Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாலி ஆசிரியர் கலாசாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!

Featured Replies

பலாலி ஆசிரியர் கலாசாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!
 
 
பலாலி ஆசிரியர் கலாசாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை!
பலாலி ஆசிரியர் கலாசாலையை உடனடியாகத் தற்காலிக இடத்திலாவது மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பலாலி ஆசிரியர் கலாசாலையின் சொந்த நிலத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் எனக்கோரியும் இரண்டு தீர்மானங்கள், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டுள்ளன.
 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.  இதில் கல்வி தொடர்பான விடயம் ஆராயப்பட்டபோது, ஆசிரியர் கலாசாலை தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. இதன்போது பலாலி ஆசிரியர் கலாசாலையில் தற்போதைய அதிபரினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
 
1947 ஆம் ஆண்டு பலாலியில் ஆசிரியர் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு போர் நடவடிக்கை காரணமாகக் கலாசாலை அங்கிருந்து இடம்பெயர்ந்தது. பல்வேறு இடங்களில் இயங்கி தற்போது, திருநெல்வேலி முத்துத்தம்பி ஆரம்பப் பாடசாலையில் அநாதரவாக இயங்குகின்றது. ஆரம்பத்தில் 13 பாடநெறிகள் எமது கல்லூரியில் இருந்தன. தற்போது அவை ஒவ்வொன்றாகக் குறைக்கப்பட்டு எதுவுமே இல்லாத நிலையில்தான் உள்ளது. 
 
அதிபர் என்ற வகையில் நானும், இன்னொரு அலுவலரும், காவலாளியும்தான் தற்போது இருக்கின்றோம். இப்படியே சென்றால், பலாலி ஆசிரியர் கலாசாலை விரைவில் மூடப்படும். எனவே உடனே அதனை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
 
இதனை ஏற்றுக் கொண்ட, யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்கள், மத்திய அரசுடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பது என்றும் தீர்மானித்தனர்.  இதற்கமைய, பலாலி ஆசிரியர் கலாசாலையை உடனடியாக தற்காலிகமாவது இயக்குவது என்றும், பலாலி ஆசிரியர் கலாசாலையின் சொந்த நிலத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் எனவும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
                                            palali.jpg
 
                                            palali2.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.