Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

அறிவிக்கப்பட்டது இலங்கை அணி

October 24, 2015

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் மூன்று அறிமுக வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர் செகான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண் டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனு­க குணதிலக ஆகியோரே அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர்.

mmk

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகிறது. மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மாத்திரம் இன்றி மலிங்க. டில்சான் ஆகிய அனுபவ வீரர்களும் அணிக்கு திரும்புகின்றனர்.

டெஸ்ட் தொடரில் தடுமாறி வரும் திரிமன்னே ஒரு நாள் தொடரில் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்ற கருத்துக் கணிப்பு நிலவியது. ஆனால் திரி மன்னே தொடர்ந்தும் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி: மத்தியூஸ், திரிமன்னே, டில்சான், கு­ல் ஜெனித் பெரேரா, தினேஸ் சந்திமல், மிலிந்த சிறிவர்தன, செகான் ஜெயசூரிய, சேனாநாயக்க ஜெப்ரி வண்டர்சே, அஜந்த மெண்டிஸ், மலிங்க, நுவான் குலசேகர, சுரங்க லக்மல், சமீரா மற்றும் தனு­க குணதிலக.

http://www.onlineuthayan.com/sports/?p=2476&cat=2

  • தொடங்கியவர்
தீவிர பயிற்சியில் இலங்கை கிரிக்கெட் அணியினர்
2015-10-29 11:33:15

(நெவில் அன்­தனி)

 

இலங்கை, மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்கு இடை­யி­லான 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்­னிட்டு இலங்கை அணி­யினர் தீவிர பயிற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

 

129934269265.jpg

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் ஈட்­டிய 2 – 0 என்ற வெற்­றியை அடுத்து சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரிலும் வெற்றி யடையும் முனைப்பில் இலங்கை அணி இருப்­ப­தாக பயிற்­றுநர் ஜெரோம் ஜய­ரட்ன தெரி­விக்­கின்றார்.

 

டெஸ்ட் அணி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட உதவி அணித் தலைவர் லஹிரு திரி­மான்ன தனது துடுப்­பாட்­டத்தை பலப்­ப­டுத்தும் வகையில் கடு­மை­யான பயிற்­சியில் ஈடு­பட்­டு­வ­ரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

 

டெஸ்ட் போட்­டி­க­ளிலும் பார்க்க சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதிக திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள திரி­மான்ன, இந்தத் தொட­ரிலும் சிறப்­பாக விளை­யா­டுவார் என கிரிக்கெட் நிர்­வாகம் நம்­பு­கின்­றது.

 

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­யி­லான முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் பகல் இரவு போட்­டி­யாக நவம்பர் முதலாம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

 

இத் தொடரை முன்­னிட்டு ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), லஹிரு திரி­மான்ன, திலக்­க­ரட்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்­திமால், மிலிந்த சிறி­வர்­தன, ஷெஹான் ஜய­சூ­ரிய, சச்­சித்ர சேனா­நா­யக்க, ஜெவ்றி வெண்­டர்சே, அஜன்த மெண்டிஸ், லசித் மாலிங்க, நுவன் குலசேகர, சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, தனூஷ்க குணதிலக்க ஆகியோர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12993#sthash.wQsRAWHj.dpuf
  • தொடங்கியவர்
மே. தீவு­க­ளு­ட­னான ஒருநாள் கிரிக்கெட் தொட­ரையும் கைப்­பற்றும் குறிக்­கோ­ளுடன் இலங்கை அணி
2015-10-30 14:50:38

13009pic-02.jpg

இலங்கை - மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்று போட்­டி­களைக் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

இரண்டு அணி­க­ளுக்கும் இடை­ யி­லான முதா­லா­வது போட்டி ஆர். பிரே­ம­தாச விளை­யாட்­ட­ரங்கில் பக­ல் இ­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

 

இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் - மைக்கல் திசேரா கிண்ண டெஸ்ட் கிரிக்கட் தொடரை 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முழு­மை­யாக வென்­றெ­டுத்த ஏஞ்­சலோ மெத்­யூஸின் தலை­மை­யி­லான இலங்கை அணி, இந்தத் தொட­ரிலும் வெற்­றி­பெறும் குறிக்­கோ­ளுடன் களம் இறங்­க­வுள்­ளது.

 

இங்­கி­லாந்தில் நடை­பெற்ற அங்­கு­ரார்ப்­பண உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து இரண்டு நாடு­களும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் ஒன்­றை­யொன்று எதிர்த்­தா­டி­வந்­துள்­ளன.

 

1975 உலகக் கிண்ணப் போட்­டி­களில் இணை உறுப்பு நாடாக கலந்­து­கொண்ட இலங்­கையை 9 விக்­கெட்­களால் அப்­போ­தைய கிரிக்கெட் ஜாம்­ப­வான்­க­ளான மேற்­கிந்­தியத் தீவுகள் வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

 

அதன் பின்னர் பத்து போட்­டி­களில் தொடர்ச்­சி­யாக மேற்­கிந்­தியத் தீவு­க­ளிடம் தோல்வி அடைந்­தி­ருந்த இலங்கை, 1989இல் ராஜ்­கொட்டில் நடை­பெற்ற எம். ஆர். எவ். உலகத் தொடரில் முதல் தட­வை­யாக மேற்­கியத் தீவு­களை வெற்­றி­கொண்­டது. 

 

விவியன் றிச்சர்ட்ஸ் தலை­மை­யி­லான மேற்­கிந்­தியத் தீவுகள் அணியை 4 விக்­கெட்­களால் அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை அணி வெற்­றி­கொண்­டி­ருந்­தது.

