Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை சர்வதேச பட விழா

Featured Replies

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

victoria1_2684303f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.30 மணி

Eksik|Eksik Dir.: Baris Atay Turkey |2015|110’

eksik_2684365a.jpg

1981ல் இருந்து 1984 வரை நடந்த இராணுவப் புரட்சியிலிருந்து கதை துவங்குகிறது. அப்போது புரட்சியாளர்கள் பலர் வேட்டையாடப்பட்டனர். கர்ப்பமாக இருக்கும் மேலேக்கின் கணவன் கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுகிறான். குழந்தை பெற்றவுடனேயே தனது மாமனாரால் வீட்டிலிருந்து விரட்டப்படுகிறாள். அவளது மூத்த மகன் டெனிஸை மாமனார் தன்னிடம் வைத்துக் கொள்கிறார். 30 வருடங்கள் கழித்து தனித்து, குடிப்பழக்கத்துக்கு அடிமையான டெனிஸ் பிரிந்து சென்ற தனது தாயையும் சகோதரனையும் தேடிச் செல்கிறான். ஆனால் அவன் அறிந்து கொள்ளப் போகும் உண்மை எதிர்பாரத விதமாக இருக்கிறது.

மதியம் 1.00 மணி

Death of the Fish Dir.:Rouhallaah Hejazi Iran|2015|100’

death1_2684366a.jpg

தாய் இறந்து விட அவளது இறுதிச்சடங்குக்கு ஒன்றாக சேர்கிறார்கள் பிள்ளைகள். ஆனால் அவர்கள் தங்கள் தாயின் உடலை ஒரு விசித்திரமான நிலையில் கண்டு எடுக்கிறார்கள். தன்னுடைய உடலை வீட்டுக்குள்ளேயே மூன்று நாட்கள் வைத்திருக்க வேண்டும் என அவள் முன்னமே கேட்டுக்கொண்டாள். அதேபோல எந்தவொரு உறவினர்களுக்கும் தகவலைத் தெரிவிக்காமல் இருக்கவேண்டும் என்பது அவள் வேண்டுகோள். தனது பிள்ளைகளிடம் முன்னதாக அவள் கேட்டுக்கொண்டதைப்போல செய்யும்போது வரும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்வது மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மாலை 6 மணி

தொடக்கவிழா திரைப்படம்: Victoria Dir.: Sebastian Schipper Germany|2015|138’ WC-DCP

ஒளிப்பதிவாளர் Sturla Brandth Grøvlen வின் கேமராவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 88வது ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படப் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்றது.

65வது பெர்லின் திரைப்பட விழாவில் போட்டியிட்டு வெள்ளிக்கரடி உள்ளிட்ட ஆறுவிதமான விருதுகளை சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்காகப் பெற்றது. டொரண்டோ முதலான திரைப்படவிழாக்களில் சிறப்புத் திரையிடலுக்குத் தேர்வானது.

பெர்லினுக்கு குடி பெயரும் இளம் ஸ்பானிஷ் பெண், சோனே என்பவனை நண்பனாக்கிக் கொள்கிறாள். ஆனால் அவனுடம் வெளியே செல்லும் ஒரு இரவு அவளுக்கு ஆபத்தான ரகசியம் ஒன்றை தெரியப்படுத்தி அவளையும் அதில் சிக்க வைக்கிறது. அது என்ன ரகசியம்?

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
arhus1_2684306f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

காலை 11 மணி

Arhus by Night|Arhus by Night Dir.:Nils Malmoros Denmark |1989|101’

சுயசரிதை வகையிலான நில்ஸ் மேல்மோரோஸ்ஸின் படம் இது. இப்படத்தில் குழந்தை மற்றும் இளமைப் பருவத்துக்கும் இடையிலான பிணைப்புகள் நவீனத்துவத்துடன் சொல்லப்பட்டு இருக்கின்றன. மருத்துவரின் மகன் என்பதால், அங்கே நிகழும் வழக்கத்துக்கு மாறான பல நிகழ்வுகளுக்கு அவரே சாட்சியாகிறார். அதைப் பரிசோதிக்கும் விதமான அவரும் நண்பர்களும் சேர்ந்து, கற்பனையான மற்றும் தைரியமான சோதனைகள் பலவற்றில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர்.

மதியம் 2.30 மணி

Captivity|Captum Dir.:Anatoliy Mateshko Ukraine|2015|84’

இக்கதை ஒரு விரக்தியில் மிருகமாக உருமாறும் ஒரு மனிதனைப் பற்றியது. இவ்வாறு ஒருவன் எப்படி இருக்கமுடியும் என்பதை பற்றிய கேள்வியை இருக்கிறது. சித்திரவதையையும் அவமதிப்பையும் மீறி ஒரு ஆள் எப்படி அதைக் கடந்து வரமுடியும், ஒரு ஆள் உயிர்ப்பிழைக்க இன்னும் எத்தனை பேரைக் கொள்வான் என்னும் கேள்வி எல்லோரையும் வாட்டுகிறது.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF-612016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8068911.ece

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

serbia1_2684308f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை ரஷ்ய கலாச்சார மையத் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி

See You in Montevideo Dir.:Dragan Bjelogrlic Serbia|2015|120’

யுகோஸ்லோவியாவைச் சேர்ந்த கால்பந்து அணிக்கு உலக கால்பந்து போட்டியில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்கிறது. உற்சாகத்தோடு அவர்கள் பங்கேற்கச் செல்கிறார்கள். அப்போது அவர்களது அந்தப் பயணத்தில் எதிர்பாராத சிக்கல்களும் வருகின்றன.

மதியம் 12.30 மணி

Stolen Jools|Stolen jools Dir.: William C. McGann USA|1931|20’

பஸ்டர் கீடன் உட்பட நட்சத்திரங்கள் நடித்த குறும்படம். National Variety Artists tuberculosis sanatorium என்ற அமைப்புக்காக நிதி திரட்டும் பொருட்டு இந்த படம் எடுக்கப்பட்டது. அதுவும் ஒரு சிகரெட் தயாரிப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன். நார்மா ஷீரரின் காணாமல் போன நகையை எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது என்பதே படம்.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-612016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8068917.ece

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோ| 6.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
college1_2684314f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் புதன்கிழமை ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.15 மணி

College|College Dir.:Buster Keaton USA|1927|66’

புத்திசாலித்தனமாக ஆய்வுகள் செய்து தடகளப் போட்டிகளை நிராகரிக்கும் ரொனால்ட் (பஸ்டர் கீட்டன்) வகுப்பில் முதல் இடம் பிடித்து பள்ளி இறுதிவகுப்பில் தேர்வு பெறுகிறான். ஆனால் கல்லூரியில், அவனது விளையாட்டு விருப்பார்வ வகுப்புத் தோழர்களோடு அவனது இறுக்கமான அணுகுமுறையில் வெற்றியடைய முடியவில்லை. அழகான ஆஸ்திரிய மேரி (ஆன்னே கார்ன்வெல்) கொடுமைமிக்க ஜாக் ஜெஃப் ஆதரவில் அவனைப் புறக்கணிக்கிறாள். மேரியை கவருவதற்காக ரொனால்ட் தன்னைத்தானே ஒரு கோமாளியாக ஆக்கிக்கொண்டு ஒவ்வொரு விளையாட்டையும் கற்பனையாக விளையாடுகிறான். கடைசியாக ஜெஃப்பை வென்று கடைசியில் தன் காதலியைக் கரம்பிடிக்கிறான்.

மதியம் 11.45 மணி

The Madness of the Parrot |Er Relajo Der Loro Dir.:Jhon Petrizzelli Venezuela|2012|90’

loro1_2684380a.jpg

ஐம்பது ஆண்டுகால வெனிசுலா வரலாற்றை ஒரு கிளியின் கண்கள் வழியே நாம் காண்கிறோம். இப்பறவை வெவ்வேறு முதலாளிகளிடம் செல்லும்போதெல்லாம் எம்பனடா, டெமாக்ரசி, பெனிலோப் என வெவ்வேறு பெயர்களை பெறுகிறது. கிளியை புறா எனக்கூறி, அப்பாவி விலங்கு வியாபாரியிடம் விற்கிறார்கள். அவனால் கிளியின் சாகசங்களை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதுவே அவனது நேசத்துக்குரிய கனவுகளை தேடும் படலத்துக்கு சாட்சியாகவும் இருக்கிறது. எல்லாம் அலங்கோலமாகிறது கடைசியில். இப்படம் ஒருவகையில் உருவகமாக வெனிசுலாவின் வரலாற்றைக் கூறுகிறது.

 

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-612016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8068923.ece

 

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 7.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
 
Miekkailija_pressi_2685435f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழன் அன்று உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

 

காலை 11.30 மணி

The Fencer / Miekkailija | Dir.:Klaus Härö | Finland|2015|94’

சோவியத் போருக்குப் பிறகு நடக்கும் கதை. ரகசிய போலீஸ் பணியிலிருந்து தப்பித்து வரும் இளம் நெல்சிஸ் தனது சொந்த ஊருக்கு திரும்புகிறான். அங்கே இருக்கும் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக சேரும் அவன், பள்ளிச் சிறுவர்களின் நலனுக்காக கத்திச் சண்டை க்ளப் ஒன்றை தொடங்குகிறான். ஆனால் அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மறுக்கிறார். உள்ளூர் மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால் அந்த க்ளப் தொடங்கப்படுகிறது. இதனால் வஞ்சம் வளர்க்கும் அந்த தலைமை ஆசிரியர் நெல்சிஸின் கடந்த கால ரகசியங்களை வெளியிட முயற்சிக்கிறார். சோவியத் போருக்குப் பிறகான மக்களின் மனநிலை, பயங்களை இந்தப் படம் பேசுகிறது.

 

மதியம் 2.00 மணி

The Paradise Suite | Dir.:Joost van Ginkel | Bulgaria |2015|122’

அழகான இளம் பெண் ஜென்யா. தன் சொந்த ஊரான பல்கேரியாவிலிருந்து ஆம்ஸ்டெர்டாமுக்கு மேற்கொள்ளும் பயணம், அவள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை பொய்யாக்குகிறது. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தேவதைப் போன்றவள் யாயா. சிறை வைக்கப்படும் அவள் தனது சுதந்திரத்துக்காக போராடுகிறாள்.

செர்பியாவின் போர் குற்றவாளியான இவிங்கா, ஒரு சண்டையில் தனது நம்பிக்கையை தவிர அனைத்தையும் இழக்கிறான். அப்போதுதான் ஒரு குழந்தைக்கு தந்தையாகியிருக்கும் அவன், குற்றங்கள் தண்டிக்கப்படாமல் போவதில்லை என்பதை வலியுடன் உணர்கிறான்.

தி பாரடைஸ் ஸ்வீட் 6 மனிதர்களின் வாழ்க்கையை பற்றிய கதை. அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர், ஒரே ஒரு பார்வையினால் ஒருவர் மற்றவரது வாழ்க்கையை பாதிக்கின்றனர்.

