ்கூட்டருக்குச் சொந்தக்காரர் மும்பையைச் சேர்ந்த சுஜித் நாராயண். அவரிடம் அந்த ஸ்கூட்டரை அமிதாப் ரசிகர்கள் விலைக்குக் கேட்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் விலை `ஒரு கோடி ரூபாய்' வரை எகிறியிருக்கிறது. `அந்த ஸ்கூட்டர் எனக்குப் பொக்கிஷம் மாதிரி. அதை விற்பனைக்கு அல்ல, இனி ஷுட்டிங்குக்கே கொடுப்பது இல்லை' எனக் கொந்தளிக்கிறார் சுஜித்!


22b.jpg

நம்ம ஊரில் ஒரு பாலம் கட்ட எவ்வளவு நாட்கள் ஆகும்? முதலில் அதற்குத் திட்டம் போட்டு, டெண்டர் விட்டு, கட்டிங் கொடுத்து... என இரண்டு வருடமாவது இழுத்துவிடமாட்டோமா? சீனாவில் ஒரு பாலத்தை வெறும் 43 மணி நேரத்தில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்குவிட்டிருக்கிறார்கள். சீனாவின் பீஜிங்கில் `சான்யூவன்' என்கிற இந்தப் பாலத்தை, பல்லாயிரம் தொழிலாளர்கள் இணைந்து உழைத்து, தரமாகவும் வேகமாகவும் கட்டி முடித்திருக்கிறார்கள். இதே கூட்டணி சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் 57 மாடிக் கட்டடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி சாதனை படைத்தது.


p22c.jpg

பாலிவுட்டின் லேட்டஸ்ட் பிரேக்அப் சுஷாந்த்-அங்கிதா ஜோடி. முயல்குட்டிகள்போல மும்பையை வலம்வந்த ஜோடியின் மேல் யார் கண்பட்டதோ, இரண்டுபேரும் முட்டிக்கொண்டு பிரிந்துவிட்டனர். தோனியாக நடித்துவரும் சுஷாந்த் சோகத்தில் மூழ்கியிருக்க, அங்கிதாவோ பிரேக்அப்பில் இருந்து சடாரென வெளியே வந்துவிட்டார். அவருடைய சமீபத்திய போட்டோஷூட் அதற்கு சாட்சியம் சொன்னது. இன்னொரு பக்கம், `இந்த பிரேக்அப் பற்றி மக்களும் மீடியாவும் ஓவராக டார்ச்சர் பண்ணுகிறார்கள்' என்று சுஷாந்த் தன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை மூடிவைத்துவிட்டு, தவ வாழ்க்கைக்குப் போய்விட்டார்.


p22d.jpg

சமீபத்தில் சீனாவின் குவாங்டோங் பகுதியில் ஒரு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இருபதாயிரம் பேரில், 12,000 பேர் ஓடும்போதே வாந்தியெடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். காரணம்? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோப்பு பாக்கெட்டை, பிஸ்கட் என்று நினைத்து சாப்பிட்டதுதான். பாக்கெட்டில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாலும், அந்த சோப் பழங்களின் வாசனைகொண்டது என்பதாலும் அதை ஏதோ எனர்ஜி பிஸ்கட் என நினைத்து அத்தனை பேரும் தின்றுவிட்டு ஓடியிருக்கிறார்கள். ஆமாம், மாரத்தான் போட்டியில் எதுக்கு சோப்பு கொடுத்தாங்க?


p22e.jpg

இந்தியாவின் பாட்மின்டன் ஹீரோ கோபிசந்த்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கிலும் இந்தியிலும் வரப்போகும் இந்தத் திரைப்படத்தை இயக்கப்போவது வித்தியாசமான படங்களுக்கு பெயர்போன பிரவீன் சட்டாரு. படத்தில் கோபிசந்தாக நடிக்கப்போவது சுதீர் பாபு. தெலுங்கில் சின்னச் சின்ன கேரக்டர்கள் பண்ணிக்கொண்டிருந்த இவருக்கு, சமீபத்தில் `பாகி' மூலம் பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த புகழில் இப்போது `கோபிசந்த்' வாய்ப்பு வந்திருக்கிறது. லவ் ஆல்!


p22f.jpg

`காக்காமுட்டை' ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்து அருமையான புராஜெக்ட்ஸ். சில வாரங்களுக்கு முன்பு அர்ஜூன் ராம்பாலுடன் பாலிவுட்டில் ஜோடி சேர்கிற வாய்ப்பு வந்தது. இப்போது, நிவின் பாலியின் அடுத்த படத்தில் நாயகியாகியுள்ளார். மலையாள இயக்குநர் சித்தார்த்தா சிவா இந்தப் படத்தை இயக்குகிறார்.

vikatan

  • தொடங்கியவர்

இலங்கை கலைஞர்களின் பங்களிப்பில் ஊதா பூவு கண்ணு என்ற பாடல் புதன்கிழமை(01) வெளியிடப்பட்டது. இராஜ் இசையமைத்துள்ள இந்த பாடலை தென்னிந்திய கானா பாடகரான கானா பாலா பாடியுள்ளார்.

பாடலுக்கான வரிகளை சதீஷ்காந்த் எழுதியுள்ளார். ரப் வரிகளை கிங்சவூத் கிரிஷான் எழுதியுள்ளார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13320595_1055485357833491_53850990845063

டென்னிஸ் உலகின் ராஜாக்களில் ஒருவர், களிமண் தரையின் ராஜா - அற்புத டென்னிஸ் வீரர் ரபாயெல் நடாலின் பிறந்த தினம்.
Happy Birthday Rafa Nadal

 

 

நடால்... 'நச்' ன்னு 14 விஷயங்கள்!

1.ஜூன் 3, 1986 ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். 3 வயது முதலே டென்னிஸ் மட்டையைப் பிடிக்க ஆரம்பித்தவர் நடால்.

2. இவருடைய 8 வயதிலேயே 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றார். அப்போது அவர் கால்பந்து ஆட்டத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.

3.இவர் இடது கையால் டென்னிஸ் விளையாடும் பழக்கமும் , வலது கையால் எழுதும் பழக்கமும் கொண்டவர்.

4.இவர் எந்த ஒரு பதக்கம் வென்றாலும் அதை பல்லால் கடித்துக் கொண்டாடுவார். இவர் வென்ற எந்த ஒரு கோப்பையையும் இவரது பற்கள் பதம் பார்க்காமல் விட்டதில்லை.


rafelnadal.jpg

5. எப்போது பிரெஞ்சு ஒப்பன் கோப்பையை வென்றாலும் தரையில் விழுந்து அதை ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தை உடையவர்.

6.2003 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோளுக்கு ரபேல் நடாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

7. பொதுவாக டென்னிஸ் விளையாடுவோர் தாங்கள் ஆடும் கிரவுண்டிற்கு ஏற்ப மட்டையின் எடையை மாற்றுவார்கள். ஆனால் எங்கு விளையாடினாலும் நடாலின் மட்டை 55 பவுண்ட் எடையிலிருந்து மாறாது.

8. மிக இளம்  வயதில் விம்பிள்டன் போட்டியின் 3வது சுற்றுக்கு தேர்ச்சி பெற்றவர் இவர்தான். ரோஜெர் பெடரரை வீழ்த்தி இவர் தகுதி பெறும்போது இவருக்கு வயது வெறும் 17 தான்!

