Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத தடைச்சட்டம் காலாவதியாகி விட்டது. புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

Featured Replies

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது காலாவதியான சட்டமாகும். அதனை அகற்றி பொதுநலவாய நாடுளின் சட்டத்துக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டம் எதிர்காலத்தில் நிறைவேற்றலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட பிரதமர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , 

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது காலாவதியான சட்டமாகும். அதனை அகற்ற எதிர்பார்த்துள்ளதுடன் சர்வதேச ரீதியில் தற்போது பயங்கரவாத பிரச்சினை இருப்பதன் காரணமாக தேவைப்பட்டால் அதற்கு தேவையான சட்டங்களை பொதுநலவாய நாடுளின் சட்டத்துக்கு அமைவாக எதிர்காலத்தில் நாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

அதேவேளை தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் , சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரிடம் பேசப்பட்டு உள்ளது. அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரிவித்து பின்னர் முடிவு தொடர்பில் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் 

இவ்வருடத்தின் நடுப்பகுதியில் அதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படும். காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ள பெரும்பாலானவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்பதனை மனவருத்தத்துடன் கூறுகின்றேன்.அதனை கூறுவதையிட்டு .  நான் கவலையடைகின்றேன். வடக்கில் மட்டுமல்ல ,தெற்கிலும் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சனைகள் உள்ளன.

 

இலங்கையின்  முப்படைகளும் மாலி நாட்டிற்கு யுத்தத்திற்கு செல்லவுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்தது போன்று ஓய்வு பெறும் இராணுவத்தினருக்கும் பயிற்சி அளித்து சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.

அதேவேளை தற்போதும் முற்படைகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.அவர்களை  மாலி நாட்டுக்கு யுத்தத்துக்கு அனுப்புவதற்காகவே அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டால் சர்வதேச நாடுகளின் அமைதி நடவடிக்கையில் இலங்கையின் முப்படைகளையும்  ஈடுபடுத்த முடியும்

எத்ரிகாலங்களில்  இளம் மாணவர் படையணியை உருவாக்குவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ருவன் விஜயவர்தன மற்றும் இராணுவ தளபதியிடம் பேசப்பட்டு உள்ளது.

வடக்கில் இந்திய மீனவர்களின் அத்து மீறல் பிரச்சினை முற்றாக ஒழியும் வரை கடற்படையினரின் தொகை குறைக்க முடியாது அதேவேளை  வடக்கில் உள்ள இராணுவத்தை குறைப்பது தொடர்பில் காலகிரமத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள சமாதான சூழ்நிலையும் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை வைத்து படிப்படியாக வடக்கிலுள்ள இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள்.

 

அரசியல் அமைப்பு சபை வெளிப்படைத்தனமையுடன் செயற்பட வேண்டும்.

 

அரசியல் அமைப்பை திருத்தம் செய்யும் நோக்குடன் உருவாக்க பட்டுள்ள அரசியல் அமைப்பு சபை வடமாகாண சபையுடன் பேசியும் , பொது மக்களுடனும் பேசியும் அவர்கள் கருத்துக்களை கவனத்தில் எடுக்க வேண்டும்.

சர்வாதிகாரமாக 18 ஆவது சீர்திருத்தத்தை ஜீ.எல்.பீரிஸ் உருவாக்கும் போது வக்காலத்து வாங்கிய வடக்கு கிழக்கு ஊடகங்கள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க கூடாது.

தற்போது அரசியல் அமைப்பு சபை உருவாக்க பட்டுள்ளது அவர்களும் முன்னையவர்கள் போன்று சர்வதிகாரமாக உருவாக்காமல் , வெளிப்படையாக செயற்பட்ட வேண்டும்.

அரசியல் யாப்பினை சர்வாதிகாரமாக உருவாக்கியவர்களுக்கு வக்காலத்து வாங்கிய ஊடகங்கள் வடக்கு , தெற்கு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போது வக்காலத்து வாங்கிய ஊடகங்கள் இன்றைய சூரிய உதயத்துடன் ஆவது மாற வேண்டும். என தெரிவித்தார்.

http://www.whathits.com/globaltamilnews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.