Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கம்ஃபர்ட் வுமன் - ஜப்பானின் வரலாற்றுப் பிழை!

Featured Replies

கம்ஃபர்ட் வுமன் - ஜப்பானின் வரலாற்றுப் பிழை!

 

இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பிரச்னை போலவே, தென்கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்னைகளில் ஒன்று ஜப்பானின் போர்க்காலகொடுமைகள். அதில் மிக முக்கியமான பிரச்னை கம்ஃபோர்ட் வுமன் (comfort women) என்றழைக்கப்படும், ஜப்பான் ராணுவத்தால், கடத்திசெல்லப்பட்டு ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு, பாலியல் அடிமைகளாக மாற்றப்பட்ட பெண்களின் துயரங்கள். இந்த பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக, பல வருடங்களுக்காக ஜப்பானிடம் நீதி கேட்டு போராடி வருகிறது தென்கொரியா.

comfort%20women01.jpg

இந்த பெண்களின் நினைவுச்சின்னமாக, அவர்களின் துயரங்களின் குறியீடாக, இளம்பெண் ஒருத்தி, கொரிய உடை அணிந்து, நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற வெண்கல சிலை ஒன்றை 2011-ல் ஜப்பானின் தூதரகத்திற்கு அருகில் நிறுவியது தென்கொரியாவின் பெண்கள் அமைப்பு (Korean council for women).  இதற்கு ஜப்பான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சிலையை நீக்க வேண்டும் என தென்கொரியாவிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், இன்னும் பலநூறு சிலைகளை நாடு முழுக்க நிறுவ வேண்டும் எனக்கேட்கிறது தென்கொரியாவின் பெண்கள் அமைப்புகள். இதற்கிடையே இந்த வரலாற்றுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த திங்கட்கிழமை ஜப்பான்-தென்கொரியா இரண்டு நாடுகளும், இந்த பிரச்னையை இத்துடன் முடித்துக்கொள்ள சம்மதம் தெரிவித்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இது இன்னும் தென்கொரிய பெண்களை கொதிப்படைய செய்திருக்கிறது? ஏன்?

என்னதான் பிரச்னை?

கடந்த நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் வரலாறு. இந்தியாவை பிரிட்டிஷ் அரசு காலனி ஆதிக்கம் செய்தது போலவே, ஜப்பான் இம்பீரியல் ராணுவம் எனப்படும், ஜப்பான் ராணுவப்படைகள் சீனா, தைவான், கொரியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பர்மா, தாய்லாந்து, வியட்நாம், ஹாங்காங் போன்ற பகுதிகளில் ஆட்சி செய்து வந்தது. அப்போது ஜப்பான் ராணுவ வீரர்களால், அந்த பகுதிகளில் நிறைய கொடுமைகள் நடந்தன. குறிப்பாக பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குதல், பலாத்காரம் செய்தல், கொலை செய்தல் போன்ற எண்ணற்ற பிரச்னைகள் ஜப்பான் ராணுவ வீரர்களால் வர, அந்த பகுதிகளில் ஜப்பான் ஆட்சிக்கு எதிராக, மக்கள் குரல்கொடுக்க ஆரம்பித்தனர். ஜப்பான் ராணுவத்திற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின.

நிறைய பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதால், ஜப்பான் வீரர்களும் பாலியல் நோய் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகினர். இதனைத்தடுக்க ஜப்பான் அரசு ஒரு மோசமான வழியை தேர்ந்தெடுத்தது. தனது ராணுவ வீரர்களின் உடல் தேவையை தானே, பூர்த்தி செய்துவிட்டால், இந்த குற்றங்கள் நடப்பது குறையும் என நம்பியது. இதற்காக முதல்கட்டமாக ஜப்பான் நாட்டில் பாலியல் தொழில் செய்து வந்த பெண்களை, தேர்ந்தெடுத்து தன் ராணுவ வீரர்கள் இருக்கும் பாசறைகளுக்கு இதற்காக அனுப்பி வைத்தது. ஆனால், பெரிய பரப்பை நிர்வகிக்கும், வீரர்களின் எண்ணிக்கைக்கு இந்த சொற்ப எண்ணிக்கை போதவில்லை. எனவே, தனது காலனி நாடுகளின் மீது கைவைத்தது. கொரியாவில் இருந்து நிறைய பெண்களை வலுக்கட்டாயமாக கடத்தி சென்று, பல்வேறு நாடுகளுக்கு பாலியல் அடிமைகளாக அனுப்பத் தொடங்கியது.

