Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் 15 வருடங்களில் வடக்கைப் பற்றி மட்டும் பேசலாம் கிழக்கைப் பற்றிப் பேசேலாது: - திரு வியாழேந்திரன், நா.உ 

Featured Replies

 

[Thursday 2016-02-25 07:00]
அண்மையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் வியாழேந்திரன் கனடாவுக்கு வருகை தந்திருந்தார். கல்வி சார்ந்த பின்புலத்தில் இருந்து வந்த இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாகத்  தெரிவு செய்யப்பட்டார். சில நாட்களாக கனடாவில்  இயங்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அமைப்புக்களுடன் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், கல்வி, பொருளாதாரத் துறைகளில் மக்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் பற்றி கலந்துரையாடி வருகிறார்.  தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார்.  அவரது உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சதாசிவம் வியாழேந்திரன் கனடாவுக்கு வருகை தந்திருந்தார். கல்வி சார்ந்த பின்புலத்தில் இருந்து வந்த இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாகத் தெரிவு செய்யப்பட்டார். சில நாட்களாக கனடாவில் இயங்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் அமைப்புக்களுடன் மறுவாழ்வு, மீள்குடியேற்றம், கல்வி, பொருளாதாரத் துறைகளில் மக்கள் சந்திக்கும் இடர்ப்பாடுகள் பற்றி கலந்துரையாடி வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சமூகம் எல்லாத் துறைகளிலும் பின் நோக்கிய நிலையிலேயே போய்க் கொண்டிருக்கிறது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் இன்று அங்குள்ள எமது சகோதர முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஆகியோரது முன்னேற்றம் தமிழ் சமூகத்தோடு ஒப்பிடும்போது அவர்களுடைய முன்னேற்றம் அதிகமாக இருக்கின்றது. எங்களுடைய சமூகம் எல்லாத் துறைகளிலும் பின் நோக்கிய நிலையிலேயே போய்க் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் கடந்த மூன்று சகாப்தங்களாக நடந்த யுத்தமாகும். யுத்தத்திற்குப் பிறகும் அங்கு பல்வேறு பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாகச் சொல்வதானால் எங்களுக்கு முதலாவது பிரச்சனையாக இருப்பது கைம்பெண்கள் சார்ந்த பிரச்சனை. அது பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. வடக்குக் கிழக்கில் 102,000 இலட்சத்திற்கு மேற்பட்ட கைம்பெண்கள் இருக்கிறார்கள். அதிலே ஆகக் கூடிய எண்ணிக்கையான கைம்பெண்கள் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 33,000 ஆயிரத்துச் சொச்ச கைம்பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் 80 வீதமானவர்கள், கிட்டத்தட்ட 20,000 ஆயிரம் பேர் முப்பது வயசுக்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகிறார்கள். இந்தக் கைம்பெண்கள் அதிகமாக உருவாகுவதற்குக் காரணம் யுத்தம், யுத்தத்திற்குப் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த பிளவுகள்.

இந்தக் கைம்பெண்களில் அனேகரது கணவன்மார்கள் கடத்தப் பட்டவர்கள் அல்லது காணாமல் போனவர்கள். ஆதலால் இந்த இளம் கைம்பெண்கள் இன்னுமொரு திருமணம் செய்ய முடியாது. ஏனென்றால் காணாமல் போனவர்கள் எப்போதும் திரும்பி வரலாம் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக என்னுடைய மாணவி ஒருவர் திருமணம் செய்து பிள்ளைக்கு ஒரு வயசாக இருக்கும் போது அவரது கணவரைக் கடத்திப் போய்விட்டார்கள். இன்று அந்தப் பிள்ளைக்கு எட்டு வயது. தாய் மகனுக்குச் சொல்வது என்னவென்றால் அப்பா வருவார். கணவன் கண்ணுக்கு முன்னால் செத்திருந்தால் அல்லது செத்துப் போனதாக அறிந்திருந்தால் அவர்கள் அடுத்த கட்டமாக மறுமணம் செய்ய முடிவு செய்யலாம். ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய முடியாது. அப்படியான மிகவும் வேதனையான நிலை இருக்கிறது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்

