Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சாம்பியன்: எங்க தல எலானோ, மெண்டொசாவுக்கு பெரிய விசில் போடு!

Featured Replies

சென்னை சாம்பியன்: எங்க தல எலானோ, மெண்டொசாவுக்கு பெரிய விசில் போடு!

 

இன்று நடந்த இந்தியன் சொப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் கஒவாவை வீழ்த்தியது. முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தாவையும் கோவா அணி டெல்லியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. சொந்த மைதானத்திலேயே இப்போட்டி விளையாடப்பட்டது கோவா அணிக்கு அனுகூலமாய் அமைந்தது.

isl2.jpg


 
கோலே இல்லாத முதல் பாதி

 சென்னை அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேப்டன் எலானோ புரூமரை சப்ஸ்டிட்யூட்டாக களமிறக்கினார் பயிற்சியாளர் மடரசி. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் எதிரணியின் கோல் பகுதியை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். கோவா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வணியின் முன்கள வீரர் டூடு தலையில் காயம்பட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக லுக்கா மாற்று வீரராக களமிறக்கப் பட்டார். போட்டியின் முதல் 25 நிமிடம் கோவா அணி பந்தை தன்வசமே அதிக நேரம் வைத்திருந்தது. அதுவரை சென்னை அணி ஆட்டத்தில் சற்று பின்தங்கியே இருந்தது. மிகவும் ஆக்ரோஷமாக விளையாடிய சென்னை அணியின் வத்தூ கோவா வீரர்களை பலமுறை பவுல் செய்தார். இதனால் நடுவரால் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார். முதல் பாதியில் இரு அணி வீரர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதும் அடிக்கப் படாமலேயே முடிவுக்கு வந்தது.

அதிரடியான இரண்டாம் பாதி

 கோவா அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் ‘அசிஸ்ட் கிங்’ லியோ மௌரா காயத்தால் முதல் பாதியோடு வெளியேறினார். நடுகள வீரரான அவருக்குப் பதில் முன்கள வீரரான ஹாகிப்பை களமிறக்கி அதிரடி வியூகங்கள் வகுத்தார் சிகோ. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷம் காட்டிய சென்னை அணிக்கு 54வது நிமிடத்தில் அதற்கான பலன் கிட்டியது. நட்சத்திர நாயகன் மெண்டோசாவை கோவாவின் ஹால்டர் தள்ளிவிட சென்னைக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. பெலிசாரி அடித்த பெனால்டி ஷாட்டை கோவா கோல்கீப்பர் கட்டிமானி முதலில் தடுத்து விட்டார். அது மீண்டும் பெலிசாரியிடமே செல்ல, இம்முறை பந்தை கோல் கம்பத்துக்குள் புகுத்தி சென்னைக்கு முன்னிலை ஏற்படுத்தினார் இந்த பிரேசில் வீரர். ஆனால் சற்றும் மனம் தளராத கோவா வீரர்கள் உடனேயே பதிலடி கொடுத்தனர். அடுத்த மூன்றாவது நிமிடத்தில் ரோமியோ ஃபெர்னான்டஸ் கொடுத்த கிராசை அபாரமாக கோலாக்கினார் ஹாகிப்.

isl3.jpg

 

கோல்கீப்பர்களின் அபார ஆட்டம்

 அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, இம்முறை அதை மெண்டோசா அடிக்க அதையும் தடுத்தார் கட்டிமானி. இத்தனை நாட்கள் தங்கள் அணியின் தலைமகனாய் விளங்கிய மெண்டோசா பெனால்டியை பயன்படுத்த தவற சென்னை ரசிகர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அதன்பின் கோவா அணி பலமுறை இரண்டாவது கோல் போட முயற்சித்தது. ஆனால் அவையனைத்தையும் சென்னை கோல்கீப்பர் எடல் தனது அபார செயல்பாட்டால் தடுத்தார்.

