Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தளபதியை எதிர்பார்த்து ஏமாந்த இராணுவத்தினர்! - கடும் மழையால் வடக்கிற்கான பயணம் ரத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹகின் வடமாகாணத்திற்கான இன்றைய  விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத் தளபதி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இராணுவத் தளபதி இரணைமடு வரை வந்ததாகவும், சீரற்ற காலநிலை காரணமாக விஜயத்தை இரத்து செய்ததாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹகின் வடமாகாணத்திற்கான இன்றைய விஜயம் சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய இராணுவத் தளபதி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இராணுவத் தளபதி இரணைமடு வரை வந்ததாகவும், சீரற்ற காலநிலை காரணமாக விஜயத்தை இரத்து செய்ததாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

   

இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், நல்லூர் ஆகிய பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்கின் முல்லைத்தீவுக்கான இன்றைய பயணமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவரின் வருகைக்காக நேற்று புதுக்குடியிருப்பு பிரதேசம் எங்கும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன. விடுதலைப்புலிகளை தேற்கடித்தபின் புதுக்குடியிருப்பு மந்துவிலில் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட இராணுவ வெற்றி நினைவு தூபி வளாகத்தில் தான் மேற்படி சந்திப்பு நடைபெற இருந்தது. அதற்காக இராணுவத்தினர் இரவுபகலாக மேடைகள் அமைத்து அலங்காரம் செய்திருந்தனர்.

எனினும் காலையில் ஏற்பட்ட தொடர் மழையினால் குறித்த வளாகம் வெள்ளத்தில் முழ்கியது. அதனால் நிகழ்வு தடைப்பட்டது. குறித்த வளாகத்தில் விடுதலைப்புலிகளின் போர் தளபாடங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

nallur-army-011215-seithy%20(1).jpg

 

 

nallur-army-011215-seithy%20(2).jpg

 

 

nallur-army-011215-seithy%20(3).jpg

 

 

nallur-army-011215-seithy%20(4).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=146042&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்ச உடன சிங்கள இராணுவம் வரும்.. நாங்க கண்ட யாழ்ப்பாணம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

நினைச்ச உடன சிங்கள இராணுவம் வரும்.. நாங்க கண்ட யாழ்ப்பாணம். :rolleyes:

அவையள் அங்க தானே இருக்கினம் ....பிறகு என்ன வாரது....அவையள் மக்களோடு மக்களாக இருக்கினம்  ....ஆயுதத்தை மெளனித்து வைச்சிருப்பினம்....தேவை ஏற்படின் ஆயுதத்தை சத்தம் போடவைப்பினம்.... 

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.