இரண்டாவதாக யுத்தத்திற்குப் பிறகு, ஆயுதங்கள் மவுனிக்கப்பட்ட பிறகு 2009 ஆம் ஆண்டிலே இருந்து இன்றுவரை புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள், போராட்டக் களத்தில் இருந்த போராளிகள் - ஆண்களும் பெண்களும் - 11,900 க்கும் மேற்பட்டவர்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான முன்னாள் போராளிகள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 1,500 போராளிகள் இருக்கிறார்கள். மட்டக்களப்பைப் பொறுத்தளவில் இந்தப் போராளிகளில் 50 சத வீதம் மாற்றுத்திறனாளிகளாக இருக்கிறார்கள். அதாவது இடுப்புக்கு கீழே இயங்காதவர்கள் இருக்கிறார்கள். சிலபேருக்குக் கை, கால் வழங்காது. சிலருக்கு செல்த்துகள் உடம்பில் இருக்கிறது. சிலருக்கு வெய்யிலில் நின்று கனநேரம் வேலை செய்ய முடியாது. கைம்பெண்களிள் எண்ணிக்கையே 33,000 ஆயிரத்தைத் தாண்டுகிறது. எனவே யுத்தத்தில் படுகாயம் பட்ட போராளிகள் மற்றும் கைம்பெண்களின் எண்ணிக்கை 40,000 க்கும் அதிகமாகும்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போகும் கைம்பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள்

இந்த கைம்பெண்கள் அடுத்த கட்டமாக என்ன செய்கிறார்கள் என்றால் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாகப் போகிறார்கள். தென்னாசியாவிலே அதிகளவு பணிப்பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பும் நாடுகளில் முதலாவது நாடாக இலங்கை இருக்கிறது. அதிலும் பணிப்பெண்கள் அதிகம் போகும் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாக இருக்கிறது. இப்படிப் போகிறவர்கள் பலர் அங்கு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அந்த துஷ்பிரயோகம் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வருமுன்னரே ஆரம்பித்து விடுகிறது. மறுபுறம் அவர்களது வறுமையைப் பயன்படுத்தி 16 வயதுப் பிள்ளைகளுக்கு வயதைக் கூட்டிப் பயண முகவர்கள் பாஸ்போட் எடுத்துவிடுகிறார்கள். இதனால் எவ்வளவு தூரம் எமது சமூகத்திலுள்ள பிள்ளைகள் சீரழிக்கப்பட வேண்டுமோ அந்தளவு சீரழிக்கபட்டு விடுகிறார்கள். எனவே இந்தக் கைம்பெண்கள் தொழில் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போவதாலே அவர்களது பிள்ளைகள் தாத்தா, பாட்டி போன்றவர்களின் கட்டுப்பாட்டில் வளர்கின்றன. இதனால் என்ன நடக்கிறதென்றால் 3 ஆம் ஆண்டு,4 ஆம் ஆண்டு, 5 ஆம் ஆண்டு படிக்கும் போதே பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் நின்றுவிடுகின்றனர். ஒரு வருஷத்தில் 2,000 பிள்ளைகள் பள்ளிக்கூடத்தை இடையில் விட்டு விடுகின்றனர்.

போராட்ட களத்தில் இருந்து பின்னர் புனர்வாழ்வு அழிக்கப்பட்டவர்களது வாழ்க்கைக்கு ஏதாவது செய்யுங்கள்

இப்படி 10, 12 இடைபட்ட வயதில் இருப்பவர்களில் பலர் ஆண்பிள்ளைகளாக இருக்கிறார்கள். இவர்கள் சின்ன வயசிலேயே ஆடு, மாடு மேய்க்கிற வேலை, வயல் வேலை, குருவி துரத்துகிற வேலை, கொள்ளி பொறுக்கிற வேலைக்குப் போய் பெரிய ஆட்களுடன் சேர்ந்து கஞ்சா போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். சின்ன வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். இது ஒருவகையான சமூகப் பிரச்சனை. இரண்டாவதாக மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான உதவியும் செய்து கொடுக்கப்படவில்லை. அரசாங்கம் மட்டுமல்ல நான் நினைக்கிறேன் புலம்பெயர்ந்த மக்களும் எந்தவிதமான உதவியையும் செய்யவில்லை. நீங்கள் என்ன செய்யாவிட்டாலும் பருவாயில்லை இந்த போராட்ட களத்தில் இருந்து பின்னர் புனர்வாழ்வு அழிக்கப்பட்டவர்களது வாழ்க்கைக்கு ஏதாவது செய்யுங்கள். இவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

