Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியலும் ஆன்மீகமும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாசுர மடல் 30- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே..!

heliumov7.gifvarrel.gif

இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின. எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் கிடைக்கிறது. ஆனால் நாம் இந்த தத்துவ உள் விவகாரங்களுக்குள் புகாமல் எளிமையாய் இக்கேள்விகளை புரிந்து கொள்ளப் பார்ப்போம்.

இராமானுசருக்கும், பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் நெடியோன், திருமலை எம்பிரான் வேங்கடவன் கண் கண்ட தெய்வமாக இருந்து வருகிறான். தமிழகத்தின் வட எல்லையாக இத்திருவேங்கடம் இருந்து வந்ததற்கான சான்றுகள் நிரம்ப உள்ளன. இத்திரு வேங்கடம் இராமானுசர் காலத்தில்(கி.பி.1017-1137) முருகன் கோவிலாகவும், சிலர் அம்பாள் சன்னிதி என்றும் வழிபட்டு வந்ததாகவும் குரு பரம்பரைக் கதைகள் கூறுகின்றன. இராமானுசர் புராண, இதிகாச ஆதாரங்களைக் கொண்டு அக்கோவிலை வைணவ திருத்தலமாக மாற்றிக் கொடுத்தார் என்பது வரலாறு.

இவ்வேங்கடம் 202 பாசுரங்களால் தொண்டரடிப் பொடியைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் ஏத்திபுகழப்பட்டுள்ளது. தொண்டரடிப்பொடி அரங்கனைத் தவிர மற்றவரைப் பாடவில்லை. வைணவஆச்சார்யனாகவும், ஆழ்வாராகவும் புகழ்பெற்ற நம்மாழ்வார் (கி.பி. 765-790) வேங்கடவனை இப்படித்துதிக்கின்றார்.

உலகம் உண்ட பெருவாயா

உலப்பில் கீர்த்தி யம்மானே,

நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி.

நெடியாய் அடியே னாருயிரே,

திலதம் உலகுக் காய்நின்ற

திருவேங் கடத்தெம் பெருமானே,

குலதொல் லடியேன் உன்பாதம்

கூடு மாறு கூறாயே.

6.10.1

இந்த உலகம் உய்ய கால காலமாக கால்கடுக்க காத்து நிற்கும் இத்தெய்வத்திடம் "உன் பாத மலருடன்கூடும்" நாளைக் கூறாயே என்று உருகுகிறார். திருவாய் மொழியின் ஆறாம் பத்தில் முதல் பாடலாக அமையும் இப்பாடலைத் தொடர்ந்து பத்துப் பாடல்களில் அவர் வேங்கடவன் முன் சரணாகதி செய்வதை பதிவுசெய்கிறார். பத்தாவது பாடலில், சரணாகதி செய்துவிடுகிறார்.

அகல கில்லேன் இறையும் என்

றலர்மேல் மங்கை யுறைமார்பா,

நிகரில் புகழாய் உலகமூன்

றுடையாய் என்னை ஆள்வானே,

நிகரில் அமரர் முனிக்கணங்கள்

விரும்பும் திருவேங் கடத்தானே,

புகலொன் றில்லா அடியேனுன்

அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே.

6.10.10

வேங்கடவன் அடிக் கீழ் அமர்ந்து சரணாகதி செய்வதாகச் சொல்கிறார்.

எனவே இராமானுசருக்கு முன்னோடியாக இங்கும் மாறன், பாராங்குசன் நிற்கிறார்.

சரி, தனி ஒருவர் இறைவனிடம் தஞ்சம் புகுவதை எல்லோருக்கும் சேர்த்து செய்வதாக எப்படி கொள்ளமுடியும்?

இங்குதான் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்மீகப் புரிதல் நிற்கிறது. இந்திய நோக்கில் எப்போதும் தனி, தான், நான், எனது என்பது கேள்விக் குறியாகிறது. ஒரு பரந்த முழுமையான (wholistic) நோக்காகத்தான் இப்பிரபஞ்சத்தை நம் முன்னோர்கள் பார்த்து இருக்கின்றனர். இந்த பரந்த உலகு ஒன்றுடன் ஒன்று இயைந்து, பின்னிப் பிணைந்து இயல்வதை (inter-connected and interdependent) தீர்க்கமாகப் பார்த்திருக்கின்றனர் நம் தீர்க்கதரிசிகள். "நான்" என்ற உணர்வு சிக்கலான நரம்பியல் அமைப்பினால் உருவாகும் உணர்வு. அதற்கு பருப்பொருண்மை கிடையாது. இதை மாயை என்று இந்தியர் கண்டனர். என்று, நமக்கு இந்த உண்மை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்து, உணர்வு பூர் வமாக இவ்வலைப் பின்னலை நம்முள் உணர்கிறோமோ அன்று தனி மனிதன் செய்யும் சரணாகதி உலகம் செய்யும் சரணாகதியாக ஆகிவிடுகிறது

இந்தத் தொடர்பைத்தான் (அதாவது இதையேதான்) குவாண்டம் இயல்பியலும் திரும்பத் திரும்ப சொல்லிவருகிறது. ஆனால் அறிவியல் மொழியிலாகட்டும், ஆன்மீக மொழியிலாகட்டும் எப்படிச் சொன்னாலும் இவ்வுண்மை அவ்வளவு எளிதாக மனிதர்களுக்கு புரியமாட்டேன் என்கிறது. இவ்வுலகின் பிரிவுகளுக்கும், சமர்களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் இதுதான் காரணம் என்று சொல்லவும் வேண்டுமோ?

இந்தநூற்றாண்டின் தனிப்பெரும் தத்துவ/சமயச் சிந்தனையாளரான கிருஷ்ணமூர்த்தி இதையே "நாம்தான் உலகம்"என்று அறைகூவுவார். மானுடம் என்றோ "நான்" என்பது உண்மை என்று நம்பி பாதை தவறிவிட்டது, அன்றிலிருந்து பிடித்தது பீடை என்பார். "தனி" (individual) என்பதே கிடையாது என்பார் இவர்.சமீபத்திய உளவியல் ஆய்வுகள் ஏறக்குறைய இதே முடிவுக்கு வந்திருப்பது ஆறுதல் அளிப்பதாய் உள்ளது. இவர்களது முடிவும், "நான்" என்பது மீண்டும், மீண்டும் மூளையில் நொடிப் பொழுதும் உருவாக்கப்படுவதாகவும், இந்த "நொடிகள்" சேர்ந்து ஒரு தனி "நான்" ஆக உருப்பெருகிறது என்றும் சொல்கின்றன. புத்தன் சொல்லுவான் "நான்" என்பது தீச்சுடர் போன்றது என்று. தீப்பிழம்பு பார்ப்பதற்கு ஒரே தீபம்போல் தோன்றினாலும் கிட்டே பார் த்தால் அது சின்னஞ்சிறு சுடர்கள் சேர்ந்து உருவாகும் ஒரு பிழம்பு என்று தெரியும். ஆன்மீகமும், அறிவியலும் நெருங்கி வருவது காணக் கிடைக்கிறது.

இப்பிரபஞ்சத்திலுள்ள சங்கிலித் தொடர்பை, "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல்உயர குடி உயரும், குடி உயர கோன் உயரும்" என்ற பண்டை வாக்கால் உணரலாம். ஔவை

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி

புல்லுக்குமாங்கே பொசியுமாம் தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லோர்க்கும் பெய்யும் மழை"

என்பார்.

அதாவது இவ்வுலகு இத்தகைய உண்மை உணர்ந்த நல்லவர்களால் காக்கப் படுவதாக பாடல் சொல்கிறது. அப்படியெனில் நம்மாழ்வார் செய்த சரணாகதியும், இராமானுசர் செய்த சரணாகதியும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதே பொருளில் காஞ்சி மாமுனி, "என்னை ஜெகத்குரு என்று சொல்லி பெரும் பொறுப்பைக் கொடுத்துவிட்டீர்கள். உலகம் உய்ய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சில மணித்துளிகளாவது தினமும் தியானம்செய்தால் என் பாரம் குறையும்" என்று சொல்லியிருக்கிறார். அதாவது இவ்வுலகு என்பது நமக்கு புறத்தே, நம்மில் தனித்து சுதந்திரமாக இயங்கும் ஒரு இயக்கம் போலவும், நமக்கு நம் ஜோலிகள், நம் கவலைகள், நம் ஆசாபாசங்கள் இவைதான் முக்கியமென்றும் இயங்கும் வரை உலகம் உய்யாது என்று பொருள் படுகிறது. என்று, உலகு என்பது "நாம்"தான் என்று உணர்கிறோமோ அன்று பெரும் பொறுப்பை நாம் உணர்வதுடன், இந்தஉணர்வுக்கும் உள்ளிருந்து இயங்கும் ஒரு சக்தியைக் கண்டு கொண்டவராவோம். அந்நிலையில், மனப்பூர்வமாய் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உலகு தழுவிய தாக்கம் தானாகவே அமைந்துவிடுகிறது.

இந்த நோக்கில்தான் நம்மாழ்வார்/இராமானுசர் செய்த சரணாகதியை பார்க்க வேண்டும்.

சரணாகதி ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை அடுத்து விளங்கிக் கொள்ளப் பார்ப்போம்.

-------------------------------------------------

பாசுர மடல் 31- என் சரண் என் கண்ணன்

உப்பிலியப்பன் கோயில் என்றழைக்கப்படும் தலத்தில் தன்னொப்பார் இல்லப்பனாய் வீற்றிருக்கும் எம்பெருமானைக் கண்டு நம்மாழ்வார் இப்படிப் பாடுகிறார்:

மூவுலகங் களுமாய்

அல்லனாய் உகப் பாய், முனிவாய்,

பூவில்வாழ் மகளாய்த்

தவ்வையாய்ப்புகழாய்பழியாய்,

தேவர்மே வித்தெழும்

திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

பாவியேன் மனத்தே

யுறைகின்ற பரஞ்சுடரே

அவன் மூவுலகங்களுமாய் இருக்கிறான், ஒன்றுமேயில்லாத வெற்றாயுமிருக்கிறான். உவப்பாய் இருக்கிறான், அவனே கோபமாயும் (முனி=சினம்) இருக்கிறான். புகழாய் நிற்கும் அவனே, பழியாயும் இருக்கிறான். இப்படி எதிர்மறைகள் சேரும் போது அவன் அவை அல்லனாய் ஆகிவிடுகிறான். இப்படி எதிர்மறைகள் இல்லாத அவன் "இப்பாவியேன்" மனத்தே உறைகின்றான் என்கிறார்.

"பாவியேன்" என்ற பதத்தால் இரக்கம் கொள்ளப் பட வேண்டியவன் என்று தெரிகிறது. பாவம் எங்கிருந்து வருகிறது? கற்பிதம் நிரம்பிய வாழ்விலிருந்து வருகிறது. எதைக் கற்பிதம் எனலாம்?

இந்தியாவில் பிறந்த நாலு குழந்தைகளை கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து எது எந்த சாதி என்று சொல்லச் சொன்னால் யாராலும் முடியாது. அது எந்த மதம் என்று சொல்லச் சொன்னால் அதுவும் முடியாது. ஆனால் நமக்கு சாதியும், மதமும் பெரும் அடையாளமாகிப் போகின்றன. இக்கற்பிதத்திற்காக கொலையும், பழியும் சுமக்க நாம் தயாராய் இருக்கிறோம். பிறக்கும் போது இருந்த மனது போகப் போக மாறுது. எழுதப்படாத சிலேட்டாய் இருந்த மனது போகப் போக கிறுக்கல் நிரம்பிய குப்பையாய் போய்விடுகிறது. இந்தக் குப்பைதான் நாம் என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குப்பை கூடும் போது குழப்பம் வந்து நிற்க வாழ்வு இன்னல் நிரம்பியதாய் போய்விடுகிறது. மனது தெளிவைத் தேடுகிறது.

பரஞ்சுடர் உடம்பாய்

அழுக்குபதித்த வுடம்பாய்,

கரந்தும்தோன் றியும்நின்றும்

கைதவங்கள் செய்யும்,விண்ணோர்

சிரங்களால் வணங்கும்

திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

வரங்கொள்பாத மல்லாலில்லை

யாவர்க்கும் வன்சரணே

மனது தெளியும் போது தெரிகிறது பரஞ்சுடர் உடம்பாய் இருப்பதும் ஒன்றே, அழுக்குப் பதித்த உடம்பாய் இருப்பது அதுவே என்று. மனது தெளிவில்லாமல் குழம்பியிருக்கும் போது தேவை நிம்மதி. வரம் தருகின்ற பாதங்கள் அல்லால் யாவர்க்கும் வேறு சரண் யாது என்று கேட்கிறார் நம்மாழ்வார். ஆக இங்கு கேட்கப்படும் வரம் "தெளிவு" என்று தெரிகிறது.

இப்பாடல்களில் இன்னொரு கருத்து மறைந்துள்ளது. அதாவது நாம் வாழ்வை கருப்பு-வெளுப்பு என்று எதிர்மறைகளாய்தான் பார்க்க விரும்புகிறோம். உதாரணம், இந்து அல்லது முஸ்லிம். கிருத்துவன் அல்லது பெளத்தன் இப்படி. குழந்தைக்கு பாலூட்டும் போது, சோறு–ட்டும் போதே போதனைகள் தொடங்கி விடுகின்றன - எவன் எவனிலிருந்து வித்தியாசமாக இருக்கிறான் என்று. பள்ளிக் கல்வி இதை வலுவூட்டுகிறது. நம் கல்வி அனைத்தும் மாணவர்களை அளவிடும் கருவியாக அமைந்திருப்பதை நாம் கவனிப்பதேயில்லை. அரை மார்க் வித்தியாசத்தில் வாழ்வு திசை மாறிப் போகும் அளவுக்கு அளவுகள் நமக்கு முக்கியமாக இருக்கின்றன. பிறந்ததிலிருந்து நாம் கற்பது வித்தியாசங்களை.