9. நடால், இந்தியாவில் ஒரு டென்னிஸ் பயிற்சிப் பள்ளியைத் துவங்கியுள்ளார்.

10.2005 ல் இருந்து 2௦14 ம் ஆண்டு வரை தொடர்ந்து 1௦ வருடங்களாக ஒரு முறை கூட கிராண்ட் ஸ்லாம் பட்டதை இவர் விட்டுக்கொடுத்ததில்லை. நான்கில் ஏதேனும் ஒரு பட்டதை வென்று விடுவார்.

11.இவருக்கு வாட்டர் பாட்டில் சென்டிமென்ட் அதிகம். ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை தன்னுடைய வாட்டர் பாட்டிலை யாரையும் தொடவோ நகர்த்தவோ விட மாட்டார்.

12. இவருக்கு 'கிங் ஆப் க்ளே' என்கிற பட்டப்பெயர் உண்டு. களிமண் மைதானத்தில் இவர் வெளிப்படுத்தும் சிறப்பான ஆட்டத்தால் இவருக்கு வந்த பெயர் இது.

13.வாழ்க்கையில் ஒரு முறை கூட தன்னுடைய டென்னிஸ் மட்டையை உடைத்ததே இல்லை. அவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்.

14.நடால் இதுவரை  போட்டிகளில் வெற்றிப்பெற்று, அதற்கு பரிசாக வந்த தொகை மட்டுமே 17 மில்லியன் டாலர்கள் ஆகும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜூன்:3 நடிகர் ஜெய்சங்கர் நினைவு தினம்

13301436_1149279101797545_90110032711471

 

''சினிமாவில் நடிகர் ஜெய்சங்கர், அலாதியான ஓர் ஆன்மா. ஆனா, அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவே இல்லைனு எனக்கு ஒரு சந்தேகம். அவர் உங்களுக்கு நெருக்கமான நண்பர் ஆயிற்றே... என் நினைப்பு சரியா?''

''மிகச் சரி! ஆயர்பாடியில் ஆடு, மாடு மேய்ச்சுக்கிட்டு குழல் ஊதி கோபியர்களோடு விளையாடிய, அறியாத வயசு கண்ணன்போல உள்ளத்துல கள்ளங்கபடம் இல்லாதவர் ஜெய். எதிரிகளே இல்லாம, நட்பு வளையத்துக்குள் மட்டுமே வலம் வந்தவர். சாமான்யனையும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆக்கியவர். எந்தச் சமயத்திலும் யாருக்கும் உதவிக்கரம் நீட்டும் உன்னத மனிதர். மனதையும் வார்த்தைகளையும் எப்பவும் மென்மையா வெச்சுக்கிறவர். 'ஒரு படம்கூடச் சொல்லிக்கிற மாதிரி பண்ணாம, விளையாட்டாவே காலம் தள்ளிட்டேன்டா சிவா’னு அவரோட வாழ்க்கையின் ஒரே ஆதங்கத்தை கடைசிக்காலத்துல என்கிட்ட சொன்னார். ஆனா, அதுகூட தேவை இல்லைனு இப்போ எனக்குத் தோணுது. 'கௌபாய், டிடெக்டிவ்’ பாணி படங்களுக்கு, தமிழ்ல ஜெய்சங்கர் மட்டும்தான் ஒரே ரெஃபரென்ஸ். அந்தக் கதாபாத்திரங்களில் அவரோட பிம்பத்தை இன்னும் யாரும் தாண்ட முடியலை!'

விகடன் மேடையில் - நடிகர் சிவகுமார் பதில்

  • தொடங்கியவர்

செலிப்ரிட்டீஸ் செலக்‌ஷன்!

ஒரு டிரெஸ்ஸை அஞ்சு தடவைக்கு மேல போடமாட்டேன்!

 

p22a.jpg

மிழ்நாட்டில் பலர் வீட்டு ரிமோட்டுக்கும் செல்லம்... `டிடி' என்கிற திவ்யதர்ஷினி. சுவாரஸ்யமான நிகழ்ச்சித் தொகுப்பு, ரசிக்கவைக்கும் முகபாவங்களுடன், வியக்கவைக்கும் காஸ்ட்யூம்ஸும் அவர் பலம். தன் வார்ட்ரோப் கதை சொல்கிறார் இங்கே...

செல்ல டிரெஸ்!

``நான் எட்டு மாச பாப்பாவா இருந்தப்போ, எங்கப்பா எனக்கு வொயிட் வித் சில்வர் கலர்ல ஒரு கவுன் வாங்கித் தந்தாங்களாம். நான் அதுல ரொம்ப க்யூட்டா இருப்பேன்னு, அம்மா அதை எனக்கு அடிக்கடி போட்டுவிடுவாங்களாம். போட்டோகூட இருக்கு. நான் கொஞ்சம் பெரிய பொண்ணானதுக்கு அப்புறம், அம்மா அந்த டிரெஸ்ஸை எங்கிட்ட காட்டி இந்தக் கதையெல்லாம் சொல்ல, ஒரே சந்தோஷம். அதை வாங்கி பத்திரமா என் வார்ட்ரோபில் வெச்சுக்கிட்டேன். இப்போவரைக்கும் அதுதான் என் வார்ட்ரோபுக்கு செல்ல டிரெஸ்!

லோக்கல்... கலக்கல்!

p22b.jpg

விலை உயர்ந்த டிரெஸ்தான் போடுவேங்கிறது எல்லாம் இல்ல. சொல்லப்போனா, டிரெஸ்ஸுக்கு அதிகமா செலவழிக்கிறது எனக்குப் பிடிக்காது. 300 ரூபாய் டிரெஸ்ஸா இருந்தாலும், எனக்குப் பிடிச்சிருந்தா வாங்கிப் போட்டுப்பேன். லோக்கல் அயிட்டம்னாலும், அதை மனசுக்குப் பிடிச்சுப் போடும்போது கிடைக்கிற திருப்தி, எவ்ளோ காஸ்ட்லி டிரெஸ் போட்டாலும் கிடைக்காது!

பாராட்டூஸ்... மெனக்கெடல்ஸ்!

‘டிடி டிரெஸிங் சென்ஸ் சூப்பர்ப்’னு எல்லார்கிட்டயும் பாராட்டு வாங்குறேன். மகிழ்ச்சி! ஆனா, இந்த கமென்ட் ஈஸியா கிடைக்கல பாஸ்... ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் அவ்வளவு மெனக்கெடுவேன்! என் காஸ்ட்யூம் டிசைனர்ஸ்கிட்ட நிறைய ஆலோசனை செய்து, அவங்க சொல்ற டிசைன் `ஓ.கே' இல்லாத மாதிரி தெரிஞ்சா ஆரம்பத்திலேயே கரெக்‌ஷன்ஸ் சொல்லி, மனசுக்குப் பிடிச்ச பேட்டர்ன்ல ஒரு டிரெஸ்ஸை உருவாக்கறதுக்குள்ள... ஸ்ஸப்பா! நாம இன்டர்வியூ செய்ற விருந்தினர்களுக்குப் பொருத்தமா டிரெஸ் செய்ய வேண்டியதும் மிகவும் முக்கியம். அதாவது, ஆர்யா பேட்டினா ஃபேஷனபிளா இருக்கலாம். இளையராஜா பேட்டினா, நம்ம உடையிலும் அவருக்கான மரியாதையை வெளிப்படுத்தணும். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு பேட்டர்ன்ல காஸ்ட்யூம் ரெடி செய்றது கஷ்டமா இருந்தாலும், அவுட்புட் பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும்! 

