Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸி. – நியூசி நாளை முதல் டெஸ்ட்

Featured Replies

ஆஸி. – நியூசி நாளை முதல் டெஸ்ட்

November 04, 2015

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் நாளை ஆஸ்திரெலியாவின் பிரிஸ் பெயின் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Australia-Vs-New-Zealand

சிமித்தின் தலைமையில் அதிகளவான இளம் வீரர்களைக் கொண்டதாக ஆஸ்திரேலிய அணியும், மக்கலத்தின் தலைமையில் அதிகளவான அனுபவ வீரர்களைக் கொண்டதாக நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. ஆள்பலத்தின் அடிப்படையில் நியூசிலாந்து பலம் மிக்கதாகக் காணப்பட்ட போதிலும் சொந்த மண், பழக்கப்பட்ட ஆடுகளம் என்பன ஆஸ்திரேலிய அணிக்குக் சாதகமாக அமையும். இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதியும் மூன்றாவது டெஸ்ட் எதிர்வரும் 27ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

http://www.onlineuthayan.com/sports/?p=3003&cat=2

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம்
 

article_1446711429-TamilkahawarnAussie.jஅவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே பிரிஸ்பேர்ணில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 389 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தற்போது களத்தில் இரண்டு வருடங்களின் பின் அணியில் இடம்பிடித்த உஸ்மான் காவஜா 102 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உப அணித்தலைவர் டேவிட் வோணர் 163 ஓட்டங்களுடனும் ஜோ பேர்ன்ஸ் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்திருந்தனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டிம் சௌத்தி, ஜேம்ஸ் நீஷம் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு சாதகமாக காணப்பட்ட போதும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசாமல், அதிகளவிலான ஓட்டம் பெறும் பந்துகளை வீசியிருந்த நிலையில் இலகுவாக அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறக்கூடியதாக இருந்திருந்தது.

 

- See more at: http://www.tamilmirror.lk/158413/அவ-ஸ-த-ர-ல-ய-அண-ஆத-க-கம-#sthash.1uLyR1wR.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய ஆதிக்கத்தை உறுதி செய்த வேகப்பந்து வீச்சு: பாலோ ஆன் அச்சுறுத்தலில் நியூஸி.

 
  • பிரிஸ்பன் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் நியூஸி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லத்தை சடுதியில் பெவிலியன் அனுப்பிய மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.எஃப்.பி.
    பிரிஸ்பன் டெஸ்ட் 2-ம் நாள் ஆட்டத்தில் நியூஸி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லத்தை சடுதியில் பெவிலியன் அனுப்பிய மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.எஃப்.பி.
  • 174 ரன்கள் குவித்த ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா. | படம்: ராய்ட்டர்ஸ்.
    174 ரன்கள் குவித்த ஆஸி. வீரர் உஸ்மான் கவாஜா. | படம்: ராய்ட்டர்ஸ்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று நியூஸிலாந்து தன் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

பாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 199 ரன்கள் தேவைப்படுகிறது. காரணம் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஸ்மித் 48 ரன்களில் இன்று நன்றாக வீசிய போல்ட் பந்தில் பவுல்டு ஆக, உஸ்மான் கவாஜா 174 ரன்களையும், ஆடம் வோஜஸ் 83 ரன்களையும் எடுத்தனர். 556/4 என்ற நிலையில் வோஜஸ் சதமெடுக்க காத்திருக்காமல் டிக்ளேர் செய்தார் கேப்டன் ஸ்மித்.

நியூஸிலாந்து தனது இன்னிங்ஸை நன்றாகவே தொடங்கியது. பிரிஸ்பன் பிட்ச் பேட்டிங்குக்கு சொர்க்கம் என்பது போலவே தெரிந்தது. அவ்வப்போது மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் பந்துகள் சில நன்றாக எழும்பி விக்கெட் கீப்பரின் நெஞ்சுயரத்துக்குச் சென்றாலும், நியூஸி. தொடக்க வீரர்களான டாம் லேதம், மார்டின் கப்தில் எளிதாகவே கையாண்டனர். இருவரும் இணைந்து 56 ரன்களைச் சேர்த்தனர்.

