Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்

Featured Replies

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்

December 22, 2015

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது.

03-1433307088-mcl-600

இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கு 10 ஆண்டுகள் அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்காவில் நடந்த ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் வெற்றி பெற்றதையடுத்து இதற்கும் ஐசிசி அனுமதி வழங்கி உள்ளது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் போட்டியில் கங்குலியின் லிப்ரா லெஜண்ட்ஸ் மற்றும் ஷேவாக்கின் ஜெமினி அரேபியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த இரு அணிகள் மோதும் தொடரின் முதல் லீக் போட்டி ஜனவரி 28ம் திகதி துபாயில் நடக்கிறது. மொத்தம் 18 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் அரையிறுதில் பெப்ரவரி 11ம் திகதியும், இரண்டாவது அரையிறுதி பெப்ரவரி 12ம் திகதியும் நடக்கிறது. இறுதிப் போட்டி துபாயில் பெப்ரவரி 13ம் திகதி நடைபெறுகிறது.

http://www.onlineuthayan.com/sports/?p=6396&cat=2

  • தொடங்கியவர்

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் விளம்பரத்தில் டோனி

December 23, 2015

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது. இந்த தொடரில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

முதல் போட்டியிலே கங்குலியின் லிப்ரா லெஜண்ட்ஸ் மற்றும் ஷேவாக்கின் ஜெமினி அரேபியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் துணை நிறுவனத்திற்கு டோனி தான் தூதுவராக உள்ளார். இவர் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக அவர் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=6530&cat=2

  • தொடங்கியவர்

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் சவால் லாராவுக்கு சவால் விடும் முரளி

December 27, 2015

முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் திகதி துபாயில் தொடங்குகிறது. இந்த தொடரில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் முரளிதரன் ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கும், லாரா லியோ லயன்ஸ் அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

lara_muralitharan_001

800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் முரளிதரன், லாராவிற்கு எதிராக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் நான்கு முறைதான் அவரை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் லாராவை மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் டி20 லீக் போட்டியில் வீழ்த்திக் காட்டுவேன் என்று முரளிதரன் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், “சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோர்கள் சிறந்த வீரர்கள். இதில் லாராவுக்கு தற்போது 46 வயதாகிறது.

ஆனால் நான் அவரை விட மூன்று வயது இளையவன். எனவே லாராவை எளிதில் கட்டுப்படுத்தி விடுவேன்” என்று கூறியுள்ளார். சச்சின் – வார்னே நடத்திய ஆல் ஸ்டார் கிரிக்கெட் தொடர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த தொடர் நடத்தப்படுகிறது. இதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி வழங்கி உள்ளது.

http://www.onlineuthayan.com/sports/?p=6767&cat=2

  • 1 month later...
  • தொடங்கியவர்

மீண்டும் களமிறங்கும் லெஜெண்டுகள்! ஷேவாக் - காலிஸ் இன்று தெறி மோதல்!

 

ர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை கொண்டு புதிதாக துவங்கப்பட்டிருக்கிறது மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக். இந்த மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக், வருடா வருடம் ஐ.பி.எல் போல வரும் ஆண்டுகளிலும் நடக்கவுள்ளது. உலகின் புகழ்பெற்ற பல வீரர்கள் இந்த எம்.சி.எல் தொடரில் பங்கேற்கிறார்கள். 20 ஓவர் போட்டியான இந்த எம்.சி.எல் தொடர் இன்று துபாயில் ஆரம்பிக்கிறது.

12512809_1689300027949908_40269494263306

 

முதல் போட்டியில் ஜெமினி அரேபியன்ஸ், லிப்ரா லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கு  அதிரடி வீரர் ஷேவாக்கும், லிப்ரா லெஜண்ட்ஸ் அணிக்கு  காலிஸ் கேப்டனாக விளையாடவுள்ளனர்.

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஷேவாக்,  ஓய்வுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் தொடரில், கேப்டன் பொறுப்போடு களமிறங்கவுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

1661665_1689300551283189_540847616690801

 

ஷேவாக் அணியில் சங்கக்காரா உள்ளிட்ட புகழ்பெற்ற பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். சமீபத்தில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய தீவுகள் நாட்டை சேர்ந்த சந்தர்பால், சேவாக் அணியில் விளையாடவுள்ளார். காலிஸ் அணியில் ஆல்ரவுண்டர்கள் நிறைய பேர் உள்ளனர்.

இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்கவுள்ளது.


