Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சைவம் தரும் வாழ்வியல் அறிவுரைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''திருமந்திரம்'' ஒரு பார்வை

கிருஷ்ணன், சிங்கப்பூர்

மகத்துவங்களின் தொகுப்பு மனிதன்.தெய்வ நிலைக்கு மனிதன் உயரலாம். ஆயினும் அதனை உணர்ந்தோர் சிலரே. உணராதோர் தாம் நம்மில் பலரே. உணரத் தலைப்படுதல் ஆன்மீகம். உணர்ந்ததைக் கடைபிடித்தால் நன்னெறி. உறைத்தலோ இன்றி மனிதனை நகர்த்தும் லெளகீகத்தில்,உழன்று கொண்டே இருப்பதை அனுபவித்து கிடப்பது துர்கர்மம். ஆனால், உணரத் தலைப்படுதல் என்பது நமக்கு ஞான வீதிக்கு வழிசொல்லும்.... வழி செல்லும் பிரம்ம ஞானத்தின் கதவுகள் திறக்கும். மனிதனின் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாய் விளங்கும் சாஸ்திர உண்மைகள், நெறிகள், நமது தெய்வத் திருப்பாடல்களில் குவிந்து கிடக்கின்றன். அவற்றை வெளிக் கொணர்ந்து மக்கள் மத்தியில் நிலைநிறுத்தும் முயற்சிகளே தெய்வப் பணியாகும்.

பொதுவில் சித்த புருஷர்களின் பாடல்களில் மறை பொருள் அதிகம் இருக்கும். அவ்வளவு சுலபமாக விளங்கிக் கொள்ள இயலாது. மூலிகை இரகசியங்களை, சித்திகளுக்கான வழிமுறைகளை வார்த்தைகளுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவார்கள். ஆனால், திருமூலர் மாறுபட்டவர். இவரின் திருமந்திரம் தமிழுக்கு அணி செய்யும் நூல்களில் முதன்மையாக இருக்கிறது.''அன்பே சிவம்'' என்பது எளிய, அனைவரும் உணர்ந்த, ஒரு தத்துவம். இதனை முதலில் உணர்த்தினவர் திருமூலர். வேளாளர் மரபில் வந்தவராக கருதப்படும் திருமூலரின் இயற்பெயர் சுந்தரன் என்பதாக தெரிகிறது. நந்தியிடம் உபதேசம் பெற்றவர்.

ஆன்மீகம் இன்றைய கால வேகத்திற்கு தமிழர்கள் ஈடுகொடுக்க முனைந்து தெய்வத் தமிழ் பக்தி இலக்கியங்களில் இளைப்பாறும் பழக்கத்தை இழந்து விட்டார்கள். இந்நிலையில் நாளைய சந்ததியின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. திருமந்திரம், நன்னெறி நூலாக மட்டும் அமையவில்லை. இன்றைய காலட்டத்திற்கு ஏற்ற விஞ்ஞான கண்ணோட்டமும் அதில் உண்டு. கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை, வாய்மை போன்ற நெறிகளை திருமந்திரம் கொண்டிருக்கும் வேளையில் அதிலுள்ள 2-வது மந்திரத்தை எடுத்துக்கொண்டால் 'கரு உற்பத்தி' பற்றிய விஞ்ஞானப் பூர்வமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது. திருமுறைகளில் திருமந்திரம் 10வது திருமுறை. முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தர் எழுதிய தேவாரங்களாகும். அடுத்து மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசர் எழுதிய தேவாரங்களாகும். 7வது திருமுறைகள் சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய தேவாரமாகும்.

8வது மாணிக்க வாசகர் எழுதிய திருவாசகம், திருக்கோவையார் ஆகியவை. 9வது திருமுறையாக திருவிசைப்பா, திருப்பல்லாண்டு குறிப்பிடப்படுகிறது. நம்பியாண்டார் நம்பி போன்றோர் எழுதியவை. 12வது திருமுறை என்பது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம். சிவனடியார்களின் புகழ் மணக்கும் புராணம்.