 

இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டு வரை விளை­யா­டப்­பட்­டுள்ள 51 போட்­டி­களில் 27 – 21 என்ற ஆட்டக் கணக்கில் மேற்­கிந்­தியத் தீவுகள் முன்­னிலை வகிக்­கின்­றது.

 

மூன்று போட்­டி­களில் முடிவு கிட்­ட­வில்லை.

கிரிக்­கெட்டில் மேற்­கிந்­தியத் தீவுகள் ஜாம்­ப­வான்­க­ளாக இருந்த காலத்தில் 13009pic-01.jpgதொடர்ச்­சி­யாக தோல்­வி­களைத் தழு­வி­வந்த இலங்கை பிற்­கா­லத்தில் அவ்­வ­ணியை விஞ்­சும் ­வ­கையில் விளை­ யா­டிய வெற்­றி­களை ஈட்­டி­வந்­துள்­ளது.

 

எனவே, ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள தொட­ரிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்­பிக்­கை­யுடன் இலங்கை இருக்­கின்­றது.

 

எனினும் கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற பயிற்சிப் போட்­டியில் மேற்­கிந்­தி­யர்கள் வெளிப்­ப­டுத்­திய ஆற்றல் இலங்கை அணியை சிந்­திக்க வைத்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

 

இத் தொடரை முன்­னிட்டு இலங்கை கிரிக்கெட் குழாமில் சச்­சித்ர சேனா­நா­யக்க மீண்டும் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் அவர் ஆரம்பப் போட்­டியில் விளை­யா­டுவார் எனப் பெரிதும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 

இலங்கை குழாம்: 
ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), திலக்­க­ரட்ன டில்ஷான், தனுஷ்க குண­தி­லக்க, லஹிரு திரி­மான்ன, தினேஷ் சந்­திமால், மிலிந்த சிறி­வர்­தன, குசல் ஜனித் பெரேரா, ஷெஹான் ஜய­சூ­ரிய, நுவன் குல­சே­கர, அஜன்த மெண்டிஸ், சச்­சித்ர சேனா­நா­யக்க, லசித் மாலிங்க, துஷ்­மன்த சமீர, சுரங்க லக்மால், ஜெவ்றி வெண்­டர்சே.

 

மேற்­கிற்தித் தீவுகள் குழாம்:

ஜேசன் ஹோல்டர் (அணித் தலைவர்), தேவேந்த்ர பிஷு, ஜேர்மெய்ன் பிளக்வூட், கார்லோஸ் பிரத்வெய்ட், டரன் ப்ராவோ, ஜொநதன் கார்ட்டர், ஜோன்சன் சார்ள்ஸ், அண்ட்றே ஃபிளெச்சர், ஜேசன் மொஹமத், சுனில் நரேய்ன், தினேஷ் ராம்டின், ரவி ராம்போல், அண்ட்றே ரசல், மார்லன் சமுவெல்ஸ், ஜெரோம் டெய்லர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13009#sthash.RdCkxpFD.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை மேற்கிந்திய தீவுகளுடன் மோதல்

 

இலங்கை- மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

 

இந்நிலையில் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி தீவிரமாக இருக்கிறது. டெஸ்ட் தொடரை எடுத்துக் கொண்டால் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் ஜொலிக்கவில்லை. இதனால் ஆட்டம் சுவாரசியம் இல்லாமல் இருந்தது.

ஆனால் ஒருநாள் போட்டியில் ஆட்டம் அப்படியே தலைகீழாக இருக்கும். தற்போது நடைபெற்ற பயிற்சி ஆட்டமே அதற்கு சான்று. மேற்கிந்திய தீவுகள் அணியில் 9வதாக களமிறங்கிய பிராத்வெய்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்து மிரட்டினார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 318 ஓட்டங்கள் எடுத்தது.

டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் அந்த அணியின் அதிரடியான தொடர வாய்ப்பு உள்ளது. மேலும், மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி பந்துவீச்சில் வலுவாக இருந்தாலும், பெரிய ஒட்டங்களை குவிக்கும் பட்சம் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

http://www.onlineuthayan.com/sports/?p=2849&cat=2

Eingebetteter Bild-Link

Raining on and off in Colombo all day. Covers still coming off. Toss probably delayed

  • தொடங்கியவர்
West Indies 23/2 (6.2 ov)

 

  • தொடங்கியவர்

West Indies 40/3 (14.2 ov)

Eingebetteter Bild-Linkமழை தொடர்கிறது

  • தொடங்கியவர்

இலங்கைக்கு இலக்கு 163

இலங்கைக்கு இலக்கு 163

 

 
 

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் (26 ஓவர்கள்) எட்டு விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதனையடுத்து துடுபெடுத்தாட மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

எனினும் மழை இடையில் குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது இலங்கைக்கு டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=74009

12191570_919622288084965_615976586721812

  • தொடங்கியவர்
West Indies 159/8 (26/26 ov)
Sri Lanka 139/7 (20.3/26 ov, target 163)
  • தொடங்கியவர்
West Indies 159/8 (26/26 ov)
Sri Lanka 164/9 (24.5/26 ov, target 163)
Sri Lanka won by 1 wicket (with 7 balls remaining) (D/L method)
  • தொடங்கியவர்

மெண்டிஸ் அபார துடுப்பாட்டம் : முதல் போட்டியில் மே.தீவுகளை வீழ்த்தியது இலங்கை

 
 
 

மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­கெ­தி­ரான முத­லா­வது ஒருநாள் போட்­டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது.

Ajantha-Mendis.jpg
3போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டி கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நேற்று நடந்­தது. இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இலங்கை அணிஇ முதலில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியை துடுப்­பெ­டுத்­தா­டு­மாறு பணித்­தது.