சிறையில் முன்னாள் போராளிகள்

அடுத்து மட்டக்களப்பு மொன்றாக்கலை சிறையில் இருந்தும் சிலர் புனர்வாழ்வுக்கு அனுப்பப் படுகிறார்கள். நான் கடைசியாகச் சந்தித்தவர் களுவாங்கேணியைச் சேர்ந்த யோகராசா என்பவர். அவருக்கு 5 பிள்ளைகள். வயது 55 இருக்கும். போராட்டக் களத்தில் நீண்ட காலம் இருந்தவர். 2009 இல் கைது செய்யப்பட்டவர். இன்னும் வீடு போகவில்லை. அவருக்கு கொலஸ்ரோல், சர்க்கரை உட்பட பல வருத்தங்கள் உண்டு. அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். அவரது நிலைமையை பார்க்கப் ஆகப்பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் கொஞ்ச நாட்களுக்காவது குடும்பத்தோடு வாழுவார்களா? வாழக்கூடிய சூழல் உருவாகுமா? என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது. இவர்களுடைய பிள்ளைகளும் சீரழிந்து போகின்றனர். இப்படியான பிரச்சனைகள் மட்டக்களப்பில் வாழும் எங்களுக்குப் பாரிய சவாலாக இருக்கின்றன.

மதுவிற்பனை சாலைகள்

யுத்த காலத்தில் கிராமப்புறங்களில் மதுவிற்பனை சாலைகள் இருக்கவில்லை. இருந்த இரண்டொரு மதுவிற்பனை சாலைகளுக்கும் கட்டுப்பாடு இருந்தது. யுத்தம் முடிந்த பின்னர் இந்தக் கிராமப் புறங்கள் எல்லாம் மதுபான சாலைகளையும் கசிப்பு விற்பனை நிலையங்களையும் கொண்டு வந்து விதைத்திருக்கிறார்கள். மொத்தம் 80 - 85 மதுவிற்பனை சாலைகள் இருக்கின்றன. மட்டக்களப்பில் மட்டும் 60 மதுபான சாலைகள் இருக்கின்றன. அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. கிராமப் புறத்திலாவது இந்த மதுபான சாலைகளை மூடுங்கள். காரணம் ஒரு நாளைக்கு கல்லுடைத்து, விறகு கொத்தி எடுத்திட்டு வருகிற 1,000 ரூபாய் காசில் குடித்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கிறார்கள். படிக்கிற பிள்ளைகளுக்கு உதவுவதில்லை. நானும் ஒரு கிராமப் புறத்தில் பிறந்து வளர்ந்து படித்து வந்தபடியினாலும் கூடுதலாக 13,000, 14,000 மாணவர்களை எனது கற்பித்தலில் கடந்து வந்திருக்கிறேன் என்பதாலும் கல்வித்துறை உட்பட நாம் என்ன செய்யலாம் என்ற திட்டத்தை வைத்திருக்கிறேன். கைம்பெண்களுக்கு என்ன செய்யலாம். முன்னாள் போராளிகளுக்கு என்ன செய்யலாம். படுவாங்கரையைப் பொறுத்தளவில் மிகவும் வறுமை நிலையில் இருக்கிறார்கள். போராளிகள் இல்லாத வீடே அங்கே இல்லை.