வருடம் ஒரு பாடலாக திருமந்திரத்தை திருமூலர் எழுதினார் என்று குறிப்பிடப்படுகிறது. அவர் 3000 பாடல்களை 3000 ஆண்டுகள் எப்படி எழுதியிருக்க முடியும் எண்ணத்தோன்றும். திருமந்திரத்தை முடிப்பதற்காக யோக நிலையில் இருந்து எழுதியதாகக் கூறுவார்கள். 9 தந்திரங்களாக திருமந்திரம் பிரிந்திருக்கிறது. மொத்தம் 232 அதிகாரங்களைக் கொண்டது. அந்த வகையில் நமது திருமுறைகளிலேயே மிகச் சிறந்த பக்தி இலக்கியமாகவும் மந்திரமாகவும் விளங்குகிறது. நாம் அல்லாததை எல்லாம் நாமே என்று நினைக்கிறோம். நம்முடையது அல்லாததை எல்லாம் நம்முடையது என்று நினைக்கிறோம். இங்கு ''நாம்'' என்பது என்ன? நம்முடையது எது? அதுதான் உண்மையறியும் சிந்தனை. அதுதான் ஞானம். நாம் அல்லாததை நாம் என்று நினைப்பதையும், நம்முடையது அல்லாததை நம்முடையது என்று கருதுவதையும் அர்ப்பணம் செய்துவிடவேண்டும். அதற்கான பயிற்சி நம்மிடம் இல்லை. முயற்சி இல்லை. இந்நிலையில் ஞானம் எங்கிருந்து வரும்?

வேள்வி, சடங்கு, சாஸ்திரம், பூஜைகள் என்றெல்லாம் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். இவற்றை முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம்.'இதனை கிரியை என்பார்கள். ஒரு வகையில் நாம் ஞானத்தைப் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வெறுமனே சடங்குகளில் ஈடுபடுவதால் அந்த முயற்சி வெற்றி பெற்றுவிடாது. இதற்கு அப்பால் நமது காரியங்களை உணர்ந்து செயல்படுதல் வேண்டும். ஒரு பிரக்ஞை வேண்டும். பயிற்சி இல்லாமல் ஞானமில்லை. கிரியை என்பதும் அத்தகைய பயிற்சிதான். பொருளைக் கருதி அர்ப்பணம் செய்வதே கிரியை ஆகும்..

உடம்பு நம்முடையது அல்ல. இந்த உடம்பே நாம் என்று அர்த்தமல்ல. இந்த உடம்பு செயல்பட பல்வேறு சூழல்கள் தேவைப்படுகிறது. அவற்றை நமக்கு உருவாக்கித் தந்து நம்மை இயக்குகிறவன் இறைவன். அதனை இறைவன் செயல்படுத்துகிறான். உடம்பு நமக்கானது அல்ல. 'நான்' என்பது உண்மையல்ல. அப்படி நடப்பதாக நினைத்தால் அது அகங்காரம். இதனைத்தான் அர்ப்பணிக்க வேண்டும். இன்றைக்கு நம்மிடம் இருந்துவரும் சடங்கு சாஸ்திர முறைகள், வழிபாட்டு விதம் என்பதெல்லாம் வெறும் சடங்காகத் தோன்றுகிறது. இருந்தாலும் உட்பார்வையில் இதற்கெல்லாம் அர்த்தங்கள் உண்டு. புறப்பொருளை அர்ப்பணிப்பதோடு அகப்பொருளையும் அர்ப்பணிப்பதே இதன் உள்ளார்ந்த நோக்கமாகும். உடம்பு ஒரு புறப்பொருள். உயிர் ஓர் அகப்பொருள். புறத்தையும் அகத்தையும் தகுதியாக்குதலே அர்ப்பணம். நம்முடைய கடைசி அர்ப்பணம்தான் 'நான்' 'எனது' என்ற அகங்காரம். இதுவே முழு அறிவு. இது இறைவுணர்வுக்கு அடிப்படை. சைவ சித்தாந்தத்தில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அதாவது சரியை.கிரியை,யோகம்,ஞானம் ஆகியவைதான் மூலக்கூறுகள். சரியை என்ற ஒழுக்கத்தாலும் கிரியை என்ற அர்ப்பணத்தாலும் யோகம் என்பது பொருந்தி இருந்தாலும் ஞானம் என்ற அருளால் இறைவுணர்தலுக்கு சைவ சித்தாந்தம் வழி கோலுகிறது. அதாவது சரியையும்,கிரியையும் கொண்டுவந்த யோகத்தால் ஞானத்தை எட்ட முடிகிறது.

