Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்செந்தூர் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய குட்டித் திமிங்கலங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள்  நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குட்டித் திமிங்கலங்கள் நேற்று ஒரே நேரத்தில் கரை ஒதுங்கியது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களை பார்ப்பதற்கு நள்ளிரவிலும் பொதுமக்கள் கடற்கரைகளில் திரண்டனர்.6 அடி முதல் 18 அடி வரை நீளம் கொண்ட அந்த திமிங்கலங்களின் எடை 100 முதல் 200 கிலோ வரை இருந்தன. ஆலந்தலை முதல் கல்லாமொழி வரையிலான கடல் பகுதியின் கடற்கரைகள் இவ்வாறு சுமார் 100 திமிங்கலங்கள் வரை பரவிக் கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடலில் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட அந்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணிகளில் காவல்துறையினர், ஊர்காவல்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

   

திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய பகுதியில் நெல்லை சரக டி.ஜ.ஜி அன்பு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இதற்கான காரணங்களை ஆராய்ந்தனர்.ராட்சத திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் போலீஸ் டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=149111&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதில் 25 க்கும் மேல் இறந்து விட்டன. எல் நினோவால் ஏற்பட்டுள்ள் கடல் நீரோட்ட திசை மாற்றம் மற்றும் கடல் நீர் வெப்பநிலை மாற்றம் இந்த இடம்பெயர்வுக்கு காரணமாக இருக்கலாம். தகுந்த ஆய்வும்.. கரையொதுங்கும் இந்த கடல்வாழ் பாலூட்டிகளை பாதுகாக்கும் சரியான திட்டமும் முகாமைத்துவமும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவற்றின் இழப்பு கடல் வாழ் உயிரினச் சூழலை பாதிக்கும்.

Edited by nedukkalapoovan

'கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்...வட்டமிடும் விமானங்கள்... பீதியை கிளப்பும் சத்தம் ... அணு உலையில் நடப்பதென்ன?'

 

whales%20lefttt.jpgஅணு உலையில் மர்மமாக நடக்கும் சில விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இல்லை என குற்றஞ்சாட்டியுள்ள கூடங்குளம் அணு உலை எதிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன், அணு உலையில் மர்மமான பல விஷயங்கள் நடப்பதாக பகீர் கிளப்புகிறார்.

தூத்துக்குடி மாவட்ட கடலோரப்பகுதிகளில் நேற்றும், இன்றும் நுாற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இந்த நிகழ்வுக்கு காரணம் என்ன என்பது புரியாமல் மீன்வளத்துறையினரும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் கெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் உரத்தொழிற்சாலை போன்றவைகள் வெளியேற்றும் கழிவுகள் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிற கருத்து நிலவுகிறது. அத்துடன், தாது மணல் நிறுவனத்தின் கழிவுகள் கடலில் கலப்பது, அணு உலையை குளிர்விக்கும் சூடான நீர் கடலில் கலப்பது, அணுக்கதிர்வீச்சு போன்றவையும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கு காரணமாக இருக்கக் கூடுமோ என்கிற அச்சமும் பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிறுவனங்களை குற்றஞ்சாட்டி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பளரான சுப.உதயகுமார் கருத்து தெரிவித்திருப்பது இந்த விவகாரத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. அணு உலையில் மர்மமான முறையில் பல சம்பவங்கள் நடப்பது குறித்து பல ஐயங்களை எழுப்புகிறார் அவர். இதுபற்றி அவரிடம் பேசினோம்...

கூடங்குளத்தை சுற்றிலும் என்ன நடந்தாலும் அணு உலை மீது பழிபோடுகிறீர்களே?

இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் 50 முதல் 300 எண்ணிக்கையிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணு உலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை ராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (ஜனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறிய ரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன.

udhayakumar%20250.jpgஅணு உலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. அதனால் மக்கள் பீதி அடைந்து போய் இருக்கிறார்கள். ஆனால், அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது. பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்! என்று சொல்வதை தவிர நம்மால் என்ன செய்ய முடியும்?

கூடங்குளம் அணு உலையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடப்பதாக வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்து இருக்கிறாரே?

அங்கே என்ன நடக்கிறது என்பதே மர்மமாக இருக்கிறது என்கிறேன். மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுக்கிறார்கள். கடந்த 6 மாதத்துக்கும் மேலாக அணு உலை இயங்காமல் கிடக்கிறது என்கிறார்கள். ஆனால், ஏதோ சோதனைகளை நடத்துவதாக அறிகிறேன். அதனால் அங்கிருந்து அளவுக்கு அதிகமாக சத்தம் கேட்பதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால், அணு உலை நிர்வாகம் வாயை திறக்க மறுக்கிறது. 'பராமரிப்புப் பணிகள் முடிந்து பிப்ரவரி 15-க்குள் அணு உலை செயல்படத் தொடங்கும்' என அணு உலை வளாக இயக்குநர் சுந்தர் சொல்கிறார். இந்திய அணுசக்திக் கழக தலைவர் சேகர்பாசு, 'இன்னும் பராமரிப்புபணிகள் நிறைய நடக்க வேண்டியதிருப்பதால் ஜூன் 15-க்கு பிறகு முதல் அணு உலை மீண்டும் செயல்படத் தொடங்கும்' என்கிறார்.