ஜெமினி அரேபியன்ஸ்:

சேவாக் (கேப்டன்), ரூடால்ப், ரிச்சர்ட் லிவி, சங்கக்காரா, பிராட் ஹாட்ஜ், சந்திரபால், ஜாஸ்டின்  கெம்ப், சக்லைன் முஷ்டாக், நவேத் உல் ஹசன், முத்தையா முரளிதரன், கைல் மில்ஸ், பால் ஹாரிஸ், சகிப் அலி, கிரகாம் ஆணியன்ஸ், ஆஷிஷ் பகாய்.

லிப்ரா லெஜெண்ட்ஸ்:

காலிஸ் (கேப்டன்), மைக்கேல் லம்ப், தொபீக் உமர், டென் டஷே, மார்க்ஸ் நார்த், கிறிஸ் ரீட், கிரேம் ஸ்வான், சைடு பாட்டம், பிராட் ஹாக், நிக்கி போஜே, அயன் பட்லர், அஜய் ராத்ரா.

http://www.vikatan.com/news/sports/58240-kalis-face-sehwag-in-masters-champions-league.art

  • தொடங்கியவர்
Gemini Arabians 234/3 (20/20 ov)
Libra Legends 156/8 (20/20 ov)
Gemini Arabians won by 78 runs
 
Sangakkara named Man of the Match
  • தொடங்கியவர்

மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியிலும் அதிரடி காட்டிய சங்கா

 

சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்ற வீரர்­களை கொண்டு விளை­யா­டு­வ­தற்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மாஸ்டர்ஸ் சம்­பியன்ஸ் லீக் என்ற தொடரை அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

இதில் 6 அணிகள் இடம் பி­டித்­துள்­ளன. இதன் முதல் தொடரின் முதல் போட்டி நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. இதில் சேவாக் தலை­மை­யி­லான ஜெமினி அரே­பியன்ஸ் அணியும், கலிஸ் தலை­மை­யி­லான லிப்ரா லிஜெண்ட்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய சேவாக் தலை­மை­யி­லான அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து 234 ஓட்­டங்­களைக் குவித்­தது.

இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான களம் இறங்­கிய சேவாக் 11 பந்தில் 2 பவுண்­டரி, ஒரு சிக்­ஸ­ருடன் 21 ஓட்­டங்­களைக் குவித்தார்.

அடுத்து வந்து சங்­கக்­கார 43 பந்­து­களில் 6 பவுண்­டரி, 7 சிக்­ஸர்­க­ளுடன் 86 ஓட்­டங்­களைக் குவித்தார். மற் ­றொரு தொடக்க வீரர் லெவி 62 ஓட்­டங்­களைச் சேர்த்தார். 4-ஆவது வீர­ராக களம் இறங்­கிய பிராட் ஹாட்ச் ஆட்­ட­மி­ழக்­காமல் 46 ஓட்­டங்­களைக் குவித்தார்.

பின்னர் 235 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் கலிஸ் தலைமை­யி­லான லிப்ரா லிஜெண்ட்ஸ் அணி களம் இறங்­கி­யது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 156 ஓட்­டங்­களை சேர்த்­தது. அந்த அணியின் டஸ்­கதே அதி­க­பட்­ச­மாக 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண் டார். இறுதியில் சேவாக் தலை மையிலான அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.virakesari.lk/article/2568

  • தொடங்கியவர்

மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக்கில் ஜெயவர்த்தனே அதிரடி

January 31, 2016

ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் கில்கிறிஸ்டின் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், ஸ்மித்தின் விர்கோ சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

during the Oxigen Masters Champions League 2016 match between Virgo Super Kings and Sagittarius Strikers at Dubai International Cricket Stadium on January 29, 2016 in Dubai, United Arab Emirates.

.

முதலில் துடுப்பெடுத்தாடிய சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி ஜெயவர்த்தனேயின் விளாசலில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. ஜெயவர்த்தனே 47 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 69 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய விர்கோ அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 131 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. அசார் முகமது (51) மட்டும் அரைசதம் கடந்தார். இதன் மூலம் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

http://www.onlineuthayan.com/sports/?p=8616&cat=2

  • தொடங்கியவர்

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்: ஜெயவர்தன அதிரடி சதம்

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்: ஜெயவர்தன அதிரடி சதம்

February 5, 2016  02:47 pm

Bookmark and Share
 
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ்- லிப்ரா லிஜென்ட்ஸ் அணிகள் மோதின. சகிட்டாரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட் தலைவராக இருக்கிறார். லிப்ரா லிஜென்ட்ஸ் அணிக்கு கல்லிஸ் தலைவராக இருக்கிறார்.

கில்கிறிஸ்ட் அணி டாஸ் வென்று துடுபடுத்தாட தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் ஜெயவர்தன ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள. கில்கிறிஸ்ட் 28 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 38 ஓட்டங்கள் சேர்த்தார்.

