Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொமிட்டி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

கொமிட்டி.....சங்க காலம் தொட்டு இன்றுவரை சங்கங்கள் அமைப்பது என்பது எங்களது இரத்தத்தில் ஊறிய ஒன்று.இன்று பலர் தமிழ் வளர்க்க,சமயம் வளர்க்க,விளையாட்டு,விடுதலை இன்னும் பல விடயங்களை வளர்ப்பதற்காக இந்த சங்கங்களை அமைத்து அதற்கு ஒரு நிர்வாக குழுவை உருவாக்கி அதில் தலைவர்,செயலாளர்,காசாளார் பதவிகளை  அடிபட்டு பெற்று சமுதாயத்தில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.ஆனால்  சங்கங்களது  நோக்கங்களை நிறை வேற்றுவதிலும் பார்க்க  தனி நபர்களின் நோக்கங்களும் ஆசைகளும் இந்த சங்கங்கள் மூலம் நிறைவடைகிறது.இது தாயகத்தில் அரசியல் ,ஆயுதப்போராட்டம் போன்றவற்றில் தொடங்கி இன்று புலம் பெயர்ந்த தேசங்கள்வரை செல்கின்றது.

சங்கங்களை உருவாக்குவதில் இருக்கும் ஒற்றுமை அதை உடைப்பதிலும் எம்மவருக்கு உண்டு.ஒரு சங்கம் தொடர்ந்து தனது பணிகளை எழுதப்படாத விதிகளின் படி பல வருடங்களாகதொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது அதில் சிலபிழைகளை கண்டு பிடித்து புதிய கொமிட்டியை உருவாக்கி பிரிவினை மக்களிடையே உருவாக்குவதில்  நாம் சலைத்தவர்கள் அல்ல என பல சங்கங்களில் எம்மவர்கள் நிறுபித்துள்ளனர்.

மூத்த பிரஜைகள் சங்கம்,ஊர்சங்கங்கள்,பாடசாலை சங்கங்கள் இன்னும் பல இதில் அடங்கும்.இதற்கு முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் பொதுநலத்தை விட சுயநலம் ஒரு சில அங்கத்துவர்களிடையே இருப்பதை காணலாம்.

இந்த ஒரு சிலர் பெரிய மாற்றத்தையே அந்த சங்கத்தில் ஏற்படுத்தக்கூடியவர்களாக இருப்பர்.இந்த ஒரு சிலரால் ஏற்படும் மாற்றம் நன்மையை விட தீமையை அதிகம் சமுகத்திற்கு ஏற்படுத்தும்,ஏற்படுத்தியும் இருக்கு.இந்த பிரிவினை உண்டாக்க சிலர் உள்ளிருந்து வேலை செய்வார்கள் சிலர் வெளியிலிருந்து நல்லவர் போல் நடித்து பிரிவினையை உருவாக்கி மனதினுள் சிரித்து மகிழ்வார்கள்.

அண்மையில் ஒரு பஜனை சங்கத்திலும் இப்படி ஒரு இழுபறி நிலை ஏற்பட்டது.என்னடா பஜனை சங்கத்திலயும் இழுபறியா என்று நீங்கள் நினைப்பது விளங்குது ,என்ன செய்வது எங்கன்ட விதி  அதிலயும் புகுந்து விளையாடிட்டு.

இருபதைந்து வருடங்களுக்கு மேலாக பஜனை பாடிக்கொண்டிருந்த ஒரு  சங்கத்துக்கே ஆப்பு வைச்சிட்டாங்கள் என்றால் பாருங்கோ.

 

 

அன்று  வெள்ளிக்கிழமை எங்கன்ட இந்துசனங்கள்  க்திமயமாக இருப்பதாக சக இந்துக்களுக்கு காட்டுவதற்காக வேஸ்டி நஷனல் அணிந்து பஜனை பாடுவதற்கு தயாராக மண்டபத்தில் நின்றார்கள் .அடியேனும் பஜனை பாட மண்டபத்திற்கு செல்லும் பொழுது, வாசலில் வேஸ்டியை மடிச்சு கட்டி கொண்டு வழமைக்கு மாறாக குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார் கந்தர்.அவரது முகம் சிவந்து கோபத்தின் உச்சத்தை காட்டிகொண்டிருந்தது.

