Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியற்பணியாளர் மீதான தண்டனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பாட நூல்களில் இருந்தால் அது தமிழாகத்தான் இருக்கும் என்று நம்புகின்ற உங்களை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

விதவை என்ற சொல்லும் தமிழ் பாட நூல்களில் இருக்கிறதே!

நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியரிடம் இவைகளை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்டு கடைசில் தமிழ் சொற்களுக்கும் ஆதாரம் கேட்கத் தொடங்கிவிட்டீர்கள்.

இனி உருப்பட்ட மாதிரித்தான்!

அது சரி.. பாடத் திணைக்களத்துக்கு தமிழ் புத்தகம் எழுதிற தமிழன் தமிழ் அறியாத அடிமுட்டாள்..எங்கையோ ஒளிஞ்சிருந்து அநாமதேய கருத்து எழுதக் கூடிய களத்தில் எழுதும் சபேசன் தமிழ் பண்டிதமணி. எல்லாரும் அவர் சொல்லுறதை வேதவாக்க எடுக்கனும். வந்திட்டாங்கையா. தமிழ் இல்லை என்றால் எப்படி இல்லை என்று சொல்லுங்கோ..! அழுகிறது சிரிக்கிறது நாங்க செய்துக்குவம் எங்க பாட்டில.

அதுசரி தீபாவளி தமிழர் கொண்டாட வேண்டிய பண்டிக்கை இல்லை என்று புலம்பினீங்கள்..இப்ப பொங்கல் மட்டும் சூரிய தேவன் வழிபாடு.. அங்கால வடக்கையும் மகர் சங்ராதி என்று இதே நாளில கொண்டாடுறாங்கள். இதிலும் ஒரு வியாக்கியாணம் போட்டால் என்ன...?! பொங்கல் தமிழர்கள் கொண்டாட வேண்டிய பண்டிகையா..???!

உங்கினை வாற ஓசிப் பேப்பர் வழிய இடம் கிடக்காம் எழுதி அனுப்பல்லாமே. அவைக்கென்ன.. விளம்பரம் வந்தாச் சரி. சரிற்றி என்றுட்டு..காசு உழைக்க வழி வந்திடும். வரலாறு வாழ்ந்தால் என்ன ஆதாரம் இன்றி மடிந்தால் என்ன...??! எம்பிரஸ் பண்ணுறத்துக்கு மாற்றர் இருந்தால் சரி..! :P :lol::lol:

Edited by nedukkalapoovan

பெண்களுக்காகவும் ஆண்விபச்சாரிகள் உருவாக்கி, அவர்களையும் சட்டரீதியாக்க வேண்டும்.

முக்கியமாக எந்த ஆண் பெண்விபச்சாரிகளை நாடுகின்றானோ, அவனின் மனைவியைக் கட்டாயம் ஆண் விபச்சாரியிடம் அனுப்ப அரசாங்கங்கள் சட்டம் கொண்டு வர வேண்டும்.

கணவருக்கு முன்னாலேயே மற்றொருவனோடு அவள் உறவு கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அவர்களின் பெண் பிள்ளைக்கு அரிப்பெடுத்தால், அவளையும் ஆண்விபச்சாரியிடம் அனுமதிக்க அரசாங்கம் சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும்.

:lol::lol::D :P :lol:

இவர் சபேசன் சமயம் தொடங்கி சாதாரண வாழ்க்கை வரைக்கும் கட்டுக்கதைகளைத்தான் அறிஞ்சு வைச்சுக்கொண்டு பினாத்தித் திரிகிறார்.

:lol::D:D :P :lol::lol:

அது சரி.. பாடத் திணைக்களத்துக்கு தமிழ் புத்தகம் எழுதிற தமிழன் தமிழ் அறியாத அடிமுட்டாள்..எங்கையோ ஒளிஞ்சிருந்து அநாமதேய கருத்து எழுதக் கூடிய களத்தில் எழுதும் சபேசன் தமிழ் பண்டிதமணி. எல்லாரும் அவர் சொல்லுறதை வேதவாக்க எடுக்கனும். வந்திட்டாங்கையா. தமிழ் இல்லை என்றால் எப்படி இல்லை என்று சொல்லுங்கோ..! அழுகிறது சிரிக்கிறது நாங்க செய்துக்குவம் எங்க பாட்டில.

