Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரணகமவின் சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருந்தது என்ன ?

Featured Replies

பரணகமவின் சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருந்தது என்ன ?
பரணகமவின் சிரிப்புக்குப் பின்னால் ஒளிந்திருந்தது என்ன ?

 

 

 

2009ஆம்    ஆண்டு  மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காணாமற் போனவர்கள், பல வந்தமாகக் காணாமல் ஆக்கப் பட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி நிறுவப்பட்ட ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம விசாரனைகள் இடம்பெற்றபோது ஒரு நாள் சிரித்தார். அவரின் சிரிப்புக்குப் பின்னால் பல விடயங்கள் அடங்கியிருக்கின்றன. சரி முதலில் அவர் சிரித்த சூழ்நிலையைப் பார்ப்போம்.

காணாமற்போனோர்  பற்றிய முறைப்பாடுகள், விசாரணைகள் பற்றி எத்தனை விதமான கதைகள், அழுகைகள், கதறல்கள்.. கேட்டுக் கேட்டு அங்கே இருக்கும் அறிவுசார்ந்த பெரியவர்கள், புத்திஜீவிகள் என்ன நினைத்திருப்பார்கள்?

இப்படி எங்களை நம்பி, கதை கதையாய் அழுது புலம்பி, கண்ணீர் விட்டுச் சொல்கிறார்களே. ஆமிக்காரர்கள் பிடிச்சுக் கொண்டு போனாங்கள், பொலிஸ்காரர்கள் பிடிச்சாங்கள், மாற்றுக் கட்சியினர் பிடிச்சுக் கொண்டு போனார்கள். கண்ணெதிரே சுட்டாங்கள். தூக்கிக் கொண்டு போனார்கள். கடத்திக் கொண்டு போனார்கள்... கத்தினோம்... கதறினோம்... ஒரு பிரயோசனமுமில்லை.

பறிகொடுத்த உறவுகள் அனைவரும் அட்சரம்  பிசகாமல், நடந்த வற்றை நேரம் காலம் தவறாமல்..., எங்களால் சிலரை அடையாளம் காட்ட முடியும். பயப்படாமல் சளைக்காமல் சொல்லும் வலிமை எப்படி வந்தது? இவர்கள் அனைவரும் சொல்லும் விடயங்கள் உண்மைதானா?
தலைவர் பரணகம ஏன் சிரித்தார்? அப்போது நடந்த விடயம் தான் என்ன? காணாமற்போனோர் முறைப்பாட்டில் தனது மகனை 2008 இல் பறிகொடுத்த தாயார் தனது முறைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டிருந்தார்.

தலைவர் பரணகம கேட்டார். இவ்வளவு காலமாய் உங்கட மகன் உயிரோட இருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? அருமையான கேள்வி.. சிந்தனையைத் தூண்டும் கேள்வி... பகுத்தறிவைப் பயன்படுத்தும் கேள்வி, உறவுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, குறிப்பாக அந்தத் தாயாருக்கு எப்படியான மன நிலையை உருவாக்கியிருக்கும்?

தலைவர் பரணகம பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவரால் மட்டுமே இப்படிக் கேட்க முடியும். கேட்கும் துணிவும் அவருக்குரியது. இப்படியான கேள்வியைத் தமிழ்த் தலைவர்களால் கேட்க முடியவில்லை? கேட்டால் என்ன நடந்திருக்கும்? எல்லோரும் மூடை முடிச்சுக்களைக் கட்ட வேண்டிய நிலைமை வந்திருக்கும்.

இனி விடயத்துக்கு வருவோம். தலைவர் கேட்ட கேள்விக்கு அந்தத் தாயார் என்ன சொன்னார்?
சாத்திரம் பார்த்தபோது... சாத்திரியார் மகன் உயிரோட இருப்பதாகக் கூறினார். அதுதான் நான் மகன் உயிரோட இருப்பதாக நம்புகிறேன்.. என்றார்..

அப்போதுதான் தலைவர் பரணகம சிரித்தார். அம்மா சாஸ்திரத்தை நம்பித் தான் முன்னாள் ஜனாதிபதி ஆட் சியைத் துறக்க வேண்டி வந்தது. நீங்களும் சாத்திரத்தை நம்பிக் கொண்டு இராமல் ஆக்கபூர்வமான விடயத்தைப் பாருங்கோ. இந்த நேரத்தில் அவர் சிரித்தது யாருக்காக? பதவியைப் பறிகொடுத்த மகிந்தவுக்காகவா? மகனைப் பறிகொடுத்த அந்தத் தாயாருக்காகவா? இருவரும் சாத்திரத்தை நம்பி மோசம் போய்விட்டார்களா?

ஒருவருக்கு இழந்த பதவியை மீளப்பெறும் வாய்ப்புக்கள் ஏற்படலாம்.... அந்த மகனைப் பறிகொடுத்த தாயாருக்கு....?

அப்படியானால் என்னதான் விடை. சிலர் சிறைச்சாலையில் கண்டேன், முகாமில் கண்டேன், புனர் வாழ்வு முகாமில் பார்த்தேன் என்று சொல்கிறார்களே... 2008 இலிருந்து எத்தனை வருடங்கள் உருண்டோடி விட்டன.

எப்போது இலங்கை அரசால் இதற்குத் தீர்வு கிடைக்கப் போகின்றது? இன்னும் நம்பிக்கையையும், உயிரையும் வைத்துக் கொண்டு அலைந்து திரியும் இந்த மக்களுக்குத் தலைவர் பரணகமவின் குழுவினரால் என்ன பதிலைச் சொல்ல முடியும்?

முதலில் இந்த மக்கள் சொல்லும் விடயங்கள் உண்மை என்று ஏற்றுக் கொண்டு இருப்பார்களா? அல்லது இது பொய்யான அழுகை, புலி ஆதரவாளர்களால் புனையப்பட்ட கதைகளுடன் கூடிய நாடகம் என நினைப்பார்களா? இது நாடகம்.. பொய்யென்றால்... எனது தாயாரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டாமென்று கலங்கிய நாமலின் உணர்வும் பொய்யாகிப் போய் விடுமே? அல்லது உடனடியாகக் காணமற் போனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்தால்.. அடுத்த கட்ட அரசியல் பிழைப்பு என்னாவது...?

தலைவர் மக்ஸ்வெல் பரணகம ஏன் சிரித்தார்? மறுபடியும் அவர் சொன்ன வேறு விடயங்களைப் பார்ப்போம். ஆணைக்குழுவுக்கு வருபவர்கள் பலர் சாத்திரங்களை நம்பித்தான் வருகிறார்கள் ... சாத்திரங்களை நம்பாதீர்கள் இறைவனை நம்புங்கள் என்றார்.

தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின்  பதவிகாலம் அடுத்த பெப்ரவரி மாதத்துடன் அவரது காணாமற்போனோர் ஆணைக் குழுவின் பதவிக் காலம் முடிவடைவதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://onlineuthayan.com/article/77

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.