Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகள்: செய்யும் பணி விரும்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
stress_2698043f.jpg
 

வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை.

என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத‌னால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத்திலும் இதே நிறுவனத்தில் இதே பணியிலேயே தொடரலாமா அல்லது வேறு நிறுவனத்துக்கு மாறலாமா, அப்படி மாறினால் நல்ல சம்பளம் கிடைக்குமா, இல்லையெனில், இதே நிறுவனத்திலேயே தொடர்ந்தால் ஒருவேளை இந்த நிறுவனம் என்னை வேலையைவிட்டுத் தூக்கிவிட்டால் என்ன செய்வது என குழப்பத்தில் இருக்கிறேன். இதிலிருந்து விடுபட எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.

நண்பரே, மன அழுத்தம் அதிகமாக இருக்கும் மென்பொருள் பணியில் பளுவே இல்லாமல் ஜாலியாக ஊதியம் பெறும் அதிர்ஷ்டசாலி நீங்கள். வேலையைப் பிடித்தமானதாக மாற்றிக்கொள்ள என்ன வழி என்று பார்க்கலாமா?

தயானந்த ஸ்வாமிஜிக்குப் பாகற்காய் அறவே பிடிக்காதாம். விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற்பட்டு வாழ வேண்டும் என்று அவரது சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்யும்போது மனசாட்சி உறுத்தியதாம்! அன்றிலிருந்து பாகற்காய் பிடிக்காது எனும் எண்ணத்தை விட்டு, பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டாராம். பாகற்காயை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்தவுடன் அவருக்கே ஆச்சர்யமாகிவிட்டதாம்!

ரகசியம் இதுதான். பிடிக்கவில்லை என்பதைப் பிடிக்க வேண்டும் என்று மாற்றிக்கொள்வது. இன்றிலிருந்து இப்படி நினைக்க ஆரம்பியுங்கள். விரும்பி ஒரு வேலையைச் செய்யும் போது, சிறப்பாகச் செய்ய முடியும். சிறப்பாகச் செய்தால் பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் சாத்தியமாகும்.

ஒருவருடைய சுயமதிப்பு அவரது ஊதியத்தைச் சார்ந்திருக்கும். அதனால், இன்னொரு வேலையைத் தேடிக்கொள்ளாமல் கையிலிருக்கும் வேலையை உதறுவது சரியில்லை. மென்பொருளில் தேர்ச்சி பெற்ற நீங்கள் இனிமேல் லைன் மாறுவது சாத்தியமா என்று ஆராயுங்கள்.

ஒரு ‘கரியர் கவுன்ஸில’ரைப் பார்த்து எந்த லைன் உங்களுக்கு உகந்தது என்று தெரிந்து கொள்ளலாம். அதன் பின் அந்த லைனுக்கு உங்களைத் தயார் செய்ய, மேற்கொண்டு படிக்கலாம். இவையனைத்தும் வேலையில் இருந்துகொண்டே செய்ய வேண்டியவை. படிப்பு முடிந்தபின் அதற்கு ஏற்ற வேலையில் அமரலாம். அதுவும் பிடிக்கவில்லையென்றால்...? நிதர்சனமான உண்மையைப் புரிய வைக்கவே நான் இவ்வளவையும் விளக்கினேன்!

‘கையிலிருக்கும் ஒரு பறவை, கூட்டிலிருக்கும் இரு பறவைகளை விட மேல்' என்பதையும், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இப்போது பணிபுரியும் கம்பெனி பிடிக்கவில்லையென்றால், வேறொரு நிறுவனத்தில் சேரலாமே.

வணக்கம் அக்கா. நான் கல்லூரியில் எம்.டெக். படிக்கும்போது என் ஜூனியர் பெண் ஒருவரைக் காதலித்தேன். அப்போது அவள் பி.டெக். படித்து வந்தாள். நான் கடந்த நான்கு வருடங்களாக அவளைக் காதலித்து வருகிறேன். அவளும் என்னைக் காதலித்தாள்.

நான் வேலை காரணமாக இடையில் இரண்டு ஆண்டுகள் பெங்களூருவுக்குச் சென்றுவிட்டேன். அப்போதும் எங்கள் காதல் தொடர்ந்தது. அவள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சென்று வந்தாள்.

