மேற்குலகில் இசை அல்பங்களை உருவாக்கும் படைப்பாளிகள் சுயமாக தாமே இசை நிறுலனங்களாக, தமது அல்பமாக அதை உருவாக்குகின்றனர். அதன் காரணமாக அவர்களால் உருவாக்கப்படும் அல்பங்களின் உரிமை அவர்களிடமே இருக்கும். ஆனால், இந்தியாவில் படங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் படத்தில் இசையமைத்து அதற்கான கூலியை இசையமைப்பாளர்கள் பெற்றுக்கொள்ளும் போது போது அந்த இசை அல்பங்களின் றோயல்ரி தானாகவே பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுவிடுவதே இதன் காரணம் என நினைக்கிறேன்.
எதிர்காலத்தில் இசைமைப்பாளர்கள் இசை தயாரிப்பு நிறுவனங்களைப் பதிவு செய்து அந்திறுவன உரிமையாக பாடல்களை உருவாக்கி, தாம் உருவாக்கும் பாடல்களை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தில் பாவிக்கும் உரிமையை மட்டும் விற்பனை செய்தால் இவ்வாறான பிரச்சனைகள் எழாது என்பது எனது அபிப்பிராயம்.
By
island ·
Archived
This topic is now archived and is closed to further replies.