பிற்­பகல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வி­ருந்த நேற்­றைய போட்டி மழை கார­ண­மாக சற்று பிந்­தியே ஆரம்­ப­மா­னது. அதன்­படி மேற்­கிந்­தியத் தீவு­களின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்­க­ளாக பிௌட்சர் மற்றும் சார்லஸ் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த இரு­வ­ரையும் இலங்கை அணியின் பந்­து­வீச்­சாளர் லக்மால் வீழ்த்­தினார்.

இந்த இரு­வரும் முறையே 3 மற்றும் ஒரு ஓட்­டத்­துடன் வெளி­யே­றினர். அதன்­பி­றகு ஜோடி­சேர்ந்த பிராவோ மற்றும் சாமு­வெல்­சையும் பிரித்தார் லக்மால். இதில் சாமுவெல்ஸ் 2 ஓட்­டத்­துடன் ஆட்­ட­மி­ழந்தார்.

மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 40 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்து தடு­மா­றிக்­கொண்­டி­ருக்க மழை குறுக்­கிட்­டது. இதனால் போட்டி நீண்ட நேரத்­திற்கு இடை நிறுத்­தி­வைக்­கப்­பட்­டது. மீண்டும் 26 ஓவர்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு போட்டி 8.30 மணிக்கு ஆரம்­ப­மா­னது.
அதன்­பிறகு அதி­ர­டி­யாக ஆடிய பிராவோ 38 ஓட்­டங்­க­ளு­டனும் ரசல் 41 ஓட்­டங்­க­ளு­டனும் அணித் தலைவர் ஹோல்டர் 36 ஓட்­டங்­க­ளையும் பெற்று ஆட்­ட­மி­ழந்­தனர்.


நிர்­ண­யிக்­கப்­பட்ட 26 ஓவர்கள் நிறைவில் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 159 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.
பந்­து­வீச்சில் அசத்­திய சுரங்க லக்மால் 3 விக்­கெட்­டுக்­க­ளையும் அசந்த மெண்டிஸ் 2 விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தினர்.
இலங்கை அணிக்கு டக்வோர்த் லூயிஸ் முறைப்­படி 26 ஓவர்­க­ளுக்கு 163 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான டில்ஷான் மற்றும் குசல் ஆகி­யோரின் அதி­ர­டியில் இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான ஓட்டச் சேர்க்­கையைப் பெற்­றுக்­கொண்­டது.


அதன்­பி­றகு குசல் 14 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்கஇ டில்ஷான் அதி­ர­டி­யாக ஆடி 6 பவுண்­ட­ரிகள் மற்றும் 3 சிக்­ஸர்கள் அடங்­கலாக 59 ஓட்­டங்­களை விளா­சினார். அதன்­பி­றகு திரி­மான்ன (17)இ மெத்­தியூஸ் (13)இ குண­தி­லக்க(12)இ சிறி­வர்­தன(7)இ ஜசூ­ரிய(0) என சொற்ப ஓட்­டங்­க­ளுடன் அடுத்­த­டுத்து இலங்கை அணி வெற்­றி­பெ­றுமா என்ற சந்­தேகம் எழுந்­தது. இறு­தியில் அஜந்த மெண்டிஸ் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றிபெற்றது. 5 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில்இ கிடைத்த ப்ரீ ஹிட்டைப் பயன்படுத்திக்கொண்ட அஜந்த மெண்டிஸ் சிக்ஸர் ஒன்றை விளாசி இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.அஜந்த மெண்டிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்
களைப் பெற்றுக்கொண்டார்.

http://www.virakesari.lk/articles/2015/11/02/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

கோட்டைவிட்டது மேற்கிந்தியத்தீவுகள்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

 
 
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்த அஜந்தா மெண்டிஸை கட்டியணைத்து வாழ்த்தும் சுரங்கா லக்மல். படம்:ஏஎப்ஃபி.
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்த அஜந்தா மெண்டிஸை கட்டியணைத்து வாழ்த்தும் சுரங்கா லக்மல். படம்:ஏஎப்ஃபி.

இலங்கை-மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் நேற்று முன்தினம் கொழும்பில் முதல் ஒருநாள் போட்டியில் மோதின. மேற்கிந் தியத்தீவுகள் முதலில் பேட் செய்தது. 14.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 40 ரன் எடுத்தி ருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மழைவிட்டு மீண்டும் போட்டி தொடங்கிய போது ஆட்டம் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 26 ஓவர்களின் முடிவில் மேற் கிந்தியத்தீவுகள் 8 விக்கெட் இழப் புக்கு 159 ரன்கள் எடுத்தது. ரஸல் 41, பிராவோ 38, ஜேசன் ஹோல்டர் 36 ரன் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 3, அஜந்தா மெண்டிஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இலங்கை அணிக்கு 26 ஓவர்களில் 164 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெரேரா 14, திரிமானே 17 ரன்களில் வெளி யேறினர்.

தில்ஷான் அதிரடியாக ஆடி 32 பந்தில் 3 சிக்ஸர், 6 பவுண் டரிகளுடன் 59 ரன் விளாசி பிரத் வெயிட் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது 12.5 ஓவரில் ஸ்கோர் 104 இருந்தது. மேத்யூஸ் வந்த வேகத்திலேயே 13 ரன்னில் நடையை கட்டினார்.

19வது ஓவரில் சுனில் நரேன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வர்தனா 7, ஜெயசூர்யா 0, குணதிலகா 12 ரன்னில் ஆட்ட மிழந்தனர். 24வது ஓவரில் சென நாயகே 7, மலிங்கா 0 ரன்னில் காட்டர் பந்தில் வெளியேற ஆட்டம் மேற் கிந்தியத்தீவுகள் பக்கம் சாய்ந்தது. கடைசி 14 பந்தில் 11 ரன் தேவை என்ற நிலையில் கைவசம் 1 விக்கெட் இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அஜந்தா மெண்டிஸூடன், சுரங்கா லக்மல் ஜோடி சேர்ந்தார். லக்மல் 2 பந்துகளை வீணடித்தார். 12 பந்தில் 11 ரன் தேவை என்ற நெருக்கடி ஏற்பட்டது. சார்லஸ் வீசிய 25வது ஓவரின் முதல் 4 பந்தில் 3 ரன் கிடைத்தது. 5வது பந்தை நோபாலாக வீசினார். அதில் 2 ரன் ஓடி எடுக்கப்பட்டது.