ஷாப்பிங்!

சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவை சுத்தி சுத்தி வந்து ஷாப்பிங் செய்ய ஆசை. ஆனா, நோ டைம். இப்போவெல்லாம் ஷாப்பிங்குக்காக கிளம்பிப் போறதில்ல. வெளியே எங்கயாச்சும் போகும்போது பிடிச்ச டிரெஸ்ஸை எல்லாம் பில் போட்டுட்டு வந்துடுறேன். டிரெஸ் செலக்ட் பண்ண மணிக்கணக்குல ஆக்குற ஆளெல்லாம் இல்ல இந்த `டிடி'... சில நிமிஷங்கள் போதும். ஒரு டிரெஸ்ஸை அதிகபட்சம் அஞ்சு தடவைதான் போடுவேன். அது நல்ல கண்டிஷன்ல இருக்கும்போதே, யாருக் காவது கொடுத்துடு வேன்!

ஆன்லைன் ஷாப்பிங்குக்கு `நோ'!

நான் இதுவரை ஆன்லைனில் டிரெஸ் எடுத் ததே இல்ல. ஒரு டிரெஸ்ஸை போட்டோ பார்த்து மட்டும் எடுக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. மேலும், போட்டோல பார்க்கிற மாதிரி நேர்ல இல்லைனு நிறைய கம்ப்ளெய்ன்ட்ஸும் கேள்விப்பட்டிருக்கேன். அதனால, ஆன்லைனுக்கு ஷாப்பிங்குக்கு நான் எப்பவுமே `நோ' சொல்ற பொண்ணு!

ஸ்பெஷல் கிரேஸ்!

p22c.jpg

புடவை மேல எப்பவுமே எனக்கு ஒரு ஸ்பெஷல் கிரேஸ். எப்போவெல்லாம் வாய்ப்புக் கிடைக்குதோ, அப்போவெல்லாம் தவறவிடாம புடவை கட்டிப் பேன். அதுக்கு மேட்சிங்கா, எலிகன்டா நகைகளும் போட்டுக்கும்போது, ‘யூ ஆர் ஸோ பியூட்டிஃபுல்’னு முதலில் என் மிரர் சொல்லும். அப்புறம் எல்லோரும் சொல்வாங்க!

ஷூ ஷூ... சூப்பர்!

நான் அடிக்கடி ஜீன்ஸ், டி-ஷர்ட் போட்டுக்கிறதால அதிகமா ஷூ தேவைப்படும். அதனால எப்போ ஷாப்பிங் போனாலும், ஒரு ஷு வாங்காம வரமாட்டேன்.

ஃபேஷன் அப்டேட்ஸ்!

மீடியாவில் வேலை பார்க்கிறதால, அப்டேட்டா டிரெஸ் பண்ண வேண்டி யது ரொம்ப முக்கியம். வியூவர்ஸும், ‘இந்த வாரம் `டிடி' என்ன டிரெஸ் போட்டு வர்றாங்க, அதுக்கு என்ன அக்சஸரீஸ் போட்டு வர்றாங்க’னு க்ளோஸா கவனிக்கிறதால, ஃபேஷன் பத்திரிகைகளில் இருந்து, நம்ம ஹீரோயின்ஸ் டிரெஸ் ஸிங்வரை தொடர்ந்து கவ னிச்சு, ஃபேஷனில் என்னை அப்டேட் செய்துட்டே இருப்பேன்!''

vikatan

  • தொடங்கியவர்

நியூயோர்க்கில்.... ஆஸ்திரேலிய கங்காருகள்

13329554_1256043611081399_49780374841358

13308396_1256043601081400_88519269499177

13340246_1256043597748067_14560325172049

13304976_1256043604414733_14782003979642

13301400_1256043624414731_36668859008215

13316860_1256043727748054_88318869306345

13323721_1256043724414721_91267637166317

13315268_1256043767748050_21597628507972

13323168_1256043911081369_12143413716781

13301412_1256043914414702_77433904366173

13340063_1256043927748034_61310434131506

13340045_1256043937748033_33828746667022

 

  • தொடங்கியவர்
'பதவிகள் உங்களை அடையாளங்காட்டாது'
 
 

article_1464926292-iy.jpgநாமெல்லோருமே, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் மதிப்புகளுக்கும் ஆசைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். தாங்கள் அவ்வாறில்லை என்று சொல்பவர்கள் கூட, உண்மையில் அவற்றுக்கு ஆசைப்பட்டவர்களே.

ஆனால், பதவிகளோ அல்லது பட்டங்களோ, உங்களுக்குரிய அடையாளங்கள் என எண்ணிக் கொள்ளாதீர்கள். நீங்கள் யாரென்ற அடையாளம், உங்களுடைய திறமையாலும் உங்களுடைய நற்பண்புகளாலும் மாத்திரமே உருவாக்கப்பட வேண்டும்.

உங்களை விட உயர்ந்த பதவியைக் கொண்டோரைப் பார்த்துப் பொறாமையடையாதீர்கள், குறைந்த பதவியைக் கொண்டோரைப் பார்த்து இழிவாக எண்ணாதீர்கள்.

அதேபோல், உங்களை விடத் தகுதிகுறைந்த ஒருவருக்கு, உங்களை விட உயர்ந்த பதவி வழங்கப்பட்டிருக்கிறது என்று எண்ணுவீர்களெனில், அவருடன் முரண்படாதீர்கள், அவரை எதிரியாக எண்ணாதீர்கள். உங்களுக்கென ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள், காலப்போக்கில், உங்களின் பெறுமதியையும் அவசியத்தையும் உணர்ந்துகொள்வார்கள்.

பெரிய கோடொன்றைச் சிறியதாக்குவதற்கு, அந்தக் கோட்டை அழிப்பதை விட, இன்னொரு பெரிய கோட்டை வரைவது தான் சிறந்தது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

13392308_1149938995064889_39468328591020

ஜூன் 4: எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்த நாள் இன்று.

கின்னஸ் சாதனையாக 40,000 பாடல்கள், தேசிய விருது 6, நந்தி விருது 25, ஃபிலிம் ஃபேர் விருதுகள் என பட்டியலிட முடியாத பெருமைகள் இவருக்கு சொந்தம். மிகச்சிறந்த பாடகர், சிறந்த இசையமைப்பாளர், நல்ல நடிகர், குரல் கலைஞர் இதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதர். தலைமுறை கடந்த 'இசைப்பேரரசு' எஸ்.பி.பியின் 70-வது பிறந்த நாள் இன்று!

 

 

“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்!”

சதீஷ் கலை, ஃபேஸ்புக்.

''பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''1962-ல் ஆந்திர மாநிலத்தில் எங்கேயோ ஒரு சின்ன ஊர்ல நான் பாடினதைக் கேட்டுட்டு,

'நீ நல்லாப் பாடுற தம்பி. சினிமாவுல பாடலாம்’னு முதன்முதலா சொன்னவங்க ஜானகியம்மா. என் மேல நம்பிக்கை வைச்ச முதல் மனுஷி. அவங்ககிட்ட நான் நிறையக் கத்துக்கிட்டேன். அவங்க பாடினது மாதிரி ரொம்பக் கஷ்டமான பாடல்களை இந்தியாவுல வேற யாராவது பாடியிருப்பாங்களானு சந்தேகமா இருக்கு!

ரிக்கார்டிங் தியேட்டர்லயே ரெண்டு பேரும் நிறையத் தடவை சண்டை போட்டிருக்கோம். அந்த உரிமையை, அவங்களோட நட்பு எனக்குக் கொடுத்திருக்கு. நான் சும்மானாச்சுக்கும் சண்டை போடுவேன். ஆனா அவங்க, சீரியஸா கையில கிடைக்கிறதை எல்லாம் தூக்கி என்னை அடிச்சிருக்காங்க. நான் அந்தளவுக்கு அவங்களைக் கிண்டல் பண்ணுவேன். அவங்களுக்கு நான் அவ்வளவு செல்லம்.

ஏதாவது ஜோக் சொன்னா, அரை மணி நேரம் சிரிச்சுட்டே இருப்பாங்க. அப்புறம் ஸ்டுடியோல எல்லாருக்கும் கேட்கிற மாதிரி மைக்ல, 'இந்தப் பையனுக்கு நான் நல்லாப் பாடுறதுல இஷ்டம் இல்லை. ஜோக் சொல்லிச் சிரிக்கவெச்சு எனக்குத் தொண்டை கட்டிக்கிச்சு’னு சொல்வாங்க.

p90b.jpg

ஒரு தடவை, ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அதுக்கு அவங்க வர்றேன்னு டேட் கொடுத்திருந்தாங்க. ஆனா, தேதியைத் தப்பாக் குறிச்சிட்டாங்க போல. நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாளுக்குப் பிறகு எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு, கொச்சின்ல இருந்து ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வந்திருக்காங்க. அங்கே ஈ, காக்கா இல்லை. வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. ஹைதராபாத்ல அவங்க தோழி வீட்லயே தங்கிட்டாங்க.

மறுநாள், நான் எதேச்சையா அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'அந்த நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸா வந்து உன்னைப் பாராட்டணும்னு திட்டம் போட்டேன். ஆனா, முடியாமப்போச்சு. இப்ப எங்க இருக்க? உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா?’னு கேட்டாங்க. உடனே ஓடிப் போய் அவங்களைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க.

ஒருமுறை, நானும் சித்ராவும் டூயட் பாட்டு ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அடுத்து இன்னொரு பாட்டு பாட அவங்க வந்துட்டாங்க. வாய்ஸ் ரூமுக்குள் வந்து, 'இங்க நான் வரலாமா?, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா?’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ..! அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும்? டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா!''

ஃபிர்தோஸ் ராஜகுமாரன், ஃபேஸ்புக்.

''இன்றைய இளம் பாடகர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன?''

''இளம் பாடகர்களுக்கு மட்டும் இல்லை, எல்லாப் பாடகர்களுக்குமே ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால இன்றைய ட்ரெண்டுக்கு இளம் பாடகர்கள் எதிர்கொள்ளும் ப்ளஸ், மைனல் பத்தி மட்டும் சொல்றேன். ப்ளஸ்... வெஸ்டர்ன் மியூசிக்கோ, இண்டியன் மியூசிக்கோ நிறையப் பேர் முறையாக் கத்துக்கிட்டு வர்றாங்க. ஆனால், வெரைட்டி வெரைட்டினு சொல்லி இசையமைப்பாளர்கள் ரெண்டு படத்துல வாய்ப்பு தர்றது, அப்புறம் இன்னொரு புது வாய்ஸுக்குப் போறதுனு யாருக்குமே நீண்ட நாள் பாட அவசாகம் கிடைக்காதது மைனஸ்.

நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரெண்டு ஆண், ரெண்டு பெண் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து நிறைய வாய்ப்புகள் தரணும். அப்பதான் அவங்க வாய்ஸ் கேட்கிறவங்களுக்குப் பழக்கப்படும்; புரியும். அதுக்கு அவங்களுக்கு சீனியர்ஸோட சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புகளைத் தரணும். அப்பதான் அவங்களால் தங்களை பாலிஷ் பண்ணிக்க முடியும். நிறைய நாள் ஃபீல்டுல இருக்கலாம்.

ஒரே படத்துல நாலு பாட்டுனா, நாலு சிங்கர்ஸ் பாடுறாங்க. நிறையப் பேருக்கு வாய்ப்பு தர்றது நல்ல விஷயம். ஆனா, அந்த மாதிரி எத்தனை படங்கள் எத்தனை பேருக்கு உங்களால் வாய்ப்பு தந்துட முடியும்? இதெல்லாம் இளம் சிங்கர்ஸோட மைனஸ் பாயின்ட்.

p90a.jpg

கா.அருண்மொழி, தஞ்சாவூர்.

''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்?''

''மக்கள் நம்ம மேல, நம்ம உச்சரிக்கிற வார்த்தை மேல மரியாதை வெச்சிருக்காங்க. அதுக்கு நாம மரியாதை தரணுமே. அதுதான் என்னை ஓடவைக்குது! அந்த உச்சரிப்புல சின்ன தப்புகூட வந்திரக் கூடாதுனு நான் தவியாத் தவிப்பேன்.

ஒரு தெலுங்குப் படம். லைவ் ரிக்கார்டிங். கே.எஸ்.ஆர்.தாஸ்தான் டைரக்டர்; அவரே எடிட்டரும்கூட.  சத்யம் சார் மியூசிக். ஒரு இடத்துல நல்ல டேக்ல, 'ஒக்க கண்ட...னு’ வாய்ஸ் உள்ள போயிடும். டேக் கட் பண்ணாம முடிச்சிட்டோம். டைரக்டரும் ஓ.கே. சொல்லிட்டார். 'சார்... அந்த ஒரு இடத்துல வாய்ஸ் போயிடுச்சு. இன்னொரு டேக் பாடுறேனே’னு கேட்டேன். 'டோட்டல் எக்ஸ்பிரஷன் நல்லா இருந்துச்சு. நானே எடிட்டரா இருக்கிறதால அதை ஃபிலிம்ல கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ன்னார். அப்பல்லாம் ஃபிலிம்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிதான் எடிட் பண்ணுவாங்க. அதனால நானும் தைரியமா இருந்துட்டேன். ஆனா, அவர் மறந்துட்டார். படத்துலயும் அப்படியே வந்துடுச்சு. இன்னைக்கு அந்தப் பாட்டை யார் பாடினாலும் நான் பண்ணின அந்தத் தப்போடத்தான் பாடுறாங்க. அதை ஏதோ எக்ஸ்பிரஷனுக்காக நான் பண்ணினதுனு நினைக்கிறாங்க. அது தப்பு இல்லையா... பரம பாவம் இல்லையா? 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்!''