கொடுமையின் உச்சமாக, இதற்கு ராணுவ வீரர்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, வீரர்களின் பாலியல் பசியை தீர்ப்பதற்காகவே, 1932-ல் தனது கட்டுப்பாட்டில் இருந்த சீனாவின், ஷாங்காய் நகரில், Comfort station என்ற பெயரில், இந்த பெண் அடிமைகளை சுவைப்பதற்காக, வதைக்கூடங்களையும், முதன்முதலில் தொடங்கியது. பின்னர் நிறைய இடங்களில், இதுபோன்ற வதைக்கூடங்களை நிறுவி, அங்கு பல நாட்டு இளம்பெண்களை கொண்டு வந்து குவித்தும், அடைத்து வைத்தும், ஜப்பான் வீரர்களுக்கு உணவாக்கியது. பிற்பட்ட சமூகப்பெண்கள், ஏழைப்பெண்கள், இளம்பெண்கள் என கொரியா, சீனா, தைவான் போன்ற பகுதிகளில் இருந்து நிறைய பெண்களை கடத்தி அனுப்பி வைத்தது.

comfort%20women03.jpg

பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில், பெண்கள் ராணுவக்கூடங்களில், செவிலியர்களாக பணிபுரியத்தேவை என்று ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் அடிமைகளாக மாற்றியது. முழு ஆதிக்கத்தில் இருக்கும் பகுதிகளில், செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து பெண்களை, அழைத்துச்செல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து சென்றது ஜப்பான். இரண்டாம் உலகப்போர் 1939-ல் தொடங்க, கூட்டுப்படைகளுக்கு எதிராக, கடும் சவாலை எதிர்கொண்டு நின்றது ஜப்பான். அப்போது வீரர்களுக்கு, தேவையான பெண்களை நேரடியாக ஈடுபட்டு, அனுப்பி வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட, தனது கட்டுப்பாட்டில் இருக்கும், பகுதிகளின் உள்ளூர் தலைவர்களை மிரட்டி, தன் வீரர்களுக்கு பெண்களை அனுப்ப சொன்னது ஜப்பான்.

இப்படி கடத்தப்பட்டு கொண்டுசென்ற பெண்கள் அனுபவித்த இன்னல்களின் துயரங்கள் சொல்லி மாளாது. நிறைய சொல்லவும் முடியாது. ஒரே பெண்ணை, பாசறைகளில் இருக்கும், மொத்த வீரர்களும் சேர்ந்து சிதைப்பார்கள். அடி, உதை என வக்கிரத்தோடு அணுகுவார்கள். இரவும், பகலுமாக நாள்முழுக்க, இந்த வேட்டை தொடரும். இப்படி தங்கள் பசி தீர்ந்த பிறகு அல்லது நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, துப்பாக்கியால் கதை முடித்து விட்டு, அடுத்த வேட்டைக்கு தயாராவார்கள். தங்கள் கண்முன் நடக்கும் கொடுமைகளை பார்த்து, பயந்தே இறந்த பெண்களும் உண்டு.