அடுத்த வந்த இம்ரான் பர்ஹத் 18 ஓட்டங்கள் சேர்த்தார். ஆனால் ஜெயவர்தன அதிரடியாக விளையாடினார். அவர் 60 பந்தில் 10 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 124 ஓட்டங்கள் குவித்தார். இதனால் கில்கிறிஸ்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 228 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கல்லிஸ் அணி களம் இறங்கியது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கில்கிறிஸ்ட் அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • தொடங்கியவர்

ஷேவாக்கின் ருத்ரதாண்டவம்..! - இத...இதத்தானே எதிர்பார்த்தோம்

 

சமீபத்தில் ஷேவாக் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஷேவாக்கின் அதிரடி தொடர்கிறது. சச்சின்-வார்னே கோப்பையில் அதிரடியாக விளையாடி ஜாம்பவான் பவுலர்களை  மிரள வைத்த ஷேவாக் இம்முறை எம்சிஎல்லில் ருத்ரதாண்டவம் ஆடிகொண்டிருக்கிறார்.

ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்களை மட்டும் வைத்து பிரத்யேக டி20 லீக் போட்டி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. துபாயில் நடந்துவரும் இந்த டி-20 தொடரில் சங்கக்காரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ள ஜெமினி அரேபியன்ஸ் என்ற அணியை ஷேவாக் கேப்டனாக வழிநடத்துகிறார். இதுவரை லீக் போட்டியில் விளையாடிய மூன்று போட்டியிலும் ஷேவாக் அணி வெற்றி பெற்று சாதனை படைத்து வருகிறது.

seewang_1.jpg



எம்.சி.எல் லீக் போட்டியில் முதல் பந்தை எதிர்கொண்டதே ஷேவாக் தான். முதல் பந்தை வழக்கம் போல சிக்ஸருக்கு விரட்டினார் ஷேவாக். முதல் இரண்டு போட்டியில் 21 மற்றும் 12 ரன்கள் மட்டுமே குவித்திருந்த ஷேவாக் கடந்த புதன்கிழமை நடந்த போட்டியில் பிரபல வீரர் காலிங்வுட் தலைமையிலான காப்ரிகான் கமாண்டர்ஸ் அணியை நையப்  புடைத்தார். முதல் பந்தில் பவுண்டரியில் ஆரம்பித்த ஷேவாக் 27 பந்துகளில் அதிரடியாக 59 ரன்களை குவிக்க, ஜெமினி அரேபியன்ஸ் எளிதில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கில்கிறிஸ்ட் தலைமையிலான சகிட்டரியஸ் ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் ஷேவாக் தலைமையிலான ஜெமினி அரேபியன்ஸ் மோதியது. முதலில் பேட்டிங் பிடித்தது ஜெமினி அரேபியன்ஸ். உலகின் அபாயகர வேகபந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் முதல் ஓவரை வீசினார். இரண்டாவது பந்தையே சிக்சருக்கு விரட்டினார் ஷேவாக். டேனியல் வெட்டோரி, சண்டொகி, ஷேன் பாண்ட் என  பிரபல டி20 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் அத்தனை பேரின் பந்துவீச்சையும் நொறுக்கித்தள்ளினார்  ஷேவாக். 63 பந்துகளை சந்தித்து பத்து பவுண்டரியையும் பதினோரு சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். எதிரணி கேப்டன் கில்கிறிஸ்ட் ஷேவாக்கின் அதிரடியில் மிரண்டு போனார். ஷேவாக்குடன் இணைந்த சங்கக்காராவும் 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஷேவாக் போலவே இந்த போட்டியில் பவுலிங்கில் மிகப்பெரிய சாதனைபடைத்திருக்கிறார் சண்டொகி. ஷேவாக், சங்கக்காரா, கெம்ப் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தது மட்டுமின்றி, நான்காவது பந்திலும் நவேத் உல் ஹசனை வீழ்த்தி டி20 போட்டியில்  நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்  வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் சண்டொகி.  சண்டோகியின் கடைசி ஓவரில் மட்டும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஐந்தாவது விக்கெட் ரன் அவுட்டாக அமைந்தது. நான்கு ஓவர் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 29 ரன்கள்

விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் அள்ளினார் சண்டொகி.