உலகு*சூன்யம்; உவப்பு*முனி; புகழ்*பழி; புதுமை*பழமை; பகை*நட்பு; விடம்*அமுதம்; இன்பம்*துன்பம்; கலக்கம்*தேற்றம்; தழல்*நிழல்; ஞானம்*மூடம்; சுடர்*இருள்; புண்ணியம்*பாவம்; புணர்ச்சி*பிரிவு; உண்மை*இன்மை; கருமை*வெளுமை; குறுமை*நெடுமை; சிறுமை*பெருமை....இப்படி நமது வாழ்வு, படிப்பு இவை எதிர், எதிராகத் தோன்றும் வித்தியாசங்களில் குடிகொண்டுள்ளது. இந்த வித்தியாசங்கள்தான் உண்மை என்று நம்பி ஒரு பொய்மையான, கற்பிதமான வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரை முஸ்லிம் என்றோ, இந்து என்றோ ஒரு எண்ணக் குறியீட்டால் பிரித்து விடுவதால் அவர் எந்தப் பிரிவிலும் விழாத, ரத்தமும், சதையும் சேர்ந்த மனிதர் என்பதோ; இத்தகைய ஒரு உயிரை உருவாக்க பல கோடி ஆண்டுகளை இவ்வுலகம் எடுத்துக் கொண்டது என்றோ, அடிப்படை மரபுத் தொடர் மூலக்கூறுவான டி.என்.ஏ இவரை மற்ற எல்லா உயிர்களுடனும் 99.9 சதவிகிதம் சேர்த்துக் காண்கிறது என்ற உண்மையோ நமக்கு புலப்படுவது இல்லை. மனித மனதுக்கு தேவையானது "ஏதோ ஒரு சின்ன" வித்தியாசம் அவ்வளவுதான். அதை வைத்து பிரித்து, பாகுபடுத்தி, அளவிட்டு, வாழ்வை வெகுவாக சிறுமைப் படுத்தி விடுகிறது.

மனதின் இப்போக்கை கண்டனம் செய்கிறார் நம்மாழ்வார் தனது திருவாய் மொழி ஆறாம் பத்தின், மூன்றாவது பத்துப் பாடல்களில். அவர் மிகத் தெளிவாகச் சொல்கிறார், இறைமை கொண்ட உள்ளம் உலகின் தொடர்ச்சியைக் கவனிக்குமேயன்றி அதன் பிரிவுகளை அல்ல என்று. கண்ணனின் இன்னருள் கொண்டோருக்கு இந்த வித்தியாசங்கள் முக்கியமில்லை என்பதை இப்படிச் சொல்கிறார்:

புண்ணியம் பாவம்

புணர்ச்சி பிரிவு என்றிவையாய்

எண்ணமாய் மறப்பாய் உண்மையாய்

இன்மயாய் அல்லனாய்,

திண்ணமா டங்கள்சூழ்

திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

கண்ணன் இன்னருளேகண்டு

கொண்மின்கள் கைதவமே

இப்படியொரு உள்ளம் அமையப் பெருமாகின் வாழ்வு பொருள் நிரம்பியதாய் போய்விடும். உலகின் தொடர்ச்சியும், அதன் உண்மை நிலையும், அதன் உறவுகளும் உண்மையாய் புரிந்து கொள்ளப்படும் போது மனது குதூகலத்தில் இருக்கும். அந்த மனோநிலையை அவரது ஒன்பதாவது பாடலில் தெளிவாய் காணலாம்:

என்னப்பன் எனக்காய் இகுளாய்

என்னைப் பெற்றவளாய்,

பொன்னப்பன் மணியப்பன்

முத்தப்பனென் அப்பனுமாய்,

மின்னப்பொன் மதிள்சூழ்திரு

விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,

தன்னொப்பா ரில்லப்பன்

தந்தனன்தன தாள்நிழலே

கண்ணனின் இன்னருள் பட்டவுடன் உலக மாயை விலகி விடுகிறது. மாயை இருந்த வரை அவர் இறைவனை இகுளாய் (செவிலித்தாயாய்) கண்டார். அவன் இன்னருளால் உண்மை விளங்கிபின் அவனே தனது உண்மையான தாய் என்றும், தந்தை என்றும் கண்டு கொண்டார். அப்போது இறைவனை அன்போடு பொன்னப்பன் மணியப்பன், முத்தப்பன், தன்னொப்பாரில்லப்பன் என்று அழைக்கிறார்.

இவ்வளவு பொருள் நிறைந்த ஒரு பண்பாடு இன்றுள்ள நிலமையில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை (தனி மனித விடுதலை) தவறிக் கெட்டு, பாழ்பட்டு நிற்கிறது. நம்மாழ்வார் கோடி காட்டும் புரிதல் நம்மிடமிருந்து எங்கு போனது? இப்பாசுர மடல்களே எதாவதொரு பிரிவில் வைத்து பார் க்கப் பட்டு மறுக்கப்பட்டு, மறக்கப் பட்டுதான் போகிறது என்பது நடைமுறையில் தெரிகிறது.

அப்போதுதான் நம்மாழ்வார் போல் கதறத் தோன்றுகிறது:

"என் சரண் என் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே" என்று !!

பிகு: சரணாகதியின் ஒரு விளக்கம் இது. மற்றய விளக்கங்களை போகப் போகப் பார்ப்போம்.

தொடரும்..................

இத்தோடு இதையும் படியுங்கள்...

அறிவியலும் ஆன்மீகமும்

http://ariviyalaanmeekam.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசுர மடல் 32- கலியும் கெடும், கண்டு கொண்மின்!

"எல்லா ரகசியங்களைக் காட்டிலும் மிகப் பெரிய ரகசியமாகிய என் இறுதி வசனத்தை உனக்கு மீண்டுமொருமுறை சொல்கிறேன்; கேள், நீ எனக்கு மிகவும் இஷ்டமானதால் உனக்கு நன்மை சொல்கிறேன்"

என்ற பெரிய பீடிகையோடு பார்த்தசாரதியான கண்ணன் தன் நண்பனும், சீடனுமான பார்த்தனுக்கு பகவத் கீதையில் கீழ்க்கண்ட வழியைச் சொல்கிறான்,

" எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண் புகு.

நான் உன்னை எல்லா பாவங்களினின்றும் விடுவிக்கிறேன், துயரப்படாதே"

(கீதை 18:66).

இந்த சுலோகமும் இச்சரணாகதியும் பெரும்பாலான இந்துக்களுக்கு பரிச்சியமான ஒன்று. சைவமும், வைணவமும் சரணாகதி பற்றி நிரம்பச் பேசுகின்றன:

"கண்ணன் திருவடி எண்ணுக மனமே....

சிவனும் வானோர் எவரும் ஒன்றே

ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி

என்றுந் திகழும் குன்றா வொளியே

கண்ணன் திருவடி எண்ணுக மனமே.

என்பான் பாரதி. இதே கருத்தை நம்மாழ்வார்,

கறுத்த மனமொன்றும் வேண்டா

கண்ணன் அல்லால் தெய்வ மில்லை,

இறுப்பதெல் லாமவன் மூர்த்தி

யாயவர்க் கேயி றுமினே.

5.2.7

என்கிறார். ஆக இப்படி வைதீக மதங்கள் சரணாகதி பேசுகின்றன என்றால் பொது மறையென்றும், சில சமயங்களில் சமணச் சார்புடைய மறையென்றும் சொல்லப்படும் வள்ளுவம்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றான் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

முதல் பத்துப் பாடல்களில் 7 பாட்டில் சராணாகதி பேசுகிறது. கடவுளை ஒத்துக் கொள்ளாத பெளத்தமும் கடைசியில் "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி" என்று வாய் கொள்ளாமல் சரணாகதி பற்றி பேசுகிறது.

ஆக அது வைதீக மதமானாலும், அவைதீக மதமானாலும் சரணாகதி எல்லோருக்கும் முக்கியமாகப் பட்டிருக்கிறது. கால, காலமாக சரணம் என்பது இந்திய வாழ்வியலின் முக்கிய கோட்பாடாக வந்திருக்கிறது.

சரணம் என்பதை புரிந்து கொள்ள, வாழ்வு என்றால் என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது சிக்கல்:-)

சாதாரண பார்வையில் வாழ்வு என்பது புரிந்துகொள்ள இயலாத ஒரு ஓட்டமாக தெரிகிறது. அதனால்தான் பிரெஞ்சு சிந்தனையாளர் சார்த்தர் துணிந்து, "அர்த்தமற்ற உலகில் மனிதன் அன்னியமாக உணர்கிறான் என்றார்". நமது மூதாதையர் இதை மிக நுணுக்கமாக அறிந்து கொண்டு, பிளேட்டை மாற்றிப் போட்டனர். அதாவது வாழ்வுக்கு அர்த்தம் நாம் கொடுப்பதில் இருந்ததான் வருகிறது. எனவே "நீ தான் அது" (உபநிஷம்) என்று சொல்லிப் போயினர்.

நீதான் அது என்றால்?

தானே யாகி நிறைந்தெல்லா

உலகும் உயிரும் தானேயாய்

தானே யானென் பானாகித்

தன்னைத் தானே துதித்து எனக்குத்

தேனே பாலே கன்னலே

அமுதே திருமாலிருஞ்சோலை

கோனே யாகி நின்றொழிந்தான்

என்னை முற்றும் உயிருண்டே.

10.7.2

திருவாய் மொழியின் இப்பாடல் இதை மிக அழகாக விளக்குகிறது. தானேயாகி, நிறைந்து, உலகு, உயிர் இவையாகி, தானே, யான் என்பானாகி, தன்னைத்தானே துதித்து, நமக்கு தேனே, பாலே, கரும்பே, அமுதமே என்று தித்தித்து.....இதற்கு அடுத்து வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள். ஒரு ecstasy...

என் கோனாகி (அதாவது என்னை ஆள்வானாகி) நின்றொழிந்தான் என்கிறார் நம்மாழ்வார். இப்படி உரிமையுடன் அவர் சில பிரயோகங்கள் செய்வார். அவை அன்பின் சொற்கள். வேறு வேலை இல்லாது அவன் இவருக்கு கோனாகி நின்று ஒழிந்தான்! அடடா! (ஏண்டா? பழியாய்கிடைக்கிறாய் என்று சொல்வதில்லையா...அது போல்தான் இதுவும்)

அதற்கு அடுத்த வரி இன்னும் மேல்..."என்னை முற்றும் உயிருண்டே!". சுத்தம்! இவரை சாப்பிட்டு விட்டார் பெருமாள். தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா என்கிறான் பாரதி. எல்லாம் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு! இதுதான் உப நிஷம் சொல்லும் "நீதான் அது".

இந்த வடி கட்டின அத்வைதம் சித்திப்பது துர்லபம் என்று வாழ்வு நமக்கு தினம் காட்டுகிறது.

அதனால்தான் சரணாகதி வேண்டி இருக்கிறது!

பாரதி கீதை வரியை மாற்றிப் போடுவான்:

வையகத்துக் கில்லை மனமே, உனக்கு நலஞ்

செய்யக் கருதி செப்புவேன் - பொய்யில்லை

எல்லா மளிக்கும் இறை நமையுங் காக்கு மென்ற

சொல்லால் அழியும் துயர்

அதாவது நாம் சொல்லி இந்த உலகம் நடக்க வில்லை. இதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. எனவே, எல்லாமளிக்கும் இறை நம்மையும் காக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வை செலுத்து என்கிறார்கள் சான்றோர். இந்த நம்பிக்கையை மனதில் கொண்டுவர வேண்டும் அது மிக முக்கியம். நம்பிக்கை இழந்து விட்டால் வாழ்வு நரகமாகிப் போகிறது. அதைத்தான் இவர்கள் "கலி" என்கிறார். அதாவது இருள் சூழ்ந்த வாழ்வு/உலகு. பல பெரிய மேலைத் தத்துவஞானிகள் கலியின் கொடுமை கண்டு "சாவுதான் நிம்மதி" என்று தன்னுயிர் ஈந்து இருக்கிறார்கள்.

எங்கே இந்தியத்தாயின் மைந்தர்கள் செத்தொழிந்து போவார்களோ என்ற பயத்தில் மாறன் சடகோபன் சூளுரைக்கிறார்:

பொலிக பொலிக பொலிக

போயிற்று வல்லுயிர்ச் சாபம்,

நலியும் நரகமும் நைந்த

நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொள்மின்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

மலியப் புகுந்திசை பாடி

யாடி யுழிதரக் கண்டோம்.

5.2.1

கலியும் கெடும் கண்டு கொள்ளுங்கள் நண்பர்களே என்று நம்பிக்கை ஊட்டுகிறார். "சாவு நிம்மதி" என்று சொல்லும் மேலைச் சிந்தனைக்கு மாற்றாக இவர் நலிவும், நரகமும் நமனுக்குத்தான் (அதாவது யமனுக்கு) நமக்கு இல்லை என்று துணிந்து சொல்கிறார். அதாவது சாவு யமனுக்கு உவப்பாக இருக்கலாம் நமக்கில்லை. நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை:

தடங்கடல் பள்ளிப் பெருமான்

தன்னுடைப் பூதங்க ளேயாய்

கிடந்தும் இருந்தும் எழுந்தும்

கீதம் பலபல பாடி,

நடந்தும் பறந்தும் குனித்தும்

நாடகம் செய்கின் றனவே.

5.2.4

மொத்தத்தில் இறைவன் உன்னை பார்த்துக் கொள்வான் நீ ஆடிப் பாடி, பறந்து திரி என்கிறார். அடடா! இப்படியொரு அப்பா நமக்கு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? வாழ்வு வாழ்வதற்கே என்கிறார். கவலையை கண்ணனிடம் விடு என்கிறார்.

இதையே பேயாழ்வார், மூன்றாம் திருவந்தாதியில்...

வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,

தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்

திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்

பெருமான் அடிசேரப் பெற்று.

59

என்கிறார். இதை எளிமைப் படுத்தி இராமானுசர், " நதியினுள்ளே விழுந்துவிட்ட ஒருவன் இரண்டு கையையும் தூக்கிவிடுவது போல வாழ்வு என்ற வெள்ளத்தில் விழுந்த ஒவ்வொருவரும் இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு (அதாவது எல்லாப் பொறுப்பும் ஈசனுக்கே) கடவுளைச் சரண் புக வேண்டும்" என்கிறார், திரெளபதி செய்தது போல்:

"மெய்த்தவளச் சங்கெடுத்தான் மேகலை விட்டங்கை தலை

வைத்தவளச் சங்கெடுத்தான் வாழ்வு"

(பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்)

அதாவது மெய்மையை சங்காகக் கொண்டிருக்கும் கண்ணன், திரெளபதி தன் மேகலை விட்டு (அதாவது தான் அவமானப் படுகிறோம் என்ற "தன்" உணர்வு கெட்டு) தலையில் கைவைத்து "கோவிந்தா" என்ற போது அவள் அச்சத்தை கெடுத்தவனாகிய திருமால் வாழ்விடம் (வேங்கட மலை) என்பது இவ்வரிகளின் பொருள்.