மார்டின் கப்தில் 23 ரன்களில் டேவிட் வார்னரின் அருமையான 3-வது ஸ்லிப் கேட்சுக்கு ஹேசில்வுட் பந்தில் வெளியேறினார். ஆனால் அவரது அவுட் ஒரு மினி சரிவை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் டாம் லேதம் உண்மையில் அருமையாக ஆடினார். அவரது முன்னால் வந்து ஆடும் தடுப்பாட்டம், பின்னால் சென்று ஆடும் தடுப்பாட்டம் இரண்டுமே மிகச்சிறப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் இருந்தது. 3 அருமையான பவுண்டரிகளையும் அவர் அடித்தார். அதில் ஒரு அப்பர் கட் அபாரமாக இருந்தது. ஆனால் அவரது தடுப்பாட்டம் தனித்துவமாக அமைந்தது.

இந்நிலையில் அவரும் கேன் வில்லியம்சும் இணைந்து ஸ்கோரை 102 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 47 ரன்கள் எடுத்து ஆடி வந்த டாம் லேதம், மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை தடுத்தாட, பந்து மட்டையின் விளிம்பில் பட்டு பேக்வர்ட் பாயிண்ட் திசையில் நேதன் லயனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சு சூடுபிடித்தது.

இவரது விக்கெட்டையும் சேர்த்து டெய்லர், மெக்கல்லம், நீஷம் ஆகியோர் 16 ரன்கள் மட்டுமே கூடுதலாகச் சேர்க்கப்பட அடுத்தடுத்து அருமையான பவுலிங்குக்கு வெளியேறினர்.

ராஸ் டெய்லர் 7 பந்துகளில் ஒரு பந்தைக் கூட தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. அவரை களவியூகம், மற்றும் அதிரடி பந்து வீச்சின் மூலம் திணறடித்தனர். கடைசியில் ஜான்சனின் ஒரு வேகமான அவுட் ஸ்விங்கர் அவரது மட்டையை முத்தமிட்டுச் சென்றது. ஸ்மித் கேட்சைப் பிடித்தார். மெக்கல்லம் ஒரு பவுண்டரி அடித்து 6 ரன்களில் இருந்த போது, ஜான்சனின் மற்றுமொரு பந்தை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் ஆக வோஜஸ் கேட்ச் பிடித்தார். ஒரு ஓவர் கழித்து ஜேம்ஸ் நீஷம் 3 ரன்களில் மிட்செல் ஸ்டார்க்கின் யார்க்கர் லெந்த் வேகப்பந்துக்கு பவுல்டு ஆனார்.

கேன் வில்லியம்சன் மட்டுமே ஒரு முனையில் உறுதியாக நிற்கிறார். அவர் 70 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தும், விக்கெட் கீப்பர் வாட்லிங் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆட்ட முடிவில் நியூஸிலாந்து 157/5. பிரிஸ்பன் பிட்சில் மீண்டும் ஒரு முறை முன் தயாரிப்பில்லாமல் வரும் எதிரணியினருக்கு ஆஸ்திரேலியா தனது ஆவேசத்தைக் காட்டியுள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலிய-ஆதிக்கத்தை-உறுதி-செய்த-வேகப்பந்து-வீச்சு-பாலோ-ஆன்-அச்சுறுத்தலில்-நியூஸி/article7850803.ece

  • தொடங்கியவர்

டேவிட் வார்னர்-ஜோ பர்ன்ஸ் ஜோடியின் தனித்துவ சாதனை

 
 
ஆஸி. தொடக்க வீரர்கள் ஜோ-பர்ன்ஸ், டேவிட் வார்னர். | படம்: ஏ.பி.
ஆஸி. தொடக்க வீரர்கள் ஜோ-பர்ன்ஸ், டேவிட் வார்னர். | படம்: ஏ.பி.