 

வயசானாலும் ஷேவாக் ஸ்டைல் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது. பீல்டிங்கில் ஷேவாக் கொஞ்சம் சொதப்பினாலும் பேட்டிங்கில் பழைய ஷேவாக் அப்படியே இருக்கிறார். அப்போதும், இப்போதும் எந்த பவுலராக இருந்தாலும் முதல் பந்தில் இருந்தே நொறுக்க ஆரம்பித்துவிடுகிறார் ஷேவாக். ஷேவாக் மட்டும் இருபது ரன்களை தாண்டிவிட்டால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனம் தான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.  இன்றைய அதிரடி சதம் மூலம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகியிருக்கிறார் ஷேவாக்.

சிங்கங்கள் வயதானாலும் கம்பீரமாக உறுமத்தானே செய்யும்.

http://www.vikatan.com/news/sports/58620-virender-sehwag-scores-blazing-in-mcl.art

முழு விளையாட்டு வீரர்களும் துபாயில் நிற்கின்றார்கள் .

முரளி சொன்னமாதிரி முதல் பந்தில் லாராவை அவுட் ஆக்கினார் .

  • கருத்துக்கள உறவுகள்

முரளியையும்,லாராவையும் பார்க்க சகோதரங்கள் மாதிரி கிடக்குது...இன்னும் சொல்லப் போனால் லாராவை விர முரளி கறுப்பு

  • தொடங்கியவர்

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஜெமினி அரேபியன்ஸ்

February 12, 2016

மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் முதல் அரையிறுதியில் ஜெமினி அரேபியன்ஸ் 10 ஓட்டங்களால் சஹிட்டரியஸ் ஸ்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஷேவாக் தலைமையிலான ஜெமினி அரேபியன்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான சஹிட்டரியஸ் ஸ்ரைக்கர்ஸ் அணியும் மோதின.

Generated by  IJG JPEG Library

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெமினி அரேபியன்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ஷேவாக் அதிரடியில் மிரள வைத்தார். அவர் 50 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சர் என 83 ஓட்டங்கள் குவித்தார். இதன் பின்னர் வந்த குமார் சங்கக்காரா தன் பங்கிற்கு அதிரடி காட்ட அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது. அவர் 43 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 62 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவரில் ஜெமினி அரேபியன்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சஹிட்டரியஸ் ஸ்ரைக்கர்ஸ் அணிக்கு கில்கிறிஸ்ட் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜெயவர்த்தனே அதிரடி காட்ட அந்த அணி வெற்றி இலக்கை நெருங்கியது. அவர் 52 பந்தில் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வந்த மஸ்டார்ட் வான வேடிக்கை காட்டினார்.

இருப்பினும் அந்த அணியால் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் ஜெமினி அரேபியன்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அதிரடியில் அசத்திய மஸ்டார்ட் 18 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சர் என 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9162&cat=2

  • தொடங்கியவர்

bi9uoi.png

o50oqh.png

  • தொடங்கியவர்

2lm0xl2.png

2wc4p7c.png

MCL 20 20 போட்டித்தொடரின் சம்பியன் ஆனது சங்கா மற்றும் முரளி விளையாடிய சேவாக் தலைமையிலான ஜெமினி அரேபியன்ஸ் அணி

இறுதிப்போட்டியில் லியோ லயன்ஸ் அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது ஜெமினி அரேபியன்ஸ் அணி

12744143_968557233191470_791373708921908

12705663_968557273191466_114843780459493

10632706_968557303191463_678397988737864

12733452_968557319858128_727227323670362

 

  • தொடங்கியவர்
சங்கா, முரளியின் அணி சம்பியனானது
 
14-02-2016 07:43 AM
Comments - 0       Views - 4

article_1455440982-TamilGemArMCL-1.jpgமாஸ்டர்ஸ் சம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் சம்பியன்களாக, ஜெமினி அரேபியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. லியோ லயன்ஸ் அணிக்கெதிரான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் வெற்றிபெற்றே, ஜெமினி அரேபியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெமினி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜஸ்டின் கெம்ப் ஆட்டமிழக்காமல் 32 (29), குமார் சங்கக்கார 30 (26), றிச்சர்ட் லீவி 21 (29) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் பிடல் எட்வேர்ட்ஸ், ஸ்கொட் ஸ்ட்ரைரிஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

131 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய லியோ அணி, 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றுத் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹேமிஷ் மார்ஷல் 46 (40), பிரையன் லாரா 28 (25) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் நவீட் உல் ஹஸைன் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, கைல் மில்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முத்தையா முரளிதரன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக நவீட் உல் ஹஸைனும், இத்தொடரின் நாயகனாக குமார் சங்கக்காரவும் தெரிவாகினர்.

- See more at: http://www.tamilmirror.lk/166014#sthash.lblvmTY3.dpuf

12670597_985479604834067_118854924948549

12729052_985480041500690_408499375576917

12742543_985479954834032_315082734765768

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.