 

மாலை 4.30 மணி

Enclave | Dir.: Goran Radovanovic | Serbia|2015|92’

ஒரு கிறித்தவ சிறுவன் தனது இறந்த தாத்தாவுக்காக ஒரு சரியான இறுதிச்சடங்கை நடத்தவேண்டும் என தீர்மானிக்கிறான். எதிரிகளின் எல்லைகளைக் கடந்து செல்கிறான். ஆழமாக பிளவுபட்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதி அது. யுத்தத்தால் சீரழிந்த அந்த கொசோவா பகுதிகளில் சென்று அவர்கள் மத்தியில் நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறான்.

 

மாலை 7.00 மணி

Aferim / Aferim | Dir.:Radu Jude Romania | Bulgaria | Czech Republic | France: |2015|108’

கிழக்கு ஐரோப்பா, 1835 ரோமானியாவின் வாலாச்சாப் பகுதி. அதன் மத்திய தரிசு நிலப் பகுதியில் குதிரைகளில் சவாரி செய்தபடி இருவர் வருகிறார்கள். அவர்கள் போலீஸ்கார கோஸ்டான்டினும் அவரது மகனும்தான். இருவரும் ஒரு ஜிப்ஸி அடிமையைத் தேடி வருகிறார்கள். காடு மலையெல்லாம் தேடி அலைகிறார்கள். தனது பிரபுவிடமிருந்து தப்பித்து ஓடிவந்த அந்த ஜிப்ஸியை ஒருவழியாகக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறார்கள்.

அதேநேரம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி கோஸ்டான்டின் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் மகனுக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. அதில் நீதியும் இருக்கும், அதேநேரம் யாரையும் நோகடிக்காதது என்பதோடு உலகைப் பற்றிய ஒரு தெளிவான பார்வை கிடைக்கிறது.

துருக்கியர், ரஷ்யர்கள், கிறித்தவர்கள் மற்றும் யூதர்கள், ரோமானியர்கள் மற்றும் ஹங்கேரியர்கள் என வெவ்வேறு தேசிய இன மக்களையும் வித்தியாசமான நம்பிக்கைகள் கொண்டவர்களையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி | 7.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
 
h-A-SCENE-FROM-PRI_2685436f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

 

காலை 11 மணி

Priyamanasam | Dir.:Vinod Mankara | Sanskrit|2015|110’

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையைப் பற்றிய கதக்களி நாடகம் நளசரிதம் ஆட்டக்கதை. இதை எழுதிய உன்னாயி வாரியரின் வாழ்க்கையைச் சொல்கிறது ப்ரியமானசம் திரைப்படம். பழைய திருவிதாங்கூரின் மேன்மையைச் சொல்லி, அதனைச் சுற்றி வரும் ப்ரியமானசம், கோவில் பணியாளராக வேலை பார்த்த கவிஞரின் கதையைப் பேசுகிறது. கோவிலின் படங்களையும், பழங்கால மத நம்பிக்கைகளையும் அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கும் காதல் கதையே ப்ரியமானசம்.

 

 

மதியம் 2.30 மணி

I don't just want you to love me | Ich will nicht nur, daß ihr mich liebt | Dir.: Hans Günther Pflaum | Germany|1992|103’

286890-rainerwerne_2685431a.jpg

ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பிண்டர் என்கிற ஜெர்மானிய திரைப்பட இயக்குநரின் வாழ்க்கையைப் பற்றியும் படைப்புகளைப் பற்றியும் சொல்லும் ஆவணப் படம். அவரது திரைப்படங்களிலிருந்து சிறந்த காட்சித் தொகுப்புகளையும், அவருடன் பணியாற்றியவர்களது பேட்டியும் நிறைந்துள்ள இந்தப் படம், அவரது வாழ்க்கை, சினிமா, சிந்தனை, படைப்பாற்றல் திறன் என வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.ஃபாஸ்பைண்டர் குறித்து ஆர்வமுள்ள எவரும், ஐரோப்பிய சினிமாவை விரும்பும் எவரும், இந்த ஆவணப் படத்தால் ஈர்க்கப்படுவார்கள்.

 

 

மாலை 5.00 மணி

Court | Dir.:Chaitanya Tamhane | Marathi|2014|116'

சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு நாராயணன் காம்ளே என்ற மராத்திய கவிஞர் சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு வருமானம் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான். உண்மையில் கவிஞர் மேடையில் பாடல்கள் பாடியதைக் கேட்டு அந்த தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். நீதிமன்றத்தில் அவருக்காக வாதாடி அவரை வெளியேக் கொண்டுவர போராடுகிறார் ஒரு வழக்கறிஞர்.

வெனிஸ் திரைப்பட விழாவில் பரிசு பெற்றுள்ள இந்தப் படம் மும்பை திரைப்பட விழாவிலும் மூன்று பரிசுகள் வென்றுள்ளது. இதன் இயக்குநர் சைதன்ய தம்ஹனா 27 வயது இளைஞர். இதில் நடித்த துப்புரவு தொழிலாளியின் மனைவி அசலானவர்.உண்மையில் சாக்கடை குழியில் இறந்த போன தொழிலாளி ஒருவரின் மனைவி! மற்ற நடிகர்களும் தொழில் முறை நடிகர்கள் அல்ல, இதற்கென்றே பயிற்சி தரப்பட்டு நடித்தவர்கள். சாதி, அரசியல் அதிகாரம் பற்றிய பல விவாதங்களைக் கொண்டிருக்கும், தூங்கும் யாரையும் தட்டி எழுப்பும் மராத்தி படம்தான் இந்த - ‘கோர்ட்’

 

மாலை 7.30 மணி

Tree of knowledge|Kundskabens Trq | Dir.: Nils Malmoros Denmark|1981|110’

மிக முக்கிய டீனேஜ் படங்களில் ஒன்று. டேனிஷ் இயக்குநரான நில்ஸ் மேல்மோரோஸ் வளரிளம் குழந்தைகளின் இயல்பை அழகாய்ப் படம் பிடித்திருக்கிறார். 13 முதல் 16 வயது வரையான சிறுவர்களின் வகுப்பறையில், படம் தொடங்குகிறது. எலின் என்னும் சிறுமி, ஹெல்ஜை டேட்டிங் செய்யவில்லை என்பதால், அந்தக் குழுவில் இருந்து வெளியேற்றப்படுகிறாள். இன்னொரு சிறுமியான மோனா, எலினின் இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறாள். அவர்களோடு, வேடிக்கையான சிறுவன் வில்லி பாண்டே, நியல்ஸ் ஒலே உள்ளிட்டவர்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக இடம்பெற்றுள்ளார்கள்.

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 7.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
 
magical_girl_still_2685426f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழன் அன்று ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

 

காலை 10.00 மணி

Magical Girl | Dir.: Carlos Vermut | Spain|2014|127’

உடல்நலம் குன்றிய மகளுக்கு ஒரு கடைசி ஆசை. மேஜிக்கல் கேர்ள் யோகிகோ எனும் ஜப்பானிய கார்ட்டூனில் இடம்பெறும் விலை அதிகமான தேவதை ஆடைக்காக அவள் ஏங்குகிறாள். அதை வாங்கித்தந்து தனது மகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என ஆற்றமுடியாத துயரத்தில் மூழ்குகிறான் லூயிஸ். வேலையற்ற, எந்த வருமான வாய்ப்பும் இல்லாத, கண்மூடித்தனமாக வருத்தப்படும் அழகான, மனதளவில் பாதிக்கப்பட்ட பார்பராவை அவள் பாதைகளைக் கடக்கும்போது, லூயிஸ் பணம் மிரட்டி பறிப்பதற்க்கு முயல்கிறான். மகளின் தேவதை ஆடை அணியும் ஆசை நிறைவேறியதா?

 

மதியம் 1.30 மணி

Kirumi|Dir.: M. Anucharan Tamil|2015| 105'

பணம், அதிகாரம் என்று வரும்போது காவல்துறை, ரவுடிகளின் துணை கொண்ட நிழல் உலக வியாபாரிகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் யதார்த்தத்தைத் திரைக்கதை துல்லியமாகக் காட்டிவிடுகிறது. இந்தக் கூட்டணியைத் தனிநபர்களால் எதிர்கொள்ளவே முடியாது என்பதை உணர்த்தி விடுவதில் படம் நிஜ உலகுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் பொதுவாக நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இடங்களில் துளியும் சமரசமின்றி யதார்த்தத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.

 

மாலை 4.15 மணி

Charles Saffiq Karthiga | Dir.:Sathiyamoorthy Saravanan | Tamil|2015| 124'

சார்லஸ், ஷஃபீக், கார்த்திகா ஆகிய மூவரின் வாழ்க்கையைச் சுற்றி வரும் படம் சி.எஸ்.கே. சென்னை சூப்பர் கிங்ஸில் இடம்பெற ஆசைப்படுகிறான் சார்லஸ். ஆனால் அவனின் காதலி கார்த்திகாவுக்காக தனது லட்சியத்தை விட்டுவிட நேர்கிறது. இதற்கிடையே மூன்றாவது நாயகனான ஷஃபீக், வைரத் திருட்டில் ஈடுபட்டு, காவல்துறையால் துரத்தப்படுகிறான். போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக, சென்னையை நோக்கிப் பயணிக்கும் கார்த்திகா பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறாள். அழகான த்ரில்லர் கதையான சி.எஸ்.கே.வின் பலம் அதன் இசையும், பாடல்களும்.

 

மாலை 6.45 மணி

Inaugural of KB’S Retro: Opening film Sindu Bhairavi Dir.: K. Balachander Tamil | 1985 | 159’

16IN_SS_KB_12_2246_2685425a.jpg

கர்நாடக இசை மேதையான சிவக்குமார் தனது கச்சேரிப் பயணத்தில் சுகாசினியைச் சந்திக்கின்றார். சுகாசினியும் அவருக்குச் சவாலாக கர்நாடக இசையினை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் தமிழிலும் பாட வேண்டுகின்றார். இக்கூற்றினை கோபத்துடன் நோக்கிய சிவக்குமார் பின்னர் சுகாசினையையே பாடவும் அனுமதிக்கின்றார். சிவக்குமார் பின்னர் சுகாசினியைக் காதல் கொள்ளவும் தொடங்குகின்றார். இதனால் அவரது குடும்பத்தில் சிக்கல் உருவாகிறது. பாடலுக்கு முக்கியத்துவம் தந்து இயக்குநர் சிகரம் உருவாக்கிய இப்படத்தின்மூலம் சிறந்த நடிகையாக சுஹாசினியும், சிறந்த இசையமைப்பாளராக இளையராஜாவும், சிறந்த பின்னணிப் பாடகியாக சித்ராவும் தேசிய விருதுகளைப் பெற்றனர்.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-712016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8073142.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | வடபழனி ஆர்கேவி ஸ்டூடியோ| 7.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
journalists_2685415f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழன் அன்று ஆர்கேவி கல்லூரி அரங்கத்தில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை

காலை 9.45 மணி

Factory Boss / Da gong lao ban | Dir.:Wei Zhang China|2014|102’

ஒரு பொம்மை உற்பத்தி தொழிற்சாலை பணச்சிக்கலில் இருக்கிறது. வேலை இல்லாமல், ஊதியம் பெறாத ஊழியர்கள் கோபத்தில் இருக்கும் நிலையில், அதன் உரிமையாளர் லின் தன் தொழிற்சாலையை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலையில் இருக்கிறார். அப்போது குறைந்த லாபத்தைத் தரும் அமெரிக்க கம்பெனி ஒன்றின் வியாபரத்தை ஒப்புக் கொள்கிறார். அதில் பல சட்டவிரோதங்களும் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் அங்கிருக்கும் குற்றங்களை தெரியப் படுத்த ரகசியமாக உள்ளே ஊடுருவுகிறாள்.

