Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவில் வரும் மகனை நிஜத்தில் கொண்டு வாருங்கள்

Featured Replies

கனவில் வரும் மகனை நிஜத்தில் கொண்டு வாருங்கள்

 

 

கனவில் வரும் மகனை நிஜத்தில் கொண்டு வாருங்கள்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:-

 

 

கனவில் வரும் என் மகனை நிஜத்தில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாய் ஒருவர் கண்ணீருடன் கோரியுள்ளார்.
 
யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 
 
அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
எனது மகனான ராஜாஜி தவராஜ் ( காணமல் போகையில் வயது 25 ) காரைநகரில் உள்ள எமது வீட்டில் இருந்து வேலை காரணமாக யாழ்ப்பாணம் சென்ற வேளை 2006ம்  ஆண்டு 10ம் மாதம் 19ம் திகதி காணாமல் போய்விட்டார்.
 
அதன் பிறகு பல இடங்களில் தேடியும் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை. இரவு நித்திரையில் கனவில் மகன் "அம்மா " என அழைத்து கொண்டு ஓடிவருவது போல காண்பேன். திடுக்குற்று எழுந்தால் ,மகன் இருக்க மாட்டார்.
 
அத பின்னர் மகனை நினைத்து அழுது கொண்டு இருப்பதனால் அன்றைய இரவு தூக்கம் அற்றதாக கழியும். இவ்வாறு பல இரவுகள் கழிந்து விட்டன.
 
இரவில் சரியான தூக்கமின்மை காரணமாக எனது உடல் நலமும் குன்றி விட்டது. வருத்தங்களும் வந்து விட்டன. இன்னமும் எத்தனை காலம் உயிரோடு இருப்பேன் என தெரியாது. எனவே எனது மகனை விரைவில் மீட்டு தருமாறு கோருகின்றேன் என சாட்சியத்தில் தெரிவித்தார்.
 
 
 
வேலை முடிந்து வீடு திரும்பியவரை காணவில்லை.
 
வேலை முடிந்து வீடு திரும்பிய மகனை கடத்தி சென்று விட்டனர். என தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் , 
 
எனது மகனான செல்வராசா சேந்தன் (காணமல் போகையில் வயது 20 ) காரைநகர் யாழ்ப்பணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபட்டு இருந்த மின்வானின் நடத்துனராக கடமையாற்றி வந்தார்.
 
அந்நிலையில் 2006ம் ஆண்டு 5ம் மாதம் 23ம் திகதி வேலை முடிந்து துவிச்சக்கர வண்டியில் வந்த வேளை காரைநகர் சந்திக்கு அருகில் வைத்து கடத்தப்பட்டார்.
 
அந்த தகவல் அறிந்து நான் காரைநகர் சந்திக்கு ஓடி சென்ற வேளை அவ்விடத்தில் ஈ.பி.டி.பி.யை சேர்ந்த சிலரும் கடற்படையினரும் நின்று இருந்தனர். 
 
அவர்களிடம் மகனை குறித்து விசாரித்தேன் அவ்வேளை அங்கு நின்ற கடற்படை அதிகாரி மகனின் படத்துடன் காரைநகர் இறங்குதுறை க்கு வருமாறு கூறினார். 
 
அதனை அடுத்து மகனின் படத்துடன் அங்கு சென்ற போது , உங்கள் மகன் விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக எமக்கு பொதுமகன் ஒருவர் தகவல் தந்து உள்ளார். என கூறினார். அதற்கு நான் உடனே எனது மகன் எந்த அமைப்புடனும் தொடர்பில் இல்லை என கூறினேன்.
 
அவ்வேளை அவர் கூறினார் தமக்கு  தெரியாது பொதுமகன் ஒருவர் தான் தகவல் வழங்கினார். ஆனாலும் உங்கள் மகனை நாங்கள் பிடிக்கவில்லை அவர் எம்மிடம் இல்லை நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள் என கூறி அனுப்பி விட்டனர். அதன் பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் கூறினார்.
 
 
செல் வீச்சில் காயமடைந்த மனைவியை காணவில்லை. - கணவன் சாட்சி.
 
முள்ளிவாய்க்கால் பகுதியில் காயமடைந்து வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற தனது மனைவியை காணவில்லை என கணவர் சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
எனது மனைவியான யோகையா சாந்தினி முள்ளிவாய்க்காலில் இருந்த போது செல் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இருந்தார். அவரை வைத்திய சாலைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்று இருந்தனர்.
 
அதன் பின்னர் நான் எனது இரு பிள்ளைகளை கொண்டு வைத்திய சாலைக்கு சென்று பார்த்த போது மனைவியை காணவில்லை. என சாட்சியம் அளித்தார்.
 