சரணாகதி பல நிலைகளில் போகிறது. ஆழ்வார்கள் திருமாலைச் சரணடைய, அச்சரணாகதி பற்றி மெய்மை கூறிய ஆசானாகிய இராமானுச முனியை அவர் சீடர்கள் சரண் அடைகிறார்கள். (இதே வகையில்தான் "சங்கம் சரணம் கச்சாமி" என்ற பெளத்த வழக்கத்தையும் பொருள் கொள்ள வேண்டும்)

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப் பேறளித்தற்

காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என் றிப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்

கூறும் பரமன்று இராமா னுசமெய்ம்மை கூறிடிலே.

(இராமானுச நூற்றந்தாதி 45).

இப்படி சரணாகதி செய்வதால் தினப்படி வாழ்வு சலிப்பற்று, துயரற்று, சலனமில்லாமல் இருக்கிறது. அதனால்தான் சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார்:

குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்

படுதுயராயினவெல்லம்,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்

அருளொடுபெருநிலமளிக்கும்,

வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற

தாயினு மாயினசெய்யும்,

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்

நாராயணாவென்னும்நாமம்.

(2) 1.1.9

என்கிறார். இதையே பாரதி வேறு வரிகளில் சொல்கிறான்:

கண்ணன் திருவடி எண்ணுக மனமே...

தருமே நிதியும், பெருமை புகழும்..

மங்கும் தீமை, பொங்கும் நலமே...

தீர்ப்பான் இருளைப், பேர்ப்பான் கலியை

ஆர்ப்பர் அமரர், பார்ப்பார் தவமே....

பிகு: சரணாகதியின் மற்ற பொருள்களைத் தொடர்ந்து தேடுவோம்...

தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசுர மடல் 33- ஆற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்!

"நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்"

இப்படியொரு பழமொழி தமிழில் உண்டு. இது வாழ்வின் நிச்சியமின்மையை தெளிவாகச் சொல்கிறது. அதாவது மனித யத்தனிப்புதான் வாழ்வு என்று இருந்தால் இன்று வெறும் ஹிட்லர்கள்தான் ஆண்டு கொண்டு இருப்பார்கள். மனித ஆசைக்கு அளவேது. மரணம் என்பது மனித ஆசையில் மண்ணைப் போடுகிறது. எனவேதான் மிருத்யு என்னும் யமனை "யமராஜா" என்கிறார்கள். அவன் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. எனவேதான் நிசிகேதன் எத்தனை வரங்கள் தருகிறேன் என்றாலும் யமனை விடாது இம்சித்து இறப்பின் இரகசியத்தை கற்றுத்தா என்றான். அப்படிப் பட்ட சரிநிகர் மரணத்தையும் வெல்லும் முயற்சிகள் அறிவியலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஜெர்மனியில் ஒரு விபத்தில் தாக்குண்ட பெண்ணை செயற்கை யாய் ஊசலாட வைத்து குழந்தையை பெறவைத்திருக்கின்றனர். மானுட சரித்திரத்தில் இறந்தவள் பெற்ற முதல் குழந்தையாக அது பதிவாகிறது! இப்படி மனித மனம் எல்லாவற்றையும் வென்று ஒரு கை பார்க்க விரும்புகிறது. இவர்கள் இப்பழமொழியை மாற்றப் பார்க்கின்றனர்.

இருப்பினும் பிரபஞ்ச ஓட்டம் நம் கைக்கு இன்னும் வசப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கனடாவின் குயூபெக் மாநிலத்தில் பனிப்புயலில் சிக்கி பல கிராமங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக மின்சாரமே இல்லாமல் தவிக்கிறது. இந்தியாவில் கூட இந்த நிலமையில்லை யென்று ஒரு நண்பர் சமீபத்தில் புலம்பினார். வட ஜெர்மனியில் பனி ஒரு நாள், சில மணி நேரங்கள் அடித்து விட்டு ஓடிப்போய்விட்டது. மரங்கள் பிப்ரவரியில் துளிர்க்க ஆரம்பித்து விட்டன. இப்படிப் பட்ட வெது, வெதுப்பான பனிக்காலத்தை நாங்கள் பார்த்ததில்லை. இது நல்லதற்கு இல்லை என்கிறார்கள் பல ஜெர்மானியர். லண்டன் தட்ப வெட்பத்தை முன் கூட்டிச் சொல்வதும் பெண்ணின் மனநிலையை முன் தீர்மானிப்பதும் ஒன்று என்றொரு பழமொழி உண்டு. அவ்வளவு தீர்மானிக்க முடியாத அளவு இயற்கை விளையாடுகிறது. ஆனாலும், நாளைய வானிலை என்று டிவியில் கேட்டவுடன் எல்லார் கண்களும் அங்கேயே நிற்கின்றன - அதை நம்புகிறோமோ இல்லையோ :-)

மனித மனத்திற்கு வேலியே கிடையாது. அதன் பாய்ச்சலைக் கட்டுப்படுத்த அதற்கும் தெரிவதில்லை. மூக்கணாங்கயிறு இல்லாத மாடு கட்டுத்தெறியிலிருந்து விடுபட்டு ஓடுவது போல மனித செயல்கள் நடை பெற்று வருகின்றன. சூழலில் நாம் விடும் கரியமில வாயுவின் அளவு 23 நூற்றாண்டில 3% தாண்டிவிடும் என்கிறார்கள். மனித சுவாசம் 4% மேல் தாங்காது. அந்த அளவு வரும்போது மூச்சு முட்டி மனிதன் தெருவில் சாவான் (முன்னோடி..போபால் விபத்து). ஆனாலும் இதை எப்படி கட்டுப் படுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை.

பணம் என்பது பண்டமாற்று முறைக்கு மாற்றாக வந்த ஒன்று. பணம் என்பது ஒரு குறியீடு, முகமதிப்புச் சின்னம். ஆனால் பணமே ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்ட நிலையில் பணம் பேரம் பேசப் பட்டு நாடுகளின் தேசியம் சூதாடப் படுகிறது. இந்தோனிசியா ஆடிக்- கொண்டு இருக்கிறது. பல கிழக்காசிய நாடுகள் ஜூரத்தில் இருக்கின்றன. அடிப்படையில் யோசித்தால் மனத்தின் பேராசையின் விளைவுதான் இது என்று புரியும். இருப்பவன் மேலும், மேலும் சுருட்டுகிறான். ஆசைக்கு அளவேது, வேலியேது.

இவையெல்லாம் மனது என்ற மாயாவிவின் செயல்கள். ஐம்புலன்கள் நமக்கு தொடர்ந்து அனுபவங்களைக் கொடுக்கின்றன. அனுபவங்கள் தொடர்ந்து நினைவுகளாகின்றன. நினைவுகள் தொடரும் போது தன்னியல்பாக மனது "தான்" என்ற ஒன்றை உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் இந்த "நான்/தான்" என்பது அடிப்படையில் வெறும் நினைவுக் கொத்துதான். ஆனால் மிகப் பலம் வாய்ந்த கொத்து இது. படித்த பெரும் படிப்பாளிக்கு இந்த "நான்" அவனது கல்வி. அவனது படிப்பை யாராவது கேலி செய்தால் அது அவனது கோபத்தைக் கிளறுகிறது. இசைக் கலைஞனுக்கு அவன் வித்தை அவனது "தான்" ஆகிப் போகிறது. வித்வான்களிடம் மாறிக் கூட குறை சொல்லிவிடக் கூடாது. சுப்புடு வாசகர் களுக்கு உவப்பாக இருந்தாலும் அவர் வித்வான்களின் வேம்பு என்பதுதான் உண்மை.

சாதிவெறியர்களுக்கு சாதி அடையாளம் "தான்" ஆகிப் போகிறது. அது உரசப்படும் போது தீ கக்குகிறது. மொழி வெறியர்களுக்கு மொழியும், இன வெறியர்களுக்கு இனமும் "தானா"கிப் போய் உலகை பேயாய் படுத்துவது எல்லோரும் அறிந்ததே.

சரணாகதி என்பதை விளங்கப்படுத்த இரண்டு முக்கிய உருவகங்களை பண்டைய இந்தியர்கள் வைத்தனர். ஒன்று திரெளபதி துயில் உரிதல், இரண்டு குளத்தில் நீராடும் பெண்ணின் ஆடையை களவிடுதல். இந்த இரண்டிலும் "ஆடையை" உருவகமாக வைத்தனர். ஆடை என்பது மனிதனது மானத்தை காக்கும் பொருள். மானம் என்பது கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் வேறுபடக் கூடியது. வெற்று உடம்பாய் காணப்படுவது மானமற்ற செயலென பல கலாச்சாரங்களில் காணப்படுகிறது. இங்கு ஆடை மனித மானத்தைக் காக்கிறது. ஒரு துணி மேலே போர்த்தியவுடன் மனோ நிலையே மாறி விடுகிறது. இங்கு உடம்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

உடம்புதான் ஐம்புலன்களின் அதிகாரி. ஐம்புலன்கள்தான் அனுபவங்களின் அதிகாரிகள். அனுபவங்கள்தான் அகங்காரத்தின் வித்து. எனவே உடம்புதான் அகங்காரத்தின் இருப்பிடமாகிறது. உடம்பின் சுகம் துய்க்கும் மனது அகங்கார எல்லையைத் தாண்டாமல் சிறை பட்டுப் போகிறது. இறைமை அனுபவம் என்பது இந்த குறுகிய எல்லையைக் கடந்தது. அகங்காரத்தின் எல்லை நமது அனுபங்களின் அளவைப் பொருத்தது. அனுபவங்களோ எப்போதும் ஒரு எல்லைக்குட்பட்டதுதான். அதனால்தான் ஔவை "கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு" என்றாள். இப்படி குறுகிய எல்லை கொண்ட தனி மனித அகங்காரம் ("தான்") எல்லைகள் அற்ற பரம்பொருளை எப்போது கண்டு கொள்ளும்?

தன் எல்லையின் அளவு பிடிபடும் போது, இறைமையின் விஸ்வரூபம் காணக்கிடைக்கிறது. திரெளபதி கண்ணன்பால் பக்தி கொண்டவளாக இருந்தும், கடைசிவரை தன் மானம், தன் செயல் என்ற ஒன்று தொக்கிக் கொண்டிருந்த வரை கண்ணனின் பூரண அருள் கிட்டாமல் இருந்தாள். துக்கத்தின் முடிவில், இனியும் காத்துக் கொள்வதற்கு ஒன்று மில்லை என்ற உணர்வு வந்த போது அவள் முழுவதுமாய் தன்னை சரணம் செய்தாள். தான், தன் உடம்பு - அது அழகாக இருந்தாலும் சரி, அழுக்கு உடம்பாக இருந்தாலும் சரி - இனி இது என் சொந்தமில்லை. படைத்தவன் காப்பான் என்ற கடைசி நம்பிக்கை! அது கடைசியில் அவளைக் காத்தது.

துச்சாதனன் எழுந்தே - அன்னை

துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.

"அச்சோ, தேவர்களே!" - என்று

அலறி அவ்விதுரனுந் தரைசாய்ந்தான்.

பிச்சேறியவனைப் போல் - அந்தப்

பேயனுங் துகிலினை உரிகையிலே

உட்சோதியிற் கலந்தாள் - அன்னை

உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள்

என்பான் பாரதி இதை மிக அழகாக. இந்த ஒருமையுறுதலுக்குச் சாதனம் சரணாகதி.

காலைக் கதுவிடு கின்ற

கயலோடு வாளை விரவி,

வேலைப் பிடித்தென்னை மார்கள்

ஓட்டிலென் னவிளை யாட்டோ?

கோலச்சிற் றாடை பலவுங்

கொண்டுநீ யேறி யிராதே,

கோலங் கரிய பிரானே.

குருந்திடைக் கூறை பணியாய்

என்கிறாள் ஆண்டாள், நாச்சியார் திருமொழியில். இங்கு ஆடையைக் கவர்தல் ஆண்டாளுடன் சேட்டை செய்யும் எண்ணத்தில் அல்ல. ஆண்டாளிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் "தான்" என்ற உணர்வையும் எடுத்துவிடத்தான் என்று பொருள் கொள்ள வேண்டும். ஆடை இங்கு அகங்காரத்தை குறிக்கும் குறியீடு என்று கண்டு கொள்க.

இன்றும் கர்நாடக மாநிலத்தில் வாழும் திகம்பரர் என்னும் சமணர்கள் ஆடை எதுவும் உடுத்து வதில்லை. ஆடையை அகங்காரத்துடன் இணைத்துப் பார்க்கும் பார்வை இது. கும்பமேளா உற்சவத்திற்கு வரும் பெரும்பான்மையான சாதுக்கள் இக்காரணத்தினாலேயே ஆடை உடுத்துவதில்லை. ஆனாலும் நடைமுறை சாத்தியக் கூறுகளை கணக்கில் கொண்டு, இதை வெறும் குறியீட்டளவிலேயே வைத்துக் கொள்ள வேண்டுமென்று கர்நாடக சமணர்களுக்கு ஸ்ரீராமானுஜர் போதித்தாக குரு பரம்பரைக் கதைகள் உண்டு.

மெய்யெல்லாம் போக விட்டு

விரிகுழ லாரில் பட்டு,

பொய்யெலாம் பொதிந்து கொண்ட

போட்கனேன் வந்து நின்றேன்,

ஐயனே. அரங்க னே.உன்

அருளென்னு மாசை தன்னால்,

பொய்யனேன் வந்து நின்றேன்

பொய்யனேன் பொய்ய னேனே

தனது அகங்காரத்தின் எல்லைகள் புலப்பட்டு, இனி நம்மால் முடிவது ஏதுமில்லை என மனது தனது இயலாமையை உணரும் போது தானாக வருகிறது சரணாகதி. தொண்டரடிப்பொடியின் திருமாலையில் ஒரு மலர் இது.

மெய் சொன்ன பாதையில் போகவிட்டு... (இதற்கு கண்ணதாசனின் பல பாடல்களை மேற்கோள் காட்டலாம்), விரிகுழலார் என்பது இங்கு இந்திரீய சுகங்களைக் குறிக்கிறது. பெண் சுகம் என்பது வாழ்வின் ஆதார சுகமாய் இருப்பதால் இது இந்திய ஆன்மீகச் சிந்தனையில் அடிக்கடி சுட்டிக் காட்டப்படும் ஒன்றாக உள்ளது. பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன் என்கிறார். ஐம்புலன் தந்த அனுபவங்களின் வாயிலாக வந்த நினைவுக் கொத்தான "தான்" என்ற பொய்யெலாம் பொதிந்து வந்தேன் என்கிறார். கடைசியில் கண்ணனின் இன்னருள் கிட்டும் போது "பொய்யனேன் பொய்யனேனே" என்று அழகாகச் சொல்கிறார். வறுமைக்கு வறுமை வைத்த மாமன்னன் என்பான் கண்ணதாசன். அதுபோல், பொய்யான "தான்" என்பது பொய்த்துப் போகும்படி கண்ணன் அருள் செய்தான் என்கிறார்.