அதுசரி தீபாவளி தமிழர் கொண்டாட வேண்டிய பண்டிக்கை இல்லை என்று புலம்பினீங்கள்..இப்ப பொங்கல் மட்டும் சூரிய தேவன் வழிபாடு.. அங்கால வடக்கையும் மகர் சங்ராதி என்று இதே நாளில கொண்டாடுறாங்கள். இதிலும் ஒரு வியாக்கியாணம் போட்டால் என்ன...?! பொங்கல் தமிழர்கள் கொண்டாட வேண்டிய பண்டிகையா..???!

உங்கினை வாற ஓசிப் பேப்பர் வழிய இடம் கிடக்காம் எழுதி அனுப்பல்லாமே. அவைக்கென்ன.. விளம்பரம் வந்தாச் சரி. சரிற்றி என்றுட்டு..காசு உழைக்க வழி வந்திடும். வரலாறு வாழ்ந்தால் என்ன ஆதாரம் இன்றி மடிந்தால் என்ன...??! எம்பிரஸ் பண்ணுறத்துக்கு மாற்றர் இருந்தால் சரி..! :P :lol::D

:lol::lol::D:D:D:D

இங்கே கவனிக்க தக்க விடயம்....!

சீர் திருத்த வாதியென்று தம்மை கூறியவர்

விபச்சாரம் சட்ட தொழிலாக்க வேண்டுமென்றும்

அதற்கு ஓய்வுதியம் வேறு கொடுக்க வேண்டும் என்று

கூறுவதை எண்ணும் பொழுத சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை...

அத்தோடு தமிழர் கலச்சாரம் பேனி காக்கப் படவேண்டும் என்று கூறுவதும்

அவராகவே இருக்கிறார் ஆக மொத்தம்

அவர் குழம்பி போயிருக்கார்....

எனவே மாற்றார் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கொடுக்க அவரால் முடியவில்லை ஏன்...???

தமிழர் பாட நெறி புத்தகத்தை வெளியீடு செய்பவரும் அதனை ஒருங்கிணைத்து

அதனை தழிழில் சீராக வழிகாட்டி செல்பவரும் இதுவரை காலமும் முட்டாள்களாகவே

இருந்துள்ளார்கள் என்பது அவரது வாதமா..?? க உள்ளது...

ஆக மொத்தம் நான் சொல்வதே சரி என்ற கொள்கை ஆக அருமை வளர்க வாழ்க....

Edited by vanni mainthan

கவிக்கோ வன்னிமைந்தனும் தமிழாசிரியர் நெடுக்காலபோவானும் இதில் உள்ள வடமொழிச் சொற்களை சொல்லுங்கள் பார்ப்போம்!

அரசனின் சந்தேகம் மேலும் அதிகரித்தது. அரசிக்கு பிறந்த சிசு அப்படியே மந்திரி போன்றே இருக்கிறது. ஏற்கனவே மந்திரியையும் அரசியையும் சம்பந்தப்படுத்தி பல கதைகள் மக்கள் மத்தியில் கதைக்கப்படுகிறது.

மந்திரி அரசியுடன் சேட்டை விடுகிறார், மந்திரி தனிமையில் அரசியின் அங்கங்களை வர்ணிக்கிறார்" இப்படி பல விசயங்களை அரசன் காதில் விழுந்த போதும், அவன் அவைகளை நம்பவில்லை.

காரணம் மந்திரி அரசனின் உயிருக்கு உயிரான சினேகிதர்.

இன்றைக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்வது என்று அரசன் முடிவெடுத்தான். மந்திரியை அழைத்து வர ஆணை இட்டான்.

வீரர்கள் மந்திரியிடம் சென்றார்கள். மந்திரி ஆலயத்தில் ஒரு சோதிடனுடன் பேசிக் கொண்டிருந்தான். சோதிடன் அப்பொழுதுதான் மந்திரிக்கு இந்த வருடம் அவ்வளவு நல்லது இல்லை என்று சொல்லி வாய் மூடவில்லை. வீரர்கள் வந்து விட்டார்கள்.