இதில்,முதல் மூன்றிலும் நமக்குப் பயிற்சி தேவைப்படுகிறது.இந்த பயிற்சிக்கு குருவாக இறைவனே முன் நிற்கிறார் என்பதுதான் சித்தாந்தம். இறைவன் ஒருவன் இருக்க - அவனை முன்னிட்டே பிற யாவும் உண்டு என்கிறது சித்தாந்தம். இறைவனைத் தவிர எதுவுமே இல்லை என்று சொல்வது வேதாந்தம்.

சைவ சித்தாந்தம் உலகியலோடு முரண்படாவண்ணம் திகழ்கிறது. பிறவியுற்று உலகியலில் வாழ்ந்து, கடந்து இறைவனை உணர்ந்து அடைதலே சைவ சித்தாந்தம். நாம் அன்றாடச் செயல்களை மாற்ற வேண்டும். அதற்கு மந்திரச் சொல் வேண்டும். அன்றாடச் செயல்கள் இன்பம், துன்பம் நிறைந்தது. ஆனால்,மந்திரச் செயல் அப்படியல்ல.மகிழ்வை மட்டுமே உணர்த்துகிறது.

அன்றாடம் செயல் மாற,மந்திர உபாடனைகளில் ஈடுபடுதலாகும். அன்றாட வினையாகி உலகியலில் இருந்து பிறகு வைதீக வினையாகி,ஆன்ம வினை,மார்க்க வினை,மந்திர வினை என்று மாற்றங்கள் பெறுகின்றன. கடைசியாக மந்திர வினைதான். மந்திர வினை என்பது உயிருக்கு வேண்டிய உபாந்தம், விருப்பு,வெறுப்பற்ற நிலை. இதனை அடைய மந்திர உபாடனை அவசியமாகிறது. அதனால் நமது வாழ்வியல் திருமந்திரம் அவசியமாகிறது..

மந்திரம் என்பதே சொல்லுக்குள் பொருளை சுருக்கி வைத்து அதனை உணரும்படி செய்தல் எனலாம். ஒரே எழுத்தில் அடக்கி வைத்தல். உதாரணமாக நமசிவாய, சிவாய நம என்பதெல்லாம் மந்திரச் சொற்களே. நமக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு, நமக்கும் பிறருக்கும் உள்ள தொடர்பு, நமக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு, நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றை பொருளுணர்வை ஏற்படுத்துகின்றது மந்திரம். உயிர்களுக்கு வேண்டிய அமைதி நிலையை உணர்த்தவல்ல மந்திரமாக நமக்கு அருளப்பட்டிருக்கிறது 10வது திருமுறையான திருமந்திரம்.

திருமந்திரத்தை நமக்கு தந்த திருமூலருக்கு அந்த ஆகமம் இறைவனால் அருளப்பட்டது. இறைவனாகப் பட்டவன் தேவிக்கு அதனைச் சொல்ல, தேவி அதனைத் தெய்வ முனிவர்களுக்குச் சொல்ல இந்த ஆகமம் உருவானது. இந்தியத் தத்துவத்திலுள்ள 24 நெறிகளையும் கடந்து உண்மை நிலையை உணர செய்ய தலைப் பட்டதே சைவ சித்தாந்தமாக விளங்குகிறது. சைவ நெறி பரப்பும் நெறி நூல்களில் திருமந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. தோத்திர நூல் மட்டுமல்ல சாஸ்திர விளக்கமும் அதில் உண்டு. வழிபாட்டின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் திருமூலர் இதன் வழி உணரச் செய்கிறார். தமிழர்களின் வழிபாட்டுக்கு உகந்த மந்திரம் கொண்டு தனித்தமிழ் தெய்வ இலக்கியமாகவும், வழிபாட்டு நெறியாகவும் விளங்குகிறது.

