Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகனின் கடிதம் வந்தது, மகன் வரவில்லை

Featured Replies


மகனின் கடிதம் வந்தது, மகன் வரவில்லை
 
29-02-2016 04:18 PM
Comments - 0       Views - 35

article_1456743021-images.jpg-எம்.றொசாந்த்

இராணுவ முகாமில் இருந்து மகன் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. ஆனால், மகன் இன்னமும் திரும்பி வரவில்லையென காணாமற்போன த.தவச்செல்வன் என்பவரது தாயார் சாட்சியமளித்தார்.

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, நேற்று திங்கட்கிழமை (29), சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,

'யாழ்ப்பாண மாநகர சபையில் பணியாற்றிய  எனது மகன், கடந்த 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியன்று வேலைக்குச் சென்ற போது காணாமற்போனார். எனது மகனை செம்மணி முகாமில் தடுத்து வைத்து விசாரணை செய்ததை கண்டதாக கிராமஅலுவலர் கூறினார். அதன் பிறகு மகனைக் காணவில்லை.

இரண்டு வருடங்களின் பின்னர் மகனிடமிருந்து கடிதமொன்று வந்தது. தான் ஒரு இராணுவ முகாமில் உள்ளதாகவும் கையில் சின்ன காயம் உள்ளது எனவும், தான் நலமாக உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். மேலும், அந்தக் கடிதத்தை யாருக்கும் காட்டவேண்டாம் என்றும் தனது படம் மற்றும் தனது நலம் பற்றி அடுத்த கடிதத்தில் எழுதுவதாகவும் கூறியிருந்தார். ஆனால், அதன் பின்னர் கடிதமும் வரவில்லை மகனும் வரவில்லை' என அந்தத் தாய் கூறினார்.

மகனைக் கொன்று புதைத்துவிட்டனர்

அரியாலை பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எனது மகனுடன் சேர்த்து 8 பேரை கொன்று புதைத்தாக கச்சேரி காட்டுக்கந்தோரைச் சேர்ந்த செல்லையா சந்திரசேகரன் என்ற முதியவரும் இதன்போது ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தார்.

இதன்போது தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,

“எனது மகன் லோகேஸ்வரன், காவலாளியாக கடமையாற்றியவர். கடந்த 1996ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதியன்று, வீட்டுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமைச் சேர்ந்தவர்கள், மகனையும் மேலும் 7 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவர்களை அரியாலை முகாமுக்கு அழைத்துச்சென்று சித்திரவதை செய்து கொன்று புதைத்துவிட்டனர். நான் முகாமுக்கு சென்று கேட்டபோது, 'மகன் முடிஞ்சுது தேடாதே' என்று என்னை விரட்டினர்.

எனது மனைவியும், இன்னொரு மகனும் விமானக் குண்டுவீச்சில் இறந்துவிட்டனர். நானும் பிறிதொரு மகனுமே தற்போது உள்ளோம். எனக்கு நட்டஈடு வேண்டும்” என்று அந்த தந்தை சாட்சியமளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/167154/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.tbp7bb7T.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.