தாமரைச் செல்வி, சென்னை.

''எம்.எஸ்.வி-யின் இசையில் பாடிய அனுபவம் குறித்து..?''

''அவர் என் மானசீகத் தந்தை. அவர்கிட்ட நான் பாடிய அனுபவங்களைப் பேசினா, ஆயிரம் பக்கங்களுக்கு மேல வேணும். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன்.

'நிழல் நிஜமாகிறது’ படத்துக்காக நானும் வாணி ஜெயராம் அம்மாவும் 'இலக்கணம் மாறுதோ...’ பாட்டு பாடிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். ராத்திரி 11 மணிக்கு எம்.எஸ்.வி. சார் வீட்ல இருந்து போன். அண்ணி பேசினாங்க. 'என்னப்பா உங்க அண்ணா வந்ததுல இருந்து அவர் மனசு எங்கேயோ இருக்கு. கண்ணுல தண்ணி வருது. ஒண்ணும் பேச மாட்டேங்கிறார்’னாங்க. 'ரொம்ப அழகான பாட்டும்மா. அண்ணா அழகாப் பண்ணியிருந்தாங்க’னேன். 'நீயே பேசுப்பா’னு போனை அண்ணாகிட்ட கொடுத்தாங்க. என்னை அண்ணா ஒரு நாளும் 'பாலு’னு கூப்பிட்டதே கிடையாது. 'நான் விஸ்வநாதன் பேசுறேன். என்ன பாலு அவர்களே... எப்படி இருக்கீங்க?’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க! அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான்.

இப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள்  இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது.

'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை நாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை!''

மகேஷ், வேலூர்.

''ஒரே நாளில் உங்கள் குரலில் 10 பாடல்கள் பதிவான சம்பவங்கள் உண்டாமே.... அந்த 'ஒன்-டே’ அனுபவங்கள் பற்றி..!?''

''ஒரே நாள்ல 10 பாட்டு சர்வசாதாரணமா நிறையத் தடவை பாடியிருக்கேன். 1978-ல் ஒரு சமயம், 'சுசிலாம்மாவும் நானும் அமெரிக்கா நிகழ்ச்சிக்காக ரெண்டு மாசம் இந்தியாவுல இருக்க மாட்டோம். அதுக்கேத்த மாதிரி ரிக்கார்டிங் பிளான் பண்ணிக்கங்க’னு எல்லா இசையமைப்பாளர்களிடமும் சொல்லிட்டோம். நாளைக்கு அமெரிக்கா கிளம்புறோம்னா, இன்னைக்கு காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு சின்னச் சின்ன பிரேக் விட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிச்சப்ப, அது... 19-வது பாட்டு. அதில் ஏறத்தாழ 12 பாடல்கள் சுசீலாம்மா என்னோட சேர்ந்து பாடினாங்க.

அதே போல பெங்களூரூர்ல ஒரே தியேட்டரில் 16 பாட்டு பதிவு  பண்ணினோம். மும்பையில் ஒருமுறை 16 பாட்டுனு இப்படி நிறைய நடந்திருக்கு. என் எனர்ஜி லெவலை எப்படிக் காப்பாத்திக்கிட்டு பாடினேன்?, 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை!''

பழனிச்சாமி, மானாமதுரை.

 ''டி.ராஜேந்தர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தங்கத் தட்டு விருது பெற்றவை. அவருடைய இசை ஆளுமையைப் பற்றி சொல்லுங்களேன்?''

 ''டி.ஆர்., ஒரு குழந்தை மனசுக்காரர். அவர் ஒரு படத்தில் எல்லாமே பண்ணுவார். அவர் ஒரு நல்ல பாடலாசிரியர். மனசுல உள்ள உணர்ச்சிகளை அழகான வார்த்தைகள்ல கொண்டுவர்றதுல வித்தகர். அவருக்கு மீட்டரே இருக்காது. அவருக்குத் தெரிஞ்ச பாணியில அழகா கம்போஸ் பண்ணுவார். அவரிடம் எனக்குப் பிடிச்சது, அவருக்கு என்ன தெரியுமோ அதைத் துணிச்சலாப் பண்றதுதான்.

அவருக்கு, சிவமணி டிரம்ஸ்னா ரொம்ப இஷ்டம். என்ன மாதிரியான பாட்டா இருந்தாலும் அதில் சிவமணி டிரம்ஸ் இருக்கணும்னு நினைப்பார். ஆனா, டி.ஆர். கொடுக்கும் ஒரு சிச்சுவேஷனுக்கு சிவமணி 10 முறை 10 வெரைட்டிகள்ல வாசிப்பார். 'சிவமணி, எனக்குத் தெரிஞ்ச அந்த ஒரே ஒரு பீட்டு இருக்குப் பாரு... நம்ம தமிழ்நாட்டு பீட். அதுதான் வேணும். நீ வேற ஏதாவது வாசிச்சா, அது என் பாட்டு இல்லைனு நினைப்பாங்க. எனக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்றேன். அதை மட்டும் வாசி போதும்’பார் டி.ஆர்.

நான்னா அவருக்கு அவ்வளவு அன்பு. ஒருமுறை என் மனைவிகிட்ட, 'அம்மா நான் மட்டும் பொண்ணாப் பிறந்திருந்தா உங்க கணவரைக் கடத்திட்டுப் போயிருந்திருப்பேன். உங்க ஹஸ்பெண்டு மேல அந்தளவுக்குக் காதல்’னு சொல்லியிருக்கார். அவர் பண்ண வேலைகள் எல்லாம் உண்மை. அதான் எல்லாருக்கும் அவரையும் அவர் படைப்புகளையும் பிடிச்சிருக்கு!''

vikatan

 

13301298_1056242714424422_47113085989785

 

பாடும் வானம் பாடி எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பல இந்திய மொழிகளில் பாடி பாண்டித்தீயம் பெற்றவர்.
சாந்தி நிலையம் திரைப்படத்தில் "இயற்கை என்னும் இளைய கன்னி" பாடல் மூலம் தமிழ் திரையுலகில் தடம்பதித்தவர். 40000 மேல் பாடல்களைப் பாடி வாழும் குரல் வளம் கொண்டவர்.
60 களில் தொடங்கி நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பின்னனி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமையைக் கொண்டவர்.
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடி கிண்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த சாதனையாளன்.