'இனி, இவள் வேலைக்கு ஆகமாட்டாள்' என நினைக்கும் பெண்களை, தங்கள் விடுதியில் இருந்து துரத்தி விடுவார்கள். இப்படி சென்ற பெண்கள் பல நாட்கள் பட்டினி கிடந்து, நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள் பல்லாயிரம் பேர். இதற்கெல்லாம் முடிவாக, பேரிடியாக ஜப்பான் தலையில் வந்து விழுந்தது இரண்டாம் உலகப்போரின் முடிவு. சரணடைந்து விட்டது ஜப்பான். பின்னர் பல இடங்களில் ஜப்பானின் ஆதிக்கம் முடிவுக்கு வர, ஜப்பான் செய்த கொடுமைகளும் மெல்ல, மெல்ல வெளியே வந்தது. இப்படி பல்வேறு நாடுகளில் இருந்து, கடத்திக்கொண்டு செல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மட்டுமே 4 லட்சத்திற்கும் மேல். ஆனாலும் பலரும் நாடு திரும்பவில்லை. போர் முடிவுக்கு பின்பு, உயிர்வாழ்ந்த இந்த பெண்களின் கதைகள் மெல்ல மெல்ல, வெளி உலகிற்கு வந்து அதிர்ச்சியை கிளப்பியது. இந்த குற்றம் நடந்ததற்கான ஆதாரங்களை அடுக்கடுக்காக வெளியிட்டது சீனா.

ஏன் தென்கொரியாவிற்கு மட்டும் ஒப்பந்தம்?

இந்த கொடுமையில் அதிகம் பாதிக்கப்பட்டது கொரியாவின் பெண்களே. 1940-ல் பாலியல் நோய் தாக்கி சிகிச்சை எடுத்த பெண்களின் எண்ணிக்கையில் 51 சதவீதம் கொரிய பெண்களே. 36 சதவீதம் சீனாவின் பெண்கள். இதனை மனித உரிமை மீறலாக மட்டுமில்லாமல், தனது நாட்டுப்பெண்கள் மீது இழைத்த கொடுமையை, அவமானமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், கருதுகிறது தென் கொரியா. 1951-ல் முதன்முதலில் இந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, ஜப்பானிடம் நஷ்டஈடு கேட்டது தென்கொரியா. அப்போது தொடங்கிய பேச்சுவார்த்தை ஒருவழியாக 1965-ல் இறுதிக்கட்டத்தை எட்டி, ஜப்பான் தென்கொரிய அரசுக்கு, 800 மில்லியன் டாலர்களை அளித்தது. ஆனால், இது அரசுக்கு கொடுக்கப்பட்ட பணமே தவிர, ஜப்பான் இழைத்த குற்றத்திற்கு தண்டனையும் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியும் அல்ல என மீண்டும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

comfort%20women02.jpg

பின்னர் 1994-ல் மீண்டும் ஜப்பான் தலையிட்டு, பாதிக்கப்பட்ட ஆசியப்பெண்களுக்காக, ஆசியப்பெண்கள் நிதி (Asian women’s Fund) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் நிதி திரட்டி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதோடு அப்போது இருந்த ஜப்பான் பிரதமர், டோமிச்சி முரயாமா ஜப்பான் இழைத்த தவறுக்காக, தனது கையெழுத்திட்ட, மன்னிப்பு கடிதம் ஒன்றையும் அந்த பெண்களுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், இந்த நடவடிக்கை மூலம், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் தரும் நிதியே வருமே தவிர, அது ஜப்பானின் பணம் கிடையாது. இதுவும் நாடகம் என மீண்டும் இந்த பிரச்னையை தொடர்ந்தனர் பாதிக்கப்பட்ட பெண்கள். ஜப்பான் அரசு நடந்த குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், அதற்காக தற்போது என்ன செய்ய முடியும்? கைவிரித்தது. இந்த பிரச்னை உலக அளவில் பெரிதாக பேசப்படுவதும், ஜப்பானுக்கு தலைவலியை கொடுத்தது. பாலியல் அடிமைகளாக சிதைக்கப்பட்ட பெண்களில், 64 பேர் மட்டுமே தற்போது தென் கொரியாவில் உயிருடன் இருக்கின்றனர். 2007-ல் மீண்டும் ஜப்பான் அரசு, எங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற இவர்களின் குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கியது.