நோபால் மூலம் கிடைத்த ப்ரீஹிட்டை சரியாக பயன்படுத்தி மெண்டிஸ் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இலங்கை அணி 24.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெண்டிஸ் 21, சுரங்கா லக்மல் 1 ரன் எடுத்தனர்.

ஆட்ட நாயகன் விருது தில்ஷா னுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இலங்கை அணி 1 0 முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி நாளை (நவ.4ம் தேதி) நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/கோட்டைவிட்டது-மேற்கிந்தியத்தீவுகள்-முதல்-ஒருநாள்-போட்டியில்-இலங்கை-அணி-வெற்றி/article7836814.ece

  • தொடங்கியவர்
ஹோல்டருக்கு ஒரு போட்டித்தடை
 
03-11-2015 12:19 PM
Comments - 0       Views - 12

article_1446544267-TAmilBAN1Holder.jpgமேற்கிந்தியதீவுகள், இலங்கை அணிகளுக்கிடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதுக்காக மேற்கிந்தியதீவுகளின் தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பந்தை தாமதாகப் பந்துவீசியதாக சிறிய அளவிலான குற்றத்தை எதிர்கொண்டிருந்த ஹோல்டர், ஒரு வருடத்தில் மீண்டும் இரண்டாவது தடவை மெதுவாக பந்துவீசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது ஒருநாள் போட்டித் தடை வித்க்கப்பட்டு, இன்று இடம்பெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியை தவறவிடுகிறார்.

தவிர ஹோல்டருக்கு அவரது போட்டி ஊதியத்தின் 40 சதவீதமும் அணி வீரர்களுக்கு அவர்களின் போட்டி ஊதியத்தின் 20 சதவீதமும் அபராதமாக போட்டி நடுவர் டேவிட் பூனால் விதிக்கப்பட்டது. மேற்கிந்தியதீவுகள் அணி வழமையான நேரத்தில் 2 ஓவர்கள் குறைவாக பந்துவீசியது என பூண் தெரிவித்தார். ஹோல்டர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் விசாரணைக்கான அவசியம் தேவைப்பட்டிருக்கவில்லை.

இலங்கைக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப்போட்டியில் ஹோல்டர் 13 பந்துகளில் 36 ஓட்டங்களைப் பெற்றிந்தபோதும் மேற்கிந்தியதீவுகள் அணி ஒரு விக்கெட்டால் மயிரிழையில் தோல்வியுற்றிருந்தது.

- See more at: http://www.tamilmirror.lk/158220#sthash.46eXuA62.dpuf
  • தொடங்கியவர்
இலங்கை, மேற்கிந்திய ஒ.நா தொடர் முன்னோட்டம்
 
30-10-2015 09:55 AM
Comments - 0       Views - 4

-ச.விமல்

IN1jhzly6w.jpg

இலங்கை,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை அணிக்கு வாய்ப்புகள் கூடிய தொடராக இந்த தொடரை கருத முடியும் என்று கூறினாலும், மேற்கிந்திய தீவுகள் அணி போராடும். இலகுவாக இலங்கை அணி இந்த தொடரை எடுத்துக்கொள்ளாமல் நியூசிலாந்து, இங்கிலாந்து நாடுகளுக்கான தயார்படுத்தலாக இந்த தொடரை பாவித்து அணியை தயார் செய்வதே நல்லது. டெஸ்ட் தொடரில் அவ்வாறான தயார்ப்படுத்தலில் வெற்றி கண்டுள்ளது.

மேற்கிந்தியதீவுகள் அணி சிறந்த ஒரு நாள் சர்வதேசப்போட்டிக்கான வீரர்கள் இருந்தும் அவர்கள் இல்லாத 7நிலையில் களமிறங்கவுள்ளது. அவர்களுக்கு நல்ல தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என அனைவரும் பாராடுகின்ற போதும் அவருக்கு ஏற்ற அணியில்லாமல் தடுமாறி வருகின்றார். இந்த மூன்று போட்டிகள் அடங்கிய தொடரில் அவரால் தனித்து நின்று எதனையும் செய்துவிடமுடியாது.

மேற்கிந்திய தீவுகள் அணி சிறந்த ஒரு நாள் சர்வதேசப் போட்டிக்கான வீரர்களை வைத்து உள்ள போதும் அவர்கள் யாரும் இல்லாதா நிலையில் இந்த அணி இலங்கை வந்துள்ளது. ஜேசன் ஹோல்டர் சிறந்த தலைவர் என பலரும் போற்றும் நிலையில் சிறந்த வீரர்கள் இல்லாமல் அவர் தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது. போட்டிகளை வென்று கொடுக்கவும் முடியாது. துடுப்பாட்டம் அவர்கள் பக்கமாக இல்லாத போதும் பந்துவீச்சு பலமாக உள்ளது. டெஸ்ட் போட்டிகள் போன்றே இலங்கை அணிக்கு சவால்களை வழங்கினாலும் வெல்லக்கூடிய நிலையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக்கொள்ள முடியாது. காலநிலை சீராக இருக்கும் என்ற நிலையில் இந்த எதிர்வு கூறல்களை கூறமுடியும். மழைக் குறுக்கீடு இருப்பின் தொடரில் எது வேணும் என்றாலும் நடக்கலாம்.

