Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினத்தின் விடுதலைக்கு வெடி விழுந்த நாள்

Featured Replies

tholar sundram (plote) 
02.01.2016
தோழர் சுந்தரம் அவர்களுக்கு!எமது வீர வணக்கங்கள்!
இன்று தோழர் சுந்தரம் அவர்களின் 34வது ஆண்டு நினைவு பகிர்வு தினம்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் புதியபாதை பத்திரிகையின் ஆசிரியருமான தோழர்.சுந்தரம் என்றழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தி அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்ரா அச்சகத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சாள்ல்ஸ் மற்றும் அருணா உட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். 
தோழர் சுந்தரம் அவர்களை தலைமை ஆசிரியராக கொண்ட ' தமிழீழ விடுதலை கழகத்தின்' (புளொட்டின் ஆரம்பகால பெயர்) 'புதியபாதை' பத்திரிகை மூலம் கழகத்தின் கருத்தியலை மக்கள் மத்தியில் பரவலாக வெளிக்கொணர்ந்த நேரம் இ1981 டிசம்பரில் ஒரு வெகுஜன செயற்பாடாக முதல் முறையாக 'நத்தார் வாழ்த்து மடல்' உருவாக்கப்பட்டு வெகுஜன மக்கள் மத்தியில் விற்பனைக்கென வெளியிடப்பட்டது. அதன் வாசகங்களாக "இயேசு கிறிஸ்துவும் ஒரு புரட்சியாளரே" ஏனெனில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்.' என்ற வாசகங்களோடு 'தமிழீழ விடுதலைக் கழகத்தின்' வெளியீடு என்ற உரிமை கோரலோடு வெளியானது.
தோழர் சுந்தரம் அவர்களும் அவர் சார்ந்த கழகமும் ஒரு இடதுசாரிய கொள்கையை அடிப்படையாக கொண்டிருந்தாலும் மக்கள் மயப்படுத்தலே உண்மையான ஒரு போராட்டம் என்பதனை அன்றே கழகத்தினர் உணர்ந்து செயற்பட்டனர்.
மனித குல வரலாற்றில் இயற்கையின் வழிபாட்டிற்கு பிற்பட்ட காலங்களில்; -மதங்களின் அடிப்படைத் தத்துவங்களானது பாமர மக்களுக்கு புரிவதற்காக உருவாக்கப்பட்டவையெனவும் இதனை பின்னால் வந்த மத ஆசாமிகள் மதங்களை தங்களின் நலன்களுக்காக-மதங்களை தங்கள் வசம் ஆளுமைப்படுத்தினார்கள் என்பதும் வரலாறு.
இந் நிலையில் இந்த மதங்களின் தலைமைகளால் அடிமைப்படுத்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட பாமர மக்களின் விடுதலைக்காய் கிறிஸ்துவின் பிறப்பும் அவரது மலைப்பிரசங்கங்கள் மற்றும் போதனைகள் தீர்க்கதரிசனமாய் அமைந்ததெனவும் அறிந்ததன் அடிப்படையிலேயே 2000ம் வருடத்திற்கு முன்பே சமூக மாற்றத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் பணியாற்றிய கிறிஸ்துவையும் ஒரு புரட்சியாளனாக இந்த நத்தார் வாழ்த்து மடலின் வாசகம் வெளிப்படுத்தியது. இதனூடு மக்கள் மனங்களை அணுகியதும் மக்கள் மயப்படுத்தும் அரசியலே.இந்த அணுகுமுறை அன்று கழகத்தில் பல விவாதங்களுடு வந்ததாலும் அதனை வெற்றிகரமாக செயற்படுத்திய பெருமை சுந்தரம் அவர்களையே சாரும்.இந்த நத்தார் வாழ்த்து மடல் மூலம் பொது மக்களை கழகத்தை திரும்பி பார்க்க வைத்ததற்கும் அப்பால் ஒரு ருபாய் விலையில் இந்த மடல் விற்பனையானதன் மூலம் பரவலான மக்கள் மற்றும் பொது ஸ்தாபனங்கள்- வேலைத்தளங்கள் -கல்விக்கூடங்கள் என எல்லோரையும் அணுகக் கூடியதோடு மட்டுமல்லாது கழகத்திற்கான நிதியும் இவ்வாறான வேலைத்திட்டத்தால் கிடைக்கக் கூடியதாக அமைந்தது.
