Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிதண்ணீரால் எம்மினத்தை நாமே அழித்து வருகின்றோம்!

Featured Replies

குடிதண்ணீரால் எம்மினத்தை நாமே அழித்து வருகின்றோம்!
 
குடிதண்ணீரால் எம்மினத்தை நாமே அழித்து வருகின்றோம்!
குடிதண்ணீர்ப் பிரச்சினையில், எமது இனத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இணைத் தலைவர்களுள் ஒருவருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறுதி விடயமாக, இரணைமடுக் குடிதண்ணீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டப் பொறியியலாளர் பாரதிதாசன் கருத்துத் தெரிவிக்கையில், எமது அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இது தொடர்பில் ஆராயப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது என்றார். 
 
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
அந்த அறிக்கையை நான் படித்தேன். அதில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு அதிகளவிலான பணம் செலவாகும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதனைத் தற்காலிகத் தீர்வாக வைத்துக் கொண்டு, வேறு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் இதற்காகத்தான் ஆரம்பத்தில் நாம், இரணைமடுக் குளத்தைப் புனரமைத்தல் என்பதுடன், யாழ்.நகருக்கான குடிதண்ணீர்த் தேவைக்கான வழிமூலங்களைக் கண்டறியவேண்டும் எனவும், அதற்கு ஆறுமுகம் திட்டத்தையும் பரிசீலிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தோம் என்றார்.
 
இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் பாரதிதாசன், ஆறுமுகம் திட்டம் உடனடியாகப் பயன் தராது. மூன்று திட்டமாக்கப்பட்ட இரணைமடுக் குடிதண்ணீர் விநியோகத் திட்டத்தில், இரணைமடுக் குளம் புனரமைப்பு மட்டும் நடைபெறுகின்றது. யாழ்ப்பாணத்துக்கான தண்ணீர் விநியோகம் எங்கிருந்து எவ்வாறு செய்வது என்பது இன்னமும் முடிவாகவில்லை. யாழ்.நகருக்கான கழிவகற்றல் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத நிலைமை இருக்கின்றது. எனவே இது தொடர்பில் விரைவாக முடிவு எடுக்கப்படவேண்டும் என்றார். 
 
மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில்,
மாகாண சபையில் இரணைமடுத் திட்டத்தை மூன்றாக மாற்றுவது தொடர்பில் எடுத்த நடவடிக்கை பிழையானது. ஒரு சிலரின் நலனுக்காக, அது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்திலிருந்து கடலுக்குச் செல்லும் நீரையாவது யாழ்ப்பாணத்துக்கு தாருங்கள். சர்வதேச ரீதியில் 2020 ஆம் ஆண்டு சகலருக்கும் சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கவேண்டும் என்று சொல்கின்றார்கள். ஆனால் இங்கே கிடைக்காது போலிருக்கின்றது. வடக்கு மாகாணம் தவிர ஏனைய இடங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
 
இதனையடுத்து பொறியியலாளர் பாரதிதாசன் தெரிவிக்கையில்,
சர்வதேச தரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குடிதண்ணீர் தரத்தை விடக் குறைவான தரத்தை உடைய குடிதண்ணீரையே யாழ். மாவட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். யாழ்.மாநகர சபைப்பகுதி, சுன்னாகம் பகுதிகளில் மலம் கலந்த குடிதண்ணீரையே பயன்படுத்துகின்றனர் என்றார். 
 
இறுதியில் கருத்துத் தெரிவித்த இணைத் தலைவர்களுள் ஒருவரான மாவை.சேனாதிராசா, இந்தக் குடிதண்ணீர்ப் பிரச்சினையில் எமது இனத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம். இதனை ஒவ்வொருவரும் உணரவேண்டும். நான் போத்தல் தண்ணீர் குடிக்கின்றேன். இங்குள்ள எல்லா மக்களாலும் அது முடியுமா ? எனவே யாழ்ப்பாணக் குடிதண்ணீர்ப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும்.
 
இரண்டு வாரங்களுக்குள், யாழ்.மாவட்ட அரச அதிபர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபையினர் மற்றும் இதனோடு தொடர்புடைய அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டுக் கலந்துரையாடல் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டும்  என்றார். இந்த விடயம் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டபோது, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனோ, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனோ சபையில் இருக்கவில்லை. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.