 

காலை 11.45 மணி

The Chambermaid Lynn / Das Zimmermädchen Lynn | Dir.:Ingo Haeb Germany|2014|90’

ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கிறாள் லின். தன்னுடைய தயக்கத்தாலும், அச்சத்தாலும் வாடிக்கையாளர்களைப் பார்க்காமல் இருப்பது, அவர்கள் இல்லாத சமயத்தில் அறையைத் தூய்மையாக்குவது, அவர்களின் படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறாள். இதனால் அவளுடைய வேலை பாதிக்கப்படுகிறது. சிறிது நாட்களில் பாலியல் தொழிலாளியான சியராவின் அறிமுகம் கிடக்கிறது. துணிச்சலையும், நிதானமின்மையும் கொண்ட சியாராவின் வருகையால் லின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. லின் புதியதொரு உலகத்துக்குள் நுழைகிறாள்...

 

மதியம் 2.45 மணி

Lamb | Dir:Yared Zeleke | Ethiopia|2015|94’

இப்ராய்ம் ஒரு இளம் எதியோப்பியன். மலைமுகட்டு வீட்டில் அவனது தந்தை அவனைவிட்டு போய்விட அவனிடமிருந்து பிரிக்கமுடியாத ஆடு மட்டும் அவனோடு வசிக்கிறது. வறட்சியின் பிடியில் சிக்கிய தாயகத்தில் இருந்து வந்த அவனது உறவினர்கள் அவனை வந்துப் பார்க்கும்போதும் அவனுடைய ஆடு அவனிடமிருந்து பிரிக்கமுடியாதவை என்பதைக் காண்கிறார்கள். எப்ராய்ம் நல்ல வளர்ப்பில் வளர்ந்தவனல்ல. ஆனால் அவனிடம் நிறைய திறமைகள் மறைந்து கிடக்கின்றன. அவன் ஒரு சிறந்த சமையல்காரன். இந்த புதிய கிராமமம் தன்னை நிராகரித்ததை நினைத்து வருந்துவதோடு அவனுக்கு துன்பம் மட்டுமே தந்த பழைய கிராமத்து சிந்தனையும் அவனுக்கு வருகிறது. ஒருநாள் அவனது மாமா, அடுத்த பண்டிகை தினத்தில் அவனது ஆட்டை தியாகம் செய்யவேண்டுமென கூறுகிறார். எனினும், அன்று அந்த இளம் சிறுவன், தோழமைமிக்க இந்த ஆட்டைக் காக்க எதுவேண்டுமானாலும் செய்யத் தயார் என நினைக்கிறான்.

 

மாலை 4.45 மணி

Life Eternal | Dir: Wolfgang Murnberger | Austria |2015|120’

தான் வளர்ந்து ஆளான கிராஸ் என்ற நகரத்திற்கு நீண்டநாள் கழித்து திரும்புகிறான் பிரென்னர் எனும் நடுத்தர வயது மனிதன். அங்கு அவன் தன்னுடைய பழைய நண்பர்களை எதிர்கொள்கிறான். இளைஞனாக அவன் இருந்த காலத்தில் தனது பழைய காதலியோடு இணைந்து அவன் ஒரு நபரை கொலையும் செய்திருக்கிறான். மேலும், நீண்ட நாள் கோமாவிலிருந்து திரும்பி வந்திருக்கும் அவன் தன்னைக் கொல்ல முயன்றவனை தேட முயற்சிக்கிறான்.

எனினும் பிரென்னரை கொல்ல முயன்றது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல என்பது புரிகிறது. அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவருமே அவனின் இப்போதைய நிலைக்குக் காரணம் என்பது உறுதியாகிறது.

 

மாலை 7.15 மணி

The Blue Apple Tree / El Manzano Azul | Dir:Olegario Barrera Venezuela|2012|95’

நகரத்தில் வளரும் பதினொரு வயதுச் சிறுவன் டியகோ. தன் கோடை விடுமுறையைப் பெரிதாக அறிமுகம் இல்லாத தன்னுடைய தாத்தாவுடன் கழிக்க நேருகிறது. பரபரப்பாக இருந்து பழகிய டியகோவால், வெனிசுலாவின் கிராமத்தில் தன் பொழுதுகளைக் கழிக்க முடியவில்லை. தொழில்நுட்ப சாதனங்கள் எதுவும் இல்லாமலும், கிராமத்தில் வசிக்கும் சிறுவர்களின் கேலி, கிண்டல்களாலும் டியகோவின் மனம் வெறுத்துப் போகிறது. ஒரு நாள், வித்தியாசமான நீலநிற ஆப்பிள் மரத்தையும், சிறுமி ஒருத்தியையும் காண்கிறான் டியகோ. அவை காரணமே இல்லாமல் அவனுக்குப் பிடித்துப் போகிறது. சில வித்தியாசமான சம்பவங்களுக்குப் பிறகு, தன்னுடைய தாத்தாவுடன் மிகவும் நெருக்கமாகிறான் டியகோ. வெறுத்த கிராமம் மெல்ல மெல்ல அவனுக்குப் பிடிக்க ஆரம்பிக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-712016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8073117.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 7.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
 
degarde1_2685414f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

 

காலை 9.45 மணி

Degrade| Dir.:Arab Nasser & Tarzan Nasser | Palestine|2015|84’

பாலஸ்தீன தலைநகரான காஸா ஸ்ட்ரிப்பின் சமகாலத்தைப் பேசும் படம். கிறிஸ்டியனே அழகுநிலையத்தில் இப்போதெல்லாம் நிறைய பெண் வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். அன்று கூட ஒரு விவாகரத்து பெற்ற பெண், ஒரு மத ஈடுபாடு கொண்ட பெண், போதை மருந்துகளுக்கு அடிமையான மணமகள் ஒருத்தி உள்ளிட்ட பலரும் நிறைந்திருந்தார்கள். ஆனால் அன்றைய அவர்களது நிம்மதியான ஓய்வுநாளைக் கெடுக்கும்விதமாக கடைக்குநேர் எதிரே சாலையில் துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்தது. ஒரு கொள்ளைக்கூட்டம் ஒரு சிங்கத்தை காஸா உயிரியல் பூங்காவிலிருந்து திருடிக்கொண்டு வந்து வந்திருந்தது. அதில் முக்கியமான ஹமாஸ் ஒரு பழைய கணக்கைத் தீர்க்கும்பொருட்டு அங்கு அவள் கடை எதிரே ஒரு இருக்கை போட்டு அந்த சிங்கத்தோடு வந்து அமர்ந்திருந்தான். தயவுசெய்து இங்கிருந்து போய்விடு என அவள் அவனைக் கேட்டுக்கொள்கிறாள்.

 

காலை 12.00 மணி

MY2 |Dir.:Slobodanka Radun | Czech|2014|100’

தன் வாழ்க்கையில் புதிய மாற்றம் வேண்டி, எம்மா அவளுடைய பெற்றோர்களிடமிருந்தும் உடன் வாழும் கணவனிடமிருந்தும் ஓடிவந்துவிடுவாள். அவளுடைய சிகை அலங்காரம் செய்யும் டோனியோடு கூட அவளுக்கு அரிதாகத்தான் பழக்கம் உண்டு. அவனுடைய அப்பார்ட்மென்டுக்கு வந்து அவள் மறைந்துகொள்கிறாள். அங்கு அவளை யாரும் பார்க்க முடியாது. ஆரம்பத்தில் அவர்கள் இருவரும் அந்நியர்களாகத்தான் இருந்தனர். தப்பிக்கும் ஆசைகொண்ட இருவரையுமே அவர்கள் எண்ணம் இணைக்கிறது.

 

மதியம் 2.45 மணி

The greatest House in the world / La casa más grande del mundo | Dir.:Ana V. Bojorquez & Lucia Carreras | Guatemala|2015|74’

ரோசியோ, கர்ப்பமாக இருகும் தனது தாயுடனும், பாட்டியுடனும் மலைப்பகுதியில் வசிக்கிறாள். தனது தாய்க்கு முன் கூட்டியே பிரசவம் நடப்பதால், அவர்களது ஆட்டு மந்தையை தனியாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ரோசியோவுக்கு வருகிறது. ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு ஆட்டை தொலைத்து விடுகிறாள். அதை தேடிப் போகையில் மற்ற ஆடுகளும் தோலைந்து போக, சோகத்தில் மூழ்குகிறாள். இந்த பயணத்தில், இயற்கை அவளுக்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்களும், தன் அப்பாவித்தனம், பயத்தைத் தாண்டி அவளது பயணம் இந்தப் படம். நமக்கு தெரியாத, புரியாத, பயப்படும் விஷயங்களை எதிர்கொள்ளும் போது நாம் அனைவரும் குழந்தைகளே என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது.

 

மாலை 4.45 மணி

The Dark Horse | Dir.:James Napier Robertson | New Zealand|2014|124’

ஜெனிசிஸ் போடினி என்பவரது நிஜ வாழ்க்கை சம்பவங்களின் திரை வடிவம் இது. செஸ் விளையாட்டில் சாம்பியனாக விளங்கும் ஜெனிஸிஸ் கடுமையான பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனநோயால் பாதிக்கப்படுகிறார். மனநல காப்பக்கத்திலிருந்து வரும் அவர் உள்ளூரில், விளிம்பு நிலை குழந்தைகளின் கூட்டம் ஒன்றுக்கு செஸ் பயிற்சியை ஆரம்பிக்கிறார். ஆக்லாந்தில் நடக்கும் செஸ் போட்டி ஒன்றில் அவர்களை பங்கெடுக்க வைக்க முயற்சிக்கிறார். இந்த பயணத்தில் தனது மகனைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.

