Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம்

Featured Replies

 

 

 Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம்
 sri-lanka-parliament-budget-2_0.jpg

 

 

02.00 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

02.02 PM -  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய மன்றுக்கு வருகை

Ravi%20Karunanayake_6.png

02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டத்தை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்பிக்கின்றார்.

02.05 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

02.07 PM - 2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டின் திருப்பு முனையாக அமைந்தது.

02.10 PM - ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

02.15 PM - எம்.பி. மஹிந்த ராஜபக்ஷ மன்றுக்கு வருகை தரவில்லை.

mr_1.jpg

02.17 PM - பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

02.20 PM - எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.

02.24 PM - கடந்த பத்து மாதங்களில் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

02.27 PM - 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

02.30 PM - கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.

02.33 PM -  ராஜபக்ஷ யுகம் நாட்டில் மீண்டும் வரக் கூடாது.

02.37 PM - கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.

02.40 PM - 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.

02.45 PM - எதிர்கால வரவு செலவுத்  திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.

02.48 PM - கடந்த பத்து மாதங்களில் நாட்டில் இருந்த பொருளாதார பிரச்சினையை கண்டுப்பிடித்துள்ளோம்.

02.53 PM - மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.

interest-rate-increase-500x254.jpg

03.00 PM - புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

download_9.jpg

03.05 PM - பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

03.10 PM - டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

03.15 PM - வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

Northeast-Road-2.jpg

03.15 PM - சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.

03.20 PM - கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ரயில் மற்றும் வாகன போக்குவரத்தில் எரிபொருளுக்கு பதிலாக சூரிய சக்தியை பயன்படுத்த திட்டம்.

solarbullet-ed01.jpg

03.22 PM - எமது வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.

03.25 PM - சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் உதவி- 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.30 PM - வன்னி, அம்பாறை பகுதிகளில் சிறிய வணிக நிலையங்களை அமைக்க திட்டம்.

03.33 PM -  தரமான விதையினங்களை உற்பத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.38 PM - இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் நம் நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை.

03.41 PM - அதிக இரசாயன உரப்பாவனைகளால் சிறுநீரக நோய் ஏற்படுகின்றது. எனவே இரசாயன  உரப்பாவனைகட்டுப்படுத்தப்படும்.

STA_5_279584g.jpg

03.43 PM - பழ வகைகள் மற்றும் மரக்கறி விவசாயம் செய்து ஏற்றுமதி செய்யும் தொழிலாளர்கள் வங்கியில் பெறும் கடன் உதவிக்கு வட்டி வீதம் குறைக்கப்படும்.

03.45 PM - பழங்கள் மற்றும் மரக்கறி உற்பத்திக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

03.46 PM - கீரி சம்பா 50 ரூபா, சம்பா 41 ரூபா, நாடு 38 ரூபா ஆகியன நிர்ணய விலை அடிப்படையில் அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.

03.47 PM - மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி.

03.48 PM - 400 கிராம் பால் மா பக்கற்றின் விலை 325 ரூபாவிலிருந்து  295 ரூபாவாக குறைப்பு.

milk-powder.jpg

03.49 PM - புதிய தொழினுட்பத்தை கொண்ட மீனவ துறைமுகத்தை அமைப்பதற்கு 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.50 PM - தேயிலை உற்பத்தி துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விசேட குழு.

03.52 PM - தேங்காய் உற்பத்திக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.54 PM - தேயிலை ஏற்றுமதியின் போது 'சிலோன் டீ" என கட்டாயம் பெயரிட வேண்டும்.

03.56 PM - பாக்கு உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.

03.58 PM - “ பொக்குரு கம்மான ” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.59 PM - வவுனியாவில் பொருளாதார வலயம் அமைக்கப்படும்.

04.00 PM - அலங்காரமீன் கைத்தொழிலில் ஈடுப்படுவர்களுக்கு கடன் உதவி.

fish_aquarium.jpg

04.01 PM - சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைபொருள் ஒழிப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.02 PM - தங்கம் மற்றும் மாணிக்க கற்கல் ஏற்றுமதி செய்ய விசேட பத்திரம்.

04.03 PM - காட்டு யானைகளின் அச்சுறுத்தலை தடுக்க 4000 மில்லின் ரூபா ஒதுக்கீடு.

Wild-elephants-Sri-Lanka.jpg

04.04 PM - பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க திட்டம்.

04.05 PM -  அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்தம் இரத்தினக் கல் ஏலம்.

04.06 PM - கிராமசேவக பிரிவுகளை அபிவிருத்தி செய்ய  1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.07 PM - 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்.