உயிர்கள் கேவல நிலையில் இருப்பது என்பது ஓர் அறியா நிலை. இந்த அறியா நிலையில் இருந்து மீளவேண்டும். அறியாததை அறிய வேண்டும். அறிந்தவன் பிறருக்கு அறிவிக்க வேண்டும். அப்போதுதான் அறியப்படும். திருமந்திரம் பொருளுணர்ந்து மக்கள் ஓதி உணரவேண்டும் என்றும், இளைய தலைமுறைக்கும் இது சென்றடைய வேண்டும் என்பதே நமது ஆவா.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைவ சித்தாந்த வழிகளில் திருமந்திரம் மனித வாழ்வியலுக்கு உதவக் கூடிய உயர் மனித நாகரியத்தை விழுமியங்களை பிறப்பிக்கக் கூடிய வழிவகைகளைக் காட்டுகிறது என்ற அடிப்படைக் கருத்தை மேலே பார்த்தோம்...எனி திருமந்திரம் பற்றிய விளக்கத்தை வாரம் ஒரு மந்திரமாகத் (கதை) தர உள்ளோம். படித்து உங்கள் உள்ளங்களையும் உங்கள் சார்ந்தோரையும் உயர் மனித விழுமியங்கள் படைப்போராக காப்போராக வழி நடத்தி மனித நாகரியத்தின் விருத்திக்கு வளர்ச்சிக்கும் பங்களியுங்கள்...!

திருமந்திரம் - 1

அறிவு முழுமை பெறுவது எப்போது?

சாந்தோக்ய உபநிடதம் ஓர் உண்மையை விளக்குகிறது :

சுவேதகேது ஓர் இளைஞன். வேதங்களைக் கற்றவன். தான் சராசரி மனிதரை விட அதிகம் கற்றுக்கொண்டு விட்டதாக நினைத்தான். அதனால் அகங்காரம் கொண்டான்.

ஆனால், அவனுடைய தந்தை அருணி, அவன் செருக்கு கொள்வதில் அர்த்தமில்லை; ஏனென்றால் அவன் அறிவு முழுமையானதல்ல என்று அறிவுறுத்தினார். பரம்பொருளை முழுமையாக அறிய முடியாது; அவ்வாறு அறிந்து விட்டால்தான் அறிவு நிறைவு பெற்றதாகும் என்றும் விளக்கினார்.

‘‘பரம்பொருளை ஏன் முழுமையாக அறிய முடியாது?’’ சுவேதகேது கேட்டான்.

‘‘எங்கும் நிறைந்தது பரம்பொருள். அதனால் அதனை அத்தனை எளிதாக அறிந்துவிட முடியாது. ஏதோ ஓரிடத்தில் அல்லது பிறிதோர் இடத்தில் மட்டும் பரம்பொருள் இருக்குமானால் அதனைத் தேடிக் கண்டுபிடித்து விட முடியும். ஆனால் எல்லா இடங்களிலும் பரவி இருப்பதால், ஓரிடத்தில் கண்டுபிடித்து விட்டு, இறுமாந்து போக முடியாது. அதனால் அறிவும்முழுமையுறாது’’ என்று பதிலளித்தார் அருணி.

இதை ஓர் உதாரணம் மூலமாகவும் விளக்கினார். ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் உப்பை இட்டு, கலக்கினார். அந்தப் பாத்திரத்தை மகனிடம் கொடுத்து, மேல் பகுதியிலிருந்து சிறிது எடுத்துக் குடிக்கச் சொன்னார். குடித்தவன் ‘உப்பாக இருக்கிறது’ என்றான். நடுப்பகுதி, அடிப்பகுதியிலிருந்தும் எடுத்துக் குடித்த அவன், ‘எந்தப் பகுதியிலிருந்து எடுத்து சுவைத்தாலும் உப்பாகத்தான் இருக்கிறது’ என்றான்.

உப்பு, நீரில் எங்கும் கலந்திருப்பது போலதான் சீவனும் சிவத்தோடு என்றும், எப்போதும் ஒன்றாய் இருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், அந்தப் பரம்பொருளை அறியவும் கூடும்; அறிவு முழுமை பெறவும் கூடும். இயலுமா உன்னால்?’’ என்று கேட்டார் அருணி.

புரிந்து கொண்ட மகன், தன் அறிவு மேம்பாட்டுக்கான முயற்சிகளில் இறங்கினான்.

ஆணவம், கன்மம், மாயை போன்றவைகளால் வஞ்சிக்கப்பட்டு, சீவன் என்று பெயர் பெற்று, பிறவிச் சூழலில் உழன்று, பின்னர் படிப்படியாகப் பக்குவம் பெற்று மலங்களை நீக்கி, தனித்து நில்லாது சிவத்துடன் ஒன்றாகித் தன் முனைப்பை இழப்பதுதான் சீவனின் குறிக்கோளாக இருக்கவேண்டும் என்கிறார் திருமூலர்.