 

மாலை 7.15 மணி

Standing Tall / La tête haute Dir.: Emmanuelle Bercot | France |2015|120’

மலோனி எனும் சிறுவனை அவனது 6வது வயதில் சிறார்ப்பள்ளியில் கண்டெடுக்கிறாள் அவனது வளர்ப்புத்தாய். அவனை மிகவும் அன்பாக வளர்க்கிறாள். ஆனால் அவன் பழைய மாதிரியேதான் இருக்கிறான். பதின்ம வயதுக்கு வரும்போது அவன் கார்களைத் திருடத்தொடங்குகிறான். அவனுடைய வழக்குகள் ஏற்கெனவே அவனுடைய வழக்குகளை எதிர்கொண்டவரிடமே வருகிறது. அவனுடைய சிறார் நீதிமன்ற நீதிபதியும், மோசமான குழந்தைப்பருவத்திலிருந்து தப்பிப் பிழைத்த வழக்குப்பணியாளர் யானும் மலோனியைப் பின்தொடர்ந்து அவனை பல்வேறு பிரச்சனையிலிருந்து காக்கிறார்கள். பின்னர் மலோனி கண்டிப்பான கல்வி மையத்தில் அனுப்பிவைக்கப்படுகிறான். சிறப்பு(க்கல்வி) மாணவியான இளம்பெண் டெஸ் என்பவளிடமிருந்து வாழ்க்கைக்கான நம்பிக்கையை பெறுகிறான். 2015 கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம்டி'ஓர் திரைப்படவிருது பெற்ற திரைப்படம்.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-712016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8073118.ece?widget-art=four-all
  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | ஐநாக்ஸ் 2| 7.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
partisan1_2685413f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வியாழக்கிழமை ஐநாக்ஸ் 2 அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.15 மணி

Partisan / Partisan | Dir.:Ariel Kleiman Australia|2015|98’

பெரிய மாற்றத்தின் விளிம்பில் இருக்கு நகரத்தில், தனியாக உருவாக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குடியிருப்பில் 11 வயது அலெக்ஸாண்டர் வாழ்கிறான். அங்கு அவனைப் போல பல குழந்தைகளும், பெரியவர்களும் இருக்க அவர்களுக்கு க்ரேகோரி என்பவன் தலைவனாக இருக்கிறான். க்ரேகோரி, வாழ்வாதாரத்தை பெருக்குவது, காய்கறிகள் வளர்ப்பது , சமுதாயத்துடன் இணக்காமக இருப்பது, கொலை செய்வது என பல விதங்களில் அந்த குழந்தைகளை பயிற்றுவிக்கிறான்.

 

 

காலை 12.15 மணி

So Young / Zhi wo men zhong jiang shi qu de qing chun | Dir.:Wei ZHAO China|2013|132’

18 வயது செங் வெய், கல்லூரி வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கிறாள். அதற்கு முன்னால் தான் பார்த்திராத புதிய உலகினுள் நுழைவது போல அவளுக்குத் தோன்றுகிறது. அவளுக்குத் தெரிந்திருக்காத புதிய உறவுகள்; குழப்பத்தை ஏற்படுத்தும் புதிய காதல் அவளின் வாழ்க்கையில் நுழைகிறது. அவளின் அறை நண்பரோடு புதியதொரு வாழ்க்கைப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைகிறாள். அது அவள் நினைத்த அளவுக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை.

 

 

மதியம் 2.45 மணி

Two Lives / ZWEI LEBEN | Dir.:Georg Maas | Germany|2014|97’

ஐரோப்பா 1990, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனி உதயமானது, அதன்பின்னர் காதரீன், இப்போதும் அவள் நார்வேயில் கடந்த 20 ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறாள். அவள் ஒரு போர்க்குழந்தை. ஒரு நார்வே பெண்ணுக்கும் ஜெர்மன் நாஸி ராணுவ வீரனுக்கும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிறந்தவள். காதரீன் தன் தாயோடும், தந்தையோடும் மகள் மற்றும் பேத்தியோடும் ஒரு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள்.

ஆனால் வழக்கறிஞர் போர்க் குழந்தைகள் சார்பில், அவர்களை நார்வே நாட்டுக்கு எதிராக விசாரணை சாட்சி சொல்ல அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவளும் அவள் தாயும் சாட்சிசொல்ல மறுத்துவிடுகிறார்கள். தற்போது காதரீனுக்கும் அவளது கணவருக்குமிடையே பிரச்சனை வருகிறது. அவர்கள் இதுநாள்வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர், அது பொய்யை அடிப்படையாகக் கொண்டதா? படிப்படியாக தன் வாழ்வின் மறைவுத் திரையை விலக்கி ரகசியங்களை வெளியிடுகிறாள்.

 

மாலை 5.00 மணி

RAMS|Hrútar | Dir.: Grímur Hákonarson | Iceland|2015|92’

40 வருடங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாத சகோதரர்கள், கும்மியும் கிட்டியும் குடும்ப சொத்தான ஆட்டு மந்தையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். கிட்டியின் ஆட்டுக்கு மோசமான நோய் ஒன்று வரும்போது உள்ளூர் மக்கள் பீதியடைகின்றனர். நோய் பரவக் கூடாது என்பதால் அதிகாரிகள் அனைத்து மிருகங்களையும் கொல்ல முடிவெடுக்கின்றனர். அந்த நிலையில் தங்களது மந்தையையும், ஊரின் மற்றவர்களது மிருகங்களையும் காப்பாற்றா கும்மி கிட்டி என்ன முயற்சி செய்கிறார்கள் என்பதே ராம்ஸ்.

 

மாலை 7.15 மணி

Chronic | Dir.:Michel Franco | Mexico | 2015 | 93’

டேவிட், தீராத நோயுடன் சாகக் கிடக்கும் நோயளிகளுக்கு செவிலியராக இருக்கிறான். தனது தொழிலில் அர்ப்பணிப்புடன் இருக்கும் டேவிட் தனது நோயாளிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் பணியைத் தாண்டி அவன் தனியாக, வினோதமான வாழ்க்கையை வாழ்கிறான்.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2-712016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8073113.ece?widget-art=four-all

  • தொடங்கியவர்

சர்வதேச திரைப்படவிழாவில் நயன்தாரா

 

13 ஆவது சர்வதேச திரைப்படவிழா சென்னையில் இன்று தொடங்குகிறது. 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தத் திரைப்படவிழாவில் போட்டிப்பிரிவில் பனிரெண்டு தமிழ்ப்படங்கள் பங்கேற்கின்றன.

ஜோதிகா நடித்த 36 வயதினிலே, சென்னைஉங்களைஅன்புடன்வரவேற்கிறது, கிருமி, கோடைமழை, மாயா, ஆரஞ்சுமிட்டாய்,  ஓட்டத்து தூதுவன், பிசாசு, ரேடியோபெட்டி, சார்லஸ் ஷபி கார்த்திகா, தாக்கதாக்க, தனிஒருவன் ஆகிய படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இவற்றில் இரண்டுபடங்கள் நயன்தாரா நடித்த படங்கள் என்பது அவருடைய ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

maya%20nayan.jpg

எட்டாம்தேதி மாயாவும் பனிரெண்டாம்தேதி தனிஒருவனும் திரையிடப்படவிருக்கிறது. இவற்றில் தனிஒருவனில் இயக்குநர் ராஜா, நரயகன் ஜெயம்ரவி, அரவிந்த்சாமி ஆகியோர் இருக்கின்றனர். மாயா படத்தைப் பொருத்தவரை அது நயன்தாராவால் மட்டுமே கவனிக்கப்பட்டது அவருக்காகவே வெற்றியடைந்தது என்று சொல்லிக்கொண்டாடுகின்றனர்.

விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற அந்தப்படம் திரைப்படவிழாவிலும் வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.  
http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/57274-nayanthaara-films-screening-in-chennai-film-festiv.art

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
un_2686963f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11.30 மணி

A monster with a thousand Heads |Un monstruo de mil cabezas Dir.:Rodrigo Plá France|2015|74’

சோனியா போனெட் ஒரு குடும்பத் தலைவி. அவளின் கணவன் தொடர்ந்து உயிர் வாழ்வதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு தேவையான உதவிகளைச் செய்ய காப்பீட்டு நிறுவனம் மறுக்கிறது. அதிலிருந்து, எல்லா பொறுப்புகளையும் தன் கைகளில் எடுத்துக் கொள்கிறாள் சோனியா. அதிகார மையத்தாலும், விருப்பமில்லாத தொழிலாளர்களாலும், விரக்தியின் விளிம்புக்குச் செல்கிறாள் சோனியா. தன்னுடைய மகனுடன் கைகோத்து, சமூக அமைப்புக்கு எதிராகப் போராட ஆரம்பிக்கிறாள் சோனியா.

மதியம் 2.00 மணி

Warsaw by Night Dir.: Natalia Koryncka-Gruz Poland|2015|99’

1944-ல் நடந்த வார்சா எழுச்சியின் போது ஏற்பட்ட பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகிறது. ரத்தத்தால் எழுதப்பட்ட கொடூரமான சாகசங்களையும், நட்பையும் காதலையும் சொல்கிறது வார்சா’44.

காலை 4.30 மணி

The Tournament | Le tournoi Dir.: Elodie Namer France|2015|83’

புடாபெஸ்ட் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஏழு நாட்களாக ஒரு செஸ் போட்டி நடக்கிறது. இன்னும் முதிர்ச்சியடையாத மேதையாக திகழும் 22 வயது கால் ஃபோர்னீர் எனும் பிரெஞ்ச் செஸ் விளையாட்டு வீரன், வெற்றியைத் திட்டமிட்டு தனது எதிரிகளோடு ஒரு வல்லமை மிக்க சக்தியாக விளங்குகிறான். உலகை மறந்துவிட்ட கால், ஃபோர்னீர், தனது காதலி லூ மற்றும் தனது உதவியாளர்கள் ஆரெலீன், ஆந்தொணி மற்றும் மாத்யூ இவர்களோடு அவன் விளையாட்டில் தன் நிலையான கவனத்தை செலுத்துகிறான். வாழ்க்கையில் இந்த விளையாட்டுக்கான முக்கியத்துவம் என்ன என்பதை மைக்கேலேஞ்சலோ பாசனிடி தனது சிறந்த நடிப்பின்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

மாலை 7.00 மணி

Taxi | Dir.:Jafar Panahi Iran|2015|82’ WC-DCP

இயக்குநர் பனாஹி ஒரு டாக்ஸியை டெஹ்ரான் நகரத் தெருக்களைச் சுற்றிலும் ஓட்டிச் செல்கிறார். வேறுபட்ட பல்வேறு இடங்களிலிருந்து பல்வேறு விதமான பயணிகளை ஏற்றிச் செல்வதும் இறக்கிவிடுவதுமாக டாக்ஸி செல்கிறது. பயணிகளோடு அவர் பேசும் உரையாடல்கள் ஏற்கெனவே டாஷ்போர்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராவிலிருந்து பதிவாகிறது. ஆக தொழில்நுட்பரீதியாக பனாஹி அவர் யாரையும் இயக்கத் தேவையில்லை. எனினும் மறக்க முடியாத சில பயணிகளுடனான அவரது பயணத்தில் சின்னச் சின்ன வசனங்களைச் சேர்த்தும் கேமரா கோணங்களை மாற்றியும் எடுக்கப்பட்டுள்ள இப்படம் அவரது திறமையை மிகச் சிறப்பாக பறைசாற்றுகிறது.