 

அணி விபரம்

இலங்கை அணி

திலகரட்ன டில்ஷான், குஷால் பெரேரா, லஹிறு திரிமான்னே, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ்(தலைவர்),மிலிந்த சிறிவர்த்தன, தனுஸ்க குணதிலக,அஜந்த மென்டிஸ்,லசித் மாலிங்க,சுரங்க லக்மால், துஸ்மாந்த சமீர,நுவான் குலசேகர, செகான் ஜெயசூரியா, சசித்திர சேனநாயக்க, ஜெப்ரி வன்டர்சே.

இறுதியாக பாகிஸ்தான் தொடரில் விளையாடிய குழுவில் இருந்து 6 வீரர்கள் வெளியேற்றப்பட்டு 6 புதிய வீரர்கள் அணிக்குள் உள் வாங்கப்பட்டுள்ளனர். ஒரே தொடரில் 6 வீரர்கள் மாற்றப்படும் நிலையில் இலங்கை அணியின் தெரிவு உள்ளது. இது இந்த தொடரில் மட்டுமல்ல அண்மைக்காலமாக இதே நிலைதான். துடுப்பாட்ட வரிசை ஓரளவு நிரந்தரமாகவுள்ளது. அண்மைக்காலமாக அதிகம் விமர்சிக்கப்பட்டு வரும் லஹிறு திரிமானே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றுள்ளார். குஷால் பெரேராவின் மீள் வருகை திருப்தியளிப்பதாக உள்ளது. முதல் ஐந்து வீரர்களும் நிரந்த வீரர்களாக உள்ளனர். மேலே கூறப்பட்ட ஒழுங்கில் துடுப்பாடுவார்கள். ஆறாமிடத்தில் மிலிந்த சிறிவர்த்தன நிரந்தரமாக இடத்தைப் பெற்றுள்ளார்.கடந்த ஒரு நாள் சர்வதேசத் தொடரிலும், மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரிலும் நிரூபித்துக் காட்டி நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.

அறிவித்துள்ள அணியின் படி ஏழாமிடத்தில் இன்னுமொரு சுழற்பந்து வீசும் சகலதுறை வீரருக்கு இடம் உண்டு. அந்த இடம் தனுஸ்க குணதிலக பெற்றுக்கொள்ளும் வாய்பு உண்டு. மூன்று சகலதுறை வீரகளை கொண்ட அணியாக இலங்கை அணி இனி உருவெடுக்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படியான நிலை உருவாகினால், வெளிநாட்டு ஆடுகளங்களில் முழுநேர சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் களமிறங்கும் நிலையை உருவாக்க முடியும். ஆனால் எந்த அணியும் துணிந்து அவ்வாறன முடிவை எடுக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த தொடரி;லசித் மாலிங்க மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். சுரங்க லக்மால், துஸ்மாந்த சமீர ஆகியோர் விளையாடும் வாய்புகள் உள்ளன. நுவான் குலசேகர மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள போதும் அவர் விளையாடுவாரா இல்லையா என்பது போட்டிகளின் பின்னரே தெரிய வரும்.   

மீண்டும் லசித் மாலிங்க , நுவான் குலசேகர ஜோடி பந்துவீசினால் , விக்கெட்களை கைப்பற்றினால் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளின் சிறந்த ஆரம்ப பந்துவீச்சு ஜோடி என்ற பலம் கிடைக்கும். ஆனால் இந்த ஜோடி எதிர்காலத்துக்கு எந்த அளவில் இலங்கை அணிக்கு கைகொடுக்கும் என்பதை உறுதியாக கூறமுடியாது. துஸ்மாந்த சமீர மிகப்பெரியளவில் எதனையும் செய்து காட்டாத போதும் இளைய வீரர். அவருக்கு போதியளவு வாய்ப்பு வழங்க வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகுவது கடினம். இவரை உருவாக்கும் பொறுப்பு இலங்கை அணியிடம் உள்ளது. சுரங்க லக்மால் பெரியளவில் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் அண்மைக்காலமாக எதனையும் செய்யவில்லை. நான்கு வேகப்பந்துவீச்சாளர்களில் மூவர் விளையாடுவது உறுதி.

இந்த அணியில் மூன்று வீரர்கள் புதிய வீரர்கள். மூவருமே சுழற்பந்து வீச்சுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். முழு நேர சுழற்பந்து வீச்சாளராக ஜெப்ரி வன்டேர்சே இணைக்கப்பட்டுள்ளார். சசித்திர சேனநாயகவும் அணியில் உள்ளார். மூன்று பேரில் ஒருவர் மட்டும் விளையாடும் வாய்ப்புகளை கொண்டுள்ள நிலையில் ஏன் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் என கேள்வி எழுப்பும் நிலையும் உள்ளது. திலகரட்ன டில்ஷானும் சுழற்பந்து வீச்சாளர்.   இலங்கை அணி மீண்டும் ஒரு நல்ல சமநிலை அணியாக உருவாகும் நிலை உள்ளது. தெரிவுக்குழுவினர் மீண்டும் ஒரு தடவை இதே போன்ற பாரிய மாற்றங்கள் இல்லாத அணியை இந்த தொடரின் பின்னர் அறிவிக்க வேண்டும் ஆயின் வீர்கள் திறமையாக செயற்படவேண்டும்.