இதை எல்லாம் விட வேடிக்கை என்னவென்றால், ரஷ்ய அதிபர் புடின், ஓரிரு வாரத்தில் அணு உலை செயல்படும் என்கிறார். இதில் எதை நம்புவது? யார் சொல்வது சரியானது? ஆளாளுக்கு எதையாவது சொல்லி மக்களை குழப்புவதன் மர்மம் என்ன? மக்களிடம் உண்மையை தெரிவிக்க மறுப்பது நியாயம்தானா? நாங்கள் ஏற்கெனவே பலமுறை தெரிவித்து இருப்பதுபோல, தரமற்ற உதிரிப்பாகங்களால் அமைக்கப்பட்ட கூடங்குளத்தின் முதல் இரு அணு உலைகள் இயங்கவும் இல்லை. இனிமேல் அவை இயங்கப்போவதும் இல்லை.

நிலைமை இப்படி இருக்கும்போது, மத்திய அரசானது கூடங்குளத்தில் மேலும் 12 அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் போட்டு இருக்கிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட இரு அணு உலைக்கு அந்தப் பகுதியில் கடுமையான எதிர்ப்பு இருக்கும் சூழலில், கூடுதல் அணு உலைக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதன் மூலம் மக்களை பற்றிய சிந்தனை அரசுக்கு இருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது.

whales%20600%2011.jpg

திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்குவதை அணு உலைக்கு எதிரான உங்களது போராட்டத்துக்கு பயன்படுத்துவதுடன், மக்களிடம் வதந்திகளை பரப்புவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

முன் எப்போதும் இல்லாத வகையில் திமிங்கலங்கள் செத்து மடிகின்றன. அணு உலையில் இருந்து தேவையற்ற சப்தம் வருகிறது. அங்கே போலீஸ் மற்றும் துணை ராணுவ படை குவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை அப்பகுதி மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டியது கடமை இல்லையா? ஆனால், அதில் என்ன மறைக்க இருக்கிறது? அணு உலையில் இப்போது என்ன சோதனை நடத்தப்படுகிறது என்பதை மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்க வலியுறுத்துகிறோம்.

அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அனைத்து அறிக்கைகளையும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும். ஒன்றிய தகவல் ஆணையம், 'இந்த அறிக்கைகளை மக்களுக்குக் கொடுங்கள்' என்று பணித்த பிறகும், இந்திய அணுமின் கழகம் டெல்லி உயர் நீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கியிருப்பதை ரத்து செய்து இருப்பது எதற்காக? நெல்லை, குமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அனைவருக்கும் பேரிடர் பயிற்சி கொடுங்கள் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். பாதுகாப்பு தொடர்பாக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவியுங்கள் என்கிறோம். அது அரசின் கடமை அல்லவா?

whales%20600%201.jpg

அரசு கொண்டுவரும் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை மக்களுக்குத் தெரிவியுங்கள். உண்மை பேசுங்கள் என்று நாங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? மக்களை மதித்து செயல்படுங்கள். பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகள் போன்றோர் மக்களிடம் உண்மையாக, நேர்மையாக பேசுங்கள். நீங்கள் அனைவரும் தேவதூதர்கள் போலவும், மக்களை அடிமைகள் போலவும் நினைத்து செய்லபடாதீர்கள் என்கிறோம். இதில் எதையும் செய்யாமலிருந்தால், வதந்திகளும், பீதிகளும் பரவத்தான் செய்யும். அதற்கு மக்கள் பொறுப்பல்ல.

அணு உலை எதிர்ப்பு தொடர்பாக அரசியல்வாதிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறீர்களே. அதற்கு வரவேற்பு எப்படி உள்ளது?

kudan%2018%20600%202.jpg

அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவின் சார்பாக அரசியல்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறோம். தேர்தல் சமயத்தில் அணு சக்திக்கு எதிராக வாக்குறுதி கொடுக்க, பல்வேறு அரசியல் கட்சியினரையும் சந்தித்து வலியுறுத்தி வருகிறோம். பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் கட்சித் தலைவரையோ அல்லது முக்கிய நிர்வாகியையோ கூட பார்க்க முடியவில்லை. மக்களின் கருத்துக்கு அவர்கள் மதிப்பு கொடுப்பது அவ்வளவுதான்.

http://www.vikatan.com/news/coverstory/57592-sp-udhayakumar-arise-doubts-about-kudankulam.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nedukkalapoovan said:

இதில் 25 க்கும் மேல் இறந்து விட்டன. எல் நினோவால் ஏற்பட்டுள்ள் கடல் நீரோட்ட திசை மாற்றம் மற்றும் கடல் நீர் வெப்பநிலை மாற்றம் இந்த இடம்பெயர்வுக்கு காரணமாக இருக்கலாம். தகுந்த ஆய்வும்.. கரையொதுங்கும் இந்த கடல்வாழ் பாலூட்டிகளை பாதுகாக்கும் சரியான திட்டமும் முகாமைத்துவமும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவற்றின் இழப்பு கடல் வாழ் உயிரினச் சூழலை பாதிக்கும்.

