Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மீள விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரில் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மீள விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

[ Sunday,13 December 2015, 05:05:47 ]   
ob_59b837_parakrama-paranagama-7.jpg

இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மீள விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஆணைக்குழுவின் விசாரணைகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தத்தின் முடிவில் சரணடைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சனல் 4 ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இதில் தாம் தவறிழைக்கவில்லை என கூறிவரும் ஸ்ரீலங்கா அரசு சனல் 4 இன் காணொளியையும் நிராகரித்திருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.

சனல் 4 காணொளியை பொய் என்று கூறவில்லை எனவும் உண்மை என்றும் கூறவில்லை. ஆனால் நன்கு ஆராயப்படவேண்டும் என்றே கூறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மக்களிடமிருந்து முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக் குழுவினாலும், எல்.எல்.ஆர்.சி.னாலும் இந்த வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் தவறிழைத்தவர்கள் இனங்காணப்பட்டு தனிநபர்கள் தண்டிக்கப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதே அதிகளவிலான முறைப்பாடுகள் உள்ளதாக முன்னர் கூறியது தொடர்பில் அவரிடம் கேட்டபோது, தான் அதனை முழுமையாக சரி என்று கூறமுடியாது எனவும் கூறியுள்ளார்.

இரண்டு தரப்பு மீதும் தவறு உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவை விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் போல் குற்றவியல் விசாரணையாக இதனை முன்னெடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பில் உங்களால் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்று கேட்டபோது, நாம் தற்போது மக்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருவதாகவும் இதன்பின்னர் விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் அந்த அறிக்கையின்படி நடவடிக்கை தொடரும் எனத் தெரிவித்துள்ளார். 

http://ibctamil.com/news/index/14992

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.