இந்த அணியில் மூன்று புதிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் செஹான் ஜெயசூரியா பாகிஸ்தான் அணியுடனான 20-20 போட்டியில் சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்டுள்ளார். மூன்றாமிலக்கதில் துடுப்பாடக்கூடிய சுழற்பந்து வீசும் சகலதுறை வீரர். 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் 57 இன்னிங்சில் 1710 ஓட்டங்களை 31.66 என்ற சராசரியில் 3 சதங்கள், 11 அரைச்சதங்களுடன் பெற்றுள்ளார்.  55 இன்னிங்சில் 50 விக்கெட்களை 31.32 என்ற சராசரியில் பெற்றுள்ளார். அண்மைக்காலமாக பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார். பந்துவீச்சுக்காகவே இவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் 58 ஓட்டங்களையும், 7 விக்கெட்களையும் கைப்பற்றினார். நியூசிலாந்து A அணியுடன் நியூசிலாந்தில் நடைபெற்ற தொடரில் 4 போட்டிகளில் 74 ஓட்டங்களையும், 6 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

தனுஸ்க குணதிலக துடுப்பாட்ட வீரராகவே அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால் 50 ஓவர்கள் போட்டியில் பந்துவீச்சில் நல்ல சராசரியைக் கொண்டுள்ள போதும் அண்மைக்கால போட்டிகளில் இவற்றின் பந்துவீச்சு பாவிக்கப்படவில்லை. நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நல்ல  முறையில் துடுப்பாடிய வீரர். 55 இன்னிங்சில் 1590 ஓட்டங்களை 36.13 என்ற சராசரியில் பெற்றுள்ளார். பந்துவீச்சில் 22 இன்னிங்சில் 23 விக்கெட்களை 26.43 என்ற சராசரியில் பெற்றுள்ளார். தனுஸ்க குணதிலக, செஹான் ஜெயசூரியா ஆகியோர் குஷால் பெரேரா, லஹிறு திரிமான்னே ஆகியோரை கருத்திற்கொண்டு மேலதிக வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என நம்பலாம். ஆனாலும்   மத்திய வரிசையில் இவர்களில் ஒருவர் விளையாடுவது நிச்சயம் என்ற நிலை உள்ளது.

பாகிஸ்தான் 20-20 தொடரில் சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட லெக்ஸ்பின் பந்துவீச்சாளர் ஜெப்ரி வன்டேர்சே. விக்கெட்களை கைப்பற்ற முடியவில்லை. 50 ஓவர்கள் போட்டியில் 7 போட்டிகளில் மாத்திரமே விளையாடி 6 விக்கெட்களை கைப்பற்றியுளார். 14 ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றிய நிலையில் 20-20 அணியில் இணைக்கப்பட்டு இருந்தார். தற்போது ஏன் பெரியளவில் எதனையும் சாதிக்காத நிலையில் இலங்கை குழுவில் என்ற கேள்வி நிச்சயம் உண்டு. முதற்தரப் போட்டிகளில் நல்ல முறையில் பந்து வீசியுள்ளார். டெஸ்ட் அணியில்தான் இவருக்கு இடம் வழங்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற எந்த 50 ஓவர்கள்  போட்டிகளிலும் இவர் அதிக விக்கெட்களை கைப்பற்றவும் இல்லை.

மேற்கிந்திய தீவுகள்

அணி விபரம்

ஜோன்சன் சார்லஸ், அன்றே பிளட்சர், டரன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ்,தினேஷ் ராம்டீன், ஜொனதன் கார்ட்டர்,அன்ட்ரே ரஸல்,ஜேசன் ஹோல்டர் (கப்டன்),சுனில் நரைன்,ரவி ராம்போல்,  ஜெரோம் டெய்லர் தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளாக்வூட், கார்லோஸ் பிரத்வைட், ஜேசன் முகமட்.

மேற்கிந்திய தீவுகளின் அணியின் 11 பேரை தெரிவு செய்வது என்பது மிகக்கடினமே. பல வீரர்கள் உலகக்கிண்ண தொடருக்கு பின் வெளியேறியுள்ளார்கள். இறுதியாக உலகக்கிண்ண தொடரிலேயே ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடியது. 8 வீரர்கள் அந்த அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களில், க்ரிஸ் கெயில், டரின் சமி ஆகிய முக்கிய வீரர்கள் உபாதை காரணமாக அணியால் விலகியுள்ளனர். புதிய வீரர்களாக 8 வீரர்கள் அணிக்குள் மீண்டும் வந்துள்ளனர். இவர்களில் டரன் பிராவோ, சுனில் நரையன்  ஆகிய வீரர்கள் முக்கியமானவர்கள்.

க்றிஸ் கெயிலின் இடத்தை 15 போட்டிகளில் 254 ஓட்டங்களை பெற்றுள்ள அன்றே பிளட்சர் பெற்றுக்கொள்வார். உலகக்கிண்ண தொடரில் இணைந்த ஜோன்சன் சார்லஸ் இந்த வருடத்தில் 2 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். அவரை விட வேறு தெரிவு இல்லை. மூன்றமிடத்தை மீண்டும் அணிக்குள் வந்துள்ள டரன் பிராவோ பெற்றுக்கொள்வார். மார்லன் சாமுவேல்ஸ் அடுத்த இடத்தை நிச்சயம் பெறுவார். ஆனால் இவர்கள் இருவரினதும் போர்ம் மோசமாக உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இவர்கள் செய்தாலும், இல்லாவிட்டாலும் அணியால் நீக்க முடியாது. ஐந்தாமிடத்தில்  விக்கெட் காப்பாளர் தினேஷ் ராம்டீன் ஐந்தாமிடத்தை பெற்றுக்கொள்வார். 10 போட்டிகளில் 193 ஓட்டங்களைப்பெற்ற ஜொனதன் காட்டரை விட வேறு வீரர்கள் இல்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் நல்ல முறையில் துடுப்பாடி வரும் ஜெர்மைன் ப்ளக்வூட் ஐந்தாம் இடத்தில் துடுப்பாடுவது பொருத்தமாக இருக்கும். அப்படியானால் ஜொனதன் காட்டரை அணியால் நீக்க வேண்டும்.

