Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது உரிமைகளைப் பெறவே தமிழர்கள் போராடினார்கள் (போர் அனைத்தையும் சிதைத்து விட்டது என்கிறார்: சந்திரிகா!

Featured Replies

தமது உரிமைகளைப் பெறவே தமிழர்கள் போராடினார்கள் (போர் அனைத்தையும் சிதைத்து விட்டது என்கிறார்: சந்திரிகா!

இலங்கைக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக ஒற்றுமையாக போராடிய தமிழ் மக்கள் சுதந்திரத்தின் பின்னர்  தமக்குரிய உரிமைகள் கிடைக்காத காரணத்தால் தான் தமது உரிமைக்காக போராடினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

 

யாழ். மாவட்ட மாணவர் தைப்பொங்கல் விழா”நேற்றையதினம் யாழ். இராமநாதன் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பொங்கல் விழாவை இந்த வருடம் யாழில் கொண்டாடுவதில் இத்தினத்தை மிகவும் மகிழ்சியான நாளாக கருதுகின்றேன். நீண்ட காலத்துக்கு பின்னர் தெற்கில் இருந்து வந்து வடக்கு மக்களுடன் இனைந்து இந்த விழாவை கொண்டாடுகின்றோம். 

 

கடந்த காலத்தில் இனம் மதம் என்ற நோக்கத்துக்காக பிரிந்து பல செயற்பாடுகளை செய்துவந்தோம். ஆனால் எமது சிறுவயதில் இன மத வேறுபாடு இன்றி எமது செயற்பாடு களை செய்து வந்தோம் என்பது எனக்கு நினைவிலுள்ளது. 

 

இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்ப காலத்தில் தமிழர், சிங்களவர் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே செயற்பட்டார்கள். ஆனால் சுதந்திரத்தின் பின்னர் தமிழ் முஸ்லிம் மக்க ளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கப் பெறாமையாலே வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து தமது உரிமைக்காக போராடியிருந்தனர்.

 

இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல பிரமுகர்கள் இருக்கிறார்கள். அதிலும் டி. .எஸ். சேனநாயக்கஇசிற்றம்பலம் போன்ற பிரமுகர்கள்  சுதந்திரத்துக்கு பின்னர் தமக்கு கூடிய அதி காரம் கிடைக்கும் என எண்ணினார்கள். அதேபோன்று சுதந்திரத்தின் பின்னர் தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்கப் பட வேண்டும் என தமிழ் முஸ்லிம் மக்கள் பலகாலம் எதிர்பார்த்திருந்தார்கள். அந்தசந் தர்ப்பத்தில் அந்த அரசு குறித்த உரிமைகள் வழங்கப்படவில்லை. 

 

இதனாலேயே வடக்கு கிழக்கு வாழ்ந்த தமிழ் மக்கள் ஒன்றாக இணைந்து தமது உரிமைக்காக கஷ்ரப்பட்டார்கள்,

போராடி யிருந்தனர்.ஆனால் எனக்குதெரியும் இப்பகுதி மக்கள் ஆயுதம் ஏந்தி போராடவோ மக்களை கொல் லவோ விருப்ம் இல்லாதவர்கள் என்று எனக்கு தெரியும். அதே போன்று ஒற்றுமையாக வாழ அதிகப்படியான சிங்கள மக்களும் எண்ணுகிறார்கள். 

 

ஆனால் சிலர் தமது தனிபட்ட அரசியல் தேவைகளுக்காகவும் தமது பலத்தை கட்டி யெழுப்புவதற்காகவுமே ஒருசிலர் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள் அந்த நிலையில் தான் நாம் நினைக்காதவகையில் இந்த நாட் டில் பாரிய யுத்தம் ஏற்பட்டு அதனால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உயிர்கள் சிதறிப் போனது.  அதேபோன்று சிங்கள மக்க ளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் எமதுநாட்டின் தேவை என்ன என் பதை அனைவரும்  மறந்துவிட்டோம்.

 

இவ் அநாவசிய போரின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் தான். ஆயுதபடைக்கும் விடுதலைப் புலிக ளுக்கும் இடையில் சிக்குண்டு மக்களுடைய வாழ்க்கை பாதிப்படைந்ததுடன் கல்வி, கலாச்சாரம் என அனைத்துமே இப்பகுதியில் சிதை வடைந்தன. ஆயுதம் தாங்கிய சிலருடைய செயற்பாட்டால் கலாச்சாரம் சிதறிப்போய்விட்டது. அந்த நோக்கத்தை கைவிட்டு எமது நாட்டை கட்டியெழுப்பவேண்டும். 

 

அவரவருக்குகலாச்சாரம் உண்டு அதை ஒவ்வொருவரும் மதித்து கட்டியெழுப்ப வேண்;டும். எமது இரத்தத்தில் வேறுபாடு இல்லை எனவே நாம் ஒரே மக்களாக இருக்க வேண்டும். இலங்கை என்பது தனிநாடு இங்கு இன மத, மொழி வேறுபாடு இல்லை அனைவருக்கும் சமஉரிமைஉள்ளவர்கள். ஒரேமக்கள் என் சிந்தனையுடன் செயற்படவேண்;டும் என்று சந்திரிகா தெரிவித்ததார். 

http://onlineuthayan.com/news/6959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.