Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரவை நிகழ்வில் முதல்வர் பங்கேற்க தடைபோட்டவர்கள் யார்? (விபரம்)

Featured Replies

தமிழ் மக்கள் பேரவையுடனான வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் உறுப்பினர்களும் கையெழுத்திட்டு வெளியிட்டதாகக்  கூறப்படும் அறிக்கையில் தாம் கையெழுத்திடவில்லையென 6 உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதுடன் அதில் கையொப்பமிட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டு மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்குமாறும் கோரியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவை நேற்று வெளியிட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதென வலியுறுத்தி வடமாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றை மாகாண சபை அமைச்சர்கள் மூவர் உட்பட 20 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கியதாகக் கூறி அக்கடிதம் ஊடகங்களுக்கு சனிக்கிமை அனுப்பி வைக்கப்பட்டு அது நேற்று ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

 

ஆனால் அதில் கையொப்பமிட்டவர்கள் எனக் கூறப்படுபவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையிலேயே இக்கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லையெனத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், து.ரவிகரன் சிவனேசன், க.சர்வேஸ்வரன், நடராஜா ஆகியோர் அக்கடித்தில் கையெழுத்திட்டுள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் மக்களுக்கு குழப்பமும் சந்தேகங்களும் இருப்பதால் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தினர்.

 

இதே வேளை சிறிதரனின் ஆலோசனைப்படி கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களான அமைச்சர் குருகுலராஜா, அரியரட்ணம், பசுபதிப்பிள்ளை ஆகியோர் இக்கடிதத்தில் கையொப்பமிட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அங்கத்துவக் கட்சியான ஈபிஆர்எல்எவ்வைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் கையொப்பமிட்டுள்ளார்.

 

அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் இக்கடிதத்தில் ஒப்பமிடவில்லையென்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.  கடிதத்தில் ஒப்பமிட்ட கஜதீபன் கடைசி நேரத்தில் கடிதத்திலிருந்து தனது கையெழுத்தை நீக்கியுள்ளார்.

 

இக் கடிதத்தில் கையொப்பமிட்ட உறுதிப்படுத்தப்பட்ட பெயர் விபரங்கள்.

 

1.சி.வி.கே.சிவஞானம்

2.குருகுலராஜா

3.டெனீஸ்வரன்

4.சத்தியலிங்கம்

5.அயூப் அஸ்மின்

6.அரியரட்ணம்

7.பசுபதிப்பிள்ளை

8.சயந்தன்

9.ஆர்னோல்ட்

10.சுகிர்தன்

11. பரஞ்சோதி

12.சுகிர்தரன்

13. தியாகராஜா

http://tamilleader.org/?p=842

Edited by கலையழகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.