அடுத்த இடத்தில் அன்றே ரசல் பெறுவார். 20-20 போட்டிகளில் போட்டிகளை மாற்றக்கூடிய ஒரு வீரராக இருந்து வருகின்றார். ஒரு நாள்ப்போட்டிகளில் இன்னிங்சை நிறைவு செய்யக்கூடிய அதிரடி துடுப்பாட்ட வீரர். வெகப்பந்துவீச்சாளர். அடுத்த இடம் அணியின் தலைவர். இவரையும் சகலதுறை வீரராக வர்ணிக்கமுடியும். சுனில் நரையன் பந்தை  எறிவதாக இந்திய சம்பியன் லீக் தொடரில் தடை செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசப்போட்டிகளில் விளையாடவில்லை. இப்போது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து களமிறங்குகின்றார் என நம்பலாம். இவர் மீது நடுவர்கள் மிகக்கடுமையாக கவனம் செலுத்துவார்கள். ரவி ராம்போல் மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் ஏன் உலகக்கிண்ண அணியால் நீக்கப்பட்டார்  என்பது தெரியவில்லை. இந்திய தொடர் சிக்கல் காரணமாக இருக்கலாம். ஜெரோம் டெய்ய்லர்  மேற்கிந்திய தீவுகள் அணியின் தற்போதைய  சிறந்த ஒரு நாள்   வேகப்பந்து வீச்சாளர். நல்ல உலகக்கிண்ண தொடர் இவருக்கு.

பந்துவீச்சு இலங்கை அணிக்கு நிச்சயம் அச்சுறுத்தலாக இருக்கும். அனுபவம் மிக்க பந்துவீச்சாளர்கள். நரையன் எப்படி பந்துவீசப் போகின்றார் என்பதை போட்டிகளின் போதே பார்க்க முடியும். அவரின் பந்துவீச்சில் சிக்கல்கள் இருந்தாலும் தொடர் முழுவதும் பந்து வீசமுடியும். இரண்டாவது சுழற்பந்துவீச்சு மேற்கிந்திய தீவுகளுக்கு சிக்கலே. சாமுவேல்ஸ் டெஸ்ட் போட்டியின் போது பந்தை வீசி எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேவேந்திர பிசூ அணிக்குள் வரவேண்டுமாக இருந்தால் அன்றே ரசல் வெளியேற வேண்டும். வேகப்பந்துவீச்சில் ரெய்ளர், ராம்போல், ஹோல்டர், ரசல் என நால்வருமே பலமானவர்கள். ஆக இலங்கை அணிக்கு துடுப்பாட்டம் சிக்கல் இல்லை. இருப்பினும் இலங்கை அணியின் பந்துவீச்சும் முழுமையாக இல்லை என கூறலாம். மீண்டும் பந்துவீச்சு வரிசையினை அமைக்க வேண்டும். இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக செயற்பட்டால் சவால்கள் இல்லாமல் இலங்கை அணி வெல்ல  முடியும்.

இலங்கை அணிக்கு மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மழை குறுக்கீடு மட்டுமே இந்த வெற்றி வாய்ப்புகளை இல்லாமல் செய்யும். இலங்கை அணி கடந்த காலங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி'கொண்டது போல இம்முறை வெற்றி கொள்ள முடியாது.

கடந்த காலம்

இரு அணிகள் மட்டும் இலங்கையில் விளையாடும் மூன்றாவது ஒரு நாள் சர்வதேசப்போட்டித் தொடர் இது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பித்த தொடர் 1-1 என்ற சமநிலையில் நிறைவடைந்தது. பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 2- 0 என இலங்கை தொடரைக் கைப்பற்றியது. இரண்டு தொடர்களிலும் ஒரு போட்டி மழை காரணமாக கை விடப்பட்டது. இரு அணிகளுக்குமிடையில் 11 போட்டிகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இவற்றில் 6 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இரு அணிகளுக்குமிடையில் 51 போட்டிகள் இதுவரையில் மொத்தமாக நடைபெற்றுள்ளன. இலங்கை அணி இவற்றுள் 21 போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 27 போட்டிகளிலும் வென்றுள்ளன. 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/158267/இலங-க-ம-ற-க-ந-த-ய-ஒ-ந-த-டர-ம-ன-ன-ட-டம-#sthash.40kXtGwl.dpuf
  • தொடங்கியவர்

2ஆவது ஒருநாள் போட்டி இன்று : ஜெசன் ஹோல்டர் இல்லை

 

இலங்கை -– மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை யில் நடை­பெற்­று­வரும் 3 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் இரண்­டா­வது போட்டி இன்று கொழும்பு
ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் நடை­பெ­று­கின்­றது.

Jason-Holder_1.jpg
மேற்­கிந்­தியத் தீவுகள் அணி இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடி வரு­கி­றது. இவ்­விரு அணி­களும் மோதிய 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-–0 என்ற அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­ப­மான ஒருநாள் தொடரின் முத­லா­வது போட்டியில் இலங்கை அணி ஒரு விக்­கெட்டால் வெற்­றி­பெற்­றது. அன்­றைய போட்டி மழை கார­ண­மாக தாம­தமாக ஆரம்­பித்­தது. அதனால் போட்டி 26 ஓவர்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்தப் போட்­டி­யின்­போது பந்­து­வீச்­சுக்கு நேரத்தை அதி­க­மாக எடுத்­துக்­கொண்­ட­தனால் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜெசன் ஹோல்­ட­ருக்கு ஒரு போட்­டியில் விளை­யாட தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு போட்டிக் கட்­ட­ணத்தில் 40 சத­வீ­தமும் அபராதமாக விதிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் இன்று நடை­பெ­ற­வுள்ள போட்­டியில் ஜெசன் ஹோல்டர் விளை­யா­ட­மாட்டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முதல் போட்­டியில் வெற்­றி­பெற்­றுள்ள இலங்கை அணி இந்தப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்றால் ஒருநாள் தொட­ரையும் தன­தாக்­கிக்­கொள்ளும்.