ஆஸ்திரேலியாவின் புதிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிரான பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர்களாக தனித்துவமான கிரிக்கெட் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

முதல் இன்னிங்சில் வார்னர்-பர்ன்ஸ் ஜோடி 161 ரன்களைச் சேர்க்க, இதே ஜோடி 2-வது இன்னிங்சில் 37.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 237 ரன்கள் விளாசித் தள்ளினர்.

ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் தொடக்க விக்கெட்டுக்காக சதக்கூட்டணி அமைத்த ஒரே ஆஸ்திரேலியா தொடக்க ஜோடியாகும்.

அதே போல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நிகழாதவாறு, வார்னர்-பர்ன்ஸ் ஜோடி ஒரே டெஸ்ட் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் முதல் விக்கெட்டுக்காக சேர்ந்து எடுத்து புதிய, தனித்துவ சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களின் ரன்கள் மற்றும் சராசரி:

ஜஸ்டின் லாங்கர்- மேத்யூ ஹெய்டன் (2001-2007): 113 இன்னிங்ஸ் 5,655 ரன்கள், சராசரி 51.41.

மார்க் டெய்லர்-மைக்கேல் ஸ்லேட்டர் (1993-1999): 78 இன்னிங்ஸ் 3,887 ரன்கள்; சராசரி 51.14

பாப் சிம்சன் - பில் லாரி (1961-67) : 62 இன்னிங்ஸ் 3,596 ரன்கள்; சராசரி 59.93.

கிறிஸ் ராஜர்ஸ்-டேவிட் வார்னர் (2013-2015):

41 இன்னிங்ஸ், 2,104 ரன்கள், சராசரி 51.32.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸ் 239 ரன்கள் முன்னிலையுடன், 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் ஜோ பர்ன்ஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 71 ரன்களையும் 2-வது இன்னிங்ஸில் 123 பந்துகளில் 13 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 129 ரன்களையும், டேவிட் வார்னர் 113 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 116 ரன்கள் எடுத்தார். வார்னர் தன் முதல் இன்னிங்ஸிலும் 163 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டார்.

504 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 4-ம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article7858149.ece

  • தொடங்கியவர்

நியூசி.யுடன் முதல் டெஸ்ட் : 208 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

 

Tamil_DailyNews_9689251184464.jpg

 

பிரிஸ்பேன்:  ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது. டாசில் வென்று முதலில் பேட் செய்த ஆஸி. அணி 4 விக்கெட் இழப்புக்கு 556 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. வார்னர் 163, கவாஜா 174 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசி. முதல் இன்னிங்சில் 317 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கேன் வில்லியம்சன் 140 ரன் விளாசினார். 239 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

வார்னர் 116 ரன், பர்ன்ஸ் 129 ரன் விளாசினர். இதையடுத்து, 504 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய நியூசி. 4வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான இன்று ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் டெய்லர் 26 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் வந்த வாட்லிங் 3, நிஷாம் 3, சவுத்தி 5, போல்ட் 15 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் மெக்கல்லம் 80 ரன் அடித்தார். 295 ரன்னுக்கு நியூசி. ஆல்அவுட் ஆக, ஆஸி. 208 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸி. தரப்பில் லியான் 3 மார்ஷ், ஹேசல்வுட், ஸ்டார்க் தலா 2 விக்கெட் சாய்த்தனர். வார்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177742

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா அதிரடி ஆரம்பம்
 
13-11-2015 05:26 PM
Comments - 0       Views - 12

article_1447423186-Aus1.jpg

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 

பேர்த்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடுகிறது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோர்னர் இருவரும் முதல் விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களைச் சேர்த்தனர். ஜோ பேர்ண்ஸ் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க, டேவிட் வோர்னர் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார். 

118 பந்துகளில் சதத்தினைக் கடந்த அவர், 236 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் பெற்றார். 

