Jump to content

தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்...!


Recommended Posts

பதியப்பட்டது
தந்தூரி சிக்கன் பிரியாணி : செய்முறைகளுடன்...!

 

biriyany.jpg

தேவையான பொருட்கள் : 
 

  • சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க :
  • தயிர் - ஒரு கப்
  • பூண்டு - ஒன்று
  • இஞ்சி - ஒரு துண்டு
  • கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  • கறிவேப்பிலை - சிறிது
  • பச்சைமிளகாய் - 2
  • லவங்கம் - 4
  • எலுமிச்சை - பாதி
  • மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
  • மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • கஸூரி மேத்தி - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • பிரியாணி செய்ய :
  • அரிசி - அரை கிலோ
  • சிக்கன் லெக்பீஸ் - 4
  • வெங்காயம் - 3
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
  • புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  • தாளிக்க :
  • பட்டை, பிரிஞ்சு இலை, இலவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா2

    செய்முறை :
    சிக்கனுடன் சேர்த்து ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்து சுத்தம் செய்த சிக்கனில் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும்

    . ஊற வைத்த சிக்கனை சிறிது எண்ணெய் விட்டு முக்கால் பாகம் வேகும் வரை பொரிக்கவும்.

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.

    அதில் இஞ்சி பூண்டு விழுது, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கி பொரித்த சிக்கனை சேர்க்கவும்.

    அதனுடன் ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்தது ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து, எலுமிச்சை சாறு ஊற்றி வேக விடவும்.

    விருப்பமெனில் கலர் சேர்த்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.

    அரைமணி நேரம் கழித்து திறக்க சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தூரிக்கெண்டு விஷேசமான அடுப்பு இருக்கெண்டு நினைக்கின்றேன். அதில் ஆக்கும் போது தான் அதற்குரிய சரியான சுவை கிடைக்கும்.

இதுவும் பரவாயில்லை. என்ன , ரஜினிக்கு இப்ப ரஜினி மாதிரித் தெரியவேண்டும் என்று மேக்கப் போடுற மாதிரி....!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, suvy said:

தந்தூரிக்கெண்டு விஷேசமான அடுப்பு இருக்கெண்டு நினைக்கின்றேன். அதில் ஆக்கும் போது தான் அதற்குரிய சரியான சுவை கிடைக்கும்.

இதுவும் பரவாயில்லை. என்ன , ரஜினிக்கு இப்ப ரஜினி மாதிரித் தெரியவேண்டும் என்று மேக்கப் போடுற மாதிரி....!

நீங்க அடுப்புக்கை போடுறீங்களோ
சட்டிக்கை போடுறீங்களோ

தந்தூரி பேஸ்ற் தடவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி....! ஆனால் சிக்கனை ஊறவிட பதினான்கு சாமான்கள் குடுத்திருக்கினம், கசூரி மேத்தி போன்றவை சிக்கனை  நல்ல நிறத்துக்கு கொண்டுவரும்,தயிர் எல்லாம் இருப்பதால் தந்தூரிப் பேஸ்ட்டாக இருக்கும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.