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் சிம்பொனி| 81.2015 படங்களின் அறிமுகப் பார்வை

 
naanu_2686952h.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை உட்லண்ஸ் சிம்பொனி திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 11 மணி

Nanu Avanalla…….Avalu Dir.: B.S. Lingadevaru Kannada|2014|115’

நான் அவனில்லை.. அவள் திரைப்படம் வாழ்க்கையில் போராடும் ஒவ்வொருவருக்குமான படமாக விளங்குகிறது. முக்கியமாக இப்படம் புறக்கணிப்பையும் ஏமாற்றத்தையும் சந்தித்த மாற்றுப்பாலினத்தவரின் வாழ்வை மையப்படுத்தி பேசுகிறது. ஒருநாள் இரவு பெங்களூருவில் காவல்துறையினர் ரோந்து வரும்போது அவர்களை கைது செய்கிறார்கள். அவர்கள் அப்போது பாலியல் தொழிலுக்கான தங்கள் வாடிக்கையாளர்களுக்காக அவர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஒரு அப்பாவி திருநங்கையான வித்யா தனது வீட்டுக்கு நடந்துசென்றுகொண்டிருந்தபோதுதான் போலீசாரால் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்படுகிறாள். அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்யாவை விசாரிக்கிறார். ''நீ ஏன் இந்த வாழ்க்கைக்கு வந்தாய்'' என கேட்கிறார். அதைத்தொடர்ந்து மடேஷா எனும் இளம்சிறுவனின் வாழ்க்கை நம் கண் முன் விரியத் தொடங்குகிறது.

மதியம் 2.30 மணி

பெரிய படம் என்பதால் 2.15 மணிக்கு இப்படம் தொடங்கிவிடும்

Dream Flight Dir.:Khan Lee Taiwan|2014|147’

விமானப்படைத் வீரர் லெப்டினென்ட் கர்னல் லீ செங் லியாங்கின் வாழ்க்கையில் நடந்த உண்மையான காதல் கதை. அவருக்கும் அவரது பார்வ்வைத்திறன் இல்லாத மனைவிக்குமான காதலை சொல்லும் படம்.

மாலை 5.00 மணி

Rajkahini Dir.: Srijit Mukherjee Bengali| 2015|160’

1947ல் பிரிட்டிஷ் அரசு வங்காளத்தை பிரிக்க சட்டம் இயற்றுகிறது. பிரிவினைக்கான உத்தரவுகள் கடுமையாக்கப்படுகின்றன. அப்போது எல்லைப் பகுதியில் உள்ள ஒரு பாலியல்தொழில் நடக்கும் வீட்டிலிருந்து 11 பெண்கள் தப்பித்து இரு நாடுகளுக்கிடையே ஓடுவார்கள். 1905ல் ஒருமுறையும் இந்திய விடுதலையின்போதும் வங்காளம் இரு முறை பிளவுபட்டது. நிர்வாகத்தை எளிமைப்படுத்துவதற்காக மக்கள் தொகையைக் காரணம்காட்டி இந்தப் பிரிவினை நடக்கிறது. உண்மையில் வங்க அரசியலின் வீரியத்தைக் குறைப்பதற்காகவே இது செய்யப்பட்டது. 1947ல் இந்திய சுதந்திர ஒப்பந்தத்தின் ஒருபிரிவான ரெட்கிளிப் கோடு வங்காளத்தை கிழித்தெறிகிறது. ஒரு பாலியல்தொழில் செய்யும் பெண்கள் பிரிவு வங்கப் பிரிவினையை ஏற்றுக்கொள்வதை எதிர்த்து போராடியதை இப்படம் பேசுகிறது.

மாலை 7.30 மணி

Bopem| Bopem Dir.:Zhanna Issabayeva Kazakhstan|2015|78’

டீனேஜ் சிறுவனான ரஸ்லான், ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். தன் தாயை இழந்திருந்த ரஸ்லான், வறண்ட ஆரல் நதியில் வாழ்கிறான். கடுமையான நோயின் காரணமாக 3 மாதத்துக்கு மேல் உயிர் பிழைக்க மாட்டோம் என்பதை உணரும் ரஸ்லான், தனது தாயின் மரணத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க நினைக்கிறான்.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF-812015-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8077752.ece

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
 
pisasu_2245903f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ரஷ்ய கலாச்சார மையத் அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி

Samsaram Athu Minsaram Dir.: Visu Tamil | 1986 | 145' Tribute to Aachi Manoram

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா, கமலா காமேஷ், விசு, திலீப், கிஷ்மு, ஹாஜா ஷெரிப், வாகை சந்திரசேகர், குள்ளமணி, ஓமகுச்சி, நரசிம்மன்ராஜ், சங்கர், மாதுரி, லலிதா சர்மா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே பங்கேற்றுள்ளது. இப்படத்திற்கு சிறந்த மாநில மொழி பொழுதுபோக்குப் படத்திற்கான தேசிய விருது பெற்றது. குடும்ப உறவுகள் சிதைந்து வருவதை வலுமிக்கப் பாத்திரப் படைப்புகளைக் கொண்டு பேசிய படம் இது. இதில் முக்கியமாக விசு, மனோரமா, லட்சுமி போன்றவர்களின் நடிப்பு குறிப்பிடும்படியானது.

மதியம் 1.30 மணி

Maya Dir.: Ashwin Saravanan Tamil | 2015 | 140'

இரண்டு கதைகள் திரையில் ஓட ஆரம்பிக்கின்றன. ஒரு கதை, மாநகரின் புறத்தே இருக்கும் ‘மாயவனம்’ என்ற காட்டையும் மனநலக் காப்பகம் ஒன்றின் மர்மங்களையும் பற்றி யது. காப்பகத்தில் கர்ப்பவதியாகச் சேர்க்கப்பட்டு இறந்துபோன ஒரு பெண்ணைப் பற்றி ஆராய்ந்து எழுதப்படும் தொடர்கதையின் கதாசிரியர், அதை வெளியிடும் பத்திரிகை முதலாளி, அவரது மனைவி, அதற்குப் படம் வரையும் ஓவியர் ஆகியோரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் வழியே பரபரப்பாக நகர்கிறது அந்தக் கதை.

இரண்டாம் கதையில் கண வரைப் பிரிந்து கைக்குழந்தை யுடன் வாழும் அப்சரா (நயன்தாரா) என்ற பெண் பார்வையாளர் களுக்கு அறிமுகப்படுத்தப் படுகிறார். கணவன் மீதிருக்கும் மனத்தாங்கல் காரணமாகத் தனித் துப் போராடும் அவருக்குக் கடும் பண நெருக்கடி. பேய்க் கதை என்றாலும் தாய்மையின் தவிப்பே கதையின் அடிநாதம். வஞ்சிக்கப்படும் பெண் களின் கதையே மாயவனமாக விரிகிறது.

மாலை 4.15 மணி

Pisasu Dir.: Myskin Tamil | 2014 | 113'

தமிழில் பேய்ப் படம் ரசிப்பவர்களை பயம் எனும் கிளர்ச்சியைத் தாண்டி, அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் அபார முயற்சிதான் 'பிசாசு'.

சலித்துப் போன காட்சிகள் நிரம்பிய பேய்ப் படங்களைப் பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, மனிதத்தின் மகத்துவத்தையும் பேரன்பின் மேன்மையையும் சொல்வதற்காக, உணர்வுபூர்வமான பிசாசுவை அறிமுகப்படுத்தி இருப்பதை நிச்சயம் கொண்டாட வேண்டும். பாடல்களுக்கும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமாவுக்கு தமிழ் ரசிகர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று பேச்சளவில் மட்டுமின்றி, அதை செயல்படுத்திக் காட்டியிருக்கும் விதத்தில் மிஷ்கின் மின்னுகிறார்.

படத்தின் முக்கியமான ஒரு காட்சியில், ஒரு பாட்டி கேரக்டர் மெல்ல நம்மை நோக்கி நெருங்குகிறது. அவர் முகத்திலும் உடலசைவுகளிலும் அப்படி ஒரு கொந்தளிப்பு. அவர் சொல்ல முற்படும் விஷயம் அவ்வளவு கடுமையானது என்பது பார்வையாளனுக்குப் புரிகிறது. ஆனால், அவர் பேசவே இல்லை. அந்த இடத்தில் பார்வையாளனே படைப்பாளி ஆகிறான். அந்தப் பாட்டி பேச வேண்டிய வசனத்தை தனது புரிதல், மனநிலைக்கு ஏற்ப தானே எழுதிக்கொள்கிறான் பார்வையாளன். இதுபோன்ற அணுகுமுறைதான், மிஷ்கின் என்ற படைப்பாளியை 'ப்யூர் சினிமா' கிரியேட்டராக உயர்த்திப் பிடிக்கிறது.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-812016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8077740.ece

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி ஸ்டூடியோ | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

hundred_2686937f.jpg

 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி

Martha |Martha Dir.:Rainer Werner Fassbinder Germany|1974|116’ R-RWF-DVD

முப்பதுகளின் ஆரம்பத்தில் இருக்கும் பெண் மார்த்தா, தன் தந்தையுடன் ரோமுக்குச் செல்கிறாள். எதிர்பாராத விதமாக, தந்தை மாரடைப்பால் அங்கேயே இறந்துபோக, தன்னை வெறுக்கும் தாயுடனே மார்த்தா இருக்கும்படி ஆகிறது. திருமணம் செய்துகொள்வதாகச் சொன்ன உயரதிகாரியின் விருப்பத்தை மறுத்து, நன்றியில்லாத, எப்போதும் இழிவுபடுத்தும் தாயுடன் வாழ்கிறாள் மார்த்தா. தன்னை அழகற்ற முதிர்கன்னியாகப் பார்க்கும் தாயிடம் இருந்து தப்பிக்க, தாயைப் போலவே குணம் கொண்ட, மரியாதையில்லாத மனிதனான ஹெல்முத்தை மணக்கச் சம்மதிக்கிறாள்.

ஹெல்முத், மார்த்தாவின் வேலையை விடச்சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். அவளுடைய அம்மாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மார்த்தாவைப் பாலியல் வன்முறை செய்கிறான். குடும்ப வாழ்க்கையில் இதெல்லாம் இருக்குமென்றும் அவற்றை சகித்துக்கொள்ள வேண்டும் என்றும் நம்பிக்கொண்டிருந்த மார்த்தா, தனது நண்பன் கெய்சரைச் சந்திக்கிறாள். ஹெல்முத் ஒரு சாடிஸ்ட் என்று கெய்சர் கூறியதைக் கேட்ட மார்த்தா, அவர்கள் வசித்துக்கொண்டிருந்த வீட்டை விட்டு வெளியேறுகிறாள். மார்த்தாவும், கெய்சரும் ஒன்றாகக் காரில் பயணிக்கும்போது, அவளைக் கொல்ல அவளின் கணவன் பின்தொடர்வதை அறிகிறாள்.

