Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றன்பின் ஒன்றாக நால்வரை மோதி பலிகொண்ட வாகனம் நடத்துனருடன் சேர்த்து தீயிட்டு எரிப்பு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; சம்மாந்துறையில் பதற்றம்

[Tuesday December 12 2006 09:18:26 PM GMT] [virakesari.lk]

சம்மாந்துறை பகுதியில் வாகனம் ஒன்று அடுத்தடுத்து மோதியதில் நால்வர் பலியானதைத்தொடர்ந்து அவ்வாகனத்தின் நடத்துநர் வாகனத்திற்குள்வைத்து எரிக்கப்பட்டதனால் அப்பகுதியில் நேற்றிரவு பெரும்பதற்றம் நிலவியது. கல்முனையிலிருந்து காரைதீவு சந்தியூடாக அம்பாறைநோக்கி வந்த கெண்டர் ரக வாகனமே பாதையில் நின்றிருந்த நால்வரை அடுத்தடுத்து மோதியுள்ளது. இதில் மூவர் ஸ்தலத்திலேயே உயிர் இழந்ததோடு மேலும்ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பந்தப்பட்ட கெண்டர் வாகனம் ஊர்மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு எரிக்கப்பட்டதுடன் அதன் நடத்துநர் தீக்குள் தள்ளப்பட்டதில் கருகி உயிர் இழந்துள்ளார். அத்துடன் வாகனத்தின் சாரதி பிரதேச வாசிகளால் பிடிக்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அங்கே ஏற்பட்ட களேபர நிலைமையை தடுப்பதற்காக படையினர் வானத்தைநோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவங்கள் 8.20 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே ஏற்பட்ட களேபர நிலைமையை தடுப்பதற்காக படையினர் வானத்தைநோக்கி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவங்கள் 8.20 மணிக்கும் 9.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் வானத்தில் இருந்தார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் வாகனத்தில் இருந்தது பற்றி ஏதும் தெரியவில்லை கந்தப்பு சார். இணையத்தில் தேடி பார்த்தேன்

வானொலி செய்திகளில் கேட்டு பார்க்குறன்

Kruppi Madam, kanthappu said VAANAM (SKY) for joke not vaakanam. Don't waste your time.

Any way this is a bad situation, as people become this rude by killing a person like this. Those who responsible also need be arrested. But definitely they must be the village THATHA's. So that won't happen. Previously killed 4 must be Muslims, but don't know about the person who burnt and killed. Also they didn’t kill the driver?

  • கருத்துக்கள உறவுகள்

வாகன விபத்தினால் அம்பாறையில் பதட்டம்

[வியாழக்கிழமை, 14 டிசெம்பர் 2006, 01:44 ஈழம்] [காவலூர் கவிதன்]

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை – மாவடிப்பள்ளி பகுதி, கல்முனை வீதியில் நிதானமின்றி லொறியொன்றை ஓட்டிச்சென்ற சிங்கள சாரதி, இரு முஸ்லிம் பொதுமக்களை மோதியதால் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

சம்பவத்தினால் பதட்டமடைந்த சாரதி, வாகனத்தை நிறுத்தாது தப்பிச்செல்ல முயன்றபோது, மேலும் இரு முஸ்லிம் பொதுமக்கள் வாகனத்தில் மோதி காயமடைய நேரிட்டது.

இதனால் கோபமடைந்த அப்பகுதி முஸ்லிம்கள், லொறியைத் தீயிட்டுக் கொழுத்தியதுடன், அதிலிருந்து தப்பிக்க வெளியே ஓடிவந்த வாகன உதவியாளரை (கிளீனர்) அடித்து, தீயில் தூக்கியெறிந்தனர். தீயில் எறியப்பட்ட கிளீனர், தீயில் எரிந்து பலியானார்.

ஆர்ப்பாட்டத்திலீடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்த ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் மீது கற்களை வீசி வன்முறையில் அவாகள் இறங்கினர். மேலதிக விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், வன்முறை கட்டுப்பாட்டை மீறியதால், அதிரடிப்படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதில் மூவர் காயமடைந்தனர்.

புலியானவர்கள், எம்.நஃபாத் (வயது 25), ஒரு குழந்தையின் தந்தையான எம்.லறீஃப் (வயது 32), ஐந்து பிள்ளைகளின் தந்தையான மொஹிதீன் (வயது 53) என அடையாளம் காணப்பட்டனர்.

அதிரடிப்படையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் முனாஸ் (வயது 26), றியாஸ் ( வயது 32), முபீன் (வயது 23) ஆகியோரெனத் தெரிகிறது.

லொறியின் உரிமையாளர், சாரதி மற்றும் உதவியாளர் மூவரும் சிங்களவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

-புதினம்

அதுதானே பாத்தன் யாரு எரித்திருப்பார் எண்டு எல்லாம் உவர்கள்தானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.