தொடரும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசுர மடல் 34- இன்னுமோர் நூற்றாண்டு இரும்!!

எங்கள் வீட்டில் ஒரு Money Plant இருக்கிறது. இதை வைத்தால் வீட்டில் காசுக்கு குறையிருக்காது என்பது நம்பிக்கை. அது காட்டில் மரங்களில் படரும் கொடி. பெரிது, பெரிதாக இலை இருக்கும். வீட்டுத் தொட்டியில் வளருகிறது. அதற்கென பிரத்தியேகமாக தட்டி வைத்து வளர ஏற்பாடு செய்துள்ளேன். நான் தட்டி வைத்து, கீழே விழாமல் பாதுகாப்பாக அங்கங்கே கயிறு கட்டி அதை நிற்க வைத்துள்ளேன் என்பது பாவம் எனது காசு செடிக்குத் தெரியாது. அது தன் சுபாபப்படி தடித் தடியாக வேர் விட்டுக் கொண்டே வளருகிறது. செடி நினைக்கிறது (!) தான் வேர் விட்டால்தான் நின்று, படர முடியுமென்று. பார்த்துக் கொண்டிருக்கும் எனக்குத் தெரிகிறது, இது அவசியமில்லை, செடி வைத்தவன் தண்ணீர் ஊற்ற மாட்டேனா என்று. நான் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது செடிக்கு எப்படி தெரியப் படுத்துவது? இது போல்தான் உள்ளது மனிதனது வாழ்வும்.

சராணாகதி பற்றிப் பேசும் போது மிகவும் பிரபலமான இயேசுவின் மலைப் பிரசங்கத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது. நான் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துள்ளது, மாத்யூ (6:19-34) எழுதிய ஏற்பாட்டை பின்பற்றியது. இயேசு சொல்கிறார்:

"ஆகவே நான் உங்களுக்குச் சொல்வேன், உங்கள் வாழ்வைப் பற்றிய கவலையை

இன்றோடு விடுங்கள். நாளை என்ன உன்பேன், நாளை என்ன குடிப்பேன், நாளை என்ன

உடுப்பேன் என்ற கவலையை முதலில் ஒழியுங்கள். வாழ்தல் என்பது உண்ணும் சோறு,

பருகும் நீர், உடுத்தும் ஆடை மட்டும்தானா? (25)

காற்றில் தவழும் பறவையைப் பாருங்கள்! அவை விதை, விதைத்தனவா? விளைச்சல்

கண்டனவா? இல்லை நாளைக்கென்று சேமித்து வைக்கின்றனவா? பல்லுயுர் படைத்த

பரமன் அவைகளுக்கு உணவு ஊட்டவில்லையா? அந்தப் பறவையை விடவா நீங்கள்

தரத்தில் குறைந்து விட்டீர்கள்? (26) ஓ! நம்பிக்கை குறைந்த மனிதர்களே! (30)

எனவே தேடுங்கள் அவனது ஆசியையும், ஆட்சியையும். அவனது ஆளுமைக்கு

உட்படுங்கள்! மற்றவையெல்லாம் தானாய் உங்களை வந்தடையும். (34)"

மாத்யூ அவர் கேட்ட மலைப் பிரசங்கத்தை நினைவு கூர்ந்து முதல் நூற்றாண்டில் எழுதி வைத்து விடுகிறார். ஒன்பது நூற்றாண்டுக்குப் பின் திருக்குருகூர் என்ற சிறு கிராமத்தில் பிறந்த சடகோபன் இக்கருத்தை பின் வருமாறு எழுதுகிறார்:

".............. அற்பசா ரங்கள் அவைசுவைத் தகன்றொழிந்தேன்,

பற்பல் லாயிரம் உயிர்செய்த பரமா,நின்

நற்பொன்சோ தித்தாள் நணுகுவ தெஞ்ஞான்றே?

(திருவாய் மொழி 3.2.6)

அற்பமான சமாச்சாரங்களுக்காக (உணவு, உடை, உறையுள்) அலைந் தொழிந்தேன். பல்லாயிரம் உயிர் செய்த பரமா! நின் பத மலர் அறியும் நாள் எந்த நாளோ? என்று அங்காலாய்கிறார். வேறொரு பாடலில் இயேசு சொன்ன மாதிரியே...

சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும்,

நீகண்டு கொள் என்று வீடும் தரும்நின்று நின்றே

3.9.9

வானவர் நாட்டை நீ கண்டு கொள் என்கிறார். இங்கு வீடு என்பது இயேசு சொல்லும் பரமனின் இராச்சியமாகும்.

எனது வீட்டு காசுச் செடி போன்ற நிலமையை மாறன் சடகோபன் கீழ்க்கண்டவாறு வருணிக்கிறார்:

யானேயென்னை யறியகிலாதே,

யானேயென்தனதே யென்றிருந்தேன்,

யானேநீயென் னுடைமையும்நீயே,

வானேயேத்து மெம்வானவரேறே.

2.9.9

அதாவது, நானே என்னை அறியாது, நானே, நான் என்று இருந்தேன். என்னைப் படைத்தவன் நீயாகையால் நானே நீ என்று அறிந்து கொண்டேன். அறிந்த பின் என் உடமை நீ என்று கண்டு கொண்டேன். வானவர் போற்றும் சிங்கம் போன்றவனே!

இயேசு பிரான் இந்தியாவில் பிறந்திருந்தால் நமது முதல் ஆழ்வாராக இருந்திருப்பார். அவர் சொன்ன சரணாகதியைத்தான், ஆழ்வார்களும் நிரம்பப் பேசுகிறார்கள்.

இராமானுச முனி இதன் பொருளை எல்லோரும் உய்ய சொன்ன பின் பலர் சரணாகதி செய்து வாழத் தலைப்பட்டனர். அவருக்குப் பின் வந்த வைணவப் பெரியார்களின் பட்டடியலைப் பாருங்கள். ஒரு மாபெரும் உண்மை புலப்படும்!

இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்

கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்

முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்

எம்பார் (1021-1140) 119 வருடங்கள்

நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்

பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்

அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்

வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்

திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்

இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது?

சரணாகதி!!!

படைத்தவனின் மீது பாரத்தை போட்டு, அவன் தந்த வாழ்வை, அவனை நினைத்து வாழ்ந்ததால் எளிதாக முடிந்தது. அவர்களின் மனப்பான்மையை பின்வரும் பாடல் சுட்டிக்காட்டுகிறது:

ஊழி முதல்வன் ஒருவனே

என்னும் ஒருவன் உலகெல்லாம்

ஊழி தோறும் தன்னுள்ளே

படைத்துக் காத்துக் கெடுத்துழலும்

ஆழி வண்ணன் என்னம்மான்

அந்தண் திருமாலிருஞ்சோலை

வாழி மனமே கைவிலேல்

உடலும் உயிரும் மங்கவொட்டே.

10.7.9

நாமோன்றும் பெரிதாக எதுவும் செய்து விடவில்லை. ஊழி தோறும் ஒருவன் தன்னுள்ளே படைக்கின்றான் (note the subtle message of conservation of mass and energy), அதைக் காக்கின்றான், பின் அவனே அதை அழிக்கின்றான். அவன் கடல் வண்ணத்தவன். அவன் வாழும் இடமோ குளுமையான திருமாலிருஞ்சோலை (போயிருக்கிறீர்களோ? குழந்தையிலிருந்து போய் வருகிறேன். அதன் அழகு இன்னும் குறையவில்லை. அதே குளுமை, அதே அழகு, அதே வனங்கள். ஆண்டாள் அனுபவித்த திருமாலிருஞ்சோலை அப்படியே இன்னும் இருக்கிறது). வாழ்க மனமே! கைவிட்டு விடாதே! உடலையும் உயிரையும் மங்க ஒட்டாமல் வைத்திரு. எவ்வளவு அழகான நோக்கு பாருங்கள்!

சரணாகதியின் பலனாக பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்:

குலம்தரும் செல்வம் தந்திடு மடியார்

படுதுயராயினவெல்லம்,

நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்

அருளொடுபெருநிலமளிக்கும்,

வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற

தாயினு மாயினசெய்யும்,

நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்

நாராயணாவென்னும்நாமம்.

(2) 1.1.9

இங்கு குலம் என்பது "சத் சங்கம்" ஆகும். அதாவது நல்ல சேர்க்கை. அடியார்களின் துயர் களையும். நீள் விசும்பு அருளும். அதாவது நம் பட்டியலில் காண்பது போல் நீண்ட வாழ்வு அளிக்கும். அருள் கிட்டும். பெரு நிலம் என்பது பரமபதம். அதாவது இயேசு சொல்லும் தந்தையின் இராச்சியம். வீடு பேறு. பெற்ற தாயைவிட கண் போல் பாது காக்கும்.

இவையெல்லாம் சரணாகதியின் பலன்கள்.

இயேசு பிரான் இவர்களைப் பார்த்திருந்தால் மிகவும் சங்தோசப் பட்டிருப்பார். ஏனெனில் அவர் சொன்ன மொழியை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் வைணவர்கள்!!

பாசுர மடல் 35- கண்ணுக்கினிய கருமுகில் வண்ணன் நாமமே!!

குழல் இனிது, யாழ் இனிது என்ற மழலை பேசும் பொற்சித்திரங்களுக்கு பெயரிடுதல் என்பது எளிதான காரியமில்லை என்று தெரிகிறது.

மனித வாழ்வுக்கு அடையாளம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. மனிதன் ஒரு சமூக ஜீவி!. அவன் தனித்து வாழ்ந்தால் பெயரிடுதல் அவ்வளவு முக்கியமான நிகழ்வு அல்ல. ஆனால் சமூக மனிதனுக்கு பெயர்தான் ஒரு முக்கிய அடையாளம். தாய், தந்தையிடும் பெயரில்தான் நாம் கடைசி வரை அடையாளப் படுத்தப்படுகிறோம்.

உபநிடத்து சொல்லான "நீதான் அது" என்னும் போது பெயருக்கு இன்னும் முக்கியத்துவம் வந்து விடுகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் நம் முன்னோர்கள் பெயருக்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளனர்.

இறைவன், இறைமை என்பது ஒரு குறியீடு. இறைவனை ஒரு பெயர் சொல்லி அழைக்கும் போது அவன் அதுவாக இருப்பதுடன் அதன் மூலம் நம்மை அதற்கப்பாலும் அழைத்துச் செல்கிறான். இறைவனின் பெயர்களை கவனித்தால் அதில் பெரும் பொருள் இருக்கும். அந்தப் பெயரைச் சொல்லும் போது அது நினைவில் வரவேண்டும் என்பது குறிப்பு. அதனால்தான் இறைவனுக்கு பல்லாயிரம் நாமம் தந்தனர் நம் முன்னோர். ஒவ்வொரு பெயரிலும் ஒரு பொருள், ஒரு குணம், ஒரு செயல், ஒரு சுட்டு மறைந்திருக்கும்.

எனவே பெயர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்

நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்

செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்

நம்பிகாள். நாரணன் தம்மன்னைநரகம்புகாள்.

என்கிறார் பெரியாழ்வார் தமது பாசுரத்தில் (பெரியார் திருமொழி). நாலு நாளில் அழுகிப் போகும் பெயராக வைக்காதே என்கிறார். பெயரில் ஒரு மங்களம் இருக்க வேண்டும் என்கிறார். இறைவன் உறையும் இடமான உடல் மங்களகரமாக இருக்க வேண்டும் என்கிறார் பெரியாழ்வார்.

ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்

மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு

கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ

நாத்தகுநாரணன் தம்மன்னைநரகம்புகாள்

நல்ல பெயராக வைத்து, அதைச் சொல்லிக் கூப்பிடும் போதே குழந்தைக்கும், அதைப் பெற்றோருக்கும் பெருமை வர வேண்டும் என்று சொல்கிறார் இங்கே. கோவிலுக்கு புனிதம் வழிபடுபவர்களின் தூய மனத்தால், அதைத்தரும் இறைமையின் பலத்தால் அன்றோ. அதுபோல் ஊத்தைக் குழியாக நாமிருந்தாலும் முகில் வண்ணன் பெயர் வைக்கும் போது அங்கு அமுது வந்து பாய்ந்து மூத்திர நாத்தத்தை போக்கி விடுகிறது என்கிறார்.

காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்

ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.

கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ

நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள்

காசுக்கு ஆசைப் பட்டு பெண்ணிற்கு - "பொண்ணு" "தங்கம்" என்று பெயர் வைக்காதீர்கள் என்கிறார். பின் வெள்ளியும், தங்கமும் விழாக்களில்தான் காணவேண்டி வரும் என்கிறார். கூறை (புடவை) க்கு ஆசைப் பட்டு குழந்தைக்கு "பட்டு" என்று பெயர் வைத்தால் பின் பட்டு மாமி ஆகிப் போகும் போலும். கற்றைக்கு புல், தானியம் என்று பொருள் கொண்டால் மண்ணுக்கு ஆசைப் பட்டு "மண்ணாங்கட்டி" என்றோ, புல் (அதாவது அரிசி) லுக்கு ஆசைப் பட்டு "கூழு" என்றோ பெயரிடாதீர்கள் என்று கிராமத்து வழக்கில் சொல்கிறார் பெரியாழ்வார். அதற்குப் பதில் முகில் வண்ணன் பெயரிட்டு கோத்துக் குழைத்து குலாவி ஆனந்தித்து திரியுங்கள் என்கிறார்.

முன்னொரு காலத்தில் தமிழகத்தில் பஞ்சமர் என்னும் நாலு வர்ணத்திலும் சேராத குடிகளுக்கு நல்ல பெயர் வைக்கும் உரிமை கூட மறுக்கப் பட்டிருக்கிறது. கிராமப் புரங்களில் கூழு, மண்ணாங்கட்டி, பிச்சை இவையெல்லாம் புழக்கத்தில் உள்ளன. இந்த பெரும் பாவத்தை 11ம் நூற்றாண்டில் இராமானுசர் மாற்றுகிறார். திருநாராயணபுரம் என்னும் ஊரை நிறுவி அங்கு வாழ்ந்த பஞ்சமர்களுக்கு மதுசூதனன் பெயர் வைத்து, அவர்களுக்கு கோவில் அர்ச்சனை உரிமை குடுத்து, முதல் தீர்த்தக்காரர் ஆக்குகிறார்.

