Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர்! - முதலமைச்சரிடம் வாக்குறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

   

ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் வடக்கு மாகாண ஆளுநர், எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது, தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, சமந்தா பவர் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா பவருடனான சந்திப்பு குறித்து விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில், எமது சந்திப்பு மிகவும் நன்மை பயக்குமென எதிர்பார்க்கின்றோம். அவர் உலகில் மிக வலுவான நாட்டினுடைய பிரதிநிதியாகவும், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் அனைத்துக் கொள்ளும் பாரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதியாகவும் இருப்பதால், அப்படியான ஒருவருடன் பேச கிடைத்ததை பெரிய வாய்ப்பாக கருதுகின்றேன்.

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களுடன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகவும் கரிசனையுடன் செயற்படுகின்றார். இலங்கையில் ஜனநாயகத்தினை வரவழைக்க வேண்டும் என்பதுடன், அமெரிக்காவும் ஜனநாயக நாடு என்பதில் இலங்கையுடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் சந்தோசப்படுவதாகவும், தம்மாலான சகல உதவிகளையும் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். முன்னர் இருந்த சற்று எதேச்ச அதிகாரமான வாழ்க்கை முறை மாற்றமடைந்து வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சில இயக்கங்களும் மக்களும், அந்த தடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டினார். எம்மைத் பொறுத்த வரையில், எம்மைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக இராணுவத்தினர் எம்மத்தியில் இருந்து, எமது வாழ்வாதாரங்களைப் பிடிங்கிக்கொண்டும், காணிகளைப் பிடிங்கிக்கொண்டும். வீடுகளைப் பிடிங்கிக்கொண்டு இருப்பது எமக்கு தொந்தரவினையும், பிரச்சினையும் தருகின்றது. 6 வருடங்களின் பின்னரும், இவ்வாறு நடப்பது எமக்கு மனவருதத்தினைத் தருகின்றது என்ற கருத்தினை தெரிவித்திருந்தோம்.

முன்னையதையும் பார்க்க தற்போது, தமது முகாம்களில் அடைபட்டு இருப்பது உண்மையாக இருந்தாலும், தமது தகவல் சேரிக்கும் பணிகளில் தற்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் பயங்கரவாதிகள் என்ற மனோநிலையில், தமிழ் மக்கள் அனைவரையும் உட்புகுத்தி, பயங்கரவாதிகள் என்ற எண்ணத்தில் செயல் புரிந்து வருவது எமக்கு வேதனை தருகின்றது என்ற கருத்தினை முன்வைத்திருந்தோம்.

பாதுகாப்பின் நிமித்தம் தற்போது கூட மிகப்பாரிய தொகையினை பாதீட்டில் வழங்குவதாகவும், இவற்றை எல்லாம் எமக்கு நன்மை பயக்க கூடிய வகையில், பணத்தினை பகிர்ந்து கொண்டிருக்கலாம் தானே என்றும் மத்திய மாகாணத்தினை விட பின்தங்கிய நிலையில் இருப்பதால், எமக்கு கூடிய உதவிகள் தேவை என்பதனையும் எடுத்துக் கூறினோம்.

இவ்வாறு பல விடயங்களை எடுத்துக் கூறிய போது அவர் அவற்றினை ஏற்றுக்கொண்டார். அதேவேளை, உங்களின் பிரச்சினைகளை நன்றாக உணர்ந்து கொள்கின்றோம். அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுத்து உங்களுக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் எடுப்போம் என்ற உத்தரவாத்தினையும் தந்தார், என சமந்தா பவருடனான சந்திப்பு குறித்து வடக்கு முதல்வர் தெரிவித்தார்.

 

samantha-jaffna-221115-seithy%20(1).jpg

 

 

samantha-jaffna-221115-seithy%20(2).jpg

 

 

samantha-jaffna-221115-seithy%20(3).jpg

 

 

samantha-jaffna-221115-seithy%20(4).jpg

 

 

samantha-jaffna-221115-seithy%20(5).jpg

 

 

samantha-jaffna-221115-seithy%20(6).jpg

 

 

samantha-jaffna-221115-seithy%20(7).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145400&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொந்த மண்ணில் இருந்து கொண்டு.....சொந்த வீட்டில் இருந்து கொண்டு.....சுயநிர்ணய உரிமைக்காக மாற்றானிடம் முறையிடும் இனம் ஈழத்தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே அமெரிக்கன் தான் இணைத்தலைமை நாடுகள் என்ற தலைப்பில் தலையிட்டு.. புலிகள் முன் வைத்த.. இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு உருவாகாமல் தடுத்து.. கிடைக்க இருந்த நிதி உதவிகளையும் தமிழருக்கு கிடைக்காமல் செய்தது. அதற்கு பதிலாக புலிகள் ரோக்கியோ மாநாட்டை புறக்கணித்தார்கள். புலிகளை நியோர்க் மாநாட்டிற்கு வரவிடாமலும் தடுத்த நாடு அமெரிக்கா. அதனிடம் போய் தமிழர்கள் இன்று எமக்கு உரிமை பெற்று தா... என்று கெஞ்சினால்.. கிடைப்பது என்னவோ.. அமெரிக்கன்... பல்லுக் குத்திப் போட்ட அந்த குச்சி மட்டுமாகத்தான் இருக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.