நான்கு தலைமுறைகளாக தொடரும் ஒரு சகாப்தம் எஸ் பி. பி என்றால் அது மிகையாகாது .70 வது அகவையினனை கண்டு பொன்விழாவினை கொண்டாடும்
பாட்டுத் தலைவன்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

"என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !"என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை....அவரை பற்றிய சில குறிப்புகள் இங்கே

 

 

 

  • தொடங்கியவர்

இன்பாக்ஸ்

 

dot1.jpg `நேரம்’ படத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் நிவின் பாலி. கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி இயக்கத்தில் ஹிட் அடித்த `உலிடவாரு கண்டன்டே' படத்தின் தமிழ் ரீமேக்கில் ரீ என்ட்ரி ஆகிறார் நிவின். த்ரில்லர் படமான இதை தமிழில் இயக்குவது ராஜீவ் மேனன் மற்றும் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த கௌதம் ராமச்சந்திரன். நேரமாச்சு... சீக்கிரம் வாங்க நிவின்!

p38a.jpg


p38b.jpg

dot1.jpg சமீபத்தில் நடந்துமுடிந்த உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், ஒரே இந்தியராக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் சோனியா லாதர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் 24 வயதான சோனியா,  உலகின் முதல் நிலை வீராங்கனையான அலிஸா மெஸானோவுடன் மோதினார். முதல் ரவுண்டில் பன்ச்களைச் சிறப்பாக விட்ட சோனியா, இரண்டாவது சுற்றில் கவனம் இழக்க தோல்வி அடைந்தார். இருப்பினும் மேரி கோம் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் எல்லாம் இரண்டாம் சுற்றிலேயே வெளியேறிவிட சோனியா மட்டும் வெள்ளிப் பதக்கத்தோடு, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றிருக்கிறார். ஆல் தி பெஸ்ட் சோனியா!


p38c.jpg

dot1.jpg சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா நடித்திருக்கும் `சுல்தான்’ படத்தின் ட்ரெய்லர்தான் கடந்த வார யு-ட்யூப் வைரல். `முதலில் நான் சுல்தானில் நடிக்கப் பயந்தேன். காரணம், என்னைப் பார்த்தால் ஒரு மல்யுத்தப் போட்டியில் ஜெயிப்பவரைப்போல இல்லை என்பதுதான். பிறகு என்னைப் போன்ற பலரும் மல்யுத்தத்தில் இருப்பதைப் பார்த்த பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. ஒருவழியாக இப்போது நானும் மல்யுத்த வீராங்கனை ஆகிவிட்டேன்' என  உற்சாகமாகிறார் அனுஷ்கா ஷர்மா. ரெஸ்லிங் ராணி!


p38d.jpg

dot1.jpg`டின்னர் வித் மினிஸ்டர்’ என்ற திட்டத்தைச் சத்தம் இல்லாமல் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. திடீரென மத்திய அமைச்சர்களுக்கு போன் போட்டு, `இன்று இரவு உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வருகிறேன்' எனச் சொல்லி சர்ப்ரைஸ் கொடுக்கிறார் மோடி. முதலில் மோடி டின்னர் சாப்பிட்டது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீட்டில். அடுத்ததாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ராம் விலாஸ் பஸ்வான்... என ஒவ்வோர் அமைச்சர் வீடாக டின்னருக்குப் போய்வருகிறார் மோடி. இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு, அமைச்சரின் குடும்பத்தினருடன் அறிமுகமாகி, ஜாலியாகப் பேசுகிறாராம். இதனால் பல அமைச்சர்கள் மோடியின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். டின்னர் பயணம்!

dot1.jpg தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தன் வீட்டில் பிரமாண்டமான ஒரு மாடித் தோட்டத்தைப் பராமரித்துவருகிறார். இங்கு முக்கிய விளைச்சலே கீரைகள்தான். 20-க்கும் மேற்பட்ட வகைகளில் கீரைகள் வளர்க்கும் ஜெயக்குமாரின் பிடித்த உணவும் கீரைகளே! கீரை வளர் துறை!


p38e.jpg

dot1.jpg `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' ஹீரோ ஜானி டெப் மீது கொலைமுயற்சி குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் அவரது மனைவி ஆம்பர் ஹியர்டு. 52 வயது ஜானி டெப், 30 வயது ஹாலிவுட் நடிகை ஆம்பரை, கடந்த ஆண்டு திருமணம் செய்தார். 15 மாதங்களே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியது. இந்த நிலையில், `கடந்த வாரம் திடீரென என் வீட்டுக்குள் நுழைந்த ஜானி டெப், ஐபோனை என் முகத்தில் தூக்கி எறிந்து என்னைக் காயப்படுத்தியதோடு, தவறான சொற்களால் திட்டினார். அவரால் என் உயிருக்கு ஆபத்து' என நீதிபதிகளிடம் ஆம்பர் முறையிட, ஆம்பர் வீடு இருக்கும் பக்கமே போகக் கூடாது என ஜானிக்குத் தடைவிதித் திருக்கிறது நீதிமன்றம். வெளியே ஹீரோ... உள்ளே வில்லன்!

vikatan

  • தொடங்கியவர்

அதி சொகுசு விமானம் படங்கள்

லண்டனில் இருந்து மெல்போர்ன் செல்ல 55,000 பவுண்ஸ் மட்டுமே...<_<

The cost of the ticket includes luxury chauffeured transport to and from the airport, private check-in, access to a private lounge and a personal travel concierge 

Guests will now be able to relax in sheer luxury all the way from London to Australia in Etihad's The Residence - but it will cost more than £55,000 return

Before landing the suite’s passengers can freshen up in a bathroom that has a shower, make-up mirror and hairdryer

The Residence's lounge area features a 32in flat-screen LCD TV, leather double sofa and two fold-away dining tables

A Savoy-trained butler will serve bespoke meals prepared by an on-board chef to those staying in Etihad's the Residence

 

  • தொடங்கியவர்

13304949_1056255514423142_46792861934455

தயாரிப்பாளர், நடிகை Anjelina Jolie இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

 

ஏஞ்சலினா ஜோலி

vbk-Angelina_Jolie_2881263f.jpg
 

ஹாலிவுட் நடிகை, சமூக ஆர்வலர்

அகதிகள் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்துவரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பிறந்தநாள் இன்று (ஜூன் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் (1975) பிறந்தார். தந்தை ஜான் வாய்ட், தாய் மெர்க்கலின் பெர்ட்ராண்ட் இருவரும் பிரபல நடிகர்கள். ஏஞ்சலினாவுக்கு 2 வயதானபோது, பெற்றோர் பிரிந்தனர். தாய் தன் 2 குழந்தை களுடன் நியூயார்க் சென்றார்.

# சிறு வயதிலேயே நடிக்கும் ஆசை துளிர்விட்டது. 7 வயதில் ‘லுக்கிங் டு கெட் அவுட்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குடும்பம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றது. நடிப்பு பள்ளியில் சேர்ந்தார். பல்வேறு நாடகங்களில் நடித்தார். மாடலிங் செய்தார்.

# குறும்படங்கள், இசை ஆல்பங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே தவிர, சினிமா வாய்ப்பு வரவில்லை. டீன்ஏஜ் தடுமாற்றம், தவறான சேர்க்கை, போதைப் பழக்கம் என்று திசைமாறித் திரிந்தார். தூக்கமின்மை, மனநிலைப் பிறழ்வும் சேர்ந்துகொண்டதில் வாழ்க்கை வெறுத்தது.

# ஒருவழியாக 1993-ல் ‘சைபார்க்-2’ என்ற பட வாய்ப்பு கிடைத்தது. 1995-ல் ‘ஹாக்கர்ஸ்’ படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. இப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. 3 குறும்படங்களில் நடித்து ‘நல்ல நடிகை’ என்ற அந்தஸ்தை பெற்றார்.