ஒப்பந்தத்திற்கு இப்போது என்ன அவசியம் ?

ஆசியக்கண்டத்தில், மிகவும் வேகமாக வளர்வதுடன், அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாடுகள் என்றால் அது சீனாதான். அடுத்த இடத்தில் இருந்து பயம் காட்டுவது வடகொரியா. இவர்களின் எதிர்ப்பையும், சவாலையும் வருங்காலங்களில் சமாளிக்க, ஆசியக்கண்டத்தில் தனது நட்பு நாடுகளை அதிகரிக்க அமெரிக்கா விரும்புகிறது. எனவே அண்டை நாடுகளான ஜப்பானையும், வடகொரியாவின் எதிரியான தென்கொரியாவையும் இணைக்கப்பாடுபடுகிறது. இதனை ஜப்பானும், முக்கியமானதாக கருதுகிறது. எனவே, வர்த்தகத்திலும், ராணுவத்திலும், தென்கொரியாவின் பலம் நிச்சயம் வலுசேர்க்கும் என ஜப்பான் நம்புகிறது. ஆனால், இந்த உறவுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது இந்த பாலியல் அடிமைகள் பிரச்னை. தென் கொரிய அரசே விரும்பினாலும், கூட இந்த பிரச்னையை விடமுடியாத அளவிற்கு, மக்களின் பலத்த ஆதரவு இந்த பெண்களுக்கு இருக்கிறது.

என்ன கேட்கிறார்கள் பெண்கள்?

தென் கொரியாவில், தற்போது உயிருடன் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களும், பெண்களின் அமைப்புகளும் இணைந்து, ஜப்பான் தூதரகத்தின் முன், புதன்கிழமை தோறும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறது.  Wednesday Demonstration demanding Japan to redress the Comfort Women problems என்று இதற்கு பெயர். இதனை ஜப்பான் பிரதமர் 1992-ல் தென்கொரியாவிற்கு வருகை தந்த போது, தொடங்கினர். அன்று முதல் இன்று வரை நடக்கிறது இந்த புதன்கிழமைப்போராட்டம். இவர்களின் முக்கியமான கோரிக்கைகளாக இருப்பவை,

1. போர் சமயங்களில் நடந்த அத்துமீறல்களை ஜப்பான் அரசு ஒப்புக்கொள்ள வேண்டும்.

2. இந்த குற்றங்களுக்கு காரணமானவர்களின் பெயரை அறிவித்து, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

3. ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

4. இந்த கொடுமைகளை பற்றிய, வரலாறுகளை மறைக்காமல் வெளியிட வேண்டும்.

5. பாதிக்கப்பட்ட பெண்களின், நினைவாக நினைவு சின்னங்களை நாடு முழுக்க ஏற்படுத்த வேண்டும்.

comfort%20women04.jpg

என்ன செய்தது ஜப்பான்?

ஜப்பானுக்கு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணுவது இந்த நினைவுச்சின்னங்களே..! போன நூற்றாண்டில் நடந்த தவறுக்கு, இன்னும் மன்னிப்பு கேட்பதை, ஜப்பானின் பெருமையை இந்த பிரச்னை குறைப்பதை ஜப்பான் விரும்பவில்லை. அதோடு, தென்கொரியாவில் இருக்கும் ஜப்பானின் தூதரகத்தின் அருகே வைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவுச்சிலை இன்னும் எரிச்சலூட்டுகிறது ஜப்பானுக்கு. இதனை உடனடியாக நீக்க வேண்டும் என தென்கொரியாவிடம், கோரிக்கைகள் மேல் கோரிக்கைகள் வைத்தும், தொடர் பெண்கள் போராட்டங்களால் அது இன்னும் நீக்கப்படவில்லை. தென்கொரியா- ஜப்பான் உறவுக்கு தொடர்ந்து, சிக்கலாக இருக்கும், இதனை முடிக்க, தற்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஷே அபே, தென்கொரியா அதிபர் பார்க் கியூன் ஹை இருவரும் சேர்ந்து, ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்படி, 1 பில்லியன் யெண், அதாவது 8.3 மில்லியன் டாலர்கள் அரசு பணத்தை, பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக, அளிக்க ஒப்புதல் அளித்திருக்கிறது ஜப்பான் அரசு. அதோடு ஷின்ஷே அபே, அந்த பெண்களுக்கு, மன்னிப்புக்கடிதம் ஒன்றையும், வழங்கியிருக்கிறார். “இந்த பிரச்னையை இதோடு முடிக்கவே நாங்கள் விரும்புகிறோம். இனி வரும் காலங்களிலும், இதைப்பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். இதற்காக இனிமேல், எங்கள் வருங்கால சந்ததியினர் மகன்கள், பேரன்கள் மன்னிப்புக்கேட்கும் நிலையும் வராது'' என்கிறார் ஷின்ஷே அபே.