அவரிடம் பேச்சு   கொடுக்காமல் செல்ல முயற்சிக்கும் பொழுது, "டெய் சுரேஸ் என்னடா பார்க்காத மாதிரி போறாய் இங்க வாடா"

"இல்லை அண்ணே உள்ள போய்யிட்டு வந்து ச‌ந்திக்கதான் இருந்தனான்"

"நீ காய்வெட்டிட்டு போக பார்த்தனீ எனக்கு தெரியுமடா ,உங்கன்ட குணம்"

"இல்லையண்ணை, சத்தியமா உங்களை சந்திக்கதான் இருந்தனான் "

"சரி, சரி  உங்க உள்ள புடுங்குபாடு நட‌க்குது நீ கேள்வி பட்டனீயோ"

"பஜனை பாடுற இடத்தில என்ன புடுங்குபாடு"

"எல்லாம் யார் தலமை தாங்கி பாடுறது என்றுதான்."

"இவ்வளவு காலமும் ஒழுங்கா  பாடிக்கொண்டு தானே வந்தவ‌ங்கள், இருந்தால் போல‌ என்ன பிரச்சனை"

"அதடாம்பி தலமைதாங்கி பாடுற ஆளும்,பக்கவாத்தியம் வாசிக்கிற ஆட்களும் பிழையா செய்யினம் என்று ஒரு கோஸ்டி கதையை கட்டிகொண்டு திரியுது தங்களிடம் பாடுற பொறுப்பை தந்தால் தாங்கள் ஒழுங்காக பாடி தாளம் போடுவினம் என்று அடம் பிடிக்கினம்"

"அதை எப்படி அண்ண விடுறது அனுபவம் இறுக்கிற ஆட்கள் பாடும்பொழுது உவையள் புதுசா வந்த ஆட்கள் பாட  அனுமதிக்க முடியும்,கொஞ்சமாவது அனுபவம் வேணும்தானே"

"நீ அப்படி சொல்லுறாய் அந்த கோஸ்டி சொல்லுது தாங்கள் பஜனை பாடினால் வெள்ளை,சிங்களவன் எல்லாம் வந்து பாடுவாங்கள் என்று"

"சிங்களவனோ ,என்ன அண்ணே  புது கதையா கிடக்கு"

"நீ இருந்து பார்  உந்த பஜனை கோஸ்டி ஒரு நாளைக்கு சிங்களவின் பிரதிநிதி ஒருத்தனை பிரதம விருந்தினராய் அழைக்காவிடில்"

"அதுக்கேன்ன வந்தா வந்திட்டுப்போகட்டும்"

"டேய் நீ என்னடா சொல்லுறாய் எங்கன்ட சனம் இவ்வளவு நாளும் கட்டிகாத்த ஒழுங்கை உவங்கள் நேற்று வந்தவங்கள் குழப்ப முடியுமோ , சரி வா நேரம் போகுது உள்ள போய்  பார்ப்போம்"

இருவருமாக உள்ளே சென்றோம் .பஜனை பாட வந்த மக்களுக்கு என்ன நடக்குது என்று தெரியவில்லை.அவர்களுக்கு தங்களுடைய பிள்ளைகள் நன்றாக பஜனை பாடினால்  சரி என்று இருந்தார்கள் ஆனால் இரு கோஸ்டிகள் மட்டும் உசாராக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

" அண்ண நீங்கள் சொன்னது சரிதான் போல கிடக்கு ,கோஸ்டி கோஸ்டியாக நின்று கதைச்சுக்கொண்டிருக்கினம்,எதாவது அடிபாடு வருமோ "

 

"சும்மா,விசர்கதை கதைக்கிறாய் அவங்கள் நல்லா படிச்சவங்கள் ஒரு நாளும் உந்த கீழ்தரமானசெயலில் ஈடுபடமாட்டாங்கள்,எதோ தேர்தல் மூலம் தெரிவு செய்யப்போறாங்களாம்"

 

"தேர்தல் மூலமோ,மானம்கேட்ட வேலை"

"ஏன்டாம்பி எங்கன்ட பிரதமரையே தேர்தல் மூலம் மாத்திற‌ம் ,பஜனை கோஸ்டியை மாற்றினால் ,தப்பே"

"பிரதமரை மாத்திறோம் தான், ஆனால் தொடர்ந்து பாரளுமன்ற பிரதிநிதியாக இருந்து கட்சிக்கு பல வருடங்கள் உழைத்தவர்களைதான் பிரதமராக நியமிக்கிறார்கள்,றோட்டில போரவரை கூப்பிட்டு நியமிப்பதில்லை"