# 2000-ல் இவர் நடித்த ‘கான் இன் 60 செகண்ட்ஸ்’ திரைப்படம் சூப்பர் ஹிட். அடுத்து ‘டாம்ப் ரைடர்’ படத்தில் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கிக் பாக்ஸிங், யோகா, பாலே நடனம் என ஏராளமான பயிற்சிகளை மேற்கொண்டார். இத்திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றிபெற்று இவரை திரையுலகின் அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியது. ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வந்தார்.

# ஒருமுறை, ஐ.நா. சபை குறித்த புத்தகத்தில் அகதி முகாம்களின் அவலநிலையைப் படித்தார். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வேதனை அடைந்தார். படப்பிடிப்புக்காக கம்போடியா சென்றிருந்தபோது, ஒரு அகதிகள் முகாமில் கண்ட அவலங்கள் இவரது இதயத்தை நொறுக்கின.

# பல நாடுகளுக்கும் சென்று அகதி முகாம்களைப் பார்வையிட்டார். அகதிகளின் நல்வாழ்வு, முன்னேற்றத்துக்காக பாடுபடுவது என தீர்மானித்தார். முதல்கட்டமாக ஒரு மில்லியன் டாலர் வழங்கினார்.

# அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் இவரை 2001-ல் நல்லெண்ணத் தூதராக நியமித்தது. முகாம்களுக்கு நிதி உதவி செய்வது, நிதி திரட்டுவது, அடிப்படை வசதிகள் செய்துதருவது போன்ற முனைப்புகளை மேற்கொண்டார்.

# திரையுலக வாழ்விலும் முன்னேற்றம் கண்டார். 2007-ல் தொடங்கி ஆவணப் படங்கள் உட்பட பல படங்களை இயக்கினார். 3 கோல் டன் குளோப் விருது, துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது, ‘உலகின் சிறந்த குடிமகள்’ விருது, ‘உலகின் தலைசிறந்த மனிதாபிமானி’ பட்டம் என்பது உட்பட பல பட்டங்கள், விருதுகள் பெற்றுள்ளார்.

# தான் பெற்றெடுத்த 3 குழந்தைகளுடன், தத்தெடுத்த 3 குழந்தை களையும் ஒரே வீட்டில் வளர்த்து வருகிறார். இன்று 41 வயதில் அடியெடுத்து வைக்கும் ஏஞ்சலினா ஜோலி, தற்போதும் ஒரு முன்னணி நடிகையாக பிரகாசிப்பதோடு சமூக சேவைகளையும் தொடர்ந்து வருகிறார்.

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

எம்.ஜி.ஆரிடம் முகமது அலி கேட்ட மீன் குழம்பு!

mgrmohamedali600121.jpg

விளையாட்டுப் போட்டியில் " த கிரேட்டஸ்ட்" என்ற தகுதியைப் பெற்ற ஒரே வீரராக போற்றப்பட்டவர்,  குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி.  சில வருடங்களாக சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த முகமது அலி, அரிசோனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இன்று காலை மரணமடைந்தார்.

அமெரிக்காவில் 1942-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி பிறந்த அலியின்  இயற்பெயர் காசியஸ் மார்செல்லஸ் கிளே ஜூனியர். அவருக்கு "தி கிரேட்டஸ்ட்', "தி சாம்ப்', "தி லூயிஸ் வில்லி லிப்' என்ற  'நிக்' நேம்களும் உண்டு.  1964-ல் இஸ்லாமிய தேசம் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட போது அதில் தன்னை இணைத்துக்கொண்டு தனது பெயரை முகமது அலி என மாற்றிக்கொண்டார். பின்னர் 1975-ல் சன்னி முஸ்லிம் பிரிவுக்கு முழுமையாக மதம் மாறினார். அலியின் மகள் லைலா அலி, தந்தையைப் போன்றே குத்துச் சண்டையை  தீவிரமாக நேசித்ததால், அவரும் பெண்கள் குத்துச் சண்டைப் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

முகமதுஅலி யார் ?

mohammedali250.jpgதன்னுடைய பதினெட்டாவது வயதிலேயே உலகளாவிய குத்துச் சண்டை விருதை வென்றவர், அலி. 1960-ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை எளிதாகத் தட்டிச் சென்றார். ஆனால், குத்துச் சண்டை உலகம் முகமது அலியை அப்போது,  சாதாரணமான ஒரு டெக்னிகல் பாக்ஸராகத்தான்  பார்த்தது.
 
சாம்பியன் ஆனார்


1965 பிப்ரவரி 25 ந்தேதி முகமது அலியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நாளாக அமைந்தது. ஆம், அன்றுதான்  'சோனி லிஸ்டன்' என்ற ( 'ஆபத்தான வீரர்' என்றறியப்பட்டவர் )  முதல் நிலை குத்துச் சண்டை வீரரை  தன்னுடைய 7-வது சுற்றில் டெக்னிக்கல் குத்துக்களால் வீழ்த்தினார். இதையடுத்து,  உலக ஹெவி வெய்ட் குத்துச் சண்டை  சாம்பியன் விருது முதன் முதலாக அலி, கைக்கு வந்து சேர்ந்தது.
 
மீண்டும், மீண்டும் வெற்றி !

அலியை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு தீவிர பயிற்சியை மேற்கொண்ட  சோனி லிஸ்டன் மீண்டும் ஒருமுறை அலியை களத்தில் சந்தித்தார். ஆனால், அதிக வேலை வைக்காமல் முதல் ரவுண்டிலேயே  சோனி லிஸ்டனை நாக்-அவுட் முறையில் மண் கவ்வ வைத்தார் முகமது அலி.

பறிபோன பதக்கம்

அமெரிக்க ராணுவத்தில் கட்டாயமாக  சேரும் ஆணையை ஏற்க மறுத்ததால்  குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு  சுமார் 4 ஆண்டுகளுக்கு தடையும், முகமது அலியின் சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது. அந்த பட்டத்தை  மீண்டும் தக்க வைத்துக் கொள்ள, வலிமை மிக்க 'ஜோ- பி-ரேசியர்'  என்ற வீரருடன் மோதி முதல்முறை அலி தோல்வியுற்றார். ஆனால், அவரது விடா முயற்சி, 1974-ல்  மீண்டும் , ஜோ பிரேசியருடன் மோதி உலக சாம்பியன் விருதை  கைப்பற்ற காரணமானது.

வெற்றியும், தோல்வியும்

 அதேபோல் முதலில் மோதி, தோல்வியைக் கொடுத்த 'லியோன் ஸ்பிங்ஸ்' என்ற வீரரை சில ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும்  களத்தில் சந்தித்து மூன்றாவது முறையாக  உலக சாம்பியன் விருதைக் கைப்பற்றினார் அலி. நான்காவது முறையும் அதே பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள 'லாறி-ஹோம்ஸ்' என்ற மனித மலையுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.

தன்னை தோற்கடித்தவர்களையே மீண்டும் தோற்கடித்து "ஒவ்வொரு வெற்றியும், முயற்சியாலும், பயிற்சியாலும் மட்டுமே சாத்தியப்படும், வெற்றி என்பது, எவர் ஒருவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல" என்று வெற்றி மேடையிலேயே வெளிப்படையாக அறிவித்து பதக்கத்தை முத்தமிட்டவர் அலி.