விஞ்ஞானம் முன்னேறியது போதும்.

இத்துடன் சகல பக்க விளைவுகளை தரக்கூடிய விஞ்ஞான ஆராய்ச்சிகளையும் அடியோடு நிறுத்த வேண்டும். அதி சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை / நீர்மூழ்கிகப்பல்களை ஓரத்தில் கட்ட வேண்டும்.

மேற்கத்திய நாடுகள் அணு ஆலைகளை மூட ஆரம்பிக்கின்றன. ஆன்மீகம் மனிதாபிமானம் போதிக்கும் நாடுகள் அணு ஆலைகளை ஆரம்பிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

மேற்கத்திய நாடுகள் அணு ஆலைகளை மூட ஆரம்பிக்கின்றன. ஆன்மீகம் மனிதாபிமானம் போதிக்கும் நாடுகள் அணு ஆலைகளை ஆரம்பிக்கின்றார்கள்.

மேற்கு நாடுகள் வல்லரசாகி அதன் விளைவுகளின் தாக்கத்தை அறிஞ்சி திருந்திட்டு வருகினம். இவை இப்ப தானே வல்லரசாகப் போகினம். பொறுங்கோ.. சென்னை வெள்ளத்தில அழிஞ்சது போல.. அண்டிப்பிழைக்க வந்ததுகள்.. சென்னையை கதிர்வீச்சில அழிக்காமல்... அரசியலை விட்டு போகாதுகள். தமிழன் தானே எப்படி போனால் எவனுக்கென்ன..! அவனுக்கே அது பற்றி கவலை இல்லாதப்போ.. அடுத்தவனுக்காக கூவிப் பிழைப்பதே தமிழனின் தற்கால அரசியல்.. இப்படி இருக்கிறப்போ.. தமிழனின் தலைவிதியை யாராலும் மாற்றேலாது. :rolleyes:tw_angry:

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?- விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

  •  
 
மணப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை அப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.| படம்: என்.ராஜேஷ்.
மணப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை அப்பகுதி பள்ளி மாணவ, மாணவியர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.| படம்: என்.ராஜேஷ்.

திருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்துவிட்டன. மற்றவற்றை கடலில் கொண்டுவிடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவிய ராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜே.கே.பேட்டர்சன் எட்வர்டு:

இந்த வகை திமிங்கலங்கள் அனைத்து கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இதன் பெயர் Globicephala Macrorhynchus. குழுவாக வசிக்கும் இவற்றுக்கு தனி சமிக்ஞை இருக்கும்.

குழுவில் உள்ள ஒரு திமிங்க லம் இரை தேடியோ, கடல் நீரோட் டத்தாலோ பிரிந்து சென்றுவிட்டால் அது சமிக்ஞை கொடுக்கும். உடனே அந்த குழுவில் உள்ள மற்றவை அப்பகுதிக்கு மொத்தமாக சென்று விடும். அவ்வாறு பிரிந்த ஒரு திமிங்கலம் மணப்பாடு கரைக்கு வந்திருக்கலாம். அதன் சமிக்ஞை கிடைத்து மற்ற திமிங்கலங்களும் கரைக்கு வந்திருக்கலாம்.

‘கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் காயம் ஏதும் இல்லை’ என்றார் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பூங்கா வன பாதுகாவலர் தீபக் எஸ்.பில்ஜி.

அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர்:

இப்பகுதியில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்தால், அணு உலையுடன் தொடர்புபடுத்தி பேசுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மின் உற்பத்தி நடைபெற வில்லை. உற்பத்தி நடைபெற்ற போது அணுஉலையை குளிர்விக் கும் தண்ணீரின் வெப்பநிலையை குறைத்து வெளியேற்றியபோதுகூட இவ்வாறு திமிங்கலங்கள் ஒதுங்க வில்லை.

மேலும், மணப்பாடுக்கும், கூடங்குளத்துக்கும் 40 கி.மீ. தூரம் இருக்கிறது. இதற்கும், அணுமின் நிலையத்துக்கும் சம்பந்தம் கிடையாது.

இது முதல்முறை அல்ல

மணப்பாடு கடற்கரையில் திமிங்கலங்கள் மொத்தமாக கரை ஒதுங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் 1973-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி 147 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஓரிரு நாட்கள் உயிரோடு இருந்த அவை பின்னர் இறந்துவிட்டன.

அதேபோல்தான் இப்போதும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி யுள்ளன. ஒரே காலத்தில் தான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8100189.ece?homepage=true&relartwiz=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.