Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் மரணம்

Featured Replies

நியூசிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் மரணம்
 
 
 நியூசிலாந்து: நியூசிலாந்து அணியின் முன்னார் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 53. 
http://www.odt.co.nz/files/story/2013/06/martin_crowe_51a85e4d8f.JPG
 
1980 முதல் 1996 வரை நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தார் மார்ட்டின் குரோவ். ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பிராட்மேன் என்றால், நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் மார்டின் குரோவ்தான். 77 டெஸ்ட், 143 ஒருநாள் போட்டிகளில் குரோவ் ஆடியுள்ளார். அவருக்கு மனைவியும், 2 வளர்ப்பு பிள்ளைகளும் உள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/former-new-zealand-captain-martin-crowe-dies-aged-53-248151.html
  • தொடங்கியவர்

இறுதி ஆசை நிறைவேறாமலேயே மரணமடைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டினா குரோ!

நியூசிலாந்து முன்னால் கிரிக்கெட் விரர் மார்ட்டின் குரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 53.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவு. மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உண்மையான ஜென்டில்மேனாக வாழ்ந்த மார்ட்டின் குரோவின் வாழ்க்கையில் விதி விளையாடியது.

martin_vc3.jpg



கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ட்டின் குரோவுக்கு  புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆக்லாந்து  மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.


நியூசி. உலகக் கோப்பையை வெல்வது மார்ட்டின் குரோவின் ஆசை!

இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் இருக்கும் நாட்கள் நரகமாகிவிடும்தானே. இந்த நிலைதான்  நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோவுக்கும். மிகச்சிறந்த கிரிக்கெட்டராக உண்மையான ஜென்டில்மேனாக வாழ்ந்த மார்ட்டின் குரோவின் வாழ்க்கையில் விதி விளையாடி விட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ட்டின் குரோவுக்கு  புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் அவர் இன்னும் வாழப்போவது 12 மாதங்கள் மட்டுமே என்றும் அதற்கு மேல் உயிர்வாழ  5 சதவீதம் மட்டுமே வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நோய் கொடுமை இருந்தாலும் 40 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி முன்னேறியதால், இறுதிப் போட்டியை நேரில் பார்க்க மெல்பர்ன் மைதானத்திற்கே வந்துவிட்டார் மார்ட்டின் குரோவ்.

அதோடு நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்றும், இதுதான் நான் நேரில் பார்க்கும் கடைசிப் போட்டி என்றும் மார்ட்டின் குரோவ் உருக்கமாக கூறியது கிரிக்கெட் ரசிகர்களை என்னவோ செய்தது. தொடர்ந்து லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்காக பிரார்த்திக்க ஆரம்பித்தனர்.

குறைந்தபட்சம் இந்த மனிதருக்காகவாவது நியூசிலாந்து அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டனர். ஆனால் நியூசிலாந்து அணியின் போதாத நேரம் இறுதிப் போட்டியில் மோசமாக விளையாடி தோற்றுப்போனது.

போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மார்ட்டின் குரோவின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்ற கனவுடன் மெல்பர்ன் வந்த மார்ட்டின் குரோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை வாழ்த்தவும் அவர் தவறவில்லை.

இந்த நிஜ கிரிக்கெட் வீரருக்காகவாவது நியூசிலாந்து அணி  உலகக் கோப்பையை வென்றிருக்கலாம் என்று மனம் பதை பதைப்பதை மட்டும் இன்னும் தவிர்க்க முடியவில்லை.! 

http://www.vikatan.com/news/sports/59951-martin-crowe-dies-in-auckland-after-battle-with-ca.art

  • தொடங்கியவர்

நியூஸி. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மார்டின் குரோவ் மரணம்

 
 
  • 1992 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மார்டின் குரோவ். | கோப்புப் படம்.
    1992 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மார்டின் குரோவ். | கோப்புப் படம்.
  • 1994-ல் மார்டின் குரோவ். | கெட்டி இமேஜஸ்.
    1994-ல் மார்டின் குரோவ். | கெட்டி இமேஜஸ்.

நியூஸிலாந்து முன்னாள் கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மென்களுள் ஒருவருமான மார்ட்டின் குரோவ் நீண்டநாள் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று காலமானார்.

மார்ட்டின் குரோவுக்கு வயது 53 மட்டுமே. இவர் நீண்ட காலமாக புற்று நோயினால் அவதியுற்று வந்தார். இந்நிலையில் வியாழனன்று வெலிங்டனில் காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பவுன்ஸி பிட்ச்களில் மார்ட்டின் குரோவ்வின் ஆட்டம் மிகவும் அற்புதமானது. அத்தகைய பிட்ச்களில் உலகில் பேட்டிங் தவிர வேறொன்றும் எளிதானதல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது அவரது பேட்டிங் ஸ்டைல்.