அவசியம் வர வேண்டும் என்று அரசன் ஆணை இட்டுள்ளார் என்று வீரர்கள் சொன்னார்கள். மந்திரிக்கு ஆச்சரியம். மந்திரி உண்மையில் ஒரு அப்பாவி. தனது அரசன் நீதி தவற மாட்டான் என்று மந்திரி நம்பினார்.

அரசன் தானத்தில் சிறந்தவன். மக்கள் மிகவும் திருப்தியோடு இருந்தார்கள். பிச்சை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் யாரும் இருக்கவில்லை.

நியாயத்தின் மீதும் அதிர்ஸ்டத்தின் மீதும் இருந்த நம்பிக்கையில் மந்திரியும் அரசனிடம் போனான். அரசன் தீர விசாரிக்காமல் மந்திரிக்கு மரண தண்டனை வழங்கினான்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சார் உங்களுக்கு வடமொழி எது தமிழ் மொழி எது என்று தெரியல்ல எண்ணாக்க இதில பாத்துப் படிச்சுக்கோங்கோ. அதை விட்டிட்டு.. சந்திரனைக் காட்டு என்றால் பிரபஞ்சத்தைக் காட்டி சந்திரனைக் காட்டு என்று எங்களையே கேட்கிறது.. உங்களின் இயலாமையா அறியாமையா..புரியல்ல..உலகுக்கு.

! :lol::)

