Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபை செயலற்று கிடக்கிறது; கூட்டமைப்பினருக்கே திருப்தியில்லை

Featured Replies

வடமாகாண சபை செயலற்று கிடக்கிறது; கூட்டமைப்பினருக்கே திருப்தியில்லை

வடமாகாண சபை செயலற்று கிடக்கிறது; கூட்டமைப்பினருக்கே திருப்தியில்லை

மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இன்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வருடம் நிறைவு பெற இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன.

இந்த நிலையில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டநிதியை முழுமையாக வடமாகாண சபை பயன்படுத்தவில்லை.

வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆன நிலையிலும் செயலற்று காணப்படுகின்றது. இவ்வாறு செயலற்று கிடப்பதை விட மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தேசிய மற்றும் உள்ளுர் பிரச்சினைகளுக்கு அறிக்கைகள் விடுகின்றோம். அதை செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை.

ஆனால் செய்ய வேண்டியதை செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே வடமாகாண சபையின் செயற்பாடுகள் மீது திருப்தி கொள்ளவில்லை.

அத்துடன், இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்.மாவட்டத்திற்கு கொண்டு வராமல் வடமாகாண சபையினரே தடுத்து வைத்துள்ளனர் என்றும் அவர் அங்கு குற்றஞ்சாட்டினார்.

அந்த தண்ணீர் வான்களினால் கடலுக்கு திறந்து விடப்படுகின்றன. அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு ஏன் தடை விதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ரொம்ப பிஸி கூட்டமைப்பை குலைக்கிற வேலையில் .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, arjun said:

முதல்வர் ரொம்ப பிஸி கூட்டமைப்பை குலைக்கிற வேலையில் .

முதல்வரை கையாலாகாதவர் என்று காட்ட கூட்டமைப்பில் இருப்பவர்களும் திட்டமிட்டு செயற்படும்போது மாகாணசபை முடங்கித்தான் போகும். 

கூட்டமைப்பு வலுவாக இருக்கவேண்டுமென்றால் முதலில் அதன் தலைவர்களாக இருப்பவர்களிடம் தலைமைத்துவப் பண்பும், இதயசுத்தியுடனும், நேர்மையுடனும் செயற்படும் திறன் இருக்கவேண்டும். 

1 hour ago, நவீனன் said:

மத்திய அரசினால் வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட நிதியில் இருந்து 38 சதவீத நிதிகளையே வடமாகாண சபை பயன்படுத்தியுள்ளதாகவும், ஏனைய நிதிகள் கிடப்பில் இருப்பதாகவும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இன்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆகா ... ஏதோ சொல்வார்கள் .. எதிரிக்கு எதிரி நண்பனோ! இறுதியாக விக்கியருக்கு ஆப்பிறுக்க "அத்தியடி குத்தி" கும்பலோடும் இணைந்தாயிற்று!

... இனி குத்தி நல்லவன்ன்ன்ன் என்ற சம்சும்மின் குரல்களை கேட்கலாம்!

வருடம் நிறைவு பெற இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன.
இந்த நிலையில் அரசாங்கத்தின் வரவு செலவு திட்டநிதியை முழுமையாக வடமாகாண சபை பயன்படுத்தவில்லை.

அத்தான், நீங்கள் கேள்விப்படவில்லையோ? முதலமைச்சரை மேவி இரணிலிடம் பெட்டிகள் வாங்கியதாக வந்த செய்திகளை .. அவற்றை ஒத்தும் கொண்டதையும்! அதற்கு மேல் இரணிலுடன் இணைந்து சம்சும்மாவைகள் வடக்கு மாகாணசபைக்கு ஏற்படுத்தும் இடையூறுகளை! அச்சபையில் இருக்கும் அதிகாரிகள் முதலமைச்சர், அமைச்சர்களின் உத்தரவுக்களுக்கு கட்டுப்படாமை என்றெல்லாம் ஏறக்குறைய நாளாந்தம் செய்திகள் வருவதை! ... 

வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆன நிலையிலும் செயலற்று காணப்படுகின்றது. இவ்வாறு செயலற்று கிடப்பதை விட மத்திய அரசாங்கத்தின் கீழ் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஐயகோ ... அருகே இருந்திருந்தால், உங்கள் தாங்கொணா துன்பசோகத்தில் பங்கு பற்றி, கட்டிப்பிடித்தே ... நனையுதாம், அழுத கதையாக .. கதறியிருப்பேன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே வடமாகாண சபையின் செயற்பாடுகள் மீது திருப்தி கொள்ளவில்லை.

வாவ்வ்... நாக்கு தடுமாறி இறுதியாக உண்மை வெளிவந்திட்டுது அத்தான்! ... இப்போ தெரிகிறது, யார் ஏவலாளிகள் என்று?

அத்துடன், இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்.மாவட்டத்திற்கு கொண்டு வராமல் வடமாகாண சபையினரே தடுத்து வைத்துள்ளனர் என்றும் அவர் அங்கு குற்றஞ்சாட்டினார்.

அரைகுரையாக கேட்டுவிட்டு ஏவலில் அறிக்கை விடக்கூடாது அத்தான்! உந்த தண்ணீரை வர விடக்கூடாது என்று போராட்டமே தமிழரசு கட்சியின் அதிகப்படியான வாக்குகள் பெற்று சிங்கள பாராளுமன்றம் போன சிறிதரன் தலைமையில் நடந்தது தெரியாதா??????????????? 

அந்த தண்ணீர் வான்களினால் கடலுக்கு திறந்து விடப்படுகின்றன. அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு ஏன் தடை விதித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

வாண் திறக்கிறது வருசத்தில் ஓரிரண்டு நாளைக்கு, அதுவும் என்கோவாவது ஒரு அடை மழைக்கு! அதுக்கு மேலை வருசா வருசம் இந்த மழையோ என்றால், பதில் இல்லை! மழை இல்லாவிடில் வாண் திறக்கபடுமா? அதற்கு மேல், அங்கு யாழ்ப்பாணம் முழுக்க வெள்ளம் என்ன ஆறு மாதிரி பாயுதாம்! அதை இவ்வவளவு காலமும் ஒட்டி இருந்து அமைச்சர் பதவி அனுபவித்த மூட்டம் ... கொலைகள், கொள்லைகள், ஆட்கடத்தல்கள், கற்பளிப்புகள் செய்த காலங்கள் ... சேமிக்க ஏதாவது செய்திருக்கலாமே?????? 

Edited by no fire zone

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.