கடல் நீரைத் தேக்கி வைக்கிறார்கள். சூரியனின் வெப்பத்தால் நீர் ஆவியாகி விட, உப்பு மட்டும் தங்குகிறது. ஆனால் பெருமழை வருமானால் அந்த மழை நீர் உப்பைக் கரைத்து, பழையபடி அதன் உரு தெரியாதபடி ஆக்கி விடுகிறது. சீவனும் உப்பு போலதான். சிவனருளால் உப்பாகத் தெரிவதும், அவனருளாளே அவனுக்குள்ளேயே கரைந்துபோக வேண்டியதும்தான் சீவனின் குறிக்கோள்.

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடி அது ஒன்றாகுமாறு போல் செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.

இரண்டு அன்னங்கள்

ஜொனாத்தன் என்பது ஒரு பறவை. சீகல் இனத்தைச் சேர்ந்தது. இந்தப் பறவைகள், கடற்கரைப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வாழும். இந்த பறவைகள் சாதாரணமாக உயரப் பறக்காது. தேவையுமில்லை. கரையிலிருந்து சற்று பறந்து, வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு திரும்பிவிடும். ஏதாவது ஒரு பறவை உயரப் பறந்து சென்றால், மற்ற பறவைகள் ஏற்றுக்கொள்ளாது; உயரப் பறந்த பறவையை கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளாது.

ஜொனாத்தன் சற்று மாறுபட்ட பறவை. அது, மற்ற பறவைகளைப் போல வாழ விரும்பவில்லை. செயற்கரிய சாதனை ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அதற்குத் தோன்றியது. கடவுள் கொடுத்த இறக்கைகளைப் பயன்படுத்தி, உயரப் பறக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாகியது. எந்த ஒரு சீகல்பறவையும் அடையாத உயரத்திற்குப் பறந்தது. மேலும், கீழும் பறந்தது. தன் உடலைத் தீவிரமாக வாட்டிக்கொண்டது. ஒருநாள் சூறாவளிக் காற்று அடித்த வேகத்தில், கடலில் போய் விழுந்தது. ஆனாலும் தன் கொள்கையை விடவில்லை. வானுயரம் பறந்து சென்று... கீழே, கடற்கரையில் இரை தேடி, உண்டு வாழ்ந்து வரும் பறவைகளைப் பார்த்தது. கடவுள் கொடுத்த சுதந்திர உணர்வை உண்மையாக, பரிபூர்ணமாக அனுபவிக்கத் தெரியாமல், தடைப்பட்டு இருப்பதைப் பார்த்து அனுதாபப்பட்டது. ஆனால் என்ன செய்வது? மற்ற பறவைகள் அதன் மீது பொறாமை கொண்டன. கூட்டத்திலிருந்து புறக்கணித்து விட்டன. அதிலே ஜொனாத்தனுக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை.. காற்றோடும், ஆகாயத்துடனும் நட்புரிமைக் கொண்டாடும் அளவுக்கு கொடிகட்டிப் பறக்கின்றதே! அதில்தான் என்ன இன்பம்! தனிமையில் கிடைக்கும் நிறைவு, கூட்டத்தில் இல்லை என்பதை ஜொனாத்தன் தெளிவாகப் புரிந்து கொண்டது.

இவ்வாறு பல நாட்கள், வாரங்கள் கழிந்தன. கூட்டத்தில் இருந்த இளம்பறவைகள், ஜொனாத்தன் உயரப் பறந்து, சாதனை புரிந்து வருவதைப் பார்த்தன. ஜொனாத்தனைப் பின்தொடர விரும்பின. ஜொனாத்தன் அவைகளுக்கு குரு ஆயிற்று. அப்போது அது சொன்னது; ‘‘நீங்கள் நடத்தி வரும் வாழ்க்கையைத் தவிர வேறு ஒன்று உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த அளவுக்கு பறக்க முடியும் என்பதும், அவ்வாறு உயர்ந்து செல்வதுதான் நமது குறிக்கோளாக இருக்க முடியும் என்பதும், என் உள்ளத்தில் படிந்த உண்மைகள். பின்னர் இவ்வாறு சாதித்து நிறைவு பெறலாம் என்றும் தெரிந்து கொண்டேன். அதேபோல்தான் நீங்களும், உயரச் செல்வதுதான் உங்கள் தர்மம் என்று தெரிந்து கொண்டீர்கள். வாருங்கள் நாமெல்லோரும் இதுவரை ஒருவரும் எட்டிப் பிடிக்காத உயரத்திற்குச் செல்வோம்.’’ _ இது ‘ஜொனாத்தன் லிவிங்ஸ்டோன் ஸீகல்’ என்ற ஆங்கில நாவலின் சுருக்கம்.