அங்கவஸ்திரம் மேலாடை

அத்தியாவசியம் இன்றியமையாமை

அசங்கியம் அருவருப்பு

அந்தரங்கம் மறைமுகம்

அநேக பல

அப்பியாசம் பயிற்ச்சி

அபராதம் குற்றம்,தண்டம்

அபிக்ஷகம் திருமுழுக்கு

அபிவிர்த்தி மிகுவளர்ச்சி

அபூர்வம் அரிது,அருமை

அமாவாஸ்யை காருவா

அர்ச்சனை தொழுகை,வழிபாடு

அர்த்தம் பொருள்

அவசரம் விரைவு,பரபரப்பு

அவசியம் தேவை

அவயவம் உறுப்பு

அற்புதம் புதுமை, இறும்பூது

அன்னம் உண்டி

அன்னவஸ்திரம் ஊணுடை

அன்னியம் அயல்

அனுபவி நுகர்

அனுஷ்டி கைக்கொள்

அஸ்திபாரம் அடிப்படை

ஆக்கினை கட்டளை

ஆகாரம் உணவு

ஆச்சர்யம் வியப்பு

ஆச்சசாரம் ஒழுக்கம்

ஆசீர்வாதம் வாழ்த்து

ஆதரி தாங்கு, அரவணை

ஆதி முதல்

அந்தம் முடிவு

ஆபத்து அல்லல்

ஆமோதி வழிமொழி

ஆரம்பம் துவக்கம், தொடக்கம்

ஆரோக்கியம் நலம், நோயின்மை

ஆலோசி சூழ்

ஆயுள் வாழ்நாள்

ஆனந்தம் களிப்பு

ஆஸ்தி செல்வம்

ஆக்ஷபி தடு

ஆட்க்ஷபனை தடை

இந்திரன் வேந்தன்

இருதயம் நெஞ்சம், நெஞ்சாங்குலை

இஷ்டம் விருப்பம்

ஈஸ்வரன் இறைவன்

உத்தேசம் மதிப்பு

உத்தியோகம் அலுவல்

உபத்திரவம் தொலை, நோக்காடு

உபகாரம் உதவி, நன்றி

உபவாஸம் உண்ணாநோன்பு

உபாத்தியாயர் ஆசிரியர்

உற்சவம் திருவிழா

உற்சாகம் ஊக்கம்

உஷ்ணம் வெப்பம்

கங்கணம் வளையல், காப்பு

கங்கண விஸர்ஜனம் சிலம்பு கழி நோன்பு

ஜோதிடன் கணியன்

கபிலை குரால்

கருணை அருள்

கர்வம் செருக்கு

கவி செய்யுள்

கனகசபை பொன்னம்பலம்

கஷ்டம் வருத்தம்

கஷாயம் கருக்கு

காவியம் தொடர்நிலைச் செய்யுள்

காஷாயம் காவி

கிரகம் கோள்

கிரீடம் முடி

கிருகப்பிரவேசம் புதுவீடு புகல்

கிருபை அருள், இரக்கம்

கிருஷிகம் உழவு

கோஷ்டி குழாம்

சக்கரவர்த்தி மாவேந்தன்

சக்தி ஆற்றல்

சகலம் எல்லாம்

சகஜம் வழக்கம்

சகுனம் குறி, புள்

சகோதரன் உடன் பிறந்தான்

சங்கடம் இடர்ப்பாடு

சங்கரி அழி

சங்கீதம் இன்னிசை

சத்தம் ஓசை

சத்தியம் உண்மை

சத்துரு பகைவன்

சந்ததி எச்சம்

சந்தி தலைக்கூடு

சந்திப்பு கூடல்

சந்திரன் மதி, நிலா

சந்தேகம் ஐயம், ஐயுறவு

சந்தோஷம் மகிழ்ச்சி

சந்நிதி முன்னிலை

சந்நியாசி துறவி

சம்பந்தம் தொடர்பு

சம்பாஷணை உரையாட்டு

சம்பூரணம் முழுநிறைவு

சமாச்சாரம் செய்தி

சமுகம் மன்பதை

சமுசாரி குடும்பி

சமுச்சயம் அயிர்ப்பு

சமுத்திரம் வாரி

சர்வமானியம் முற்றூட்டு

சரணம் அடைக்கலம்

சரீரம் உடம்பு

சன்மார்க்கம் நல்வழி

சாதம் சோறு

சாதாரணம் பொதுவகை

சாஸ்திரம் கலை, நூல்

சாஸ்வதம் நிலைப்பு

சாக்ஷ கண்டோன்

சிங்காசனம் அரியணை

சினேகிதம் நட்பு

சிரஞ்சீவி நீடுவாழி

சீக்கிரம் சுருக்கு

சுகம் உடல்நலம், இன்பம்

சுத்தம் துப்புரவு

சுதந்தரம் உரிமை

சுதி கேள்வி

சுபம் மங்கலம்

சுபாவம் இயல்பு

சுயமாய் தானாய்

சுயராஜ்யம் தன்னாட்சி

சுரணை உணர்ச்சி

ஸ்மரணை உணர்ச்சி

ஸவர்க்கம் துறக்கம், உவணை

சுவாஸம் மூச்சு, உயிர்ப்பு

சுவாமி ஆண்டான், கடவுள்

சுவாமிகள் அடிகள்

சேவகன் இளையன்

