Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிருனிகா கடத்தியமை நிரூபணம் ?

Featured Replies

ஹிருனிகா கடத்தியமை நிரூபணம் ?

ஹிருணிகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தை பக்கச்சார்பற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களின் கூட்டு இயக்கம் வேண்டுகோள்:-

ஹிருனிகா கடத்தியமை நிரூபணம் ? - குளோபல் தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு:-


பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிமேசந்திர கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்டமை நிரூபணமாகக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தெமட்டகொட பிரதேசத்தில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், கொலன்னாவயில் அமைந்துள்ள ஹிருனிகாவின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை நிரூபணமாகியுள்ளது.

கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் மகள் ஒருவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட நபர் ஹிருனிகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர், நேற்றைய தினம் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கடத்தல் குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி சில ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஹிருனிகாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தாயுடன் தொடர்பு பேணிய நபரை தாமே அடையாளம் காட்டியதாகவும், அடையாளம் காட்டப்பட்ட நபர் ஹிருனிகா மேடமிடம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் சிறுமி காவல்துறையினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் மீளவும் ஹிருனிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஹிருணிகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தை பக்கச்சார்பற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களின் கூட்டு இயக்கம் வேண்டுகோள்:-

ஐக்கிய தேசிய கட்சிநாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தை பக்கச்சார்பற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களின் கூட்டு இயக்கம் என்ற அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.


குறிப்பிட்ட அமைப்பின் கூட்டு ஏற்பாட்டாளர் சமன் ரத்தினப்பிரிய இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


தெமட்டகொடையில் 34 வயது நபரை கடத்தியது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் மெய்ப்பாதுகாவலர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயம் குறித்து பொலிஸார் சமர்ப்பித்துள்ள அறிக்கைளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.


சட்டத்தினை அனைவர் விடயத்திலும் ஓரேமாதிரியாக பிரயோகிக்கவேண்டும்,இந்த சம்பவத்தினை முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் ஓப்பிட முடியாது என்ற போதிலும் மக்கள் மாற்றத்திற்காக, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே வாக்களித்தனர் என்பதை கருத்தில்கொள்;ளவேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.


பக்கச்சார்பற்ற விதத்தில் தங்கள் கடமைகளை செய்துவரும் நீதித்துறை அதிகாரிகளை  இடமாற்றம் செய்வதை  நீதிச்சேவை ஆணைக்குழு தவிர்க்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127413/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.