Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமை, கூட்டு ஒத்துழைப்பு, சகவாழ்வை பாதுகாப்பதே புத்தாண்டின் இலட்சியங்கள் – ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை, கூட்டு ஒத்துழைப்பு, சகவாழ்வை பாதுகாப்பதே புத்தாண்டின் இலட்சியங்கள் – ஜனாதிபதி

[ Friday,1 January 2016, 05:02:59 ]   
president.jpg

ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே புத்தாண்டில் எமது இலட்சியங்களாக அமைதல் வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

எண்ணற்ற எதிர்பார்ப்புகள் நம் எதிரே சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பதாகவும் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரியில் எங்களுடையதும் எமது பரம்பரையினரதும் வாழ்வினை புதியதொரு திருப்புமுனைக்கு இட்டுச்சென்ற ஒரு முக்கியமான பிரவேசத்தின் ஊடாக மிகவும் பலம்வாய்ந்த நிலைபேறான நோக்கத்துடன் முன்னோக்கிய பயணத்தை துரிதப்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கிய தடையினை தாண்டவேண்டியதொரு கட்டத்தை நாம் இன்று கழிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி முதலாம் திகதி தான் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், வலியுறுத்திய ஜனநாயக சுதந்திரம், ஊழல் மற்றும் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி, நல்லிணக்கம் ஆகியவற்றைப் போன்றே இல்லாதொழிக்கப்பட்டிருந்த சர்வதேசத்தின நல்லெண்ணம் என்பவற்றை மீண்டும் ஏற்படுத்தி சாதகமான விளைவுகளை இன்று அனுபவிப்பது கடந்த ஜனவரி மாதத்தில் நாம் கொண்ட இலட்சியத்தின் பயனாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் தன்மீதுகொண்ட நம்பிக்கையைப் பாதுகாத்து தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வெற்றிவாகை சூடியதொரு ஆண்டாக 2015ஆம் ஆண்டினை மாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலர்ந்துள்ள 2016ஆம் ஆண்டு அனைவருக்கும் ஓய்வற்றதொரு ஆண்டாக அமைய உள்ளதோடு, 2 மில்லியன் மக்களின் எதிர்காலத்திற்காக ஆரம்பித்த பாரிய வேலைத்திட்டத்தின் ஊடாக ஈடு இணையற்ற ஓர் பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குரோதமற்ற சிந்தனைகளும் அதிகாரத்தை அடைந்து கொள்வதற்கு பதிலாக அதிகாரத்தை விட்டுக்கொடுத்து மக்களை வலுவடையச் செய்யும் பணியுடன் ஸ்ரீலங்காவின் அரசியல் வடிவத்தினை முற்றுமுழுதாக மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவையனைத்தும் மலர்ந்துள்ள புத்தாண்டின் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புடையதாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்மத்தியில் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைப்பிணைப்பு, கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னோக்கி நகர்த்துவதன் ஊடாகவே வெற்றியின் ஒட்டுமொத்த பயனை அடைந்துகொள்ள முடியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் எமது பொது நோக்கமாக ஒற்றுமை மற்றும் அதனூடாக வலுவடையும் கூட்டு ஒத்துழைப்பினையும் சகவாழ்வினையும் பாதுகாப்பதே எமது இலட்சியமாக அமைதல் வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த இலட்சியத்துடன் பிரார்த்தனைகள் நிறைவேறும் புத்தாண்டில் காலடி எடுத்துவைக்கும் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மலர்ந்துள்ள இப்புத்தாண்டு சௌபாக்கியமான ஆண்டாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

http://ibctamil.com/news/index/16162

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையோடு வாழ்வோம். நம்பி நம்பி வாழ்வோம், நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புவோம். அதுவும் 16ல் அனைத்தும் அழகு. நம்பியும் அழகு, நங்கையும் அழகு. tw_heart:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.