Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர்

Featured Replies

நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர்

 
 
 

ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூது வர் சமந்தா பவர் இன்று பிற்பகல் இலங்­கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.   
டெல்லியில் இருந்து இலங்கைக்கு வந்த இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான யுஐ 281 என்ற விமானத்தில் 8 பிரதிநிதிகளுடன் வருகைத் தந்தார்.Senate-UN-Ambassador_Horo-e1375395148868

சமந்தா பவர் நாளை நண்பகல் கொழும்பில் அமைந்துள்ள அமெ­ரிக்க தூது­வரின் இல்­லத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் முக்­ கிய பேச்­சு­வார்த்­தை­யொன்றில் கலந்­து­கொள்­ள­வுள்ளார்.
இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அப்துல் கெசாப் உள்­ளிட்ட முக்­கிய அதி­கா­ரி­களும் கலந்து கொள்­ள­வுள்­ள­தோடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மையில் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்
க­ல­நாதன், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற
உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராஜா, புளொட்­த­லை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான த.சித்­தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரோஷ்­பி­ரே­மச்­சந்­திரன், கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் இந்த சந்­திப்பில் பங்­கேற்­க­வுள்­ளனர்.
 இலங்­கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர் நாளை வடக்­கிற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார். இதன்­போது வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வ­ரனை சந்­திக்­க­வுள்­ள­தோடு மோதல்­க­ளினால் பாதிக்­கப்­பட்டோர், உள்ளுர் அர­சாங்க அதி­கா­ரிகள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். அத்­துடன் ஒஸ்­மா­னியா கல்­லூ­ரியின் புதிய கட்­டிட திறப்பு விழா­விலும் கலந்­து­கொள்ளும் இவர் யாழ்ப்­பாண நூல­கத்­திற்கும் உத்­தி­யோக பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.


அத­னைத்­தொ­டர்ந்து திங்­கட்­கி­ழ­மை­யன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளிவ­வி­வ­கார அமைச்சர் மங்­க­ள­ச­ம­ர­வீர உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளையும் சமந்தா பவர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.
அண்­மைய நாட்­க­ளாக ஆசிய நாடு­க­ளு­கான விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருக்கும் ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூதுவர் சமந்தா பவர் இந்த இலங்கை விஜ­யத்­தின்­போது இங்கு நான்கு நாட்கள் தங்­கி­யி­ருக்­க­வுள்ளார். இத்­த­ரு­ணத்தில் இரு­நா­டு­க­ளுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவை வலுப்­ப­டுத்த அமெ­ரிக்கா கொண்­டி­ருக்கும் ஈடுபாடு தொடர்பாக வலியுறுத்தவுள்ளதோடு, சமாதானம், பொறுப்புகூறுதல், நல்லிணக்கம் ஆகிய முயற்சிகளுக்கான அமெரிக்காவின் ஆதவை வெளிப்படுத்தும் வகையில் அரச உயரதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சிவில் சமூகக் குழுக்கள், இளைஞர்கள் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பித்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/11/21/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

ஆகா ... ஓகோ ... இந்தா புலத்து புலி ஆதரவாளர்களின் தடைகளை நீக்கி விட்டோம் ... இனி அவர்களும் உல்லாச கொலிடேக்களுக்கு வரலாம்!! இதற்கு மேல் என்ன தேவை??? ... பவருக்கு ஒரு கட்! ... 

  • கருத்துக்கள உறவுகள்

சமந்தா பவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

 

சமந்தா பவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-


இலங்கைக்கு பயணம்  மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர் இன்று காலை யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பளிஹக்காரவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதன் பின்னர் ஒஸ்மானியா கல்லூரிக்கு செல்லவுள்ளார். பின்னர் யாழ்.பொது நூலகத்திற்கும் செல்லவுள்ளார்.

Z

Z
 

  • தொடங்கியவர்
வடக்கு முதல்வரை சந்தித்தார் சமந்தா பவர்
 
வடக்கு முதல்வரை சந்தித்தார் சமந்தா பவர்
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துள்ளார். 
 
அத்துடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிஹக்கார உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை இன்று காலை சந்தித்துள்ளார்.
 
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை பிற்பகல் நாட்டை வந்த அவர், இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இடையில் நேற்று சனிக்கிழமை மாலை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
 
அமெரிக்கா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் வெளிவிவகார அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் இந்த விஜயத்தின் போது சமந்தா பவர் சந்திக்கவுள்ளார்.
 
அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டோர், உள்ளூர் அரச அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடனும் அவர் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • தொடங்கியவர்

அமெரிக்காவின் ஐநா பிரதிநிதி சமந்தா பவர் யாழ். விஜயம்

 
 யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் நடந்த நிகழ்விலும் சமந்தா பவர் கலந்துகொண்டார்

இலங்கை வந்துள்ள ஐநாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர், இன்று ஞாயிறன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடக்கு மாகாண ஆளுனர் பளிஹக்கார, முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட முக்கிய உயரதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.

யாழ் நூலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்ட அவர், அவற்றை நவீன முறையில் பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவிபுரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்பின்போது, வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமெரிக்க பிரதிநிதியிடம் கோரிக்கை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.bbc.com/tamil/global/2015/11/151122_samantha_jaffna

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவின் துறைமுகம் ஒன்றை சீனாவுக்கு விற்றமைகாக ஓபாமா  அவுஸ் பிரதமரிடம் விளக்கம் கோரியுள்ளார்....சர்வதேச அரசியலில் யாழ்ப்பாணியும் ...யாழ்ப்பாணமும் இடம் பெற்றுள்ளது ......காலம் பதில் சொல்லும் என்று போராளி தலைவன் சொன்னது சரி தான்... என என் போன்ற திண்ணை விடுப்பர்களுக்கும் புரிய வைத்துள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.