இறுதி நிமிட திக் திக்

 ஆட்டத்தின் 87 வது நிமிடத்தில் கோவா அணியின் ஜோஃபர் கோலடிக்க கோவா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். ஆனாலும் மனம் தளராமல் விளையாடிய சென்னை அணிக்கு கடைசி நிமிடத்தில் பலன் கிடைத்தது.ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் கோவா அணியின் கோல்கீப்பர் கட்டிமானி தன் சக வீரருடன் மோதி தானே ‘ஓன் கோல்’ விட ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. அதன்பின்னரும் சென்னை அணியின் அனல் ஆட்டம் ஓயவில்லை. பெனால்டியை விட்டு சென்னையின் வில்லனான மெண்டோசா கூடுதல் நேரத்தில் அபாரமாக கோலடிக்க சென்னை அணி 3-2 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் ஜெயேஷ் கொடுத்த பாசை அவர் கோலாக மாற்றினார். இது இத்தொடரில் மெண்டோசா அடிக்கும் 13வது கோலாகும்.

isl1.jpg

 

 இதன்மூலம் ஐ.எஸ்.எல் லின் இரண்டாவது சாம்பியனாக உறுவெடுத்தது சென்னையின் எஃப்.சி அணி. 13 கோல்கள் அடித்த மெண்டோசா தங்க காலனி விருதையும் சென்னை கோல்கீப்பர் எடல் தங்க கிளவுஸ் விருதையும் வென்றனர்

http://www.vikatan.com/news/sports/56612-chennaiyinfc-have-won-the-isl-final.art

  • தொடங்கியவர்

12369026_1040384972686959_30187499212302

12390983_1040385012686955_89892540285838

12376531_1040385022686954_53948978352761

12321159_1040385029353620_51169880767573

  • தொடங்கியவர்

சென்னையின் FC க்கு வாழ்த்து தெரிவித்தார் டோனி

December 22, 2015

ISL  கால்பந்து போட்டியில் மகுடம் சூடிய சென்னையின் FC அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் சென்னையின் FC அணி உரிமையாளர்களில் ஒருவருமான  டோனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10_-MS-Dhoni-showcased-his-goalkeeping-skills

இதுகுறித்து அவர் கூறும்போது, இறுதிப் போட்டிக்கு தகுதியான அணிகளே மோதின. இரு அணி வீரர்களும் மிகுந்த திறமையுடன் விளையாடினார்கள். சென்னையின் FC அணி வீரர்களுக்கும், சென்னை அணி ரசிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என கூறினார்.

2வது ISL   கால்பந்து போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற சென்னையின் FC அணிக்கு 8 கோடி ரூபா பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை பிடித்த கோவா அணிக்கு 4 கோடி ரூபா கிடைத்தது. அரை இறுதியில் வெளியேற்றப்பட்ட அட்லெடிகோ கொல்கத்தா, டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு தலா 1½ கோடி ரூபா கிடைத்தன.

http://www.onlineuthayan.com/sports/?p=6414&cat=11

  • தொடங்கியவர்

சென்னையின் எஃப்சி-க்கு 'மீம்'மக்களின் அணிவகுப்பு மரியாதை!

 

 
 
isl7_2665671f.jpg
 

சென்னை ஐபிஎல் அணிக்கு விசில் போட்டு வந்த தமிழக இணையவாசிகள், அந்த அணிக்கு ஊதப்பட்ட சங்கு நிமித்தமாக சற்றே அமைதி காத்து வந்தனர்.

இந்த நிலையில், ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்னை - கோவா அணிகள் மோதின. இப்போட்டியில் வென்ற சென்னை அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சென்னையின் எஃப்சி இறுதிப் போட்டிக்கு நுழைந்த உடனே, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆதரவு இயக்கத்தின் வானிலை சட்டென மாறிற்று.

சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அந்தத் தருணத்துக்கு முன்பில் இருந்தே கோல்போடுமச்சி, சென்னையின் எஃப்சி உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகின. குறிப்பாக, நெட்டிசன்கள் தங்கள் தலையாய கடமையான மீம்களின் அணிவகுப்பு மூலம் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில், சென்னை மீம்ஸ் குழுவினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவற்றில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மீம்களின் தொகுப்பு:

isl9_2665669a.jpg

ils_2665674a.jpg

isl8_2665670a.jpg

isl5_2665672a.jpg

ils13_2665691a.jpg

isl3_2665675a.jpg

illls_2665687a.jpg

isl10_2665681a.jpg

ills_2665686a.jpg

ilsss_2665684a.jpg

isl_2665690a.jpg

isl12_2665680a.jpg

isl2_2665692a.jpg

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/article8013971.ece?homepage=true&ref=tnwn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.