Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வஜன வாக்கெடுப்பு மூலமே அரசியலமைப்பு மாற்றப்படும்! – பிரதியமைச்சர் அஜித் பெரேரா 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வஜன வாக்கெடுப்பு மூலமே அரசியலமைப்பு மாற்றப்படும்! – பிரதியமைச்சர் அஜித் பெரேரா 
[Wednesday 2015-12-30 08:00]
1972 அரசியலமைப்பு போன்று  புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

1972 அரசியலமைப்பு போன்று புதிய அரசியலமைப்பு மக்கள் மீது திணிக்கப்படமாட்டாது. சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே இது நிறைவேற்றப்படும் என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணைக்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி என்று கூறிக் கொள்பவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

  

நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக ஒழித்து அதனை மக்கள் தெரிவு செய்யும் எம்.பிக்கள் அடங்கிய அமைச்சரவைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பினூடாக மாகாண சபை முறையை ஒழிக்கும் திட்டம் கிடையாது.சகல கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், சிவில் அமைப்புகள் பொதுமக்கள் அடங்கலாக சகல தரப்பினரதும் கருத்துக்களை பெற்றே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்.

பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும் பிரேரணையின் ஊடாக 21 பேர் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்படும். இதற்கு பிரதமர்,எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பதவி வழியாக தெரிவாவதோடு எனைய உறுப்பினர்கள் சகல கட்சிகள் , சிறுகட்சிகள் மற்றும் சமூக பிரிவினரை உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். வெளிப்படையாக சகலரதும் கருத்துக்கள் பெறப்பட்டே புதிய யாப்பு தாயாரிக்கப்படும். மக்களின் கருத்துக்களை பெற 21 பேரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மக்களினதும் மக்கள் பிரதி நிதிகளினதும் கருத்துக்களை பெற்று அதனை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் குழுவுக்கு வழங்கும். அரசியலமைப்பு சபையே யாப்புத் திருத்தங்களை முன்னெடுக்கும். எமது நாட்டுக்கே உரிய தனித்துவத்துடன் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும். ஜக்கிய இலங்கைக்குள் தான் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படும். பெடரல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள சகல தரப்பினருக்கும் இடையில் உடன்பாடு காணப்படுகிறது என்றார்.http://www.seithy.com/breifNews.php?newsID=148137&category=TamilNews&language=tamil

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.