முதலில் மற்ற பறவைகளைப் போல் உண்டும், உறங்கியும் சிலகாலம் வாழ்ந்த ஜொனாத்தன், பிறகு தன்னிலை விளக்கம் பெறுகிறது. தனக்கு கிடைத்த ஆற்றல்களைப் பயன்படுத்தி... தான் உயர்வுபெற வேண்டும் என்று உணர்ந்து கொள்கிறது.

பக்குவம் அடைந்து, இறைவன் திருவடிகளை நாடி அடைய வேண்டியது ஆன்மாவின் குறிக்கோளாகும். அறியாமையில் அழிந்து, தன்னை உடல் என்று கருதி, உலகத்தோடு இணைந்து, பிறவிப் பெருங்கடலை நீந்தி, கரைசேரத்தெரியாமல் தவிக்கின்றது. இறைவனுடைய திருவருளை உணர்ந்து, தன்னை மாற்றிக்கொள்கிறது.

இதே நிலையை இரண்டு அன்னங்கள் மூலமாகத் திருமூலர் விளக்குகிறார்.

‘‘இரண்டு அன்னங்கள் இணைபிரியாமல் ஒன்றையன்று நேசித்துக் கொண்டு ஆற்று நீரில் வாழ்கின்றன. ஒன்று சீவன் மற்றொன்று சிவன். சீவனாகிய அன்னம், ஆற்று நீரில் அங்கும் இங்கும் சென்று, இரையைக் கவர்ந்து உண்கிறது. சிவன் என்கிற அன்னம் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றது. பாதுகாப்பாக இருக்கிறது. ஒருநாள், கலக்கத்திலிருந்து தெளிந்து, இரையைத் தேடி, வாழ்க்கையை முடித்துக் கொள்வதை விட, ஒரு மேலான இடத்தையும், இன்பத்தையும் சாட்சியாகிய சிவ அன்னம் கொடுக்கும் ஆற்றலுள்ளது என அறிந்து அதனை திருவருள் துணையுடன் அடைகிறது.’’

அன்ன மிரண்டுள ஆற்றங்கரையினில் துன்னியிரண்டுந் துணைப் பிரியாதன்னத் தன்னிலை யன்றை தனியன்ற தென்றக்கால் பின் மடவன்னம் பேறணுகாதே

(திருமந்திரம் தொடர்ந்து ஒலிக்கும்.....................)

திருமந்திரம்..என்ற இணையப்பதிவின் உதவியோடு...

Edited by nedukkalapoovan

சைவம் உண்மையில் ஆரோக்கியமானதுதான். கீரை இருக்கிறதே, கீரை.. அதை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது. உருளைக் கிழங்கு சாப்பிட்டுங்கள். புரதச் சத்து அதில் அதிகம். இப்படி சைவத்தின் மகிமைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைவம் உண்மையில் ஆரோக்கியமானதுதான். கீரை இருக்கிறதே, கீரை.. அதை தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வைக்கு நல்லது. உருளைக் கிழங்கு சாப்பிட்டுங்கள். புரதச் சத்து அதில் அதிகம். இப்படி சைவத்தின் மகிமைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

கீரைல கண்பார்வை...உருளைக்கிழங்கில புரதம்...ரெம்ப அடிப்படை விசயங்களை ஆண்டு 2 ல படிக்கிறதுகள ஞாபகம் வைச்சிருக்கீங்க என்று தெரியுது..! யாழ் களம் இப்படியான அரிவாளர் களை கொண்டிருப்பது பாக்கியமோ பாக்கியம். :D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.