தமிழகத்தில் ஐயங்கார் என்னும் பெயர் சாதிப் பெயராகிப் போய்விட்டது. உண்மையில் அது ஒரு காலத்தில் கண்ணனை வழிபடும், ஆழ்வார்வழிப்படும் அனைவருக்கும் பொதுவான பெயராகத்தான் இருந்திருக்கிறது. ஐயங்கார் என்னும் பட்டம் வைணவன் என்பதை குறிப்பதற்காகவே உபயோகப் பட்டது. ஆங்கில அரைகுறை அறிஞர்கள் இந்தியா முழுவதையும் நாலு வர்ணத்தில் பிரித்து கணக்கு வழக்கு செய்ய முற்பட்ட போது ஐயங்கார் என்பது உயர் குல பார்ப்பனரை குறிப்பதாக மாறிப் போனது. சாதியை ஒழித்து வைணவக் குடையின் கீழ் சம தர்மத்தை கொண்டு வந்த இராமானுசனின் பெரும் முயற்சி சில குறு நோக்கு, குள்ள நரிகளால் மீண்டும் தமிழகத்தில் தகர்க்கப் பட்டது வரலாற்று சோகம் ஆகும்.

மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு

எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.

கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே

நண்ணுமின் நாரணன்தம்மன்னைநரகம்புகாள்.

மண்ணோடு மண்ணாகும் மனித உடல். அதனால்தான் மரணத்தை வெல்லும் வழி தேடி மனிதன் தோன்றிய காலத்திலிருந்து முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. நமது இலக்கியம், ஆன்மீகத் தேடல் இரண்டும் மனிதனை கால கண்டனாக மாற்றும் முயற்சிதான் என்பது ஊன்றிக் கவனித்தால் புரியும்.

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்

கவர்ந்திட மாட்டாவோ? - அட

மண்ணில் தெரியுது வானம், அதுநம்

வசப்படலாகாதோ?

என்று இந்த இச்சையை பாரதி அழகாகச் சொல்வான். வானம் வசப்படுதல் என்பது அமர வாழ்வாகும். அமர வாழ்வு எப்போது வரும் என்றால், நாம் மரணம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளும் போதுதான் என்பது விளங்கும். மனிதன் தன் படைப்பிலக்கியத்தால் அமரத்துவம் எய்தலாம். பாரதி, கம்பன், வள்ளுவன், இளங்கோ போன்ற படைப்பாளிகள் தங்கள் சாகா இலக்கியத்தின் மூலம் இன்றளவும் நம்முடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். அதாவது உடலுக்குத்தான் சாவேயொழிய மனித சிந்தனைக்கு இல்லை மரணம். இதை மிக நன்றாகப் புரிந்து கொண்டதால்தான் நாற்பதைக் கூட தாண்டாத பாரதி அமரத்துவம் பற்றி அடிக்கடி தன் கவிதைகளில் பேசுகிறான்.

காலத்தை வெல்லும் இன்னொரு வழி இறைவனைப் புரிந்து கொள்ளுதல். இறைமை என்பது ஊழி, ஊழியாக பல்லுயிர் தந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. பாரதி வாக்கில்:

ஆதியாய் அநாதியாய் அகண்ட அறிவாவள்...

மேலுமாகிக் கீழுமாகி, வேறுள திசையுமாகி

விண்ணும் மண்ணுமான சக்தி வெள்ளம்...

அந்த அளவுக்கு புரிதல் போதாது. அடுத்த வரியைப் பாருங்கள்.

ஆதியாய் அநாதியாய் அகண்ட அறிவாவள் உன்றன்

அறிவும் அவள் மேனியில் ஓர் சைகை!

என்பதைப் புரிந்து கொள்வதில்தான் அமரத்துவம் வாய்க்கிறது. இதை இன்னும் அழகாக திருவாய் மொழி வாக்கால் புரிந்து கொள்ளலாம்:

ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,

வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,

தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,

தேனும்பாலும்நேய்யும் கன்னலுமமுதுமொத்தே

(2.3.1)

ஊனில் வாழுகின்ற உயிர் மதுசூதனன் என்பதை புரிந்து கொண்டால் பின் நமக்கு மரணமில்லை. எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? கண்ணனும், நாமும் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் (இப்படியொரு வார்த்தையை நம்மாழ்வார் அடிக்கடி பிரயோகிக்கிறார். இன்பத்தின் உச்ச வரிகள் அவை). எப்படி? தேனும், பாலும், நெய்யும், கரும்பும், அமுதும் கலந்தது போல் அவ்வளவு இனிமையோடு கலந்துள்ளோம். இந்தப் புரிதல் வரும் போது வாழ்வு இனிப்பது மட்டுமல்ல. வாழ்வின் முடிதலும் கசப்பதில்லை. ஏனெனில் நமக்கு முடிவு என்பது உண்மையில் இல்லை.

அதனால்தான் இறைவனின் பெயரை இடுங்கள் என்கிறார் விட்டுசித்தர். மண்ணோடு மண்ணாகும் மானிடப் பெயரை வைக்காமல், வைகுந்தன் பெயராய் வையுங்கள் என்கிறார். அப்போது நம் குழந்தைக்கு அழிவில்லை என்கிறார்.

ஆக, பெயர் வைப்பதில் இவ்வளவு விஷயம் அடங்கி உள்ளது. நாமென்னவென்றால், நாராயணனை நாணு என்கிறோம், மதுசூதனனை மது என்கிறோம், கண்ணனைக் கனி என்கிறோம்.

வைத்த பெயரை அதன் அழகு குன்றாது, பொருள் திரியாது, குணம் விளங்கும் வண்ணம் கூப்பிட்டு பழகுவோம்.

தொடரும்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசுர மடல் 36 - கற்றினம் மேய்ந்த எந்தை கழனினை பணிமின் நீரே!

நாம் தகவல் நிரம்பிய உலகில் வாழ்கிறோம்.

தகவல் (information) எப்போதும் நம்மைச் சூழ்ந்து, இருக்கமாய் உள்ளது. பல நேரங்களில் இதை உணர்ந்து செயல் படுகிறோம், பல நேரங்களில் இதை உணராமல் தவித்து அவதியுருகிறோம்.

தகவல் பல்வேறு உருவில் நம்மிடம் வருகிறது.

தமிழ் இணையத்தில் சேர்ந்து விட்டு வந்து குவியும் தகவல்களைத் தாங்காது அவதிப்படும் பல தமிழர் நம்மிடம் உண்டு. "ஐயோ! ஆளை விடும் ஐயா!" என்று பொது மன்றத்தில் அறை கூவி பினாத்தும் அளவுக்கு தகவல் ஆளைக் கெடுத்து விடும் தன்மையுடையது :-)

கையிலுள்ள பொத்தானை அமுக்கினால் உயிர் பெரும் ஒலி/ஔ¢ப் பெட்டி நமக்கு தெரிந்ததே. அதுவரை தகவல் ஏதுமில்லாத ஒரு உலகம் திடுமென தகவல் களஞ்சியமாகிப் போகிறது. எந்த சானலில் எதைப் பார்ப்பது என்பது பின் பிரச்சனையாகிப் போகிறது. நாட்டு செய்திகள் என்ற பெயரில் அமெரிக்க ஜனாதிபதி பற்றி, அவர் செய்யும் கலவி லீலைகள் பற்றி பொத்தாம் பொதுவாய் எல்லோருக்கும் சொல்லப் போய் குழந்தைகள் வைத்திருக்கும் தாய், தந்தையருக்கு இதென்னடா வேண்டாத தலைவலி என்றாகிப் போகின்றது. இதனால்தான் பல அமெரிக்கர்கள் இப்போது "சுதந்திரம் என்பது டிவிப் பெட்டி இல்லாமல் இருப்பதே!" என்று சொல்லும் அளவுக்கு போய் இருக்கிறது :-)

பனிப் போர் (cold war) காலங்களில் ரேடியோவைத் திருகினால் போதும் அமெரிக்கா, சோவியத்தைத் திட்டுவதும், சோவியத் அமெரிக்காவைத் திட்டுவதும் என்று அனைத்துலக சுப்ரபாதம் ஆரம்பமாகும். நடுநிலை வாதிகள் தலையிடி கண்டு மிரண்டு போவர் :-)

இப்படி ரேடியோ, டிவி அலைகள் நாம் பிறந்து, வாழ்ந்து, இறக்கும் வரை நம்மைச் சூழ்ந்து இருக்கமாய் உள்ளன. சேகரிக்கும் கருவி இயங்கும் போது இவ்வலைகளுக்கு பொருள் வந்து, வாழ்வை குலைக்கவோ, குதூகலிக்க வைக்கவோ முடிகின்றன. இவ்வலைகள் என்று மட்டுமில்லாது இப்பிரபஞ்சத்தில் பல்வேறு வகையான தகவல்கள் பல்வேறு அலை வரிசைகளில் கொட்டிய வண்ணமே உள்ளன!

இப்படிக் கொட்டும் தகவல் போதாது என்று, கல்வி என்ற பேரில் நாம் தகவல் சேகரிக்கும் இயந்திரமாகிப் போகிறோம். இன்றையக் கல்வி என்பது தகவல் பரிமாற்று நிறுவனம் மட்டுமே! ஆக, தகவலில் பிறந்து, தகவலில் வளர்ந்து, தகவலுக்காய் வளர்ந்து, தகவலுக்காய் (அதாவது கொள்கைகள் தகவலினால் உருவாவதும், கொள்கைக்காய்..) உயிர் மாய்ப்பதும் மனித வாழ்வு என்றாகிப் போகிறது!

தகவலில் பிறந்து....என்பதை இன்னும் விளக்கமாய் பார்ப்போம்.

கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தகவல் பரப்பும் ஒரு நிகழ்வு நடந்தது. இத்தகவல் பரிணாம, மரபு சார்ந்த தகவல் ஆகும். இது டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ எனப்படும் மூலக்கூறுகளில் பதிந்துள்ளன. இந்த மரபணுத் தகவல்கள் செல் என்ற ஊடகத்தின் வழியாக வாழ்ந்து, பதிப்பிக்கப்படும் போது வாழ்வு என்ற இயக்கம் தொடர்ந்து நடக்கின்றது. ஒன்றாக இருந்த ஒன்று பலவாக பரிணாமிக்க இந்த இயக்கம் அவசியமாகிறது. சின்னச் சின்ன மாறுபாடுகளை தன்னுள் வாங்கி இம்மூலக்கூறுகள் பலவாய் பரிணமிக்கின்றன. ஆக, வாழ்வு என்பது தகவலின் தொடர் இயக்கம் ஆகும். தகவல் தொடர இயங்கும் இயக்கம் ஆகும். எனவே, வாழ்வு என்பதே தகவலுக்காய் உருவான ஒன்றெனத் தெளிவாகிறது.

தகவலுக்காய் இயங்கும் வாழ்வு செயல்பட தொடர்ந்து தகவல் வேண்டி இருக்கிறது. இத்தகவல்கள் வாழும் சூழலில் இருந்து வருகின்றன. இத்தகவல்கள் உணவு பற்றியதாய் இருக்கலாம் அல்லது உறவு பற்றியதாய் இருக்கலாம் அல்லது சுழல் மாற்றத்தைப் பற்றியதாய் இருக்கலாம். இந்த தகவல்களை உள் வாங்கி அதற்கேற்ற வாறு செயல் படுகிறது வாழ்வு. இத்தகவல்கள் ஔ¢ அலைகளாகவும், ஒலி அலைகளாகவும், மெல்லிய அதிர்வுகளாகவும் உயிர்களுக்கு வந்து சேருகின்றன.

இவ்வலைகளை வாங்கும் வாங்கிகளாக ஐம்புலன்கள் அமைகின்றன. கண் பார்க்கிறது (ஔ¢ அலை வாங்கி), காது கேட்கிறது (ஒலி அலை வாங்கி), மூக்கும், வாயும் உணர்கின்றன (வேதிமச் செய்தி வாங்கி), உடல் உணர்கிறது (மெல்லிய அதிர்வுகளை). ஐம்புலன்கள் வழியாக உலகு மனதுடன் சம்மந்தம் வைத்துக் கொள்கிறது.

ஐம்புலச் சேர்க்கையின் பலனாய் மனது செயல்படுகிறது. மனதை இவை வெகுவாய் பாதிக்கின்றன. கண்ணில் தெரியும் அழகை (உம்.பெண்) உடமை கோருகிறது மனது! சுவைக்கும் உணவு "சாப்பாட்டு ராமன்களை உருவாக்குகின்றன! கேட்கும் செய்தி கொள்கைகள் உருவாக காரணமாகின்றன. மெய் தரும் சுகம் பால் சேர்ந்த கலவிக்கு ஏங்கும் மனதை உருவாக்குகிறது. ஐம்புலன்கள் மனதை ஆட்டிப் படைக்கின்றன.

புலன் வழிச் செய்தியை மனது பதிவு செய்து, அப்படி பதிவு செய்வதின் மூலம் "தான்" இருக்கின்றோம் என்ற உணர்வினைப் பெறுகிறது. புலன் இல்லையேல் "தானும்" இல்லைதான்.

ஐம்புலன்கள் நொடிக்கு கோடி என்ற கணக்கில் தகவலை மூளைக்கு அனுப்புகின்றன. மூளை இத்தகவலைத் தாங்கும் தளமாக அமைவதுடன், இத்தகவலின் பொருளை அறியும் நுண்ணிய கருவியாகவும் செயல்பட வேண்டியுள்ளது. இத்தகவல் சேகரிப்பு என்பது மிகவும் சிக்கலான(complex), மிகவும் தேர்ந்த ஒரு கட்டமைப்பு ஆகும். வரும் தகவலை பொருள் அறிந்து அதற்கேற்றவாறு உடனேயோ அல்லது பிற்பாடோ செயல்களை தர வேண்டிய பொறுப்பு மூளையது ஆகும். எனவே மூளை இத்தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்கிறது. சேகரித்த தகவல்களை இடைக்கால, நீண்ட நாள் ஞாபகங்களாக மூளை தக்க வைத்துக் கொள்கிறது.

வேதநூல் பிராயம் நூறு

மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியு முறங்கிப் போகும்....