04.09 PM - இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும்.

DSCN9847-e1433265329697-459x300.jpg

04.13 PM - 500 வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் முதலீட்டாளர்களுக்கு 50 வீத வரி.

04.16 PM - புதிய முதலீட்டு சட்டம் அறிமுகம்.

04.18 PM - எந்தவொரு வங்கி மூலமும் நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு.

04.20 PM - இலங்கை பணம் வெளிநாடுகளில் உள்ளது. மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்.

04.22 PM - வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 15 நாட்களில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

04.25 PM - சொகுசு வரி முற்றாக நீக்கப்படும்.

04.26 PM - குறைந்த வருமானம் பெறுபவர்கள் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் ஒரு இலட்சம் வீடுகள் அமைத்து குடியேற்றப்படுவர்.

varsity_devel3.jpg

04.27 PM - அரச பாவனையற்ற காணிகளில் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்படும்.

04.27 PM - ஏற்றுமதியை மேம்படுத்த அமைச்சர்கள் அடங்கிய குழு.

04.30 PM -  ஒரு தேர்தல் தொகுதியில் 1000 வீடுகளை அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

04.31 PM - வெளிநாட்டு கட்டிட நிபுணர்கள் உள்நாட்டு கட்டிட நிபுணர்களுடன் இணைந்து செயற்படலாம்.

04.31 PM - தொடர் மாடி வீட்டு திட்டத்துக்கு 100க்கு 40 வீதம் கடன் உதவி.

04.33 PM - டயில்ஸ், கொங்ரீட் இறக்குமதி வரி நீக்கம்.

04.35 PM - வீடுகள் அமைப்பதற்கு 7 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டம்.

04.37 PM - கட்டத்துறை பயிற்சி பெறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு.

04.40 PM - சார்க் நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டை வணிக மையமாக மாற்ற அழைப்பு.

04.43 PM - கொழும்பு சர்வதேச நிதி கேந்திர நிலையத்தை டீ.ஆர் விஜேயவர்தன மாவத்தையில் அமைக்க திட்டம்.

04.46 PM - திவிநெகும நிதியத்தை தேசிய சேமிப்பு வங்கியில் சேர்த்தல்.

DIVI-N-Athpoth.jpg

04.48 PM - உள்நாட்டு வங்கி கிளைகள் வெளிநாட்டில் திறக்கும் போது வங்கிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

04.52 PM - புதிய வாகன பதிவு கட்டணங்கள் :முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளுக்கு 2000 ரூபா, காருக்கு 15000 ரூபா.

three-wheelers-showcase.jpg

04.56 PM - பாடசாலை மாணவர்களுக்கு  250 ரூபாவில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கலாம்.

05.01 PM - ஆடை, பாதணி மற்றும் மின்சார உபகரணங்கள் உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு.

05.05 PM - தனியார் ஊழியர்களின் வேலை நாட்களை ஐந்து வேலைநாட்களாக குறைக்க தீர்மானம்.

05.08 PM - தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா அதிகரிக்க பரிந்துரை.

ffgfgff.jpg

05.10 PM - தொழிலாளர்களின் சம்பளம் தொழில் வழங்குனர்களினால் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் அனுப்பட வேண்டும்.

05.11 PM - ஆசிரியர்களுக்கு விடுதி செலவுக்கு 2 ஆயிரம் ரூபா.

05.12 PM - மின்சாரம் இல்லாத பின்தங்கிய பாடசாலைகளுக்கு சூரிய சக்கதியிலான மின்சாரம்- 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.11 PM - விஞ்ஞான, கணித பீடங்கள் இல்லாத பாடசாலைகளில் விஞ்ஞான கணித பீடங்களை அமைக்க 450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.11 PM - அனைத்து பாடசாலைகளுக்கும் சிறந்த மலசலக்கூட  வசதி

05.12 PM -  ஒரு வகுப்பில் அதி கூடுதலாக 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம்.

200515_10th.png

05.12 PM - உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி.

05.15 PM - தொழினுட்ப பாடத்தை பல்கலைக்கழகங்களில் கற்க 5 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி.

05.16 PM - கல்விக்கு 90 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.17 PM - ஆயுர்வேத கல்வி உட்பட மேலும் புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டம்.