இரண்டாவது விக்கெட்டுக்காக அவரோடு ஜோடி சேர்ந்த உஸ்மான் க்வாஜா 121 ஓட்டங்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ள அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட்களிலும் சதங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 416 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. டேவிட் வோர்னர் 244 ஓட்டங்களுடனும் ஸ்டீபன் ஸ்மித் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/159055#sthash.RHegPMwt.dpuf

v

  • தொடங்கியவர்
இரண்டாவது டெஸ்ட் போட்டி 2 நாள்
 
அவுஸ்திரேலியா  559/9d
நியூ சீலாந்து  140/2 (42.0 ov)
 
  • தொடங்கியவர்

இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ம்  நாள்  ஆட்ட முடிவில்

அவுஸ்திரேலியா  559/9d
நியூ சீலாந்து          510/6 (129.0 ov)
 
Ross Taylor   235 notout
  • தொடங்கியவர்
பலமான பதிலடியை வழங்கும் நியூசிலாந்து
 
 

article_1447595710-Tamil5i52tisb.jpgஅவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியுஸிலாந்து விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் 559 ஓட்டங்கள் என்ற இமாலய ஓட்ட எண்ணிக்கைக்கு பதிலளித்தாடி வரும் நியூசிலாந்து அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 510 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது. தற்போது களத்தில் ரொஸ் டெய்லர் 235 ஓட்டங்களுடனும், மார்க் கிரேய்க் 7 ஓட்டங்களுடன் உள்ளனர். முன்னதாக கேன் வில்லியம்ஸன் 166 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்திருந்தார்.

இன்றைய ஆட்டத்தின் போது மூன்றாவது விக்கெட்டுக்காக ரொஸ் டெய்லரும் கேன் வில்லியம்ஸனும் இணைந்து 265 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். இதுவே, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி பெற்றுக் கொண்ட அதிகூடய இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னர், நாதன் அஸ்ட்டிலும் அடம் பரோரேயும் இணைந்து இதே பேர்த் மைதானத்திலேயே 8ஆவது விக்கெட்டுக்காக 253 ஓட்டங்களைப் பகிர்ந்ததே, அவுஸ்திரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து பெற்ற அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்திருந்தது.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளையும் ஜோஷ் ஹெஸில்வூட், மிட்செல் ஜோன்சன், மிட்செல் மார்ஷ், நதன் லயன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர்.

முன்னதாக டேவிட் வோணரரின் 253, உஸ்மான் க்வாஜாவின் 121 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 9 விக்கெட்டுக்களை இழந்து 559 ஓட்டங்களை தமது முதல் இனிங்ஸில் பெற்றுக்கொண்டபோது அவுஸ்திரேலிய அணி தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மார்க் கிரேய்க் 3 விக்கெட்டுக்களையும் ட்ரெண்ட் போல்ட், மட் ஹென்றி, டவ் பிரேஸ்வெல், ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

- See more at: http://www.tamilmirror.lk/159172/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%A4-#sthash.pfvkcgls.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஸ்மித், வோஜஸ் சதம்: அவுஸ்திரேலியா பதிலடி
 
 

article_1447669300-TamilvogsmiAussies.jpஅவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய நான்காவது நாளில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அடம் வோஜஸ் ஆகியோர் பெற்ற சதங்களின் உதவியுடன், அவுஸ்திரேலிய அணி பலமான நிலையில் காணப்படுகிறது.

எனினும் போட்டியானது, வெற்றி தோல்வியற்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

6 விக்கெட்டுகளை இழந்து 510 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 624 ஓட்டங்களைப் பெற்றது.

