Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரத்தக்கறை கொண்ட மஹிந்தவும்,கோட்டாவும் கைதிகளின் விடுதலை குறித்து பேசுவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தக்கறை கொண்ட மஹிந்தவும்,கோட்டாவும் கைதிகளின் விடுதலை குறித்து பேசுவது எப்படி?

[ Wednesday,16 December 2015, 13:12:59 ] audio.png  
00002.MTS.Still002.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினதும் கரங்களில் கொலை செய்யப்பட்ட இரத்தக்கறை காணப்படுவதால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக கருத்துகூறுவதற்கு அவர்கள் அருகதை அற்றவர்கள் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சர்வதேச நாடுகள் ஸ்ரீலங்கா மீது கண்ணோட்டமாகவே உள்ளன.

இந்த நிலையில் கைதிகளின் விடுதலை குறித்து எதிராக கருத்துக்களை மஹிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் வெளியிட்டு வருகின்றனர். அவர்களது கரங்களில் கொலை செய்யப்பட்ட இரத்தக் கறைகள் காணப்படுகின்றன. எனவே இதுகுறித்து எதிராக கருத்துக்களை தெரிவிப்பதற்கு அவர்கள் இருவரும் அருகதை அற்றவர்கள்.

அன்று அரந்தலாவை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு காரணமானவர்களை கொழும்பிற்கு அழைத்துவந்து மஹிந்த ராஜபக்சவினால் மாகாண முதலமைச்சர் பதவிகளும், இதர பதவிகளும் வழங்க முடியும் என்றால் பொது மன்னிப்பை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர்கூட மரணமடைந்தால் சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்படும் – என்றார்.

 

http://ibctamil.com/news/index/15238

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.