77 டெஸ்ட் போட்டிகளிலும் 143 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ள குரோவ், டெஸ்ட் போட்டிகளில் 5,444 ரன்களை 45.36 என்ற சராசரியில், 17 சதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 299 ரன்கள். 143 ஒருநாள் போட்டிகளில் 4704 ரன்களை 38.55 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் 34 அரைசதங்கள். டெஸ்ட் போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 107 நாட் அவுட் ஆகும்.

இவருக்கு புகழாஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ளே கூறும்போது, “மாடர்ன் கிரேட். கிரிக்கெட் ஆளுமை மார்ட்டின் குரோவ் இப்போது நம்மிடையே இல்லை. அருமையான ஒரு கிரிக்கெட் மூளை, அன்பான இதயம்” என்றார்.

1992 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை இப்போது பிரெண்டன் மெக்கல்லம் எப்படி வழிநடத்தி உலக அணிகளை அச்சுறுத்தினாரோ அப்படி அணியை கட்டமைத்து அரையிறுதி வரை கொண்டு வந்தார். தென் ஆப்பிரிக்காவின் ஹேன்சி குரோனியே போல் புதுவிதமான பரிசோதனை முயற்சிகளுக்கு கேப்டன்சியில் அஞ்சா நெஞ்சர் இவர். இன்று தோனி முதல் ஓவரிலேயே அஸ்வினைக் கொண்டு வந்தால் நாம் ஆகாஓகோ என்கிறோம், ஆனால் 1992 உலகக்கோப்பையில் அச்சுறுத்தும் தொடக்க வீரர்களுக்கு எதிராக குட்டி நியூஸி மைதானங்களில் தீபக் படேல் என்ற ஆஃப் ஸ்பின்னரை முதல் ஓவரை வீசச் செய்தவர் மார்டின் குரோவ். அதே போல் மார்க் கிரேட்பேச் ஒரு அச்சுறுத்தும் அதிரடி தொடக்க வீரராக உருவாக்கப்பட்டது மார்டின் குரோவினால் என்றால் அது மிகையாகாது.

மார்ட்டின் குரோவ். இவரது பேட்டிங்கைப் பார்த்தால் பேட்டிங் எவ்வளவு பெர்ய ஒர் கலை என்பது புரியவரும். கிரீஸில் நிமிர்ந்து நின்று கால்களை அற்புதமாக நகர்த்தி ஸ்பின், வேகப்பந்து என்று எதிலும் நிபுணத்துவம் காட்டியவர் மார்டின்.

தனது அண்ணன் ஜெஃப் குரோவுக்கு முன்னமேயே தனது 19-வது வயதில் 1982-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்குள் நுழைந்தார் மார்டின். அப்போதே இவரைப் பற்றிய செய்தி என்னவெனில் பாரி ரிச்சர்ட்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் ஆகியோரின் கலவை என்று மார்டின் குரோவ் வர்ணிக்கப்பட்டார்.

பிப்ரவரி 1982-ல் இந்த இளம் மார்டின் குரோவுக்கு அன்று பேசின் ரிசர்வ் மைதானத்தில் பவுன்சர்களே. தாம்சன் அப்போது தனது அச்சுறுத்தல் நிலையிலிருந்து காயங்களால் சற்றே தொய்வடைந்திருந்த காலம், ஆனால் மார்டின் குரோவின் செல்வாக்கு அவரையும் தூண்டியது பவுன்சர் ஒன்றை வீச மார்டின் குரோவ் தலையிலிருந்து ஹெல்மெட் கழன்றது.

அந்தத் தொடரில் 9,2,9 என்று 20 ரன்களையே அவர் எடுத்தார். இவ்வாறாக தொடங்கிய மார்டின் குரோவ் பிறகு பவுன்ஸ் பிட்சில் வேகப்பந்து வீச்சின் மிகவும் அனாயாசமான வீரராக உருவெடுத்தார். வக்கார் யூனிஸ் தான் வீசிய பேட்ஸ்மென்களில் மார்டின் குரோவ்தான் சிறந்தவர் என்று ஒரு முறை கூறினார்.

ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் இணைந்து 467 ரன்களைச் சேர்த்தது அப்போது டெஸ்ட் வரலாற்றில் சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.

1984-ல் நியூஸிலாந்து அணி இங்கிலாந்து வந்த போது மார்டின் தனது முதல் சதத்தை எடுத்தார். 2-வது சதம் ஓராண்டுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு ரன்குவிப்பில் ஈடுபட்டார் மார்டின்.