இன்னும் 15 வருடங்களில் வடக்கைப் பற்றி மட்டும் பேசலாம் கிழக்கைப் பற்றிப் பேசேலாது

எமது சகோதர முஸ்லிம் சமுதாயத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் பாரிய வளர்ச்சியை அடைந்துகொண்டு வருகிறார்கள். இன்று நாம் வடக்கு கிழக்கு மாகாணம் என்று பேசுகிறோம். வட கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றிப் பேசுகிறோம் ஆனால் இன்னும் 15 வருடங்களில் வடக்கைப் பற்றி மட்டும் பேசலாம் கிழக்கைப் பற்றி பேசேலாது, காரணம் முஸ்லிம்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் மத்திய கிழக்கு நாடுகள் அவர்களை ஆதரிக்கின்றன. சவுதி, கட்டார் போன்ற நாடுகள் ஆதரிக்கின்றன. இப்ப மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் தமிழர்கள் 75 வீதம் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் 25 வீதம் இருக்கிறார்கள். இருபத்தைந்து வீத முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார். முதலமைச்சர் ஏறாவூரைச் சேர்ந்தவர். காத்தான்குடியைச் சேர்ந்த ஹிஸ்புல்லா மீள்குடியேற்றப் பிரதி அமைச்சராக இருக்கிறார். ஓட்டமாவடியைச் சேர்ந்த அமீர் அலி பிரதி கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சராக இருக்கிறார். கிழக்கு மாகாணசபையில் 15 முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மாவட்ட அபிவிருத்தி சபையில் உள்ள 4 உறுப்பினர்களில் தலைவர் உட்பட 3 பேர் முஸ்லிம்கள். ஒருவர்தான் தமிழர். முஸ்லிம்கள் எந்த அரசாங்கம் வந்தாலும் ஆளும்கட்சியோடு சேர்ந்து அமைச்சர் பதவிகளைப் பெற்று அவர்களது சமுதாயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 75 வீதம் உள்ள தமிழர்களுக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறோம். அதிலும் எதிர்க்கட்சியில் இருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வாழ்வாதாரத்துக்கான திட்டங்கள் தேவை

எங்களுக்கான தீர்வுத் திட்டம் எங்களுக்கான ஒரு தமிழ்த் தேசியத்தை நோக்கிய பயணம், விடுதலை போன்ற விடயங்களில் நாங்கள் வேகமாகப் பயணிக்கிற அதே சமயத்தில் சமாந்திரமாக எமது மக்களின் அபிவிருத்தி பற்றியும் நாம் இப்ப சிந்திக்க வேண்டும். மக்கள் உணர்வோடுதான் இருக்கிறார்கள். எவ்வவோ நெருக்கடி இருந்தாலும் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் அந்த உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் அபிவிருத்தி சார்ந்த வேலைகளை நாம் செய்ய வேண்டும். செய்தால்தான் அந்த உணர்வு தொடர்ந்து இருக்கும். அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனை இருக்கிறது.

அரசாங்கம் வீட்டுத்திட்டத்தில் மற்ற மாகாணங்களுக்கு ஒதுக்குவதை விட எங்களுக்குக் கூடுதலான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என நாங்கள் கேட்கிறோம். உங்களுக்குத் தெரியும் படுவான்கரை - எழுவான்கரை மட்டக்களப்பை இரண்டாகப் பிரிக்கிறது. யுத்த காலத்தில் படுவான்கரை மக்களது வீடுகள் உடைக்கப்பட்டன, கால்நடைகள் அழிக்கப்பட்டன, பொருளாதாரம் முற்றாக அழிந்து போனது. அந்த மக்கள் மிகவும் வறுமைப்பட்டவர்கள். இவர்கள் பாரிய அழிவை எதிர்நோக்குகிறார்கள். கல்குடா கல்வி வலையத்தில் முந்நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் இல்லை. இந்தமாதிரியான சூழலில் நாங்கள் ஆளும் கட்சியில்லை. எதிர்க்கட்சியில்தான் இருக்கிறோம். அடுத்த கட்டமாக எங்களது புலம்பெயர் உறவுகள் கல்வி சார்ந்த, தொழிற் திட்டங்களுக்கு உதவி செய்யவேண்டும். அதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். இதுதான் அங்குள்ள நிலைமை. இதுதான் எனது கனடா வருகையின் நோக்கம். திருகோணமலையில் முதலாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டோம். அம்பாரையில் தமிழ் சமூகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில்தொன் தமிழர்கள் 75 வீதம் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் எங்களது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களது வாழ்வாதாரத்துக்கான தேவைகளை, திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் எனது பணிவான வேண்டுகோள். தொடர்ந்து கேள்விகள் ஏதாவது இருந்தால் கேளுங்கள். அவற்றுக்கு முடிந்தவரை பதில் சொல்ல முயற்சிப்பேன்.

இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) சார்பாக கிழக்கு மாகாணம், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளியல் மற்றும் சமூக தளங்களில் பணியாற்றும் மனிதநேயக் கரங்கள் அமைப்புக்கு (Humanitarian Hands Organization.) மூவாயிரம் டொலர்கள் திரு வியாழேந்திரனிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

(தொகுப்பு: நக்கீரன்)

http://www.seithy.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.