முச்சதம் பெறும் வாய்ப்பை 10 ஓட்டங்களால் தவறவிட்ட றொஸ் டெய்லர், இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். தவிர, கேன் வில்லியம்ஸன் 166, டொம் லேதம் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், மிற்சல் ஸ்டார் 4 விக்கெட்டுகளையும் நேதன் லையன் 3 விக்கெட்டுகளையும் ஜொஷ் ஹேஸல்வூட், மிற்சல் ஜோன்சன், மிற்சல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முதல் இனிங்ஸில் 559 ஓட்டங்களுக்குத் தனது இனிங்ஸை இடைநிறுத்தியிருந்த நிலையில், 65 ஓட்டங்களால் பின்னிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து 46 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், 3ஆவது விக்கெட்டுக்காக இணை சேர்ந்த ஸ்மித், வோஜஸ் இருவரும், பிரிக்கப்படாத 212 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களுடனும் அடம் வோஜஸ் 101 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்ற் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நாளையாகும்.

- See more at: http://www.tamilmirror.lk/159222/%E0%AE%B8-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9C%E0%AE%B8-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%9F-#sthash.qByWuVyQ.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ரொஸ் டெய்லர் சாதனை : 112 வருடங்களின் பின் முறியடிப்பு

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் 290 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Ross-Taylor.jpg

அவுஸ்திரேலிய மண்ணில் 112 ஆண்டுகளுக்கு பிறகு இச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.1903ம் ஆண்டு, சிட்னியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் போஸ்டர் 287 ஓட்டங்கள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பேர்த் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

இப் போட்டியில்  அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 559 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடத் தொடங்கிய நியூசிலாந்து  முதல் இரு விக்கெட்டுகளையும் 87 ஓட்டங்களுக்கு இழந்தது.
இந்நிலையில் மூன்றாவது வீக்கெட்டுக்காக இணைந்த ரொஸ் டெய்லர் மற்றும் வில்லியம்ஸ் ஜோடி 265 ஓட்டங்களை தமக்கிடையே பகிர்ந்து கொண்டது.

இதனால் 14 வருடங்களாக முறியடிக்காமல் இருந்த நாதன் ஆஸ்டில் மற்றும் அடம் பரோரே ஜோடி 8 ஆவது வீக்கெட்டுக்கா இதே மைதானத்தில் பகிர்ந்து கொண்ட 253 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம்  முறியடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவுஸ்திரேலிய பந்தாளர்களை பந்தாடிய ரொஸ் டெய்லர்  235 குவித்து சாதனைப்படைத்தார். பிரிஸ்பேன் டெஸ்டில் 1985 ஆம் ஆண்டு  188 ஓட்டங்களே சாதனையாக இருந்தது. அதுமட்டுமன்றி 45 ஆண்டுகால பேர்த் மைதான வரலாற்றில் இரட்டைச்சதம் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும்  ரொஸ் டெய்லர் தன்வசமாக்கினார்.

தனது முதல் இனிங்சில் சகல வீக்கற்றுக்களையும் இழந்து 624 ஓட்டங்களை நியூசிலாந்து குவித்தது. தற்போது, தனது 2  ஆவது இன்னிங்சையை ஆரம்பித்துள்ள  அவுஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/articles/2015/11/16/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-112-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா - நியூசிலாந்து 2 ஆவது டெஸ்ட் போட்டி சமநிலையில்

 

அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுக்கு வந்தது.

Ross-Taylor_0.jpg

அவுஸ்ரேலியாவின் பேர்த் மைதானத்தில் கடந்த 12 ஆம் திகதி  ஆரம்பமான இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்த அவுஸ்ரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கட்டுக்களை இழந்து 559 ஓட்டங்கள் பெற்றவேளை தனது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது. இதில் டேவிட் வோனர் 253 ஓட்டங்களை எடுத்தார்.

மேலும், தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 624 ஓட்டங்களை குவித்தது. இதில் ரொஸ் டெய்லர் 290 ஓட்டங்களை எடுத்தார்.

இதையடுத்து 65 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி ஏழு விக்கட்டுக்களை இழந்து 385 ஓட்டங்களை பெற்று தனது 2 ஆவது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.

 

போட்டியின் 5 ஆம் நாளும் இறுதி நாளுமான இன்று 321 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி இரு விக்கட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் முக்கியமானதுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது,

http://www.virakesari.lk/articles/2015/11/17/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.