காலை 11.45 மணி

The 100 year old man who climbed out of the window and disappeared Dir.:Felix Herngren Sweden|2013|114’

சர்வதேச அளவில் புகழ்பெற்ற, அதிகம் விற்பனையான நாவலின் திரை வடிவம். 100 வயதான ஒருவர் தன் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறார். ஆலான் கார்ல்ஸன் தான் தங்கியிருக்கும் காப்பக்கத்திலிரும்து தப்பித்துச் செல்கிறார். ஆனால் இது அவரது முதல் சாகசம் அல்ல. நூறு வருடங்களில் அவர் பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளார்.

மதியம் 2.45 மணி

Diary of a Chambermaid | Journal d'une femme Dir.:Benoît Jacquot France |2015|96’ WC-DCP & Br

19ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. பாரீஸ்ஸில் உள்ள ஒரு லேன்லெய்ரெ என்னும் செல்வந்தர் குடும்பத்திற்கு வீட்டுவேலை செய்ய வருகிறாள் கெலெஸ்டின். அவளது அழகே அவளுக்கு நிறைய குழப்பங்களை கொண்டுவந்து சேர்க்கிறது. அவரது தலைமைப் பணியாளரை அணுகுவதைக் கூட அவர் தவிர்த்துவிடுவாள். ஆனால் அந்த செல்வாக்வான வீட்டை தனது இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தும் மேடம் லேன்லெய்ரெவின் கட்டளையை ஏற்று நடப்பதுதான் அவளுக்கு முக்கியமானது. இந்நிலையில் அவள் ஜோசப் எனும் ஒரு மர்மமான தோட்டக்காரனை சந்திக்கிறாள். அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு உருவாகிறது.

மாலை 4.45 மணி

Pause Dir.:Mathieu Urfer Switzerland |2014|82’ WC-DCP & Br

சாமி எல்லோரிடமும் எளிதாகப் பழகும் ஒரு பாடலாசிரியர். அவனும், புத்திசாலி வழக்கறிஞரான ஜூலியாவும் நான்கு வருடங்களாக சேர்ந்து வாழ்கின்றனர். திடீரெனத் தற்காலிகமாக நமது உறவை முறித்துக் கொள்ளலாம் என்கிறாள் ஜுலியா. என்ன செய்வதென்றே புரியாமல், இசையமைப்பாளரான பழைய நண்பன் ஃபெர்னாண்டிடம் ஆலோசனை கேட்கிறான் சாமி. தன்னுடைய ஒரே துணை ஜூலியாதான் என்பதை நிரூபிக்கப் பல முயற்சிகளை எடுக்கிறான் சாமி.

மாலை 7.15 மணி

You're Ugly Too Dir.:Mark Noonan Ireland|2015|78’ WC-DCP & Br

தனது தாயின் மறைவுக்குப் பின் தனது அங்கிள் வில்லுடன் சென்று தங்குகிறாள் ஸ்டேசி. இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் அவர்களது மோசமான கடந்தகாலத்தை நினைவுகூரவேண்டும். மனிதர்களின் குணத்தைப் பற்றிய சரியான பிரதிபலிப்பான இந்தப் படம், நம்பிக்கையைப் பற்றியும், விட்டுக் கொடுத்து நகர்தல் பற்றியும் நகைச்சுவையுடன் பேசுகிறது.

http://tamil.thehindu.com/cinema/ciff/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-812016-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article8077733.ece

  • தொடங்கியவர்

சென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 8.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை

 
heneral_2686925f.jpg
 

சென்னை 13-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை கேஸினோ அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 9.45 மணி

Baby Steps Dir.:Barney Cheng Taiwan & USA|2015|103’

டானி ஒரு தைவானிய அமெரிக்க மனிதன். அவனது மனைவிக்கு டேட்டுக்கு ஒரு குழந்தை வேண்டும். ஆனால் உலகளாவிய வாடகைத்தாய்களின் உலகம் மிகவும் சிக்கலானாது. எந்தப் பாரம்பரியும் அற்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இப்பிரச்சனையில் தலையிடுகிறார் மா என்பவர். தைபெய் நகரிலிருந்து மா என்பவரின் வழியே இப் பிரச்சனையின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசி ஆராய்கிறது பேபிஸ்டெப்ஸ்.

காலை 12.00 மணி

Heneral Luna Dir.:Jerrold Tarog Philippines|2015|118’

பிலிப்பைன்ஸுக்கும் அமெரிக்கவுக்கும் போர் நடந்த பதினேழாம் நூற்றாண்டுக் காலக் கதையை இப்படம் பேசுகிறது. கடும் கோபம் மிக்க தளபதியான ஃபிலிப்பினோ, அமெரிக்கப் படையைவிட வல்லமைமிக்க எதிரியாக திகழ்கிறான். 1898, ஜெனரல் அன்டோனியோ லுனா (ஜான் ஆர்சில்லா), புரட்சிப்படையின் தளபதியாக முன்னின்று சண்டையை நடத்துகிறான். பிலிப்பைன்ஸ் முன்னூறு ஆண்டுகள் கழித்து ஸ்பானிய காலனியாக மாறுவதோடு மக்கள் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்காவின் ஆட்சியின் கீழ் வருகிறது. ஜெனரல் லூனா அமெரிக்காவிலிருந்து விடுவித்துக்கொள்ள சுதந்திரத்திற்காக சண்டையிட விரும்புகிறான். ஆனால் மேல்தட்டு உறுப்பினர்கள் அமெரிக்கவுடன் உடன்பாட்டை மேற்கொள்ள விரும்புகின்றனர்.

மதியம் 2.45 மணி

Journey to the Shore |Kishibe no tabi Dir.: Kiyoshi Kurosawa Japan|2015|128’

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான அன் சர்ட்டெய் ரிகார்ட் பிரிவில் விருதுபெற்ற படம். டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. மிசூகியின் கணவன் (யூசூகே) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிவிட்டான். அவன் திடீரென திரும்ப வரும்போது அவள் பதட்டப்படவில்லை. மாறாக மிகவும் ஆச்சர்யத்தோடு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள் என்றுதான் கேட்கிறாள். யோசூகெ அவளுடன் ஒரு பயணத்தை மேற்கொள்ளப்போவதாக கூறும்போது அவள் அதை ஏற்றுக்கொள்கிறாள்.

மாலை 4.45 மணி

Short Skin| Dir.:Duccio Chiarini Italy|2014|86’

தனது நெருங்கிய தோழியை இரவுபகலாக நினைத்துக்கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தந்தையும் அவனுடைய தங்கையும் தொடர்ந்து பாலியல் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் எட்வார்டோ ஒரு நுட்பமான பிரச்சனையில் இருக்கிறான். அவனுக்கு பாலியல் என்பது ஒரு மெல்லிய புண்ணாக இருக்கிறது. சுய இன்பம் அனுபவிப்பது கூட வேதனையான ஒன்றுதான் அவனுக்கு.

பல்வேறு தயக்கங்கள் அச்சங்களுக்குப் பிறகு ஒருவழியாக அறுவை சிகிச்சை ஒத்துக்கொள்கிறான். பிறகு அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. அவனது விருப்பத்தை உணர்ந்த அவனது ரகசிய காதலி பியான்கா அவனை வெளியில் ஒரு இடத்திற்குச் செல்ல அழைக்கிறாள். இருவரும் செல்கின்றனர். அங்கு அவனது முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு மெல்லிய இதயம் படைத்த 17வயது இளைஞனின் ஆசைகளை வேதனைகளை மிகச் சிறப்பாக ஒரு கோடைக்கால காதல் கதையுடன் இணைத்து அழகாக கூறியுள்ள படம்.

மாலை 7.15 மணி

The Midwife|Kätilö Dir.:Antti Jokinen Finland|2015|119’

இரண்டாம் உலகப்போரின் முக்கியமான ஐரோப்பியப் போர் முனையான, ஃபின்லாந்தின் லேப்லாந்து மாகாணத்தின் முக்கியமான காதல் நாடகம் இது. காட்ஜா கெட்டுவின் புகழ்பெற்ற நாவலான த மிட்வைஃப், லேப்லாந்து மருத்துவச்சிக்கும், நாஜிப்படை அதிகாரிக்கும் இடையேயான காதலைப் பற்றிப் பேசுகிறது. 1944- 45 களில் ஃபின்லாந்துக்கும், ஜெர்மனி ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரின் பின்புலத்தில் நடந்த காதல் கதையிது. காதலையும், போரையும் வெற்றி கொள்ளும் காவியமாகப் போற்றப்படுகிறது.

  • தொடங்கியவர்

விஜய், அஜித் படங்களைப் போல கூட்டம் கூட்டி அதிர வைத்த ஈரான் படம்

 

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் மூன்றாம் நாள், பெர்லின் திரைப்பட விழாவில் கோல்டன் பேர் விருது பெற்ற ஈரானியப் படம் "டாக்ஸி", சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்ற கன்னடப் படமான "நானு அவனல்ல… அவளு", மர்டர் இன் பேகாட், தி டோர்ணமண்ட், யூ ஆர் அக்லி டூ போன்ற இருபதுக்கும் மேற்பட்ட உலக மற்றும் இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

காலை, முதல் காட்சியாக, கன்னடத் திரைப்படமான "நானு அவனல்ல அவளு" திரையிடப்பட்டது. இது, தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கையான "லிவிங் ஸ்மைல் வித்யா"வின் "நான், வித்யா" எனும் சுயசரிதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமாகும். கன்னட நடிகரான சஞ்சாரி விஜய், பெண்ணாக மாறப் போராடும் மாதேஷா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வாழ்ந்துள்ளார் எனக்கூட சொல்லலாம்.

ciff-1.jpg

சிறு வயதிலிருந்தே பெண்களின் உடை மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றை அணிந்து அழகு பார்க்கும் மாதேஷா, கல்லூரிப் பருவத்தில், தன்னை ஒரு பெண்ணாகவே உணர்கிறார். தன் நண்பனின் மீது காதலும் கொள்கிறார். 'கோயிலுக்குக் கூட்டிச் செல்', 'மருத்துவரிடம் கூட்டிச் செல்' என மாதேஷாவின் தந்தையிடம் ஊரார் அறிவுருத்த, மனமுடையும் மாதேஷா பெங்களூரில் இருக்கும் தன் அக்கா வீட்டிற்குச் செல்கிறார்.
அங்கும் அவர் சந்திக்கும் புதிய உறவுகள், அவருடைய வாழ்வில் பல்வேறு மாற்றங்களை உருவாக்குகின்றன.