அங்கு கம்பெனி பஸ்ஸில், ஒருவ‌ருடன் (அவருடைய வயது 35) பழக ஆரம்பித்தாள். அவர்களிருவரும் ஒரே இருக்கையில்தான் அமர்ந்து வருகிறார்கள் என்றும், அவருடன் மட்டுமே அவள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதாகவும், இரவில் வெகுநேரம் அவருடன் ‘வாட்ஸ் அப்'பில் பேசுவதாகவும் எனக்குத் தகவல்கள் கிடைத்தன. இதனால் கோபமடைந்த நான் அவளைக் கண்டித்தேன்.

இதனால் என்னுடன் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அந்த நபருடன் தொடர்ந்து பழகியதால் நாளடைவில் அது காதலாக மாறியது. ‘நாள் அவரைத்தான் காதலிக்கிறேன்' என்று சொல்லி என்னிடமிருந்து அவள் விலகிவிட்டாள். அவளும் அவரிடம் எங்கள் காதலைச் சொல்லவில்லை.

இதற்கிடையில் என்ன நடந்ததோ தெரியாது. இப்போது அவள் என்னிடம் ‘நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்கிறாள். நான் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று தெரியாமல் தத்தளிக்கிறேன். நீங்கள் ஆலோசனை தர‌ வேண்டுகிறேன்.

காதல் அரும்பும் வயதில் ஆண், பெண் இருவரையுமே உணர்வுகளின் எழுச்சி ஆட்கொள்ளும். அதன் சொல்படிதான் நடப்பார்கள். இந்தக் காரணத்தாலேயே அவர்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கும். சாலைப் போக்குவரத்துக்கு உள்ளதுபோல் சமிக்ஞைகள் காதலுக்கு இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? பச்சை, மஞ்சள், சிவ‌ப்பு என்று தோன்றும் நிறத்தைப் பொறுத்து, செல்லலாமா, நிதானிக்க வேண்டுமா, போகக் கூடாதா என்று தீர்மானிப்போம். குழப்பம் இருக்காது.

அந்தப் பெண்ணின் மனம் ஊசலாடி ஒரு நிலைக்கு இப்போது வந்திருந்தாலும், மறுபடியும் ஊசலாடாது என்று உறுதியாக உங்களால் சொல்ல முடியுமா? உங்களுடன் பழக ஆரம்பித்த பின், வேறு ஒரு ஆணுடன் அவர் சிரித்துப் பேசுவதைப் பார்த்தது உங்களுக்குச் சந்தேகம் வரலாம். இம்மியளவு சந்தேகம் இருந்தாலும், உறவு ஆரோக்கியமாக இருக்காது. நம்பிக்கையைவிட சந்தேகம் அதிகமிருந்தால், காதல் வலுவிழந்துவிடும்.

சந்தேகங்களைத் தாண்டி நம்பிக்கை மேலோங்கி இருந்தால், காதல் பலப்படும். உங்களுக்கு உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஆர்வம் இருக்கிறது. ஆர்வத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்! உடனேயே பச்சைக்கொடி காட்டிவிடாதீர்கள்! உங்களை விட்டுச் சென்றதற்கும், அவரை விட்டு வந்ததற்கும் காரணங்கள் என்ன என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

பெண்கள் செல்ஃபோன் மாதிரி. கையைப் பிடித்துக்கொண்டு பேசுவதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் தவறான ‘கீ'யை அமுக்கி விட்டால் போச்சு! மீண்டும் அதைச் செய்யாமலிருக்க இந்தத் தகவல்கள் உதவும்! அவருடைய எதிர்பார்ப்பு என்ன, எதிர்காலத்தில் உறவு செழிப்படைய என்ன செய்ய வேண்டும் என்றும் புரிந்துகொள்வீர்கள்.

ஒரு காதலர் சொன்னாராம், “உனது சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. அதற்கு நான் காரணமாக இருக்கும்போது, நான் பூரித்துப்போகிறேன்”. அதேபோல் பரஸ்பரம் இருவரும் மற்றவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8112389.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழரசு.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தமிழரசு....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.