அதோடு, ஜப்பானின் கோரிக்கை, தூதரகம் முன்பு இருக்கும் அந்த சிலையை அகற்ற வேண்டும் என்பது ஜப்பானின் கோரிக்கை. அதை எதிர்த்துத்தான் போராடுகின்றனர் பெண்கள். இதைப்பற்றி அந்த ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்படவில்லை என நழுவுகிறது தென்கொரிய அரசு. ஆனால், இதனை நீக்காவிட்டால், மீண்டும் உறவு பாதிக்கப்படும் என கூறி வருகிறது ஜப்பான் அரசு. “எங்கள் உணர்வுகளை புண்படுத்தும்படி இருந்தால் அந்த ஒப்பந்தமே எங்களுக்கு வேண்டாம். இந்த சிலை, பாதிக்கப்பட்ட பெண்களின் நினைவாக இருக்கிறது. இது உணர்வுடன் தொடர்புடைய ஒன்று. எனவே இதை நீக்கவிட மாட்டோம்” என்கின்றனர் போராட்டகாரர்கள். இதனால் காவல்துறை பாதுகாப்போடு, இருக்கிறது அந்த சிலை. சாலையில் போராடுகின்றனர் பாதிக்கப்பட்ட பெண்கள்.

இந்த வரலாற்றுப்பிழைக்கு ஜப்பான் என்ன செய்தாலும், இன்னும் அந்த வலியை அனுபவித்து உயிர்வாழும் அந்த பெண்களுக்கு மருந்தாகாது என்பதே உண்மை.

http://www.vikatan.com/news/world/57069-comfort-women-japans-historical-error.art

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பானின் வேலையை நினைக்க ஒரு பகிடிதான் ஞாபகத்தில் வருகிறது ....

 

காட்டிற்குள் ஒரு இராணுவ முகம் இருக்கும்
அதற்கு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் வந்தார் ...
அந்த முகாம் அதிகாரியிடம் வினாவினார்.

 

இராணுவ வீரர்கள் எல்லோரும் இள வயதினர்
பாலியல் உணர்ச்சிகள் அதிகமாக இருக்கும். அதை கட்டுபடுத்த என்ன செய்கிறீர்கள் என்று ?

 

முகாம் அதிகாரி: கடுமையான உடற்பயிற்சி செய்கிறோம். உணவுகளில் அதிக மஞ்சள் போன்ற காமத்தை உடல் உஸ்ணத்தை குறைக்கும் அம்சங்களை அதிக அளவில் சேர்கிறோம்.............. இதையும் தாண்டி ஏதும் நடந்து விட கூடாது இரு 
காட்டிற்கு கிராமங்களில் இருந்து விறகு வெட்ட பழம் பறிக்க வரும் பெண்களுடன்
தவறாது உறவு கொள்கிறோம் என்றாராம்!

 

இதுபோல்தான் ஜப்பான் அரசின் அப்போதைய தீர்வுமாக இருந்து இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.