சேவவை தொண்டு, ஊழியம்

சேனாபதி படைத்தலைவன்

சேனாவீரன் பொருநன்

சேஷ்டை குறும்பு

சொப்பனம் கனா

சோதி நோடு

செளகரியம் ஏந்து

ஞாபகம் நினைப்பு

ஞனம் அறிவு

தயவு இரக்கம்

தருமம் அறம்

தாஸி தேவரடியாள்

தானியம் கூலம், தவசம்

தினம் நாள்

துக்கம் துயரம்

துரோகம் இரண்டகம்

துஷ்டன் தீயவன்

தேகம் உடல்

தைலம் எண்ணை

தோஷம் சீர், குற்றம்

நதி ஆறு

நமஸ்காரம் வணக்கம்

நஷ்டம் இழப்பு

நக்ஷத்திரம் வெள்ளி, நாண்மீன்

நாசம் அழிவு

நாதம் ஒலி

நிஜம் மெய்

நிச்சயம் தேற்றம்

நித்திரை தூக்கம்

நியதி யாப்புறவு

நியமி அமர்த்து

நியாயம் முறை

நீதி நயன்

பக்தன் அடியான்

பக்தி தேவடிமை

பகிரங்கம் வெளிப்படை

பசு ஆவு, ஆன்

பஞ்சேந்திரியம் ஐம்புலன்

பத்திரம் தாள், இதழ்

பத்திரிக்கை தாளிகை

பத்தினி கற்புடையாள்

பதார்த்தம் பண்டம், கறி

பதிவிரதை குலமகள்

பந்து இனம்

பரம்பரை தலைமுறை

பரிகாசம் நகையாடல்

பரியந்தம் வரை

பக்ஷ பறவை, புள்

பாத்திரம் ஏனம், தகுதி

பார்வதி மலைமகள்

பாவம் தீவினை

பானம் குடிப்பு, குடிநீர்

பாஷை மொழி

பிச்சை ஐயம்

பிச்சைக்காரன் இரப்போன்

பிசாசு பேய்

பிரகாசம் பேரொளி

பிரககாரம் படி

பிரசங்கம் சொற்பொழிவு

பிரசவம் பிள்ளைப்பேறு

பிரசுரம் வெளியீடு

பிரத்தியக்ஷம் கண்கூடு

பிரதக்ஷணம் வலஞ்செய்தல்

பிரயாசம் முயற்ச்சி

பிரயாணம் வழிப்போக்கு

பிரயாணி வழிப்போக்கன்

பிரயோகம் எடுத்தாட்சி, வழங்கல்

பிரயோஜனம் பயன்

பிரஜை குடிமகன்

பிரகாரம் சுற்றுமதில்

பிராணன் உயிர்

பிராணி உயிரி, உயிர்மெய்

பிராயச்சித்தம் கழுவாய்

பிரியம் விருப்பம்

பிரேதம் பிணம்

புண்ணியம் நல்வினை, அறப்பயன்

புத்தி மதி

புத்திமதி மதியுரை

புருஷன் ஆடவன்

புஷ்டி தடிப்பு, தசைப்பிடிப்பு

புஷ்பம் பூ

புஷ்பவதியாதல் முதுக்குறைதல், பூப்படைதல்

பூமி ஞாலம், நிலம்

பூர்வீகம் பழைமை

பூரணசந்திரன் முழுமதி

பூஜை வழிபாடு

போதி கற்பி, நுவல்

போஜனம் சாப்பாடு

போஷி ஊட்டு

பெளரணை நிறைமதி

மத்தி நடு

மத்தியானம் நண்பகல், உச்சிவேளை

மயானம் சுடுகாடு, சுடலை

மரியாதை மதிப்பு

மாமிசம் இறைச்சி

மார்க்கம் வழி

மிருகம் விலங்கு

முக்தி விடுதலை

முகஸ்துதி முகமன்

மூர்க்கன் முரடன்

மைத்துனன் அத்தான், அளியன், கொழுந்தன்

மோசம் கேடு

மோக்ஷம் வீடு, பேரின்பம்

யதார்த்தம் உண்மை

யமன் கூற்றுவன்,மறலி

யஜமான் தலைவன், ஆண்டான்

யாகம் வேள்வி

யோக்கியம் தகுதி

யோசி எண்ணு

ரகஸ்யம் மறைபொருள், மருமம்

ரஸம் சாறு

ரணம் புண்

ரத்தினம் மணி

ரத்தம் தேர்

ராசி ஓரை

ருசி சுவை

ரோமம் மயிர்

லஜ்ஜை வெட்கம்

லக்ஷ்மி திருமகள்

லாபம் ஊதியம்

லோபம் இவறன்மை

லோபி இவறி, கஞ்சன், பிசிரி

வசனம் உரைநடை

வமிசம் மரபு

வயசு அகவை

வர்க்கம் இனம்

வர்த்தகம் வணிகம்

வருஷம் ஆண்டு

வாத்தியம் இயம்

வாயு வளி

வார்த்தை சொல்

விகடம் பகடி

விசுவாசம் நம்பிக்கை

விசனம் வாட்டம்

விசாரி வினவு, உசாவு