எனவே தொடர்ந்து வந்த சில நாட்களில் தைப்பொங்கல் வர இருந்ததால் உழைப்பிற்கு முக்கியத்துவமான உழவர் திருநாளையும் மையப்படுத்தி சிறப்பான முறையில் 'தைப்பொங்கல் வாழ்த்து மடல்" மாதிரி தயாரிக்கப்பட்டு அத்துடன் தை மாதத்திற்கான 'புதியபாதை' பத்திரிகையின் அச்சிடும் வேலையாக யாழ்நகரில் உள்ள சித்ரா அச்சகத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த போது இந்த கொலை விடுதலைப் புலி உறுப்பினர்களால் மேற் கொள்ளப்பட்டது.
அச்சகத்திற்குள் நடந்த இக் கொலையால் தோழர் சுந்தரம் அவர்களை கழகம் இழந்தது மட்டுமல்லாமல் கழகத்தின் ஊடகத்துறை இலங்கை அரசுக்கு அம்பலமானதுடன் அன்றைய காலத்தில் எந்த அச்சகமும் முன்வந்து எமது தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்ய முன்வராத நிலையில இந்த அச்சகம் செய்த உதவியை இலங்கை அரசுக்கு காட்டிக்கொடுத்து எமது போராட்டத்தின் விடுதலைப் பாதைக்கும் தடைக்கல்லை ஏற்படுத்தியது தான் எம்மவர் கண்ட மிச்சம்.
இந்த கொலைக்கு பின் உரிமைகோரி விடுதலைப் புலிகளால் வெளியிட்ட பிரசுரத்தில் 'துரோகத்தின் பரிசு' என்ற தலையங்கத்தில் விளக்கம் வெளியானது.அதாவது சுந்தரம் விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து கைத்துப்பாக்கியுடன் தலைமறைவாகி விடுதலைப்புலியினால் கட்டளையிடப்பட்ட வேலைத்திட்டத்தை மேற்கொள்ளாது மாற்று இயக்கத்தில் இணைந்து செயற்பட்டதாகும் என்பதாகும்
1978ற்கு பிற்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகள் அல்லது புதிய புலிகள் என்ற அமைப்பில் ஒன்றாக உமாமகேஸ்வரன்.பிரபாகரன்;.செட்டி. நாகராஜா.சுந்தரம் மற்றும் ஊர்மிளா போன்றோர் இயங்கினர் இந்த காலகட்டத்தில் இவ் அமைப்பின் நிதிகளுக்கு பொறுப்பாக இருந்த ஊர்மிளா அவர்களின் மிக நேர்மையான கணக்கு வழக்குகளில் முரண்பட்ட செட்டியால் திட்டமிடப்பட்டு வைக்கப்பட்ட புறவிமர்சனமான உமா- ஊர்மிளா விவகாரம் வேண்டுமென பின்னப்பட்டது இதே நேரத்தில் உமா-பிரபா ஆகியோர் மத்தியில் ஏற்பட்ட ஈகோ முரண்பாடுகளுக்கு செட்டியின் திட்டமிட்ட குற்றச் சாட்டு எண்ணையுற்றியது. இந்நிலையில் உமா- ஊர்மிளா அவர்களை நோக்கி மரணதண்டனை வரை சதி இக்குழுவிலுள்ள பிரபாகரன்- செட்டி உட்பட்ட ஒரு சிலரால் நிறைவேற்றப்பட்டது குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் இல்லாத நிலையில்.இதனை செயற்படுத்தும் பொறுப்பு சுந்தரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்கான கைத்துப்பாக்கியும் பிரபாகரனால் சுந்தரத்திடம் கொடுக்கப்பட்டது. இதனை இயக்கத்தின் கட்டளையாக பொறுப்பெடுத்துக் கொண்டாலும் சகபோராளிகளுக்கு பின்னப்பட்ட சதிவலையும் அதன் கோரமும் சுந்தரத்தின் மனச்சாட்சிக்கு தெரிந்ததாலும் சுந்தரம் ஒரு மனிதத்தை நேசிக்கும் இடதுசாரி சிந்தனைப் போராளியானதாலும் இவர்கள் எல்லாம் இந்தியாவில் தலைமறைவாக இருந்த நிலையில் உமா அவர்களிடம் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சொல்லி உமா மற்றும் ஊர்மிளா அவர்களை தலைமறைவாகும் படியும் அவர்களிடம் கூறி தானும் தலைமறைவானார்.