(திருமாலை 3)

என்கிறார் தொண்டர் அடிப்பொடி. ஏன் வாழ் நாளின் பாதிப் பொழுது உறக்கத்தில் போகிறது? சுவாரசியமான கேள்வி! மூளை தனக்கு வரும் கோடிக் கணக்கான தகவல்களை தரம் பிரித்து, தக்க வைப்பதை தக்க வைத்து, வேண்டாததை வெளியே தள்ள இந்த நேரத்தை பயன் படுத்திக் கொள்வதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வெளியே தள்ளும் நினைவுகள் பல சமயங்களில் கனவுகளாக வந்து நிற்பதாயும் கருதுகின்றனர். எப்படி இருப்பினும் மூளைக்கு ஒழுங்கு படுத்த நேரம் தேவைதான். ஐம்புலன்தரும் தகவல்களில் பாதிக்கு மேல் குப்பைதான் என்பது நாம் அறிந்ததே (டிவி-ஒரு உதாரணம் போதாதா?).

எனவே தான் தொண்டர் அடிப்பொடி,

காவலில் புலனை வைத்துக்

கலிதனைக் கடக்கப் பாய்ந்து...

(திருமாலை 1)

என்று சொல்கிறார். புலனை காவலில் வைக்க வேண்டும் என்கிறார். இல்லாவிடில் அது சகட்டு மேனிக்கு வேண்டாத தகவல்களை மூளைக்கு தந்து மூளையை மூச்சு முட்ட வைத்து விடும் என்கிறார். இப்படியானால் வரும் துயரை அழகாக திருமங்கை ஆழ்வார் தனது பெரிய திருமொழியில் சொல்லுவார்:

கற்றிலேன் கலைகள்! ஐம்புலன் கருதும்

கருத்துளே திருத்தினேன் மனத்தை

பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை!

பெரு நிலத்து ஆருயிர்க் கெல்லாம்....

(1.1.8)

பெரு நிலத்தில் வாழ்கின்ற ஆருயிர்க்கு பயன் படும் வகையிலான கலைகள் யாதும் கற்றிலேன் என்று வாடுகிறார். ஏனெனில் மனதை ஐம்புலன் கருதி செலவழித்து விட்டேன் என்கிறார். ஐம்புலன்கள் தரும் தகவல் அதிகரிக்கும் போது மூளை வாடுகிறது. ஐம்புலன் செயல் பட, செயல் பட அவ்வியக்கத்தின் உள்ளோட்டமாய் "தான்" என்னும் உணர்வு வளர்ந்து நிலைப்படத் தொடங்கு கிறது. எனவே ஆருயிர்க்கு பயன் தரத் தக்க செயல்கள் எதுவும் செய்ய நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்கிறார்.

எனவே திராவிட வேதம் என்றழைக்கப் படும் திருவாய் மொழி (வாய் மொழி-எழுதாக் கிளவி- வேதம்):

உள்ளம், உரை, செயல் - உள்ள இம்மூன்றையும்

உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுக்கே !

(1.2.8)

என்கிறது.

உள்ளம் தனக்கான கருவை (content) ஐம்புலன் வாயிலாக எடுத்துக் கொள்கிறது. வெறுப்பு, பகைமை, பிரிவு - இவை சமூகம் தரும் உபதேசங்களால் நமக்கு வந்து சேருகின்றன. ஐம்புலன் தரும் தகவலை நம்பும் உள்ளம் அதை உண்மை என்று உள்வாங்கிக் கொள்கிறது. இப்படி தவறிக் கெட்டுப் போன உள்ளம் கொள்கைகளுக்காய் தீக் குளித்து, பிரிவுகளுக்காய் குண்டு போட்டு, வெறுப்பின் காரணமாக விஷம் வைக்கிறது. இது பெரு நிலத்து ஆருயிர்க்கு பயன் தரும் செயல் அல்ல! காரணம்? உள்ளம் கெட்டு விட்டது.

உரையை இறையுள் ஒடுக்கு என்கிறது வேதம். முருகக் கடவுள் அருணகிரிக்கு, "சொல்லற சும்மா இரு!" என்ற உபதேசித்தார். இரண்டும் ஒன்றுதான். உரை எனும் சொல் மனத்தின் வழியாக வருவது. உள்ளம் கெட்டு விட்டால் உரையும் கெட்டுத்தான் வரும். எனவே உரையை உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுக்கு என்கிறார் நம்மாழ்வார்.

இறையுள்ளில் செயல் ஒடுக்கு! பகவான் ஸ்ரீ இரமண மகரிஷி அதிகமாய் பேசியதில்லை. அவரது உள்ளம், உரை, செயல் எல்லாம் இறையுள் அடங்கிக் போனது. அவர் பேசாவிடினும் (செயலாய்) அவரைச் சுற்றி சாந்தமும், இனிமையும் சூழ்ந்திருக்கும் என்பது கண்டவர் கூற்று. இதுதான் திருவாய் மொழி சொல்லும் "இறையுள்ளில் ஒடுங்கிய நிலை".

அதாவது, மூளை அதிக பளு இல்லாமல் சாந்தமாய் இருக்கும், ஐம்புலன்கள் அருவியாய் தகவலைக் கொட்டாது, தகவல் இல்லாததால் செயல்பாடு குறையும், செயல்பாடு வழிப்படும் "தான்" எனும் உணர்வு குறையும், "தான்" இல்லாத உள்ளம் பெரு நிலத்து ஆருயிர் கருதி இளகிப் போயிருக்கும், வாய் இடையறாது பேசாது மெளனித்து இருக்கும், அப்போது செயல் இறையுள்ளில் அடங்கி இறைமையாய் இருக்கும்.

ஆக, சரணாகதி என்பது திறமையான Data Management என்பது இதனால் தெளிவாகிறது!

அடடா! இவ்வளவு நாள் தெரியாமல் போய் விட்டதே என வாய் விட்டு சிரிக்கத் தோன்றுகிறதா? அவசியமில்லை, நமக்காய் தொண்டர் அடிப்பொடி விலா ஒடியச் சிரிக்கிறார்:

உள்ளத்தே யுறையும் மாலை

உள்ளுவா னுணர்வொன் றில்லா,

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்

தொண்டுக்கே கோலம் பூண்டேன்,

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்

உடனிருந் தறிதி யென்று,

வெள்கிப்போ யென்னுள் ளேநான்

விலவறச் சிரித்திட் டேனே.

(திருமாலை 34)

உள்ளத்தே உரையும் திருமாலை உள்ளுணர்வு இல்லாததால் இவ்வளவு நாள் உணர்ந்தேன் இல்லை (உள்ளுணர்வு புலன் அடக்கத்தால் வரும் என்று கண்டோம்). இவ்வளவு நாள் பெரிய தொண்டன் என்று கள்ள வேடம் போட்டு அலைந்தேன் (நம்மூர் சாமியார்களும், மடாதிபதிகளும் இதை உணரும் காலம் எப்போது வரும்?), உள்ளுவார் உள்ளிலெல்லாம் உறைந்திருப்பவன் ஹரி என்ற ஞானம் இப்போதுதான் வந்ததையா! வெட்கிக் போனேன்! விலா ஒடியச் சிரிக்கின்றேன் நான்! என்று முடிக்கிறார் ஆழ்வார்.

சரி, சிரித்தது போதும் சரணாகதி செய்வோம் :-)

--------------

பாசுர மடல் 37 - நீராய் அலைந்து கரைய....

நாம் இழுக்கும் ஒவ்வொரு மூச்சும் வாழ்வு நமக்குத் தரும் பரிசு ஆகும். பல வேளைகளில் இதை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. உள் வரும் காற்றில் பிரபஞ்சத்தின் மூச்சு உட்புகுந்து நம்மை நாமாக வைத்திருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் சக்திக்கு ஒரு எல்லை இருப்பதாய் தெரியவில்லை. அதுவே சூப்பர் நோவாவாக வெடிக்கிறது. வெடிக்கும் அதிர்வில் பல அண்டங்கள் அலைக்கழிந்து போகின்றன. அதிர்வின் சக்தியில் அலையும் துகள்கள் ஒன்று சேர்ந்து அடர்த்தி மிகப் பெற்று அண்டங்களாகின்றன, கோளாகின்றன, நட்சத்திரம் ஆகின்றன. வின்னில் மிதக்கும் ஹப்பில் வான் நோக்கி வழிப் பார்த்தால் இந்த ஊழிக் கூத்து நடந்த வண்ணம் இருப்பது தெரிய வருகிறது. பல் உருப் பெற்ற வண்ணம் பல் நிலையில் நின்று, நின்று ஓயாமல் மாறி, மாறி, மாறுவது ஒரு வேடிக்கையாய் பிரபஞ்சம் சுழன்று கொண்டுள்ளது.

இச்சுழற்சியின் ஒரு அங்கமாக உயிர் பூவுலகில் தளிர்த்து, நிலைத்து, வளர்ந்து வருகிறது. எங்கோ எப்போதோ வானில் துகளாக இருந்த கரு இன்று மண்ணில் பிறந்து, வளர்ந்து வாழ்வாகி நிற்பதுதான் எவ்வளவு விநோதம். சுழலும் காற்று உயிராய் நில்லாமல் ஓடியே போய்விட்டால் யாருக்கு நட்டம்? மூக்கை விட்டு அகன்ற காற்று மீண்டும் உயிராய் நம்மிடம் வருவது எவ்வளவு பெரிய பாக்கியம். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று எண்ணி, எண்ணி மகிழும் படி.

பூவுலகில் வாழ விதி வகைகள் உள்ளன. வின்னில் விட்ட கல் மண்ணை நோக்கி வந்தே ஆகவேண்டும். மண்ணில் விழுந்த விதை மரமாய் வளரவேண்டும். வளர்ந்த செடியை வளைத்து மடக்கி விதையாக்க முடியவதில்லை. செடி மரமாகி, மரம் பூ பூத்து, காய் விட்டு, காய் கனியாகி பின் மீண்டும் விதையாக வேண்டியுள்ளது. மண்ணில் பிறந்து விட்ட நமக்கு இவ்விதி ஒரு பொது விதி. ஒன்றாய் இருந்தது பலவாய் மாறி பூமியில் பரிமளிக்க இவ்விதிகள் உதவுகின்றன. காதலியின் கண்ணில் தெரியும் கவர்ச்சி காதலுக்கு கண் இல்லை என்று ஆக்குகிறது! ஆணுக்கும், பெண்ணுக்கும் மாளாத காதலை வைத்து பல் உருப் பெருக்கம் நடைபெருகிறது இவ்வுலகில். மண்ணாய், வளியாய் இருந்த ஒன்று ஊனாய் உடலாய் மாறும் போது விதிப் பயன் தொடர்கிறது. ஊனை உண்டு, ஊன் வளர்கிறது. உயிரை ஒட்டி உயிர் வாழ்கிறது. ஊனைப் பெற்று விட்டு நோயை வேண்டாம் என சொல்ல இயலாது. இவ்விதிகள் பொதுவானவை.

ஆனால் இவ்வூனில் ஒட்டாமல் மனமும் ,உள்ளமும் தனித்து இருக்கின்றன. தாமரை இலைத் தண்ணீர் போல. கொஞ்சம் முயன்றால் தனித்திருக்கும் மனத்தின் திறம் அறியலாம். திறன் அறிந்து, சொல் அறுத்து, சும்மா இருக்கும் போது ஊன் இருப்பது கூட மறந்து விடுவது உண்டு. ஆழம் கண்டு முத்து எடுத்த பின் மீண்டும் வந்து விதிப் பயன் நோக்கும் போது மனது வருந்துகிறது. மனது அந்நிலையில் அப்படியே நிற்காதோ என்று!

நிலவொடு வெயில்நில விருசுடரும்

உலகமு முயிர்களு முண்டொருகால்,

கலைதரு குழவியி னுருவினையாய்

அலைகட லாலிலை வளர்ந்தவனே.

ஆண்டாயுனைக் காண்பதோ

ரருளெனக் கருளுதியேல்,

வேண்டேன்மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே

(6.1.4)

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் சொல்கிறார். நிலவு, வெயில் தரும் சுரியன், உலகம், அதில் வாழும் உயிர் இவை அனைத்தும் உண்டு, சிறு குழந்தை போலாகி, அலை கடலில் வளர் பவனே உன்னைக் காணும் ஆசையால் வேண்டேன் மனை வாழ்க்கை என்கிறார். அதாவது ஆழங்கண்டு ஆதிப்பிரானை உணர்ந்த பின் மனது-மனைவி (கணவன்), சுற்றம், அரசியல், வம்பு, தும்பு என வாழும் வாழ்வை வெறுத்து ஒதுக்குகிறது. சுகந்தம் அறிந்தவர் வீச்சம் ஒதுக்குவது போல். திருமொழியின் இன்னொரு பாசுரத்தில்:

வந்துன தடியேன் மனம்புகுந்தாய்

புகுந்ததற்பின் வணங்கும்,என்

சிந்தனைக் கினியாய். திருவே.என் னாருயிரே,

அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்

கலந்து, அவை யெங்கும்

செந்தழல் புரையும் திருவாலி யம்மானே.

(2) 3.5.1

இப்படி நம் ஆதியுரு அறிவதும் பெரும் அனுகூலம்தான். அவன் வந்து அடியார் நம் மனத்தில் புகுந்தான். புகுந்தபின் அவனை அறிந்து கொண்டமையால் அவனை வணங்குவது சிந்தனைக்கு இனியதாய் உள்ளது. [திருமங்கை ஒரு அபாரமான கவி. அவர் காணும் அழகு காட்சிகள் படித்து இன்புற வல்லன. திருவாலி எப்படி உள்ளது என்று வருணிக்கிறார். அசோக மரத்து இளந்தளிர்கள் அணிந்து செந்தழல் போல் உள்ளதாம் திருவாலி அம்மானின் காட்சி. இளம் பச்சை போல் இளஞ் சிவப்பும் வனப்பு மிக்கது. இது கவி உள்ளம்!]

நம் ஆதி அறிந்த பின். இப்படி இருந்த ஒன்று நமக்கும் வாழ்வு தந்து ரசிக்க வைக்கிறதே என்று எண்ணும் போது உள்ளம் உருகாமல் என்ன செய்யும்? இது ஒரு விசேட மனநிலை. இது வருவதற்கு மனம் பயில வேண்டும். அம்மா தரும் பருப்பு சாதத்தின் சுவை அறிய முதலில் அன்பு செய்யும் தாய் வேண்டும். அவள் அன்பில் தரும் இன் சுவை உணவின் சுவை அறிந்தபின் தாய் நமக்கு நெருக்கமாகிவிடுவாள். அன்று இட்ட இன்சுவை அமுதம் வாழ்நாள் முழுவதும் இனித்துக் கொண்டு இருப்பது போல இதத்தாயான இறைவனை கண்டு, ஆனந்திக்கப் பழகிக் கொண்டால் பின் அவன் நாமம் அமுதாய் நிற்கும் நெஞ்சில். இதற்கு மனது பழக்கப் படவேண்டும்.

