Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது:இலங்கை ராணுவம் நடவடிக்கை!

Featured Replies

மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது:இலங்கை ராணுவம் நடவடிக்கை!

 

ராமேஸ்வரம்: ஏற்கெனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்ற 68 படகுகளையும் 3 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி 6 மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த குடியரசு தினத்தன்று நாகப்பட்டினத்தில் 6 மாவட்ட மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதன் பின்னரும் மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து 29 ம் தேதி காரைக்கால் துறைமுகத்தை கடல் வழியாகவும், சாலை வழியாகவும் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

ramnad%20fishermen.jpg

மீனவர்களின் முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ‘ பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் மீனவர்களும் படகுகளும் விடுவிக்கப்படுவார்கள்’’ என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதன் தொடர்ச்சியாக 6 மாவட்ட மீனவர்களும் தங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று காலை மீன் பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் தாக்கி விரட்டியடித்ததுடன், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

ramnad%20fishers%20new.jpg

ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களும் படகுகளும் விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை  பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/58344-tamil-nadu-fishermen-arrested-by-sri-lankan-navy.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.