நாங்கள் இருவரும் மூலையில் நின்று கதைப்பதை கண்ட கனகர் ,தான் அறிந்த  விடுப்பை எங்களுக்கு சொல்வதற்காக ஒடி வந்தார்.கனகரும்,கந்தரும் ஒரே வயசுக்காரர்.கந்தரின் பேரப்பிள்ளைகள் பஜனை பாடுவதற்கு வாறவர்கள் ஆனால் கனகரின் பேரப்பிள்ளைகள் அந்தப்பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை,ஆனல் ஊர் விடுப்பு கதைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

"எல்லாம் சப்பேண்டு போயிட்டு"

"ஏன் "

"தேர்தல் வைக்காமல், புதுசா வந்த மொமிட்டிக்கு எல்லாத்தையும் கொடுத்து போட்டாங்கள்"

"அது நல்லம் தானே அண்ணே"

அடேய் நீ சின்ன பெடியன் உதுல இருக்கிற தில்லுமுல்லுகளை பற்றி தெரியாது.

என்னைப்பார்த்து "ஒமாடா" என்று கந்தரும் சொல்லிய பின்பு அவர்கள் இருவரும்  விடுப்பு கதைக்க தொடங்கிவிட்டார்கள்.

"தேர்தல் வைக்காமல் புது கொமிட்டியை விட்டது தப்பு கண்டியளோ,நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறியள் கந்தர்"

"அதுதானே அனுபவமில்லாமல் உவங்கள் என்னைத்தை செய்யப்போறாங்களோ?"

"கும்பலில  கோவிந்தா பாடுறதற்கு என்னத்துக்கு  அனுபவம் என்று நினைத்திட்டாங்கள் போல"

"சாதாரண பஸ் டிரைவருக்கே எல், பி என்று கொடுத்து ஒட விட்டபின்பு தானே பொறுப்பை கொடுக்கிறாங்கள்."

"ஆனால் உவங்கள் எடுத்த உடனே ஒடப்போறாங்கள் ,அதுக்கு பழைய பாட்டுக்காரர் உடன் பட்டிருக்கினம்,உண்மையை சொன்னால் இரண்டு கோஸ்டிக்கும் பஜனை பாடும் மாணவர்களில் அக்கறை இல்லை கண்டியளோ"

"அக்கறையில்லை என்று சொல்ல முடியாது ,டிசன்டா விட்டு விலகிட்டினம் போல"

"என்ன மயிர்  டிசனட், நாளைக்கு இன்னொரு கோஸ்டி உந்த பஜனை கோஸ்டிக்கு மூடுவிழா வைக்க வேணும் என்ற கெட்டஎண்ணத்துடன் இன்னோரு கொமிட்டியை உருவாக்கி உள்ள வந்தால் இவ்வளவு காலமும் எங்கன்ட சனம் கஸ்டப்பட்டு கட்டிகாத்த இந்த பஜனைக்குழுவை யார் காப்பாற்றுவது."

"சரியா சொன்னீங்கள்,சட்டங்களை மதிக்க தெரியாதசனத்திற்கு டிசன்ட்,ஜென்டில்மன்ட் அக்கிறிமன்ட் எல்லாம் சரிபடாது."

"இரண்டு வருடங்கள் தொடர்ந்து பஜனை பாடியவர்கள்,தாளம்போட்டவர்கள் தான் தலைமை தாங்கி பாடலாம் என்று சட்டம் போட வேண்டும்"

அண்ணவையள் நீங்கள் இதில் இருந்து கதைப்பதால் ஒன்று நடக்க போறதில்லை அவங்கள் தாங்கள் நினைச்சதைதான் செய்வாங்கள் நீங்கள் நடக்கிறஅலுவல்களை போய் பாருங்கோ என்று கூறி அங்கிருந்து அகன்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்... என்னத்தைச் சொல்லுறது....! ஈகோ பிரச்சனையால ஒரு பாடசாலையே ஐ கோ என்டு போயிட்டுது...,பதவிப் பிரச்சினையில காலூன்றின  கழகமே கழன்டு ஓடீட்டுது... ! :)

டேக்கிட் ஈஸி புத்தன், இது எல்லாம்  நோர்மல்தானே எம்மவர்க்கு....:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.