இந்த காலகட்டத்தில் 1977ற்கு பிற்பட்ட காலகட்டத்தில் வவுனியா காந்தீயத்தில் டொக்டர் ராஜசுந்தரம் டேவிட் ஐயா அவர்களுடன் சந்ததியார் மற்றும் ராஜன் போன்ற இளைஞர்கள் இணைந்து மக்கள் மத்தியில் செயற்பட்ட நேரம்.இந்த காலப் பகுதியில் இலங்கை ராணுவத்தாலும் தனது இயக்கமான புலிகளாலும் தேடப்பட்ட நிலையில் 1980 ஏப்ரல் பகுதியில் ஊர்மிளா இந்தியாவிலிருந்து நோய்வாயப்பட்டு இலங்கை திரும்பி தலைமறைவாக வாழ மட்டக்களபிற்கு சென்று அங்கும் பாதுகாப்பில்லாத நிலையில் யாழ்நகர் சென்று தொடர்ந்து நோய்வாய்பட்ட நிலையில் குலம் அக்கா வீட்டிலிருந்து மேற்கொணடு என்ன செய்வதென பலரையும் சந்தித்த வேளையில் டபுள் நிமோனியா என்ற உக்கிரமான காய்ச்சல் இவரை பீடித்த நிலையில் வவுனியாவில் டொக்டர் ராஜசுந்தரம் அவர்களின் மனைவியின் சாந்தி என்ற தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பலனின்றி மரணமானார்.இதன்போது இன்று உயிரோடு இருக்கும் மண்டுர் மகேந்திரன் உட்பட பலரும் சாட்சியாக உள்ளனர் இந்த மரணம் 1980 மே மாதம் 17ம் திகதி என அறியப்படுகின்றது.இதன்பின் அவரின் உடலம் தெல்லிப்பளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரின் உறவினர்கள் மூலம் தகனம் செய்யப்பட்டது.(இதன் பின்னான இலங்கை ராணுவத்தின் விசாரணைகள் மிக நீண்டது)
இந்த ஊர்மிளா அவர்களின்; மரணத்தின் பின் இந்தியாவில் தொடர்ந்தும் புலிகளால் தலைமறைவாக இருப்பது ஆபத்தென உணர்ந்த நிலையில் சந்ததியார் அவர்களின் அழைப்பின் பேரில் உமாமகேஸ்வரன் 1980 நடுப்பகுதியில் வவுனியாவை நோக்கி காந்தீய பண்ணைகளில் இடம் மாறுகின்றனர்.இதனைத் தொடர்ந்து சுந்தரம் அவர்களும் வவுனியா காந்தீயத்தை நோக்கி வருகின்றனர்.அடிப்படையில் இடதுசாரிக் கொள்கையுள்ள சுந்தரம் அவர்கள் காந்தீயத்தினூடாக மக்கள் போராட்டத்தை மையப்படுத்தி தமது போராட்ட பாதையை வழிசமைக்கின்றனர்.எனவே ஏற்கனவே காந்தீயத்திலிருந்த சந்ததியார்- ராஜன்-பாருக்- மற்றும் மாணிக்கதாசன் உமாமகேஸ்வரன் சுந்தரம் போன்றோர் தமிழீழ விடுதலைக் கழகத்தை உருவாகிகனர்.இதனைத் தொடர்ந்து வவுனியா கிருஸ்ணகுமார்-மட்டக்களப்பு வாசுதேவா- அசோக் திருமலை ஜெயச்சந்திரன் மற்றும் ஜான் மாஸ்ரர் போன்ற இளைஞர்கள் கழகத்தில் இணைகின்றனர். 
