Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழ்வினை உறுத்துவந்தூட்டும்! ஆலமரத்தடி- நிலவன்

Featured Replies

ஊழ்வினை உறுத்துவந்தூட்டும்! ஆலமரத்தடி-  நிலவன்

02 பெப்ரவரி 2016
Bookmark and Share
 

 

ஊழ்வினை உறுத்துவந்தூட்டும்! ஆலமரத்தடி- குளோபல் தமிழ் செய்திகளுக்காக நிலவன்:-

 

அண்ணே அண்ணே மகிந்தவின்டை கண்ணிலை கண்ணீர் என்றபடி கையில் நாளிதழுடன் ஆலமரத்தடிக்கு ஓடிவந்தான் சின்னத்தம்பி. இரத்தம் வடிஞ்ச முகத்திலை கண்ணீரே? என்றார் இரத்தினத்தார். உனக்குப் புதினம் தெரியாதே மகிந்தவின்டை மகன் யோசித ராஜபக்சவை சிறையிலை வைச்சுப் போட்டினம் எண்டு மகிந்த மகரா லென்ஸைப் பாத்து கண்ணீர் விட்ட படத்தைத்தான் பொடி பொட்டையள் எல்லாம் பேஸ் புக்கிலை போடுகுதுகளாம் என்றார் கந்தையா.

சின்னத்தம்பி நாளிதழை விரித்தான். என்டை மகனை மட்டுமில்லை, என்னை மனுசியையும் என்னையும் சிறையிலை போட்டாலும் ராஜபக்ச குடும்பத்தை அடக்க ஏலாது எண்டு மகிந்தர் சொல்லுறார் அண்ணே என்றான் சின்னத்தம்பி. எடேய் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் எண்டுற மாதிரி அவரின்டை வாயாலை சொல்லுற வரிசையிலேயே கைது நடக்கும்போல கிடக்குது என்றார் இரத்தினத்தார்.

பிறகென்ன? என்ன செய்தவையள்? என்ன தண்டனை கிடக்கும்? ஆர் ஆர் எந்த ஒழுங்கிலை கைது செய்யப்படுவினம் எண்டு ராஜபக்சவுக்குத்தானே வெளிச்சம் என்றார் கந்தையா. அடேய் பொடியா மகிந்தவின்டை கண்ணிலை இப்பதானே கண்ணீரை நாங்கள் காணுறம் என்றார் இரத்தினத்தார். சின்னத்தம்பி வாயைப் பிளந்தபடி பார்த்தான். இதுக்கு முந்தி ராஜபக்சவின்டை முகம் ஈழச்சனத்தின்டை இரத்திலை குளிச்சுப்படியே எல்லே இருந்தது என்றார் கந்தையா.

அண்ணே மனுசன் புத்திரசோகத்திலை ஆடிப்போட்டார் போல கிடக்குது என்றான் சின்னத்தம்பி. பின்ன என்ன நடக்கும்? எல்லாம் மகிந்தர் செய்த வினை என்றார் கந்தையா. ஓமடா கந்தையா எங்களின்டை மண்ணிலை எத்தினை தாய் தேப்பனை கண்ணீர் சிந்தி தெருத் தெருவாய் தேடியலைய வைச்சர் மகிந்தர். இண்டைக்கும் பிள்ளையளைத் தேடி நிம்மதியில்லாமல் எத்தினை சனம் அலையுதுகள். அந்த பாவம் சும்மா விடுமே என்றார் இரத்தினத்தார். 

யுத்தம் முடிஞ்சு இண்டைக்கு ஆறு வருசம். மகிந்தர் நாலு வருசமாய் எங்கடையள் பிள்ளைய தா எண்டு அழேக்குள்ளை என்ன சொன்னவர்? என்றார் கந்தையா. ஓமண்ணா பிள்ளையை கேட்டு அழுகிற தாய்மாரை ஜெயில்லை புடிச்சு சிறை வைச்சதும் மகிந்தர்தானே என்றான் சின்னத்தம்பி. ஓமடா.. அதுகளும் புலியாம் பாத்தியே? பிள்ளை புலி எண்டு இல்லாமல் செய்துபோட்டு பிள்ளைய தேடிப் போன தாயையும் புலி எண்டவர் மகிந்த என்றார் கந்தையா.

அண்ணே மகிந்தர் இன்னும் அடங்கேல்லை. புலியளுக்காக கொண்டு வந்த சட்டம் தன்ரை பிள்ளையையை சிறைவைச்சுப் போட்டுது எண்டுறாரே என்றான் சின்னத்தம்பி. எப்பிடியும் அவர் புலியை சுத்தி சுத்தி வருவார். அப்பிடி கதைச்சுத்தான் தன்ரை இருப்பை தக்க வைக்கலாம் எண்டு மனுசன் நினைக்குது என்றார் இரத்தினத்தார். 

அண்ணே நாமல் ராஜபக்ச ஏன் கோட்டோடை சுத்திறார். அவரே வழக்குப் பேசினவர் என்றான் சின்னத்தம்பி. அதுதானடா ஒருத்தருக்கும் தெரியேல்ல. எங்க லோவ் படிச்சவர் எண்டும் தெரியேல்லை? எங்க வழக்குப் பேசினவர் எண்டும் தெரியேல்லை. ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொடியன் கோட்டோடை சுத்துது என்றார் கந்தையா.

அண்ணே இன்னொரு பகிடி தெரியுமே என்றான் சின்னத்தம்பி. என்னடா என்றபடி பார்த்தார் கந்தையா. இப்ப கிட்லர் ஆட்சியை விட மோசமான ஆட்சி நடக்குது எண்டு கோத்தபாய சொன்னதைப் பாத்தியளே என்றான் சின்னத்தம்பி. கெக்கட்டமிட்டுச் சிரித்த இரத்தினத்தார், மகிந்ததானே நவீன கிட்லராய் ஆட்சி நடத்தினவர். அதுக்குத்தானே சிங்கள மக்களும் தூக்கி எறிஞ்சவையள் என்றார் இரத்தினத்தார். 

அதுமட்டுமே எங்கடை சனங்களை கொத்துக் கொத்தாய் கிட்லரை மாதிரி கொண்டதும் மகிந்தர்தான், நஞ்சு வாயு அடிச்சு, கொத்துக் குண்டு போட்டு அடியோடை அழிச்சவர் மகிந்தானே என்றார் கந்தையா. எத்தினை ஊடகவியலாளர்களை, அரசியல்வாதிகளை இல்லாமல் செய்த நாட்டையே இரத்த ஆறாய் ஆக்கின மகிந்தரின் கொலைப் பாதுகாப்புச் செயலாளர் இப்ப நடக்கிறது கிட்லர் ஆட்சி என்றால் சிரிப்புதானே வரும் என்றார் இரத்தினத்தார்.

பத்துப் பன்னிரண்டு நாள் சிறையிலை போடுறதுக்கே மகிந்தர் கண்ணீர் விடுகிறார். எத்தினை வருசமாய் எங்கடை அப்பாவி இளைஞர்கள் சிறையிலை வாடுறினம்? அதுக்காய் எத்தினை வருசமாய் எங்கடை சனங்கள் கண்ணீர் விடுகுது என்றார் கந்தையா.ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும் என்றது ஆலமரம்.   

 குளோபல் தமிழ் செய்திகளுக்காக நிலவன்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128510/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.