 
இராணுவத்திடம் சரணடைந்த கணவனை காணவில்லை. - மனைவி சாட்சி.
 
விடுதலைப்புலிகளின் நிதித்துறையை சேர்ந்த தனது கணவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்த பின்னர் காணாமல் போய்விட்டதாக மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் தனது சாட்சியத்தில் தெரிவிக்கையில், 
 
எனது கணவரான அ . சத்தியானந்தன் (காணாமல் போகும் போது வயது 64 ) விடுதலை புலிகளின் நிதித்துறையை சேர்ந்தவர்.நானும் எனது கணவரும் 2009ம் ஆண்டு 5ம் மாதம் 17ம் திகதி இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் போது, இராணுவத்தினர் " ஒரு நாள் புலிகள் அமைப்பில் இருந்தாலும் தம்மிடம் சரணடையுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர்.
 
அதையடுத்து கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார். அவருடன் அவ்வேளை பலர் சரணடைந்து இருந்தனர். அவ்வாறு சரணடைந்தவர்கள் அனைவரையும் இராணுவத்தினர் பஸ்களில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
 
எம்மை அங்கிருந்து செல்லுமாறு கூறி எம்மை அங்கிருந்து அழைத்து வந்து செட்டிக்குளம் முகாமில் தங்க வைத்தனர்.
 
நாம் செட்டிக்குளம் முகாமில் இருந்த வேளை சில அதிகாரிகள் வந்து எனது கணவர் ஒரு முகாமில் உள்ளார் என ஒரு முகாமின் பெயரை கூறினார்கள்.
 
அதையடுத்து நான் எனது முகாமில் அனுமதி பெற்று அந்த முகாமுக்கு சென்ற போது அங்கிருந்த அந்த முகாம் அகற்றப்பட்டு விட்டது. அதன் பின்னர் கணவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை . என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
 
காவற்துறை பளை பொறுப்பாளரை காணவில்லை. 
 
 
பளையில் காவற்துறை பொறுப்பாளராக இருந்த நாகராஜா பேரின்பம் (காணாமல் போகும் போது வயது 30 ) என்பவரை காணவில்லை என சகோதரி சாட்சியம் அளித்துள்ளார்.
 
மேலும் சாட்சியத்தில் குறிப்பிடுகையில், 
 
எனது சகோதரன் காவற்துறையில் இருந்து யுத்தம் ஆரம்பித்த பின்னர் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். புலிகள் அமைப்பில் தொலைத்தொடர்பு பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்தார்.
 
அந்நிலையில் 2009ம் ஆண்டு 2ம் மாதம் 6ம் திகதி நாம் உடையார் கட்டு பகுதியில் இருந்த வேளை எமது பகுதியை அதிகாலை வேளை இராணுவத்தினர் சுற்றி வளைத்து எம்மை இராணுவ கட்டுப்பட்டு பிரதேசத்திற்கு கொண்டு சென்று எம்மை முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அன்றைய தினத்திற்கு பின்னர் எமது சகோதரனுடனான தொடர்பு அற்று போனது. எனது தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
 
யுத்தத்தால் காணாமல் போனோர் தொடர்பிலையே விசாரணை.
 
உள்நாட்டு யுத்தம் காரணமாக காணாமல் போனோர் தொடர்பில் மாத்திரமே நாம் விசாரணை செய்வோம் என கூறி புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவரின் சாட்சியத்தை ஏற்காது ஜனாதிபதி ஆணைக்குழுவினர் திருப்பி அனுப்பி இருந்தனர்.
 
புங்குடுதீவை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை நவரட்ணம் (காணாமல் போகும் போது வயது 67 ) என்பவர் 2009ம் ஆண்டு 8ம் மாதம் 10ம் திகதி புங்குடுதீவில் இருந்து கொழும்புக்கு சென்ற வேளை காணாமல் போயுள்ளார்.
 
அது தொடர்பில் காணமல் போனவரின் சகோதரன் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியம் அளிக்க வந்து இருந்தார்.
 
அவரின் சாட்சியத்தை ஏற்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தத்துடன் தாம் யுத்தம் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலேயே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். உங்கள் சகோதரன் காணாமல் போனது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுங்கள் என கூறினார்.
 
அதற்கு காணாமல் போனவரின் சகோதரன் தாம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்து உள்ளோம். அது தொடர்பில் பொலிசாரிடம் கேட்டால் தாம் விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என கூறுகின்றார்கள் என தெரிவித்தார்.
 
மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று உங்கள் முறைப்பாடு தொடர்பில் பொலிசாரின் விசாரணை என்ன என கேட்குமாறும்  அதற்கு பொலிசார் உரிய பதில் வழங்காவிடின் தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129468/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.