Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை

Featured Replies

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை

 

 
 
வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை
நாட்டில் நல்லாட்சி அரசு ஆட்சி நடாத்தி வந்தாலும், தமிழர்கள் இன்னமும் அதனை முழுமையாக அனுபவிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
நாட்டில் தற்போது உள்ள ஒற்றையாட்சி முறைமை இல்லாமல் செய்யப்பட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்படுவதன் மூலமே தமிழர்கள் நிம்மதியான வாழ்வொன்றினை வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த முப்பது ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் மாகாணசபை முறைமை இருக்கவில்லை எனவும் இதனால் சர்வாதிகாரமாகவே மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்று வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அரச அதிகாரிகளும் ஏதோ ஒரு கட்சி சார்ந்தே செயற்பட வேண்டிய நிலையும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆகையால் பக்கச்சார்பாக செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கடந்த காலங்களில் இருந்த அரச அதிகாரிகளை வினைத்திறனாக செயற்பட வைக்க வேண்டிய கடமை எமது இணைத் தலைமைகளுக்கு உண்டு. எமது தேசமும் எமது மக்களும் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டு உள்ளார்கள். தற்போது நல்லாட்சி அரசு ஆட்சியில் உள்ளது என கூறப்பட்டாலும், அதனை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க ஆரம்பிக்கவில்லை.
 
எமது மக்களின் நன்மைக்காக செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. இந்த அபிவிருத்தி கூட்டத்தில் அரசியல் போட்டிகளை மறந்து எங்களது மக்களின் நலன்களுக்காக செயற்பட்டு, போரினால் பாதிக்கப்பட எமது மாகாணத்தின் புனர்வாழ்விற்கு அதிக அக்கறை காட்டல் வேண்டும்.
 
நல்லாட்சி எனப்படும் புதிய அரசின் காலத்தில் கூட தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில், போரினால் பாதிக்கபட்ட மாகாணம் என்ற வகையில் எமது மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் எமக்கு போதுமான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எமது அபிவிருத்தியை நாம் முன்னெடுப்பதற்கு இந்த ஒற்றையாட்சி முறைமையும் ஒரு தடையாக உள்ளது.
 
ஆகையால் எமக்கான அதிகாரப்பரவலாக்கல் வழங்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்து வந்த அராஜக ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியான வாழ்வொன்றினை வாழ்ந்து வருவதாக கூறிவரும் நிலையில், எமது மக்கள் தற்போதும் கடந்தகால வாழ்வையே வாழ்ந்து வருவதாக எமக்கு தோன்றுகின்றது. அழிவடைந்துள்ள எமது தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு, அதனை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.