அதன் பின் அவருடைய வாழ்வில் அவர் கடந்து வரும் போராட்டங்கள் தான், படத்தின் இரண்டாம் பாதி. நம் நாட்டில்,  ஆண்களுக்கும், பெண்களுக்கும், திருநங்கைகளைப் பற்றிய அதிகபட்ச புரிதல், ஒன்று அவர்கள் பிச்சை எடுப்பர் அல்லது பாலியல் தொழில் செய்வர் என்பது தான். ஆனால் வெளியில் கூற முடியாத பெரும் மனக்குமுறல்களுடன், ஒவ்வொரு நாளும், அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பி.எஸ். லிங்கதேவரு.

ஒவ்வொரு இந்தியனும், இப்படத்தைக் கட்டாயம் பார்க்க வேண்டும். திருநங்கைகள் மீதான தவறான கண்ணோட்டத்தையும், அவர்களை நோக்கி நடத்தப்படும் கேலி கிண்டல்களையும், மாற்ற இப்படம் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும்.

திரைப்பட விழாவில், மக்கள் கைதட்டல் மழை பொழிந்த இரு திரைப்படங்கள் வார்சா பை நைட் மற்றும் தி டோர்ணமண்ட். வார்சா நகரில், ஓர் இரவில், நான்கு பெண்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் வார்சா பை நைட் திரைப்படத்தின் கதை. நான்கு பெண்களுக்குமான ஒரே தொடர்பு, "வார்சா பை நைட்" எனும் இரவு விடுதி மட்டும் தான். அசத்தலான வசனங்களுடன், சிறப்பான ஓர் ஆந்தாலஜி படம் பார்த்த ஃபீலை கொடுத்து இப்படம்.

அடுத்த படமான தி டோர்ணமெண்ட், ஒரு செஸ் சாம்பியனின் வாழ்வில் நடக்கும் அடிசறுக்கலை மையப்படுத்தியது. கண்ணைக் கட்டிக் கொண்டு, ஒரே நேரத்தில் எட்டு பேருக்கு செக் வைக்கும் திறமை படைத்த செஸ் சாம்பியனான கால், ஒரு சிறுவனைக் கண்டு பயப்படுகிறார். அந்த பயம் வளர்ந்து பெரிதாகி, அவருடைய வெற்றிப்பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறது. அதிலிருந்து கால் மீண்டு வந்தாரா? என்பது தான் மீதிக் கதை. படத்தின் இறுதிக்காட்சி செம பாஸிடிவாக முடிகிறது.

ciff-2.jpg

ஏழு மணிக்குத் திரையிடப்பட்ட "டாக்ஸி"க்கு, ஆறு மணியில் இருந்தே, விஜய்-அஜித் திரைப்படத்திற்கு நிற்பது போல் பெரும் கூட்டம் உட்லாண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது. கதவைத் திறந்தவுடன் முட்டிமோதி சீட்டைப் பிடிக்க, ஒரு வழியாக படம் ஆரம்பித்தது. 2010 ஆம் ஆண்டு, ஈரான் அரசால், இருபது ஆண்டுகளுக்குத் திரைப்படம் இயக்கத் தடை விதிக்கப் பட்ட ஜாஃபர் பனாஹி இயக்கிய திரைப்படம் டாக்ஸி.

ஆச்சர்யம் என்னவென்றால், தடை விதிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிவதற்குள், பனாஹி, மூன்று படங்களை (டாக்குமெண்டரி டிராமா ஜானரில்) இயக்கிவிட்டார். அவருடைய வீடுகளில், அவரே நடித்து, முதல் இரண்டு படங்களை இயக்கிய பனாஹி, இம்முறை கலக்கியிருப்பது, டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில். டாக்ஸிக்குள் நான்கு கேமராக்களை பொருத்தியபடி, பயணிகளுடன் நடக்கும் உரையாடல்கள் மற்றும் சுவராஸ்யமான சம்பவங்களையே  படமாக அளித்துள்ளார் பனாஹி.

பெர்லின் திரைப்பட விழாவில், கோல்டன் பேர் விருது பெற்ற டாக்ஸி, 82 நிமிடங்களுக்குள், ஈரானில் நடத்தப்படும் மனிதவிரோத அரசியலை பல்வேறு வகையில் புட்டுப்புட்டு வைக்கிறது. இவ்வளவு சிறிய டாக்ஸிக்குள், இவ்வளவு குறைந்த நேரத்தில், ஒரு மனிதரால் சமூகம், அரசியல், காமெடி என அனைத்தையும் எப்படி இந்த திரைப்படத்திற்குள் கொண்டுவர முடிந்தது என்பது இப்போதும் பிரம்மிப்பாக உள்ளது.

ஒரு காட்சியில் திருட்டு விசிடிக்களை வாங்கும் இளைஞன் ஒருவன் , ”நான் படம் எடுப்பது குறித்து நிறையப் புத்தகங்கள் படித்து விட்டேன், நிறையப் படங்கள் பார்த்துவிட்டேன். ஆனால் எந்த சப்ஜெக்ட் வைத்து படமெடுப்பது என்பதுதான் தெரியவில்லை” என்றதும், ”நீ பார்த்த, படித்த அனைத்தும் ஏற்கனவே எடுக்கப்பட்டவைதான். நீ தான் புதிதாக உருவாக்க வேண்டும்” என இயக்குநர் பனாஹி சொல்ல அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஒரு மனிதனை அரசாங்கமே தடுத்தும் கூட துணிச்சலாக படமெடுக்கிறார் என்றால் அவரின் கலை தாகத்தை என்னவென்று சொல்வது. அவருக்குக் கிடைக்கும் விருதுகளைக் கூட வாங்க முடியாத அளவிற்கு ஈரான் நாடு அவருக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான தடை விதித்துள்ளது. தடை அவருக்குத்தான் அவருடைய படைப்புக்கில்லை என்பதைத் தன் படைப்புகள் மூலம் உலகத்துக்கு உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் பஹானி! 

http://www.vikatan.com/cinema/others/world-cinema/57423-chennai-13th-international-film-festival-day.art

  • தொடங்கியவர்

சென்னை திரைப்பட விழாவில் ரசிகர்களைக் கவர்ந்த அமீர்

 

சென்னை திரைப்பட விழாவின் ஆறாம் நாள்.

பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஜப்பானிய திரைப்படமான "ஆன்", அயர்லாந்து திரைப்படமான "யூ ஆர் அக்லீ டூ", ஈரானிய திரைப்படங்களான "மை மதர்ஸ் ப்ளூ ஸ்கை" மற்றும் "ரான்னா சைலன்ஸ்", க்ரானிக், எம்ப்ரேஸ் ஆஃப் தி சர்ஃபன்ட் போன்ற உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

காலை, ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்ட "மை மதர்ஸ் ப்ளூ ஸ்கை (My mother's blue sky)" எனும் ஈரானியத் திரைப்படம், தந்தை இறந்த பின், தன் தாயுடன், மலைகளுக்கு அடியில் இருந்து நிலக்கரியைத் தோண்டி எடுத்து விற்பனை செய்ய நினைக்கும் அமீர் எனும் சிறுவனின் கதை. தன் தாயுடன், மிகவும் கடினமாக உழைத்து, இரண்டு லாரி நிலக்கரியை சேமிக்கும் அமீர், அதை விற்கச் செல்லும் போது, சுரங்க முதலாளி குறைந்தது ஐந்து லாரி நிலக்கரி வேண்டும் என கூறுகிறார்.

ranna-silence-and-my-mother%27s-blu-sky.

அதே நேரத்தில், அமீர் வாழும் அந்த மலைகளையும் அபகரிக்க நினைக்கிறார். சுரங்கத்தில் வேலை செய்யும் சிறுவர்கள், தினமும், வேலை முடிந்தவுடன், அமீருக்கு உதவ, ஐந்து லாரி நிலக்கரி சேமிக்கப்படுகிறது. ஆனால் அதை வாங்க வரும் சுரங்க முதலாளி தனக்கு இந்த மலைகளையும் கொடுத்துவிடுமாறு கேட்கிறார். ஆனால் அமீரின் தாய் நிலக்கரியைக் கூட தர மறுத்து விடுகிறார். இதனால் அமீர் வேறு சுரங்கத்தை நாடிச் செல்கிறான்.

திடீரென ஒருநாள், அமீரின் தாய் நிலக்கரி எடுக்கும் போது, மலை அடிவாரத்தில் மாட்டி, உயிரிழக்கிறார். மனமுடையும் அமீர், நகரத்தில் இருக்கும் தன் மாமா வந்தவுடன், அவருடன் செல்ல கிளம்புகிறான். ஆனால் அவனுடைய தாயின் நினைவுகள் அவனைத் தடுக்கிறது. அமீர் சென்றானா என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ். மிகச்சிறந்த படமான இதில், அமீராக நடித்த சிறுவன் கலக்கியிருக்கிறான்.

அடுத்த படமான " யூ ஆர் அக்லீ டூ (You are ugly too)" அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தது. ஆங்கில மொழித் திரைப்படமான இது, தன் தங்கை இறந்தவுடன், தங்கையின் மகளைக் கவனித்துக் கொள்ள, சிறையில் இருந்து விடுவிக்கப்படும் வில் மற்றும் தங்கை மகளான ஸ்டேசி ஆகியோரின் நடுவில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை உள்ளடக்கியது. பார்வையாளர்களை அடிக்கடி சிரிக்க வைத்துக் கொண்டே இருந்தன, காட்சிகளும், வசனங்களும்.
நகரத்திற்கு வரும் வில் மற்றும் ஸ்டேசிக்கு, புதிய நண்பர்கள் கிடைக்க, அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்கிறது. ஆனால், தன் மாமா எதற்காகச் சிறைக்குச் சென்றார் என தெரிந்துகொள்ள விரும்புகிறார் ஸ்டேசி. தனது தந்தையைக் கொன்றதற்காகத் தான், அவர் சிறைக்குச் சென்றார் எனத் தெரிந்தவுடன் அதிர்ந்து போகிறாள். வில்லை விட்டுச் செல்கிறாள். கீழே விழுந்து, அவளுக்கு தலையில் சிறிய காயம் ஏற்பட, வில்லின் பிணை ரத்து செய்யப்படுகிறது. ஆறு மாத சிறைவாசத்திற்கு பின் இருவரும் சந்திக்கும் க்ளைமேக்ஸ் காட்சி பார்வையாளர்களின் மனதை நெகிழ வைத்தது.

