Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு வைக்கப்படும் முதலமைச்சர்!

Featured Replies

அண்மைக் காலங்களில் வடமாகாண முதலமைச்சருக்கும் ஏனைய அமைச்சர்களுக்கும் எதிராகப் பகிரங்கப் போர்ப்பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இப்போரின் முன்னணி படையாக செயற்படுபவர்கள் சில மாகாணசபை உறுப்பினர்கள். .அந்தப்படையின் தளபதியாக செயல்படுபவர் நீண்ட காலமாகவே முதலமைச்சர் பதவியில் கண் வைத்து செயற்படும் தவிசாளர் சி.வி.கே சிவஞானம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அதிகாரங்களை சரிவரப் பயன்படுத்தும் தன்மை தமிழ் மக்களிடம் இல்லாமல் போய்க் கொண்டு இருப்பதாகவும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர் எனவும் அவை பற்றி விசாரணை ஈடேற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் மாகாண சபையில் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்பு சுமந்திரன் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் முதலமைச்சரை ஏதாவது குற்றம் சாட்டத் தவறுவதில்லை.

தமிழர் இனப்படுகொலை எனச்சொல்வதற்கு முன்னர் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு எனவும் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் எனச்சொன்னார் சுமந்திரன்.

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் சி.வி.விக்னேஸ்வரனை முன் நிறுத்திய போது அவர்களிடம் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதாவது அரசியல் அனுபவமற்ற மென்போக்குடைய அவர் மாகாண சபையைத் தமது சரணடைவு அரசியலுக்கு தாளம்   போடும் ஒரு அமைப்பாக முன்கொண்டு செல்வார் என்றே அவர்கள் நம்பினர். ஆனால், சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு குறுகிய காலத்திலேயே தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மாகாணசபையை தழிழ் மக்களின் உரிமை குரல் ஓங்கி ஒலிக்கும் ஒரு களமாக மாற்றினார்.

மீள்குடியேற்றம்இ அரசியல் கைதிகள் விவகாரங்கள் போன்ற விடயங்களில் தமிழரசுக் கட்சி பூசி மெழுகி ஏமாற்றுக்களை மேற்க்கொள்ள முதலமைச்சர் நேர்மையுடணும் அக்கறையுடணும் செயற்;பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தான் தமிழரசுக்கட்சியின் வழமையான – புறமொதிக்கிச் செல்லாக் காசாக்கித் தூக்கி எறிகிற – சதி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தளபதியாக சி.வி.கே சிவஞானம் களமிறக்கப்பட்டார்.

தலைமையிலுள்ள சிலரை திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட மறுத்து நேர்மையைக் கடைப்பிடிப்பவர்களைக் கட்சியை விட்டு விரட்டுவது தமிழரசுக்கட்சியின் பாரம்பரிய குணமாகும்.

தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களான மன்சூர் மௌலானா, எம்.எம்.ஏ.முன்நாபா ஆகியோர் முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்று வந்த நிலையில் அதைப் பொறுக்காதவர்கள் அவர்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து ஒதுக்கி கட்சியை விட்டு வெளியேற வைத்தனர்.

அதனால் தமிழ் பேசும் மக்களின் கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் கட்சியாக சுருங்கிக் கொண்டது.

1960இல் சத்தியாக்கிரகம் இடம்பெற்ற போது சேர்க்கப்பட்ட நிதிக்கு, கட்சியின் பொருளாளராகச் செயற்பட்ட கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசுந்தரம் கணக்குக் கேட்ட காரணத்தால் எழுந்த முரண்பாடு காரணமாகக் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

1968இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் பங்காளராக ஆட்சியில் அமர்ந்து அமைச்சர் பதவியையும் தமிழரசுக்கட்சி பெற்றுக் கொண்டது. பாராளுமன்றத்தில் அரசாங்க அடையாள அட்டை மசோதா கொண்டு வந்த போதுஇ அதனால் இனரீதியாக ஏற்ப்படக் கூடிய அபாயங்களைச் சுட்டிக்காட்டி ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினர் வி. சபாரத்தினம் அதை எதிர்த்தார். இதன் காரணமாக அவர் கட்சியை விட்டு வெளியேறும் நிலை ஏற்ப்பட்டது.

மக்கள் செல்வாக்கு நிறைந்த தலைவராக வளர்ந்து வந்த செல்லையா இராசதுரையை விரக்தி அடைய வைத்து வெளியோற வைத்த பெருமை அவர்களுக்கு உண்டு.

இவை சில சம்பவங்கள் மட்டுமே!

aravinthanaathan3கடந்த தேர்தலில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் போட்டியிட்ட போது தமிழரசுக்கட்சி அவருக்கு எதிராக வேலை செய்து அவரை தோற்கடித்தது.

இவ்வாறே கடந்த தேர்தலில் நடுநிலை வகித்தது, சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் தலையாட்ட மறுப்பது போன்ற காரணங்களை வைத்து முதலமைச்சரைப் புறமொதுக்க     முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டன.

மக்கள் ஆதரவு காரணமாக அவரை அசைக்க முடியவில்லை.

இப்போது போர் மாகாண சபையூடாக ஆரம்பிக்கப்பட்டது. இப் போரில் இறங்கியுள்ள மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் எதிரான புகார்கள் உண்மையெனில் நடவடிக்கை எடுப்பதை எவரும் தடுக்கப்போவதில்லை. தாராளமாக எடுக்கலாம். எடுக்கப்படவேண்டும்.

ஆனால் இப்போரின் தளபதி பல கூட்டுறவுச் சங்கங்களில் தலைவராக இருந்து அவற்றைக் கொள்ளையடித்தவர் என்பதையும் விவசாய கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பேரில் தனியார் வியாபாரங்களுக்கு பொருட்கள் கொள் முதல் செய்ய ஏற்பாடு செய்தவர் என்பதையும்

ஒரு சந்தர்ப்பத்தில் கப்பலில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்ட போது நட்டத்தைச் சங்கத்தின் தலையில் கட்டி விட்டவர் என்பதையும் இப்போதும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்பதையும்

புரிந்துகொள்வது அவசியமானதாகும்.

துளியத்திற்காக அரவிந்தநாதன்

http://thuliyam.com/?p=15098

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.