இதன் பின்னரே அலிக்கு 'தி கிரேட்டஸ்ட்' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அலியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி கிரேட்டஸ்ட்' என்ற சினிமாப்படமும் இதன் பின்னர் வெளியாகி அவர் புகழை பரப்பியது.

mgrmohamedali60021.jpg

5 முறை தோல்வி , 56 முறை வெற்றி

தன்னுடைய வாழ்நாளில்  61 முறை மேடையேறி குத்துச் சண்டை  போட்ட அலி, அதில் 56 முறை வெற்றியை ருசித்தவர். அவருடைய தோல்வியானது, மொத்தமே ஐந்துமுறைதான் இருந்தது. அதில் 37 முறை எதிராளியை மண் கவ்வ வைத்து எழுந்திருக்க முடியாத அளவு 'நாக்-அவுட்' முறையில் 'பஞ்ச்' களை விட்டவர் அலி.

வெற்றிக்கு காரணம்

ஒருமுறை முக்மது அலியிடம்,  ' புதிதாய் களம் காணும் வீரர்களுக்கு ஏதாவது சொல்லுங்களேன் ?' என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அலி, "வீரர்கள்  உடற்பயிற்சி கூடங்களில் மட்டுமே உருவாக முடியாது. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அதேபோல், அவர்களுக்கு  திறமையும் முக்கியம்,  மனோதிடமும் முக்கியம். அதில், மனோதிடம் தான் மிகவும் முக்கியம்" என்றார்.

முகமது அலியை ஏன் விரும்புகின்றனர் ?

ஃபவுல் -பன்ச் எனப்படும் விதிமுறைகளை மீறிய குத்துக்களை எதிராளி மீது விடுவதும், எதிராளியை ஏமாற்றி குத்துவதும், களைப்பாகி விட்டது போல் நடித்து 'மவுத்- கார்ட்'  டை (பற்கள், தாடைகளின் பாதுகாப்புக்காக வாய்க்குள் பொருத்தப் படும் ரப்பர் தட்டை) கீழே துப்புவதும் போன்ற விரும்பத்தகாத செயல்களை தன்னுடைய வாழ்நாளில்  எப்போதும் செய்யாத 'டீஸன்ட்சி - பாக்ஸர்' என்ற நற்பெயர் அலிக்கு இருந்ததால்தான் அவரை உலகம் முழுவதும் குத்துச் சண்டை ரசிகர்கள் மட்டுமல்ல,  குத்துச் சண்டை வீரர்களும் கொண்டாடுகின்றனர்

சென்னையும், முகமது அலியும்

அது, 1980-ம் வருடம்...சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் குத்துச் சண்டை பிரியர்கள் 20 ஆயிரம் பேர்களுக்கு மேல் திரண்டிருக்க,  அரங்கமோ விசில் சத்தங்களாலும், கைதட்டல் களாலும் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. "என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்" என்று சொல்லியிருந்த, அன்றைய தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரிலேயே சென்னைக்கு வந்திருந்தார் அலி.   விழாவுக்கான ஏற்பாடுகளை அன்றைய ஒய்.எம்.சி.ஏ. பாக்ஸிங் கிளப் (நந்தனம்)  செயலர், ஹெச்.மோகனகிருஷ்ணன் ( எம்.ஜி.ஆர். முகமது அலிக்கு மாலையிடும் படத்தில் உடன்  இருப்பவர்) செய்திருந்தார்.
 
அலியுடன் மோதிய சென்னை வீரர்கள்


காட்சி குத்துச் சண்டைப் (ஷோ- பைட்) போட்டியில் அலி பங்கேற்று மோதுகிறார் என்பதே மக்கள் அங்கு திரளக் காரணம். முதல்,  'ஷோ- பைட்' டில்  வீரர், 'ஜிம்மி எல்லிஸ்' முகமது  அலியுடன் மோத, இரண்டாவது ஷோ- பைட்டில் தமிழ்நாடு சாம்பியனான ராக்கி-ப்ராஸ், அலியுடன் மோதினார் .
 
'முகமது அலியுடன் மோதிய ஷோ- பைட்தான், எட்டாவது வகுப்பு கூட  படித்து முடிக்காத என்னை  தென்னக ரெயில்வேயில் விளையாட்டு வீரருக்கான தகுதி அடிப்படையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள காரணமாக இருந்தது' என்று பின்னாளில் சொல்லி பெருமையுடன் நினைவு கூர்ந்தார், ராக்கி-ப்ராஸ்.
 
எம்.ஜி.ஆரிடம் அலி கேட்ட மீன் குழம்பு

ஷோ பைட் போட்டிகளின் முடிவில், முகமது அலிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.ஜி.ஆர் எங்கள் தமிழகத்திற்கு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என்னவேண்டுமோ கேளுங்கள்...என அலியிடம் கேட்டார். அதற்கு அலி, “சென்னையில் மீன் உணவு சுவை என்கிறார்களே... அது எங்கு கிடைக்கும்? " என்றார். விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற எம்.ஜி.ஆரிடம் இப்படி ஒருவர் கேட்டால் அதுவும் உலக பிரபலம் கேட்டால் சும்மா விடுவாரா...அடுத்த நொடி ராமாவரம் தோட்டத்திற்கு போன் பறந்தது.

ராமாவரம் தோட்டத்தில் அசைவ உணவு சமைப்பதில் தேர்ந்தவரான மணி என்பவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஜானகி அம்மையாரின் மேற்பார்வையில் வஞ்சிரம் மீன் வறுவல், வெள்ளை சாதம்,  மீன் குழம்பு, வேகவைத்த முட்டை குழம்பு, இறால் ஃப்ரை, சிக்கன் வறுவல், உடன் பாயாசம் என விதவிதமான உணவுவகைகள் அன்று முகமது அலி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

உணவு அருந்தியபின் உணவு எப்படி இருந்தது என எம்.ஜி.ஆர் கேட்டாராம். அதற்கு முகமது அலி,  'எனக்கு உலகில் எங்கு சென்றாலும் விதவிதமான உணவைத்தர ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அது என்னைக்கவர்வதற்கானதாக இருக்கும். நீங்கள் அளித்த உணவில் சுவையை விட கூடுதலாக இருந்தது உங்கள் அன்புதான்' என்று நெகிழ்வாக கூற, எம்.ஜி.ஆர் நெகிழ்ந்துநின்றாராம். முகமது  அலியின் சென்னை விசிட் இப்படிதான் நெகிழ்வாக இருந்தது.

திகட்டத் திகட்ட மீன் குழம்பு சாப்பாடும், வறுவலுமாக சென்னை மக்களிடமும், மக்கள் திலகத்திடமும்  இருந்து பிரியாவிடை பெற்ற முகமது அலி, இன்று உலக மக்களிடம் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு விட்டார். 

முகமது அலி மீது அதீத பிரியம் கொண்டிருந்த, எம்.ஜி.ஆருக்கும், முகமது அலிக்கும் ஒரு ஒற்றுமை,  இருவருமே ஜனவரி 17-ஆம் தேதி பிறந்தவர்கள்

vikatan
 

  • தொடங்கியவர்

13346321_1056262827755744_48815776658749

இங்கிலாந்து அணியின் கிரிகெட் வீரர் Ben Stokes
இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.