அடுத்ததாக திரையிடப்பட்டது, ஜப்பானிய திரைப்படமான "ஆன் (AN)". டோராயாக்கி எனப்படும், பேன் கேக்குகளை தயாரித்து விற்கும், சென்டாரோ, வேலைக்கு ஆட்கள் தேவை என  பலகை வைக்கிறார். அதைப் பார்த்து ஒரு மூதாட்டி, தம்மை வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்கிறார். ஆனால் சென்டாரோ மறுக்க, தான் எடுத்து வந்த கேக்குக்குள் வைக்கும் பீன்ஸ் பேஸ்டை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதை ருசிக்கும் சென்டாரோ, அதில் உள்ள வித்தியாச சுவையை உணர்ந்து மூதாட்டியை வேலையில் சேர்கிறார். பாட்டியின் கைப்பதத்தில் கேக் விற்பனை அமோகமாகிறது. ஆனால் பாட்டியின் கைகளில் இருக்கும் கட்டிகள், அவருக்கு தொழு நோய் இருக்குமோ என்ற சந்தேகத்தை சென்டாரோவுக்கு ஏற்படுத்துகிறது. ஆனால் உடல்நலக் குறைவால் பாட்டி வேலையில் இருந்து நின்றுவிட, அவர் இருக்கும் இடத்திற்குச் செல்கிறார் சென்டாரோ.

ranna-silence-and-my-mother%27s-blu-sky-you-are-ugly-too.jpg

அது தொழுநோயாளிகள் இருக்கும் இடம். அங்கு அவரிடம் மூதாட்டி பேசும் போது அழுதுவிடுகிறார் சென்டாரோ. நோயின் காரணமாக மக்களை மக்களே வெறுக்கும் போக்கினை ஆணித்தரமாக எதிர்த்துள்ள இந்தப் படம், நோயாளிகளிடம் இருக்கும் மனதை நமக்குக் காட்டுகிறது.

அடுத்து, ஈரானிய குழந்தைகள் திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டது. "ரானா சைலன்ஸ் (Ranna Silence)" எனும் இந்தத் திரைப்படம், இரண்டு சிறுவர்களை மையப்படுத்தியது. தான் வளர்த்த காக்கோலி எனும் கோழி காணாமல் போனதால், அது இறந்து விட்டது என நினைக்கும் ரான்னா எனும் சிறுமி, அதிர்ச்சியில், வாயடைத்துப் போகிறாள். யாரிடமும் பேசாமல் இருக்கும் ரான்னாவை மறுபடியும் இயல்பு நிலைக்கு திருப்ப, அவளின் சகோதரன் ரஹ்மானும், அவனுடைய நண்பன் ஹஸ்ஸனும், ரான்னாவின் தாய் வியாபாரியிடம் விற்ற காக்கோலியின் முட்டைகளைத் தேடிச் செல்கின்றனர்.   

அங்கு நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளும், குண்டுப் பையனான ஹஸ்ஸனின் செயல்களும் பார்வையாளர்களிடம், சிரிப்புடன் கைத்தட்டல்களையும் பெற்றன. குழந்தைகளுடன் பெரியவர்களும் ரசிக்கும்படி படத்தை எடுத்துள்ளார், பேஹசாத் ரஃபி. இவர் சில்ரன் ஆஃப் ஹெவன், கலர் ஆஃப் பாரடைஸ் போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரான்னா சைலன்ஸ் படத்திற்கு ஷார்ஜா திரைபப்ட விழாவில் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ள

http://www.vikatan.com/cinema/others/world-cinema/57562-chennai-13th-international-film-festival-day.art

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்குள் திணிக்கப்படும் மதவெறி - அதிர வைக்கும் செர்பியப்படம்

 

சென்னை திரைப்பட விழாவின் நான்காம் நாளில் முக்கியமான படங்கள் பற்றிய ஒரு பார்வை!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்து திரைப்படமான "ராம்ஸ்", இந்திப்படம் "மஸான்", ஏ மான்ஸ்டர் வித் தௌஸண்ட் ஹெட்ஸ், தி ஃபென்சர், அலியாஸ் மரியா, என்க்லேவ், பாடி, தி கிட் வூ லைஸ் போன்ற பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

முதல் காட்சியாக உட்லண்ட்ஸ் சிம்பொனியில், இந்தித் திரைப்படமான மஸான் (Masaan) திரையிடப்பட்டது. இரு காதல் கதைகளை உள்ளடக்கிய படமான மஸானில், ஒரு காதல் முடிவில் இருந்து தொடங்குகிறது, மறு காதல் முடிவில் இருந்து மீள்கிறது. காதலிக்கும் இளைஞர்களின் உறவை, நம் நாட்டு மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என்பதைத் தெளிவு படுத்துகிறது இந்தத் திரைப்படம்.

massan-c4.jpg

தன் காதலனுடன் உறவு வைத்துக்கொள்ளும் தேவியை, போலீஸார் கைது செய்கின்றனர். காதலனோ, வெளிஉலகிற்குப் பயந்து, தற்கொலை செய்து கொள்கிறான். இந்த தற்கொலை வழக்கில் இருந்து தேவியின் பெயரை நீக்க காவல் துறை அதிகாரி மூன்று லட்சம் ரூபாய் கேட்கிறார். நதிக்கரையில் சிறு தொழில் செய்யும் தேவியின் தந்தையும், தேவியும் சேர்ந்து மூன்று லட்சத்தை சேமிக்கத் தொடங்குகின்றனர்.

இடையே வரும் இன்னொரு கதையில், கல்லூரி மாணவனான தீபக், ஷாலு மீது காதல் கொள்கிறான். பிணம் எரிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த தீபக், உயர்சாதிப் பெண்ணான ஷாலுவிடம், தன் குடும்பத்தைப் பற்றி கூற, ஷாலு, 'உனக்கு நல்ல வேலை ஒன்றை தேடிக்கொள். உன்னுடன் ஓடி வரவும் நான் தயார்' என்கிறாள். தீபக், நன்றாகப் படித்து, வேலையும் கிடைத்து விட, மகிழ்ச்சியில் இருக்கும் தீபக், எரிக்க வைக்கப்பட்டிருக்கும் பிணங்களுடன் ஷாலுவையும் காண்கிறான்.

உடைந்து போன தீபக், மீண்டு வந்தானா?, தேவி மூன்று லட்சத்தை சேமித்தாளா? என்ற கேள்விகளுக்கு விடையுடன், அழகிய காதலையும் துவக்கி வைத்து, முடிவு பெறுகிறது இத்திரைப்படம். நீரஜ் கேவானின் முதல் முழு நீளத் திரைப்படமான இது, கேன்ஸ் திரைப்பட விழாவில், இரு விருதுகளையும், கொச்சி திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்றுள்ளது.

அடுத்து திரையிடப்பட்ட, அலியாஸ் மரியா (Alias Maria), கொலம்பியாவின் அரசுக்கு எதிரான புரட்சிப் படையில், கையில் குழந்தையுடன் 13 வயதுப் போராளியான மரியா சந்திக்கும் இன்னல்கள் பற்றியது. கமாண்டரின் குழந்தையுடன், மரியா, இரு போராளிகள் மற்றும் ஒரு சிறுவனும் காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு ராணுவத்தால் தாக்கப்படுவதால், சிறுவனுக்குக் காலில் காயம் ஏற்படுகிறது. இதனால், அங்குள்ள ஒரு வீட்டில் இருக்கும் முதியவர்களிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு, மருத்துவரிடம் செல்கின்றனர்.

AliasMariac4.jpg

வழியில் மரியா கர்ப்பமாக இருப்பதை தலைமைப் போராளி கண்டு பிடிக்க, அந்தக் கருவை கலைக்கச் சொல்கிறான். மரியாவோ அதற்கு சம்மதிக்காமல், அந்த இடத்தில் இருந்து தப்பிக்கிறாள். கொலம்பியாவில் உள்ள புரட்சிப்படைகளில் குழந்தைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில், போட்டியிட்டது.

அடுத்து, செர்பியப் படமான என்க்லேவ் (Enclave), குழந்தைகளுக்குள் விதைக்கப்படும் மதவெறியை மிகச்சிறப்பாக விளக்கியது. குழந்தைகள் யாரும் மதத்துடன் பிறப்பதில்லை என்பதை வலியுறுத்திச் சென்றது இப்படம். செர்பியாவுக்கும், அல்பேனியாவுக்கும் இடையில் உள்ள கொசொவோ எனும் நகரில் வசிக்கும், கிறுஸ்துவச் சிறுவனான நெநாத், மரணமடைந்த தன் தாத்தாவின் உடலை, அல்பேனிய இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அடக்கம் செய்ய, மதகுருவை அழைக்கச் செல்கிறான்.
அங்கு இரு இஸ்லாமிய சிறுவர்களுடன் நண்பனாகும், நெநாத், செர்பிய கிறிஸ்துவர்களைக் கொல்ல நினைக்கும் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனான பாஷ்கிமை காண்கிறான். நால்வரும் விளையாடிக்கொண்டிருக்க, தாத்தாவின் நினைவு வரும் நெநாத், அங்கிருந்து செல்ல முயல்கிறான். ஆனால் அவனைத் தடுக்கும் பாஷ்கிம், தோற்றுவிட்டதாகக் கூறிவிட்டுச் செல்லும்படி, ஆணையிடுகிறான். நெநாத் மறுக்க, பெரிய ஆலய மணியை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறான் பாஷ்கிம்.
மணி, நெநாதின் மீது விழ, அதற்குள் மாட்டிக்கொள்கிறான் நெநாத். பாஷ்கிமின் காலில் குண்டுக் காயம் பட, அவனை கிறுஸ்துவ மத குரு, அவனது வீட்டில் கொண்டு சேர்க்கிறார். இறுதியில், நெநாதை காப்பாற்றியது யார்? என்பது தான் மீதிக் கதை. பார்வையாளர்கள் அனைவரையும் படத்தின் இறுதிக் காட்சி நெகிழ வைத்தது.

அடுத்த திரைப்படம், பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராம்ஸ் (RAMS). செம்மறி ஆடுகளை வளர்க்கும் இரு முதிய சகோதரர்களின் கதை. அவர்கள் வசிக்கும் பள்ளத்தாக்கில், ஸ்ராப்பி எனும் நோய் செம்மறி ஆடுகளுக்குப் பரவ, அனைத்து ஆடுகளையும் கொல்ல மருத்துவர்கள் உத்தரவிடுகின்றனர். ஆனால், ஆடுகளின் மீது அளவற்ற பிரியம் கொண்ட கும்மி சில ஆடுகளை மறைத்து வைக்கிறார்.

இதை ஒரு மருத்துவர் கண்டுபிடிக்க, பயந்து போகும் கும்மி, நீண்ட நாட்களாக சண்டையில் இருக்கும் தனது சகோதரனான கிட்டியிடம், உதவி கேட்கிறார். இருவரும் ஆடுகளைக் காப்பற்ற, பனியில் வாகனம் மாட்டிக்கொள்கிறது. இதுவே சகோதரர்களுக்குள் மறுபடியும் அன்பை உருவாக்குகிறது. பார்வையாளர்களின் பலத்த கைதட்டல்களுடன் நிறைவடைந்தது "ராமஸ்".

http://www.vikatan.com/cinema/others/world-cinema/57505-chennai-13th-international-film-festival-day.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.