விரும்பிநின் றேத்த மாட்டேன்

விதியிலேன் மதியொன் றில்லை,

இரும்புபோல் வலிய நெஞ்சம்

இறையிறை யுருகும் வண்ணம்

சுரும்பமர் சோலை சூழ்ந்த

அரங்கமா கோயில் கொண்ட,

கரும்பினைக் கண்டு கொண்டேன்

கண்ணிணை களிக்கு மாறே.

(17)

இந்த நிலைகளை அழகாக விளக்குகிறார் தொண்டர் அடிப்பொடி தன் திருமாலையில். விரும்பி இறைவன் பெயர் சொல்ல மாட்டேன் (அப்படியொரு அறியாமை, வீம்பு!), நல் விதி அற்றவன், நல்ல மதி (அறிவு) அற்றவன், போதாக் குறைக்கு இரும்பு போன்ற வலிய நெஞ்சம் வேறு. இப்படி இருந்தால் உள்ளம் எப்படி உருகும்? இப்படி வாழும் மாந்தர்கள் எத்தனை கோடி உலகில். அவன் அருளால் அவன் தாள் வேண்டி என்ற சொன்னபடி அவனது அருள் கிட்டும் போது இரும்பு நெஞ்சு கூட மெழுகு போல் உருகிவிடுகிறது. வண்டுகள் வலம் வரும் சோலை சூழ்ந்த அரங்கில் வாழும் கண்ணன் என்னும் கரும்பின் சுவை அறிந்த பின் மனை வாழ்வு சுவைக்குமோ (இங்கு மனை என்பது நமது சாதாரண வம்பு. தும்பான வாழ்வு எனக் கொள்ள வேண்டும். மனை என்பது மனைவி என்று கொண்டு துக்கப்படுதல் தவறு. ஏனெனில் இத்துன்பங்கள் மனைவிக்கும் சரி சமமாய் இருப்பதால். இறை உணர்வு அற்ற வாழ்வு என்பது சாதாரண வாழ்வு என்றாகிறது. இதனால்தான் குமுத வல்லி என்ற மிக அழகான மனைவியைப் பெற்றிருந்தும் திருமங்கை மன்னன் வேண்டேன் மனை வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப பத்து பாசுரங்களில் சொல்கிறார். அது அவர் மனைவிக்கும் பொருந்தும் என்ற கொள்ள வேண்டும்).

இறைவனை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று ஆழ்வாராதிகளிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல்தாய் சடகோபன் தன் திருவாய் மொழியில் சொல்கிறார், திருமால் என்பவன் நீராய் அலைந்து கரைய உருக்குகின்றான் என்று. அதனால் தான் அவன் அடியார்க்கு அராத அமுதாய் உள்ளான்:

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,

நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே.

5.8.1

ஆரா அமுது என்றால் உண்ண, உண்ண தெவிட்டாத அமுது என்ற பெயர். இறைவன் இங்கு ஆழ் மன நிலைக்கு குறியீடாக உள்ளான். ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது உடல் என்ற ஒன்று இருப்பது கூட தெரிவதில்லை. அது ஒரு தெவிட்டாத அமுது. திருவண்ணாமலை கோவில் குகையில் சமாதியாகி இருக்கிறார் இரமணர். உடலை பூச்சிகள் உண்டு வாழ்வது கூட அறியாமல். பூச்சிகளுக்கும் அமுது படைத்தாரோ என்னவோ?

அடியேன் என்று சொல்கிறார். அந்நிலையில் உடலே இல்லை என்று ஆகும் போது "நான்" என்பது எங்கிருந்து வரும்? எனவேதான் "அடியேன்" என்ற பிரயோகம்.

உடலே அன்பாய் நிற்கின்றான் என்கிறார். அவன் அன்பின் உரு என்கிறார். சேதனம், அசேதனம், தாழ்ந்தவன், உயர்ந்தவன் போன்ற பேதம் மனது, எண்ணங்கள் சூழ நிற்கும் போது நிகழ்வது. எண்ணங்கள் அறுந்து மனது உள்ளே சென்று ஐக்கியமாகிவிடும் போது நிற்பது அன்பு ஒன்றுதான். இதை நாம் ஒவ்வொருவரும் எளிதாக அனுபவிக்க முடியும் - முயன்றால்!

நீராய் அலைந்து கரைய உருக்குகிறான் என்கிறார். நீர் கரைக்க வல்லது. வேதிமவியல் விதிப்படி நீர் என்பது உலகின் மிகச் சிறந்த கரைப்பான். அதைக் கண்டு உவமை கூறுகிறார் நம்மாழ்வார்! நீர் எப்படி கரைக்கிறதோ அது போல் திருமால் "நான்" என்ற எனது அகங்காரத்தை கரைத்து தன்னுள்ளே ஐக்கியப் படுத்தி, தானே அன்பு என்று காட்டுகிறார் என்கிறார்.

செந்நெல் கதிர் சாமரம் வீச திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அனந்த சயனத்தில் இருக்கும் பெருமாளே என்று முடிக்கிறார். கிடந்தாய் என்ற கடைசி வரியில் கூட ஆழமான பொருள் உள்ளது. எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், வேண்டுதல், வினாவுதல் போன்ற எண்ணத்தின் பாற்பட்ட செயல்கள் அனைத்தும் கிடக்கும் படி "இது என் செயல்" என்ற ஒன்று இல்லாதவாறு கிடக்கும் படி செய்யக் கூடிய எம்மானே என்று முடிக்கிறார் முதல் தாய் சடகோபன்.

இப்போதைக்கு இவ்வளத்தையும் வாசிச்சு விளங்கிக்கோங்க...

அப்புறம் தொடருறம்....ஆன்மீகம் படிக்கப் படிக்க பண்படுத்தும்..விஞ்ஞானம் படிக்கப்படிக்க அறிவூட்டும்...இரண்டும் வாழ்வுக்கு அவசியம்.... தொடரும்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்!

சித்தர்க்கும் வேதச் சிரந்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்

சுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந் தோர்கட்கும் தொண்டுசெய்யும்

பத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றிப் பண்டுசென்ற

முத்தர்க்கும் இன்னமுதம் சடகோபன் மொழித்தொகையே

கவிஞர்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் கம்பன்

நம்மாழ்வாரை இப்படிப் புகழ்கிறார்.

அதாவது சித்தர்களுக்கும், வேதம் அறிந்தோர்க்கும், வேத வாழ்வைச்

செய்பவர்கட்கும், சுத்தமான நடத்தை உடையோர்கட்கும், துறவிகளுக்கும்,

தொண்டு செய்யும் அடியார்கட்கும், ஞான முனிவர்கட்கும், ஜீவன் முக்தர்களுக்கும்

இன்னமுதம் போன்றது நம் மாறன் சடகோபன் செய்த திருவாய்மொழித்

தொகையே என்பது சாரம். அதை எழுதும் எனக்கும், ரசிக்கும் உங்களுக்கும்

அமுது போன்றதுதான் திருவாய்மொழி :-)

"தமிழ் நூல்களில் தோன்றுகின்ற சந்தேகங்களை வடமொழி நூல்கொண்டு

தெளிக" என்றார் திருவாடுதுறை ஆதீனம் சுவாமிநாத தேசிகர். "வடமொழி

வேத வேதாந்தங்களில் தோன்றுகின்ற ஐயந் திரிபுகளைத் திருவாய்மொழியினைக்

கொண்டு தெளிகின்றோம்" என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர். தமிழின்

மிகச் சிறப்பு வாய்ந்த இப் பக்தி இலக்கியம் வடமொழி, தெலுங்கு, கன்னடம்

போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட மூத்த நூலாகும்.

வைணவ இலக்கியங்களில் மதுரை தமிழ் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட

பெரும் தகுதியும் இந்நூலுக்கு உண்டாகும். அதனாலேயே நம்மாழ்வார்

ஆழ்வார்களில் முதன்மையாக நிற்பதுடன், ஆச்சார்ய வரிசையிலும் முதல்வராக

நிற்கிறார்.

திருவாய்மொழிக்கு எழுந்த உரைகள் "பகவத் விஷயம்" என்றே அழைக்கப்

படுகின்றன. வேத, இதிகாச புராணங்கள் அனைத்தும் இறை பற்றி பேசுவனவாய்

இருப்பினும் திருவாய் மொழி உரைக்கு தனித்தே "பகவத் விஷயம்" என்று அழைப்பதன்

நோக்க மென்ன என்ற கேள்வி எழுதல் நியாயமானதே.

"வேதங்கள் முக்குணங்களோடு கூடியவையாய் "ஜ்யோதிஷ்டோமம்" முதலிய நிலையற்ற

கர்மங்களையும், "சுவர்க்கம்" போன்ற மிகச் சிறிய புருஷார்த்தங்களையும் பரக்கப்

பேசுகின்றன. உபநிடதங்களோ பேத/அபேத வாக்கியங்களால் தத்துவங்களைக் கூறுகின்றன.

மேலும் - பொருள் ஒன்றோ? பலவோ? என ஐயம் தோன்றுவதற்கும் இடம் தருகின்றன.

ராம காதை எழுதிய வால்மீகியோ, நாராயண காதை கூறுகிறேன் என்று தொடங்கி வீடுமன்

போன்ற அரசர்களுடைய பிறப்பு முதலான வற்றைப் பேசிப் போகினார். திருவாய் மொழியும்

அதன் வியாக்கியானங்களும் இத்தகைய குற்றம் ஏதும் இல்லாமல் "திருமாலவன் கவி"

என்கின்ற பிரகாரம் முற்றும் பகவத் விஷயமாகவே எடுத்து இயம்புவதால், இவற்றிற்கே

"பகவத் விஷயம்" என்ற சிறப்புப் பெயரை நம் பெருமக்கள் வழங்கினர்" என்கிறது ஈடு.

இவ்வளவு கீர்த்தி வாய்ந்த திருவாய் மொழி செய்வித்த நம்மாழ்வாரோ தனது இறை

அனுபவத்தைச் சொல்லும் காண் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன், விநயத்துடன்

பகர்கின்றார்.

சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ,

என்னாவில் இன்கவி யானொருவர்க்கும் கொடுக்கிலேன்,

தென்னா தெனாவென்று வண்டு முரல்திரு வேங்கடத்து,

என்னானை என்னப்பன் எம்பெருமானுள னாகவே. 3.9.1

எதைப் பற்றி பேசினாலும் எதிர்வாதம் செய்யும் மனிதர்களை நன்கு அறிந்திருந்த

ஞானியான மாறன் -சொன்னால் விரோதம் இது- என்று தொடங்குகிறார்! தனது

இறை அனுபவங்கள் தேனாய் தித்திப்பவையாய் இருப்பினும் அதைச் சொல்ல

புகுந்தால் வம்புதான் வந்து சேர்கிறது என்கிறார். அனுபவச் சொல்! இது

எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய சொல்!

இவ்வளவு பீடிகை எதற்கு? பின்னால் வரும் பாடலைக் கண்ணுற்றால் புரியும்.

குவலந்தாங்கு சாதிகள் நாலிலும்

கீழிழிந்து, எத்தனை

நலந்தா னிலாதசண் டாளசண்

டாளர்க ளாகிலும்,

வலந்தாங்கு சக்கரத் தண்ணல்

மணிவண்ணற் காளென்றுள்

கலந்தார், அடியார் தம்மடி

யாரெம் மடிகளே.3.7.9

பகவத் விஷயமான திருவாய் மொழியில் ஒரே ஒரு பாடலில்தான் சாதி பற்றிய பேச்சு

பதிவாகிறது. முற்றும் இறை சம்மந்தமான இத்தொகையில் சம்மந்தமில்லாமல்

இதைப் பற்றி பேசி இருக்க மாட்டார் எம் இதத்தாய் சடகோபன்.

நம்மாழ்வார் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம் என நம்புகின்றனர்.

குவலந் தாங்கு சாதிகள் நான்கு என்கிறார். குவலம் என்பது தமிழகத்தை குறிப்பதாகவே

கொள்ள வேண்டும். தமிழகத்தில் நான்கு சாதிகள் உண்டு என்பது தெரிகின்றது.

இவை தற்போது வருணங்கள் என்று புரிந்து கொள்ளப் படுகின்றன. ஏனெனில்

சாதிகள் எண்ணிக்கை அற்று தமிழகத்தில் பெருகிவிட்டன.

இவருக்கும் முந்திய காலத்தவரான ஆரியப் படை கடந்த நெடுஞ் செழியனின்

காலமான சங்க காலத்திலேயும் நான்கு சாதிகள் உண்டெனப் பதிவாகிறது:

"வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பாலொருவன் அவன் கட் படுமே"

(புறநானூறு 183).

வேற்றுமை தெரிந்த சாதிகள் நான்கு என்கிறார். எனினும் இவர் காலத்தில்

கல்வி என்பது எல்லோருக்கும் பொது என்பது தெரிகிறது. இல்லாவிடில்

கீழ் சாதிக்காரன் படித்தவனாக இருந்தால் மேல் சாதிக்காரர்களும் அவரை

மதிப்பர் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. நிற்க.

நம்மாழ்வார் சற்றேறக் குறைய இதே கருத்தை வேறு விதமாகக் கூறுகிறார்.

கல்விக்குப் பதில் பக்தியை வைத்துக் கொள்ளச் சொல்கிறார். அதாவது

எந்த நலனுமில்லாத சண்டாளனுக்கும், சண்டாளனாக ஒருவன் இருப்பினும்

அவன் வலக்கரத்தில் சக்கரம் ஏந்தும் மணிவண்ணன் அடியார் என்று

தெரிந்தால் அவர்தம் அடியார் எமக்கு கடவுள் ஆவார் என்று பெரிய வார்த்தை

போடுகிறார். எளிய வாக்கியங்களில் சொல்வதானால், திருமாலின் அடியார்கட்குள்

சாதி வித்தியாசம் கிடையாது என்பதாகும். ஒரு உயர்வு சிறப்பு அணியாக (?)

ஒரு ஒப்புமை தந்து இக்கருத்தை வைக்கிறார்.