 கடந்த போட்­டியில் அபா­ர­மான துடுப்­பாட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் டில்ஷான் மற்றும் இறு­தி­வரை போராடி அணிக்கு வெற்­றியைத் தேடித் தந்த அஜந்த மெண்டிஸ், அத்­தோடு ஆரம்ப விக்கெட்டுக்கள் மூன்­றையும் மள­ம­ள­வென சரித்த சுரங்க லக்மால் ஆகியோர் இலங்கை அணிக்கு பெரும் பலம்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி பகலிரவு போட்டியாக இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்று தொடரை வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/articles/2015/11/04/2ஆவது-ஒருநாள்-போட்டி-இன்று-ஜெசன்-ஹோல்டர்-இல்லை

  • தொடங்கியவர்

West Indies 149/4 (26.4 ov)

Eingebetteter Bild-Link

  • தொடங்கியவர்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் ஆட்டம்
38 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

8 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி..
தொடரையும் தன் வசப்படுத்தியது.

குசல் ஜனித் பெரேரா 99.
திரிமான்னே ஆட்டமிழக்காமல் 81

12208776_1002820989780563_33666673287561

12182452_1716083628422837_48053704414052

12185471_1118650031487425_85409443129447

12185513_1118650048154090_26995934962070

  • தொடங்கியவர்

ஒருநாள் தொடர் இலங்கை வசம்

ஒருநாள் தொடர் இலங்கை வசம்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை கைப்பற்றியுள்ளது.

நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியதீவுகள் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இந்தநிலையில் அந்த அணி 26.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 149 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது.

மீளவும் போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் 38 ஓவர்களாக குறைக்கப்பட்டன.

இதனையடுத்து 37.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த அந்த அணி 214 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி இலங்கைக்கு டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 225 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷல் பெரேரா 99 ஓட்டங்களைப் பெற்றார்.

மேலும் லகிரு திருமானே ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களை விளாச இலங்கை அணி 36.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இலந்து 225 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் முன்று போட்டிகள் கொண்ட தொடர் 2-0 என இலங்கை வசமாகியுள்ளது.
  • தொடங்கியவர்

மேற்கிந்தியத் தொடர் : இருபதுக்கு - 20 இலங்கை அணி அறிவிப்பு

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள இருபதுக்கு -20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

225841.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இருபோட்டிகளிலும் இலங்கை அணி பெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி கண்டி பல்லேகலயில் இம்பெறவுள்ளது.
 

இந்நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதியும் 2 ஆவது போட்டி 12 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு - 20 போட்டிக்கான இலங்கை அணி வீரர்களின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மோசமான ஆட்டத்திறன் காரணமாக அணியில் இருந்து ஒதுங்கி வைக்கப்பட்டிருந்த சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா இடம் பெற்றுள்ளார். அதே போல்  சந்திமால் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

ஆனால் இந்த அணியில் இருந்து திரிமன்னே கழற்றிவிடப்பட்டுள்ளார்.

இருபதுக்கு - 20 இலங்கை அணி விவரம்

லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தியூஸ், டில்ஷான், குஷால், பெரேரா, ஷேஹான் ,ஜெயசூரியா, சிறிவர்தன, சமர கப்புகெதர, தினேஷ் சந்திமல், கித்துருவான், துஷ்மந்த சமீர, குலசேகர, சேனாநாயக்க, ஜெப்ரி, பெர்னாண்டோ, திசர பெரேரா.

http://www.virakesari.lk/articles/2015/11/05/மேற்கிந்தியத்-தொடர்-இருபதுக்கு-20-இலங்கை-அணி-அறிவிப்பு

  • தொடங்கியவர்

பத்ரி விலகல் தீவுகளுக்கு பின்னடைவு

November 06, 2015

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ரி-20 தொடரில் இருந்து தீவுகளின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான பத்ரி விலகியுள்ளமை தீவுகளுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி   இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், ரி-20 ஆட்டங்கள் என மூன்று வகையிலான தொடர்களிலும் விளையாடி வருகிறது. டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இலங்கை அணி கைப்பற்றிவிட்ட நிலையில் இரண்டு ஆட்டங்களைக் கொண்ட ரி-20தொடர் எதிர்வரும் 10ஆம் திகதியும், 14ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

ww_06

 

ரி-20 தொடரில் தீவுகள்  எந்த அணியையும் சாய்க்கும் வலிமை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. ரி-20 பந்துவீச்சுத் தரப்படுத்தலில் முதலிடத்தில் இருக்கும் பத்ரியும் இதற்கு முக்கிய காரணம். இந் நிலையில் பத்ரி டெங்குக் காய்ச்சல் காரணமாக விலகியுள்ளமை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பத்ரிக்குப் பதிலாக ஒரு நாள் அணியில் இடம்பெற்றுள்ள பிஸ்கூ சேர்க்கப்பட்டுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=3093&cat=2

  • தொடங்கியவர்

3 வது ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியதீவுகள்  18/4

  • தொடங்கியவர்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக 36 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 206/9 ஓட்டங்களைப் பெற்றது, பதிலுக்கு ஆடும் இலங்கை அணிக்கு D/L முறைப்படி 190 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

12219395_1120263054659456_65915876398998

11219367_1120263294659432_75609687863297

12195011_1120263061326122_91683155247667

12185198_1120263041326124_35066806722393

  • தொடங்கியவர்
West Indies 206/9 (36/36 ov)
Sri Lanka 118/3 (22/36 ov, target 190)
  • தொடங்கியவர்

12193431_1057603860925521_11585365615515

12063735_1057604944258746_70816732705220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.