Jump to content

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு


Recommended Posts

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

 

532839_370474369665160_230790931_nயாழ்ப்பாணத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் வீடுகளில் பொதுவாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கட்டாயமாக அசைவ உணவு சமைப்பார்கள்.
ஆனாலும் பொதுவாக தாங்கள் வணங்கும் தெய்வங்களைப் பொறுத்தும், அத்தெய்வங்களின் திருவிழாக் காலங்களைப் பொறுத்தும் அவர்களின் உணவு முறையில் மாற்றம் உண்டாகும்.

 

மீன் குழம்புக்குத் தேவையான பொருட்கள்

வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்

உரித்து, கழுவி, வெட்டிய சிறிய வெங்காயம் – 100 கிராம்

கழுவி, வெட்டிய பச்சை மிளகாய் – 4

யாழ்ப்பாணத்துத் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

பழப்புளிக் கரைசல் – 1 கப்

தேங்காய்ப்பால் – முதற்பால் 1 கப் – 2 ம் 3ம் பால் ஒவ்வொரு கப்

மீன் குழம்பு செய்யும் முறை

ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் போன்றவற்றைப் போடவும். சிலர் கருவேப்பிலையும் போடுவார்கள்.

பழப்புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, யாழ்ப்பாணத்து மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிறந்து வரும்போது நற்சீரகம், மிளகு, உள்ளி ஆகியவற்றை இடித்துப் போடுவார்கள். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.

பொதுவாக இவ்வாறே மீன் குழம்பு வைத்தாலும், இடத்துக்கு இடம் சில சில வேறுபாடுகளைக் காணமுடியும்.

மதிய நேரத்திற்கு பிரதான கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படுவதுடன், இரவு தயாரிக்கப்படும் புட்டுக்கும் பொருத்தமான கறியாக மீன் குழம்பு இருக்கும்.

முன்னரெல்லாம் அடுத்த நாள் காலையில் பழஞ்சோற்றுடனும் உண்ணப்படும் கறியாக மீன் குழம்பு பயன்படுத்தப்படும்.

மீன் கறி, மீன் குழம்பு போன்ற உணவுகளுக்கு ஒடியல் புட்டு மிகப் பொருத்தமானதாக இருக்கும் 

http://ekuruvi.com/jaffna-cook-fish-curry-01/ekuruviTamilNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... பார்க்கவே அசத்துது...!  பதார்த்தமான மீன் குழம்பு எந்த உணவுடனும் ஒத்துப் போகும்....!!  :)

Link to comment
Share on other sites

இணைப்பிற்க்கு நன்றி மீனா,

பார்க்க நல்லாதான் இருக்கு மீன் குழம்பு

மண்சட்டிக்கு எங்க போவது இங்கு...:unsure:

Link to comment
Share on other sites

44 minutes ago, நவீனன் said:

இணைப்பிற்க்கு நன்றி மீனா,

பார்க்க நல்லாதான் இருக்கு மீன் குழம்பு

மண்சட்டிக்கு எங்க போவது இங்கு...:unsure:

மண்சட்டி இல்லாட்டா பறுவாயில்லை.. வீட்டில் இருக்கும் சட்டியில் சமையுங்கோ சகோதரம் :)

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோக்கள் சுவி, நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை மன்சட்டி இருக்கு.பிறகு மீன்குழம்பு வச்சு சட்டி வெடிச்சா இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் மண்சட்டி கேட்டதும் எனக்கு உடனே உங்களின் ஞாபகம்தான் வந்தது , பிறகும் ஏன் சொந்தக் காசில சூனியம் வைப்பான் என்றிட்டு இருந்திட்டன், இப்ப நீங்களே மீன் வலைக்குள்ள....!!  :) (சட்டியும் ஜெர்மனில வாங்கினதுதானே...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டி லண்டனில வாங்கினது சுவி அண்ணா. இன்னும் பத்திரமா ஒரு சட்டியை வச்சிருக்கிறன் கறி வைக்காமல் tw_blush:

நாங்கள் எல்லாம் வலைக்குள்ள மாட்டுற ஆக்களா

Link to comment
Share on other sites

33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்னட்டை மன்சட்டி இருக்கு.பிறகு மீன்குழம்பு வச்சு சட்டி வெடிச்சா இருக்கு

ஓக்கே ஓக்கே...மண்சட்டி தேவையான ஆட்கள் சுமேரியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.... மண்சட்டியா சுமேரியரின் மண்டை ஓடா எண்டு பார்த்து வாங்குங்கள் :cool:

Link to comment
Share on other sites

29 minutes ago, suvy said:

நவீனன் மண்சட்டி கேட்டதும் எனக்கு உடனே உங்களின் ஞாபகம்தான் வந்தது , பிறகும் ஏன் சொந்தக் காசில சூனியம் வைப்பான் என்றிட்டு இருந்திட்டன், இப்ப நீங்களே மீன் வலைக்குள்ள....!!  :) (சட்டியும் ஜெர்மனில வாங்கினதுதானே...)

நான் மண்சட்டி கதையை எழுதியதே ...:grin:

 

சரி இந்த மண்சட்டியால் இந்த திரிக்குள் பலர் எட்டி பார்த்திருக்கிறார்கள்...<_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.