இவ்வாறாக கழகத்தின் வளர்ச்சி லடகிழக்கு மாகாணங்கள் எங்கும் காந்தீயத்துடன் இணைந்து அல்லது காந்தீயத்தின் கூரையில் பண்ணைகளின் பாதுகாப்பில் மக்கள் மத்தியில் வளர்ந்தது இதன் போதே கழகததின் ஊடகத்துறையால் மக்கள் மத்தியில் மக்கள் போராட்டத்தை கட்டியெழுப்பும் நிலையில் சுந்தரம் அவர்கள் சித்ரா அச்சகத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
தமிழ் மக்களின் லிடுதலைக்காக தமது குடும்பம்-உறவுகள்-கல்வி- உத்தியோகம்-உயிர் உடமைகள் எல்லாவற்றையும் தூக்கியெறிந்து சக போராளிகளை மட்டுமே நம்பி விடுதலைக்கு புறப்பட்டு அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் அல்லது புரிந்துணர்வு அற்ற தன்மைகளை பொது எதிரியை கணக்கலிட்டு தங்களுக்குள்ளேயே பகையற்ற முரண்பாடுகளாக பேசித்தீர்க்காமல் பகை முரண்பாடாக வளர்த்து ஆயுதத்தால் தீர்த்து முடித்து-முடிந்ததுதான் எம்மவர் கண்ட மிச்சமா?
எம்மினத்தின் பொது எதிரிக்கு சாதகமாக எங்களை நாமே அழித்ததுதான் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் கண்ட அனுபவமா?பொது எதிரிக்காக பாவிக்க வேண்டிய ஆயுதமும் யுத்த தந்திரமும் சக போராளிக்காக-சக இயக்க போராளிக்காக-சக அமைப்பு தலைமைகளுக்காக-ஏன் அப்பாவி பொது மக்களுக்காக காலத்திற்கு காலம் திரும்பிய போது தான்-நாம் எம்மினத்தின் விடுதலையை வேரோடு அறுத்துள்ளோம்
இந்த பதிவுகள் எந்த ஒரு போராளிகளையும் சுட்டிக்காட்டவோ -தூக்கிநிறுத்தவோ இங்கு பதியப்படவில்லை.இந்த எமது விடுதலைப் போராட்டத்தில் நான்கு சகாப்தங்களாக நாம் எங்கெங்கு?எதையெதை?தொலைத்திருக்கின்றோம்?எதையெதை அவதானிக்காமல் ஆராயாமல் நடந்திருக்கின்றோம்..... என்ற படிப்பினைகளை மீளாய்விற்கு உட்படுத்தவும் இந்த வரலாற்று பதிவுகள் எதிர்வரும் காலங்களில் போராட்ட படிப்பினையாக எம் சமூகத்திற்கு மட்டுமன்றி மனிதகுல விடிவிற்காய் போராடப் புறப்படும் ஒவ்வொருவருக்கும் அனுபவமாக அமையட்டும்.ஏனெனில் இதுவரையில் தமிழ் தேசியம் அல்லது தமிழினம் என்ற ஒரு கொடியில் தொடங்கி பல கிளைகளாக- பல இயக்கங்களாக பல வடிவங்களில் போராடிய அனைவரும் முழு அர்ப்பணிப்போடு- இதய சுத்தியோடு --அனைத்தையும் துறந்து தியாகத்தோடு- விடுதலைக்கு புறப்பட்டவர்களே!
இந்நிலையில் சகாப்தங்கள் கடந்தாலும்- காட்சிகள் மாறினாலும் எதிர் எதிர் அணியாய் முரண்பட்டு எம்மை நாமே அழித்தாலும் எல்லோரின் இழப்புக்களும் மரணங்களும் வீர அஞ்சலிக்குரியதே!
இந்த புதுவருடத்திலும் எமது அனைத்து விடுதலைப் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும்-எமது அஞ்சலியை செலுத்திக் கொண்டு இனிவரும் காலத்திலாவது எமது மக்களின் விடிவிற்காய் நிரந்தர தீர்விற்காய் சரியானவற்றை ஆராய்ந்து-சரியானவர்களை இனம்கண்டு ஒரு பொது வேலைத்திட்டத்தில் ஒன்றிணைந்திடுவோம்!
ஜெ.ஜென்னி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.