Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் ஹர்த்தால்: இரண்டு மணிநேர கடையடைப்பு! இ.போ.ச பஸ்கள் மட்டும் சேவையில்!

Featured Replies

வடக்கில் ‪ஹர்த்தால்‬: இரண்டு மணிநேர கடையடைப்பு! இ.போ.ச பஸ்கள் மட்டும் சேவையில்!
 
 
வடக்கில் ‪ஹர்த்தால்‬: இரண்டு மணிநேர கடையடைப்பு! இ.போ.ச பஸ்கள் மட்டும் சேவையில்!
வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் முகமாக இன்று வடக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
 
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால்  காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
 
இந்த ஹர்த்தாலுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வவுனியா, யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
யாழ்.வர்த்தகர்கள் இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் 10 மணி வரையான இரண்டு மணிநேரம் வர்த்தக நிலையங்களை மூடி இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவை வெளிப்படுத்துவர் என்று யாழ்ப்பாணம் வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
 
தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை எனினும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மட்டும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுகின்றன.
 
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளதோடு நாளை பல்கலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
 
                                                    1456288867_harthal1.jpg
 
                                                    1456288918_harthal2.jpg
 
                                                    1456288983_harthal3.jpg
 
                                                    harthal4.jpg
 
 
  • தொடங்கியவர்
வடக்கில் ஹர்த்தால்: வழமையான செயற்பாடுகள் முடக்கம் (VIDEO)
 
24-02-2016 09:36 AM
Comments - 0       Views - 141

article_1456287220-2.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

வவுனியா உக்குளாங்குளத்தில் 14 வயது மாணவி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து வடக்கில் இன்று புதன்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால்  காரணமாக, யாழ். மக்களின் வழமையான செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

காலை 8 மணி முதல் 10 மணி வரையில் ஹர்த்தாலில் ஈடுபடுமாறு பாடசாலைகளுக்கு, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், பெருமளவுக்கு மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை.

வர்த்தக நிலையங்களும் அவ்வாறே செயற்படுமாறு வர்த்தக சங்கங்களால் அறிவிக்கப்பட்டு 2 மணித்தியாலங்கள் வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்கள், ஹர்த்தாலை கடைப்பிடிப்பதுடன் மருந்தகங்கள், உணவகங்கள் என்பன திறந்துள்ளன.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் போக்குவரத்துச் சேவைகள் காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டதுடன் ரயில் சேவையானது வழமை போல இடம்பெற்று வருகின்றது.  

2015ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான சித்திரம், சங்கீதம், நடனம் ஆகியவற்றுக்கான செய்முறைப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில், ஹர்த்தாலால் செய்முறைப் பரீட்சைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும், வருகை தந்த மாணவர்களுக்கு செய்முறைப் பரீட்சை நடத்தப்பட்டுள்ளதுடன், மிகுதி மாணவர்களும் பிறிதொரு தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

article_1456287577-harthal1.jpg

article_1456287587-harthal2.jpg

article_1456287600-harthal3.jpg

- See more at: http://www.tamilmirror.lk/166772/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B9%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE-VIDEO-#sthash.Zfo6RiCj.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.