விஷேசம் சிறப்பு

வித்தியாசம் வேறுபாடு

விநோதம் புதுமை

வியவகாரம் வழக்கு

வியவசாயம் பயிர்த்தொழில்

வியாதி நோய்

வியாபாரம் பண்டமாற்று

விரதம் நோன்பு

விரோதம் பகை

விஸ்தீரணம் பரப்பு

விஷம் நஞ்சு

வீரன் வயவன், விடலை

வேசி விலைமகள்

வேதம் மறை

வைத்தியம் மருத்துவம்

ஜயம் வெற்றி

ஜலதோஷம் நீர்க்கோர்வை, தடுமம்

ஜன்மம் பிறவி

ஜன்னி இசிவு

ஜனம் நரல், நருள்

ஜனசங்கியை குடிமதிப்பு

ஜனனமரணம் பிறப்பிறப்பு

ஜாக்கிரதை விழிப்பு

ஜாதகம் பிறப்பியம்

ஜாதி குலம்

ஜீரணம் செரிமானம்

ஜீரணோத்தாரணம் பழுதுபார்ப்பு

ஜீவன் உயிர்

ஜீவனம் பிழைப்பு

ஜீவியம் வாழ்க்கை

ஜோதி சுடர்

ஸ்தாபனம் நிறுவனம்

ஸ்திரீ பெண்டு

ஸ்தோத்திரி பராவு

ஸ்நானம் குளிப்பு

க்ஷணம் நொடி

க்ஷணம் மங்கல்

க்ஷமம் ஏமம், நல்வாழ்வு, காப்பு

சமீபம் அண்மை

தூரம் சேய்மை

குஷ்டம் குட்டம்

முஷ்டி முட்டி

வேஷ்டி வேட்டி

இந்த தகவல்களை தந்ததற்கு மனம் திறந்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன். பாராட்டுகிறேன். இதை வேறோரு தலைப்பில் தொடர்ந்து தாருங்கள். தமிழுக்கு நீங்கள் செய்கின்ற பெரும்பணியாக அது இருக்கும்.

நான் எழுதியவற்றிலும் உங்களால் தமிழ்சொற்களை கண்டுபிடிக்க முடியும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

இப்படி இருக்க "தபுதாரன்" என்ற சொல் மட்டும் தமிழ் சொல் என்று எந்த அடிப்படையில் அடம்பிடிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவல்களை தந்ததற்கு மனம் திறந்து உங்களுக்கு நன்றி சொல்கிறேன். பாராட்டுகிறேன். இதை வேறோரு தலைப்பில் தொடர்ந்து தாருங்கள். தமிழுக்கு நீங்கள் செய்கின்ற பெரும்பணியாக அது இருக்கும்.

நான் எழுதியவற்றிலும் உங்களால் தமிழ்சொற்களை கண்டுபிடிக்க முடியும் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

இப்படி இருக்க "தபுதாரன்" என்ற சொல் மட்டும் தமிழ் சொல் என்று எந்த அடிப்படையில் அடம்பிடிக்கிறீர்கள்?

தபுதாரன் தமிழ் சொல் இல்லை என்று நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள்..ஏன் அடம்பிடிக்கிறீர்கள் என்பதுதான் நம் கேள்வி..?! :):lol:

ப" எழுத்து தமிழ் சொற்களில் உ"கரமாக இரண்டாம் இடத்தில் வருவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ப" எழுத்து தமிழ் சொற்களில் உ"கரமாக இரண்டாம் இடத்தில் வருவது இல்லை.

இப்படி ஒரு தமிழ் சொற்புணரியல் விதியை உருவாக்கியது நீங்களாகத்தான் இருக்கும்..!

தபுதாரம் - என்று ஒரு பண் இருக்கிறது ( தமிழர்களின் இசைகள் தான் பண்ணோடு இசைக்கப்பட்டன அதிகம்.)

அந்த வகையில் தபுதாரன் என்பதும் அமைகிறது. சொற்புணரியல் மிகவும் சிக்கலானது. தொல்காப்பியம் அதைத் தெளிவாகச் சொல்கிறது. படித்துத் தேறவும். :lol::)

ப்"வின் உ"கரம் இரண்டாம் இடத்தில் வருகின்ற தமிழ் சொற்களை தாருங்களேன்!

அதன் பிறகு மிகுதியை விவாதிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.