Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது இலங்கை! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானிடம் போர் விமானங்களை வாங்குகிறது இலங்கை! 
[Wednesday 2016-01-06 07:00]

எட்டு ஜே.எப்-17 போர் விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்வதற்கான உடன்படிக்கையில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் இலங்கை விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்த ஜேஎப் 17 போர் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யாது என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

   எனினும் நவாஸ் செரீப்பும் மைத்திரிபால சிறிசேனவும் நேற்று செய்து கொண்ட 8 உடன்படிக்கைகளில், பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் இந்த 8 விமானங்களை இலங்கைக்கு விற்பனை செய்யும் விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்கள் தற்போது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களின் போது பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னர் இந்த விமானங்கள், சீன தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட போதும் தற்போது அவை தனித்து பாகிஸ்தானால் தயாரிக்கப்படுவதாக பாகிஸ்தானின் ஜியோ டிவி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதனைவிட அதிக எண்ணிக்கையிலான விமானங்களை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும், இந்தியா தமது போர் விமானங்களை கொள்வனவு செய்யவேண்டும் என்று அழுத்தம் காரணமாக அந்த எண்ணிக்கையில் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேநேரம் இந்தியாவை திருப்திப்படுத்த இந்தியாவின் போர் விமானங்களையும் இலங்கை கொள்வனவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=148675&category=TamilNews&language=tamil

Edited by கறுப்பி

பாகிஸ்தானிடம் விமானக் கொள்வனவு;மறுக்கும் பாதுகாப்புச் செயலர்
பாகிஸ்தானிடம் விமானக் கொள்வனவு;மறுக்கும் பாதுகாப்புச் செயலர்
பாகிஸ்தானிடம் இருந்து, எட்டு ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யும் உடன்பாட்டில், கையெழுத்திட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நிராகரித்துள்ளார்.
 
பாகிஸ்தான் அரசாங்கத்துடனான பேச்சுக்களில் கூட இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்படவில்லை என்றும், போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்து தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதனிடையே, இதுபற்றிய செய்திகள் தவறானவை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
 
போர் விமானங்களை வாங்கும் தேவை எழுந்தால், சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படைத்தன்மை கொள்கையை கடைப்பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.