இதை அதிக வியாக்கியானங்கள் இல்லாமல் விளங்கச் சொல்வதானால்,

சாதிகள் காலம், காலமாக இருந்து கொண்டேதான் இருக்கும், ஆனால்

பகுத்தாயக் கூடிய ஒருவனுக்கு இச்சமூக பாகுபாடுகள் அதிகம் பொருள்

தருவதில்லை என்பதாகும்.

ஆழ்வார்களின் வாக்கை வேதவாக்காக மதித்து நடந்தவர் ஸ்ரீராமானுஜர்.

நம்மாழ்வாரின் இவ்வாக்கை உறுதிப்படுத்தும் வண்ணம் கர்னாடக விஜயத்தின்

போது திருநாராயணபுரம் என்றொரு ஊரை உருவாக்கி அங்கு பஞ்சமர்களான

சண்டாளர்களை முதல் தீர்த்தக்காரர் ஆக்கி பெருமை கொண்டார்

எம்பெருமானார்.

சாதி ஏற்றத்தாழ்வை சாடிய தொண்டர் அடிப்பொடியின் பாசுரங்களை முன்பு

கண்டோம்:

மடல் 9 : சாதிகள் இல்லையடி பாப்பா!

மடல் 26: படைப்பிலக்கியமும், சுதந்திரமும்

இவர்களுக்கு காலத்தால் பிற்பட்ட இராமானுசர், பெரிய கோயிலின் (திருவரங்கம்)

அதிகாரியாக இருந்து கொண்டு, இதை தெய்வ வாக்காக எண்ணி

செயல்படுத்திக் காட்டியது இன்னும் பெருமை.

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

என்றார் எம் காலத்து பாரதி. பக்தர்களானாலும், பகுத்தறிவாதிகளானாலும்

அன்பு நிறைய உடையவர்கள் மோலோர் என்பது பாரதியின் துணிபு. அன்பு

நிறைந்த உள்ளத்தில் பாகுபாடு தெரியாது என்பது நடைமுறை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செத்ததன் வயிற்றில் சின்னது பிறந்தால்?

உலகையும், அதில் குடியிருக்கும் உயிரையும் நினைத்து வியக்க ஒரு ஜென்மம் போதுமோ?

எத்தனை மனிதர்கள், அதில்தான் எத்தனை வகைகள். சில குழந்தைகள் பிறந்த சில வருடங்களில் பாகவதர் ஆலாபனை தொடங்கும் போதே பாடலின் ராகத்தைச் சொல்லி விடுகின்றன. பலருக்கு பலமுறை கேட்டாலும் அதில் சுவை வருவதில்லை. சுட்டுப் போட்டாலும் சிலருக்கு கணக்கு வருவதில்லை, ஈரோடு இராமானுசனுக்கோ கணித சூத்திரங்கள் கார் மழை போல் காத்திருந்து கொட்டுகின்றன. சிலருக்கு பிறவியிலேயே நல்ல சாந்தமும், குணமும் வந்து விடுகின்றன. சிலருக்கு கடுகு தெரிப்பது போல் பட், பட்டென கோபம் முன்னே வந்து விடுகிறது. துர்வாசருக்கு கோபமே வருவதில்லை என்கிறார் கிருபானந்த வாரியார். ஏனெனில் அது அவரை விட்டு போனால்தானே மீண்டும் வருவதற்கு என்கிறார் விளக்கமாக! இரமண மகரிஷிக்கோ உண்ணும் சோறும், பருகும் நீரும் ஈசனாய் அமைந்துவிட மாதக் கணக்கில் சமாதியில் இருந்து விடுகிறார். எத்தனை வகைகள்!

இவையெல்லாம் வேறு பட்டாலும், அதன் அடிப்படையான அமைப்பென்னவோ ஒன்றாய்தான் உள்ளது. மாட்டின் நிறம் வேறு பட்டாலும் பசும்பால் என்னவோ வெள்ளையாய்தான் உள்ளது. சண்டை போடுபவர்கள் வேறு, வேறாய் இருந்தாலும் அடித்துச் சிதறும் இரத்தம் ஒன்றாய்தான் உள்ளது. உணவின் சுவையும், உணவின் வகையும் நாட்டுக்கு நாடு வேறு பட்டாலும் உணவு தரும் இன்பம் ஒன்றாய்தான் உள்ளது. அடிப்படை காரணியான டி.என்.ஏ மூலக்கூறு உயிர்கள் அனைத்திலும் 99% மேலாக ஒன்றாய்தான் உள்ளது. ஒரு சதவிகித வேறுபாட்டிறிக்கே இத்தனை வகைகள்!

ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த மெய்யியல் ஞானிகள் முக்கோல் ஏந்தி உலா வந்தனர். இவர்களை "முக்கோல் பகவர்கள்" என்று சங்கத் தமிழ் சுட்டுகிறது.

முக்கோல் எதற்கு?

ஒரு கோல் நாம் நிதம் காணும் உடல் மற்றும் மாறுபடும் பருப்பொருளுக்கு. இதை "அசித்" என்று சொல்வார்கள். இது எப்போதும் விகாரமடைந்து கொண்டே இருக்கக் கூடியது. இதற்கு இயற்பியல் பரிணாமம் உண்டு. அடுத்த கோல், உடலை ஆட்டுவிக்கும் உயிர்ச் சக்திக்கு. இதை "சித்" என்று சொல்வர். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உலகிற்கு உண்டு" என்று வள்ளுவன் சொல்வான். சித் இல்லையெனில் அசித்திற்கு ஓட்டம் இல்லை. வெளியே போன பிராணன் உள்ளே வரவில்லையெனில் உடல் தன் மதிப்பை இழந்து விடுகிறது. பெற்ற பட்டங்கள், தகுதிகள் உறவின் மேன்மைகள் எல்லாம் போய் "பிணம்" என்ற பொதுப் பெயர் வந்துவிடுகிறது. யாரும் பிணத்தை டாக்டர் பட்டம் போட்டுக் கூப்பிடுவது இல்லை. இறந்த உடலை வைத்துக் கொண்டு அப்பா, தாய் என்று உறவு கொண்டாட முடிவதில்லை.

உடல் மண்ணுக்குள் போய் மீண்டும் ஒரு உயிராய் வந்து சேர்கிறது. இலைகள் உதிர்ந்து மக்கி, மண்ணாகி விதைக்கு உரமாகிறது. மண்ணை உழுது, உண்டு மண்புழு வாழ்கிறது. புழுவை உண்டு பறவை பறக்கிறது. பறவை வேடன் கை உணவாகிறது.

"ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழல்கிறது" ஒரு சக்தி!

இச்சக்திக்கு ஒரு கோல். ஆக மூன்று கோல்கள் - இந்த பகவர்களுக்கு.

உண்ணும் உணவைப் பொறுத்து குணங்கள் மாறுபடுகின்றன. செய்யும் தொழிலை வைத்து குணங்கள் மாறுபடுகின்றன. கர்ம, காரியங்கள் உடலின் நிலைப்பாட்டை தீர்மானிக்- கின்றன. உயிர் உடலோடு ஒட்டுவதில்லையெனினும் உடல் உபாதையுறும் போது வாடுவது உயிராகத்தான் இருக்கிறது. இப்படி உடல் பல்வேறு பிறவிகளை எடுத்து, அப்போது செய்யும் கர்மங்களுக்கேற்றவாறு விகாரமடைந்து, மீண்டும் பிறந்து ஒரு சுழற்சியில் உள்ளது. அத்தனை பிறவியிலும் உயிர் கூடவே அலைக்கழிகிறது. இத்தனை அலைச்சலுக்கும் ஆதாரமாக உள்ள உட்சக்தி தாமரை இலைத் தண்ணீர் போல் கலங்காமல் உள்ளே இருந்து கொண்டு உலகை ஆட்டுவித்துக் கொண்டுள்ளது.

இதை மெய்யியல் வார்த்தைகளில் சொல்வதானால், காக்கும் கடவுள் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சித், அசித் இவைகளுக்கு ஆதாரமாகி, அந்தர்யாமியாக உள்ளிருந்து ஆட்டுவித்து, சித், அசித் படும் அவஸ்தைகளில் பங்கேற்காமல் நிற்கின்றது.

அதாவது, உயிர் உடலை ஊடகமாக வைத்து செயல்படுகிறது. இறைவன் உயிர் (சித்), உடல் (அசித்) இரண்டையும் வைத்து செயல் படுகிறான்.

நம்மாழ்வார் பிறந்த பொழுதிலிருந்து இறைத்தியானத்தில் மெய் மறந்து 16 வருடங்கள் கழித்து விடுகிறார். இவர் புகழ் கேட்டு மதுரகவி என்னும் பெரும் அறிஞர் திருக்குருகூர் வந்து சேர்கிறார். மெதுவாக நம்மாழ்வார் முன் வந்து,

"செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"

என்று கேட்கிறார். அது நாள் வரை வாய் திறவாத பாராங்குசன், அன்று திருவாய் அருளி,

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்கிறார்.

இந்திய மெய்யியல் சரித்திரத்தில் நீங்காத இடம்பெறும் இருவரின் உறவு இந்தகைய சம்பாஷனையில் தொடங்குகிறது.

இங்கு செத்தது என்பது உடலைக் குறிக்கிறது. உடல் வாழும் போதே கூட செத்துத்தான் உள்ளது. மயிர், நகம் இவை செத்தவை. மேலும் உடல் செத்து, செத்து உயிராய் மலர்வதால் அதை "செத்தது" என்கிறார். சின்னது என்பது "அணுவுக்குள், அணுவாய்" இருக்கும் உயிரைக் குறிக்கும். இவ்வுயிர், செத்தான உடலுக்குள் போன பின் அது செய்யும் கர்ம, காரியங்களில் பங்கேற்று வாழும் என்பதை

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்கிறார்.

"ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்

ஆழி வண்ணம் என் அம்மான்"

என்றும் சொல்கிறார் சடகோபன். அதாவது இச்சுழற்சியில் படைத்தனும் உழல்கின்றான் என்கிறார். இருந்தாலும் ஒரு சின்ன வித்தியாசத்துடன். உயிர்களான ஜீவாத்துமா (அதாவது ஜீவனில் உறைகின்ற ஆத்மா) பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பிறவிகளை எடுக்கின்றன. (இங்கு பாவம், புண்ணியம் என்பது செய்யும் காரியங்கள் ஆகும்). இன்ப, துன்பங்களை அனுபவிக்கின்றன. ஆயின் இறைவன் இச்சுகங்களிலும், துன்பங்களிலும் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதை ஒரு உதாரணம் கொண்டு பார்ப்போம்.

சிறைச் சாலையில் திருடனும் உள்ளான், சிறை நிர்வாகியும் உள்ளான். திருடன், தான் செய்த கர்ம, காரியங்களுக்காக தண்டனை அனுபவிக்க சிறைக்கு வருகிறான். ஆனால் சிறை அதிகாரி தன் இஷ்டத்தில், கடமை கருதி சிறையில் உள்ளார். இது போல்தான், இறைவனும், கடமை கருதி, தன் விருப்பத்தால் உடல், உயிர் இவையுள் உறைகிறான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்கள் அவனை அணுகும் என்று சொல்வதற்கில்லை.

இந்த உறவு முறையை விளக்கத்தான் பண்டைத் தமிழர்கள் முக்கோல் பகவர்களாக தமிழ் மண்ணில் வலம் வந்தனர். சித், அசித், ஈஸ்வரன் இவை மூன்றும் பிரபஞ்சத்தில் நிலையாக உள்ளவை. ஒன்றின் தேவை ஒன்றுக்கு உண்டு. ஒன்றில் ஒன்று கலந்து வாழும். ஆயினும், அவைகளுக்குள் உறவு, தாமரை இலைத் தண்ணீர் போன்ற உறவுதான். Independant but interactive என்கிறது வைணவம்.

யாவையும் எவரும் தானாய்

அவரவர் சமயம் தோறும்

தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்

சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;

ஆவி சேர் உயிரின் உள்ளால்

ஆதும் ஓர் பற்று இலாத

பாவனை அதனைக் கூடில்

அவனையும் கூடலாமே

(திருவாய்மொழி 3.4.10)

யாவையும் (அறிவில் பொருள்கள்), எவரும் (அறிவுடைப் பொருள்) தானாக உள்ளான். அவையவை/அவரவர் மாறும் போது (சமயம்=விகாரம், அவஸ்தை) தான் மாறுவதில்லை. நிலைத்து உள்ளான். ஐம்புலன்களால் அறியப்பட முடியாதவன். ஞான (உணர்வு) சொரூபன். ஆவிசேர் உயிர் என்பது உடலின் உயிர் என்று பொருள். ஆவியைத் தாங்குவதால் ஆகுபெயராகி வருகிறது. எப்படி உயிர் என்பது உடலில் வாழ்ந்தாலும் பற்று இல்லாமல் (ஒட்டாமல்) வாழ்கிறதோ அதுபோல், அந்தர்யாமியான இறைவன் இவையிரண்டிலும் ஒட்டிக் கொள்ளாமல் (அதாவது தனி மனித ஆசா, பாசங்களில் ஒட்டித் தவிக்காமல்) இருக்கிறான் என்கிறார் நம்மாழ்வார். இந்த பாவத்தை அறிந்து கொண்டால் நாமும் இறைவனுடன் கூடலாம் என்கிறார்.

"பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே" என்பதை மூன்று விதமாக வியாக்கியானம் செய்கிறார்கள்:

1. இறைவன் மேல் பக்தி உண்டானால் அவனைக் கூடலாம். இங்கு பக்தி என்பது இட்டுச் செல்லும் ஊடகமாக இருப்பதுடன் அதுவே பலனாகவும் அமைகிறது.

2. ஆத்மாவோடு சேர்ந்திருக்கின்ற பரமாத்வாவின் தன்மையை உணர்வதால் அவனைக் கூடலாம். அதாவது, பிரிக்கும் புறக் காரணிகளை ஒதுக்கிவிட்டு "தானாக" அமையும் அகக்காரணியை நோக்குவதால் வரும் தெளிவால் கூடுதல்.

3. உயிர் பிரியும் தருவாயில் இவ்வுண்மையை உணர்வதால் அவனுடன் கூடலாம் என்பது ஒரு கருத்து. அதாவது பற்றுவதற்கு வேறு ஒன்றுமில்லாத போதில் அவனே கதி என்று சரண் அடைதல்.

இப்படி இத்தனை வியாக்கியானங்களையும் தன்னுள் அடக்கிய கேள்விதான் மதுரகவி நம்மாழ்வாரிடம் கேட்ட கேள்வி:

"செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்

எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"

தொடரும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.