05.18 PM - மாணவர்களின் சீருடைக்கு வர்த்தக பெறுமதியுடைய வவுச்சர்கள்.

05.20 PM - புதிதாக இணையும் ஆசிரியர்களுக்கு முதல் 5 வருடங்களுக்குள் 2 வருட கட்டாயப் பயிற்சி.

05.20 PM - 2018 இல் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதிகள் வழங்கப்படும்.

05.21 PM - சிறப்பு கல்வித் திட்டங்களை ஆரம்பிக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.21 PM - மஹாபொல பல்கலைக்கழகம் மாலபே பகுதியில் அமைக்கப்படும்.

05.23 PM - பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலகு கொடுப்பனவு முறையில் மடிக் கணனி மற்றும் இலவச வைய் -பை முறை.

05.25 PM -  சிறுநீரக நோயாளிகளுக்கு மின்னேரியாவில் வைத்தியசாலை அமைக்கப்படும்.

05.27 PM - குருநாகல், அநுராதபுரம் வைத்தியசாலைகளை புனரமைக்க 3 ஆயிரம் மில்லியன் ரூபா.

05.30 PM - பொலிஸ் பயிற்சி நிலையத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.32 PM - ல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

05.32 PM - ல்லூர் மற்றும் கண்டியில் புற்றுநோய் வைத்தியசாலைகள் அமைக்கப்படும்.

nallur.jpg

05.34 PM - கேஸ் விலை 150 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைப்பு.

05.35 PM - நாட்டில் இலவச வைய்- பை வலயங்களை அமைக்க 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

05.35 PM - பொலிஸாரின் சம்பள பிரச்சினைக்கு 2 வருடத்தில் தீர்வு.

05.37 PM - பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிப்பு.

05.39 PM - திகன, பதுளையில் விமான நிலையங்களை அமைக்க திட்டம்.

Mattala-Rajapaksa-International-Airport-

05.41 PM - மத்தல விமான நிலையத்தில் விமான தொழில்சார் பயிற்சி நிலையம் ஆரம்பிக்க திட்டம்.

05.43 PM - நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்கு விசேட குழு நியமனம்.

05.46 PM - ஸ்ரீ லங்கா எயார் லைன் சேவையில் அரசாங்க இடையூறுகள் இருக்காது.

05.49 PM - தனியார் பஸ்கள் , முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு புதிய சட்ட ஒழுங்கு.

05.52 PM - ரயில் பாதைகளை புனரமைக்க 1500 மில்லியன் ரூபா.

05.55 PM - வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு நிர்ணய சம்பளம்.

05.59 PM -11 அத்தியாவசிய பொருட்களின் விலை   100க்கு 20 வீதமாக குறைக்கப்படும்.

DYsmIE3.png

06.05 PM - பெரிய வெங்காயம் அதி கூடிய சில்லறை விலை 85- 95 ரூபா.

06.07 PM - 425 கிராம் ரின் மீன் 125 ரூபாவால் குறைப்பு.

06.08 PM -  சிறுவர்களுக்கான பால் மா 100 ரூபாவால் குறைப்பு .

06.09 PM -  நெத்தலி 418 ரூபாவாக குறைப்பு.

06.10 PM - பருப்பு 169 ரூபாவாக குறைப்பு.

06.11 PM - கட்டா கருவாடு 120 ரூபாவால் குறைப்பு.

06.11 PM - கடலை கிலோ 169 ரூபாவாக குறைப்பு.

06.12 PM - கெசினோ, புகையிலை ஆகியவற்றுக்கு 25 வீதமாக வரி அதிகரிப்பு.

Casino.jpg

06.12 PM - வரி விலக்குகளை மறுபரிசீலனை செய்ய திட்டம்.

06.25 PM - 2016 ஆம் ஆண்டில் அஸ்பெஸ்டோஸ் சீட் பாவனையை முற்றாக நீக்க திட்டம்.

06.27 PM - ஆங்கில தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம்.

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் நல்ல முறையில் செயற்படுவதற்கு முதலில், இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமே? இனப் பிரச்சனை தீர்ப்பதற்கு எத்தனை மில்லியன் ஒதுக்கீடு????

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய அரசில்.... எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா, தனது கன்னி உரையை... ஆற்றி விட்டாரா?
பாராளுமன்றத்தில்,  எதிர்க்கட்சியினர் பகுதியில்  இருந்து.....
"கொட்டாவி" விடும் சத்தமும்,  "குறட்டை" விடும் சத்தமும் கேட்பதாக... கதை ஒன்று  உலாவுது.
அது மட்டும், வரவு செலவு திட்டத்தை... ஒத்தி வைக்க முடியாதா?

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.