அச்சுறுத்தும் மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்களையே அச்சுறுத்திய 188 ரன்களையும் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வச்செய்த டெஸ்ட் தொடரில் மீண்டும் அந்த அணிக்கு எதிராக ஒரு 188 ரன்களையும் மார்ட்டின் குரோவ் அடித்த போது உலகம் இவரை அறியத் தொடங்கியது. ரிச்சர்ட் ஹேட்லி இந்தத் தொடரில்தான் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மார்டின் குரோவின் மனைவி லொரைன் டவ்னிஸ் 1983-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8309194.ece?homepage=true

  • தொடங்கியவர்

மார்டின் குரோவ்: டி20 போட்டிகளின் முன்னோடி!

மொத்த இந்தியாவும் கொண்டாடும் ஐ.பி.எல் போட்டிகளுக்கும், இன்று கிரிக்கெட் உலகமே காத்துக்கிடக்கும் இருபது ஓவர் உலகக்கோப்பைக்கும் ஆரம்பம் ஒற்றை மூளையிலிருந்து வந்ததென்றால் நமக்கே ஆச்சரியமாக இருக்குமல்லவா? ஆம்,  புற்றுநோய் தாக்கி இன்று மரணமடைந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ்தான் டுவென்டி20 போட்டிகளுக்கெல்லாம் முன்னோடியாய் கருதப்படுபவர்.

உலகின் தலைசிறந்த டெஸ்ட் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் மார்டின் குரோவின் கிரிக்கெட் பயணம் 1982 முதல் 1995 வரை நீண்டது. என்னதான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அவரது மனம் இவ்விளையாட்டின் நினைவோடேயே இருந்தது. கால்பந்து, பேஸ்கட்பால் போன்ற விளையாட்டுகளெல்லாம் கொஞ்ச நேரத்திலேயே முடிவடைய, கிரிக்கெட் மட்டும் ஐந்து நாட்களும், ஒருநாள் போட்டிகள் ஏழு மணி நேரமுடனும் விளையாடப்படுவது ரசிகர்களுக்கு சலிப்பைத் தந்துவிடும் என்று குரோவ் கருதினார். இதனால் 1997- ம் ஆண்டு ‘கிரிக்கெட்மேக்ஸ்’ என்ற புதிய முறை  கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தினார் குரோவ்.

crow_1.jpg

ஒவ்வொரு அணியும் 10 ஓவர்கள் கொண்ட இரு இன்னிங்ஸ்களில் விளையாடும் இப்போட்டியில்தான் இன்றைய ‘ஃப்ரீ ஹிட்’டும் அறிமுகப்படுத்தப்பட்டன. ரன்களை இரட்டிப்பாக்கும் மேக்ஸ் ஜோன், நான்கு ஸ்டம்புகள் என பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் விதிகளை அமைத்து, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டிருந்தது. நியூசிலாந்தில் முதல் தரப் போட்டிகள் இம்முறையில் விளையாடப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தங்கள் கவுன்டி போட்டிகளில் இம்முறையை சிறு மாற்றங்களோடு அறிமுகப்படுத்தியது. அதுவே இன்றைய டுவென்டி 20 போட்டிகள். இன்று நாம் கொண்டாடும் பிக்-பேஷ், ஐ.பி.எல் போட்டிகளில் எல்லாம் இந்த மாமனிதனின் சிந்தனைக் குழந்தைகள்தான்.

அதோடு மட்டும் கிரிக்கெட் மீதான அவரது காதல் முடிந்துவிடவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு, தனது 49-வது வயதில் மீண்டும் முதல் தரப் போட்டிகளில் விளையாட விரும்பினார் குரோவ். கிரிக்கெட் வீரரான தனது தந்தை விளையாடிய கோர்ன்வால் அணிக்காக விளையாட ஆயத்தமானாலும் அவை காயங்களால் தடைபட்டன. அதற்கு முன்பு 2011-ல் சில நிதி திரட்டும் போட்டிகளில் அவர் விளையாடினார்.

crow_2.jpg



இரு தவறுகள்

இன்று நியூசிலாந்தின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் பிரெண்டன் மெக்குல்லத்தின் சாதனைகளை அன்றே படைத்திருப்பார் குரோவ். 300 ரன்கள் எடுத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை 1991லேயே படைத்திருப்பார் அவர். வெல்லிங்டனில் நடந்த இலங்கைக்கு எதிரான அப்போட்டியில் 299 ரன்களிலிருந்த அவர், ரனதுங்காவிடம் கேட்சாகி 1 ரன்னில் முச்சதத்தை தவறவிட்டார். பின்னர் 2014ல் அதே மைதானத்தில் மெக்குல்லம் அச்சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.

crow_4.jpg


1992 உலகக்கோப்பையின் போது,  மிகச்சிறப்பாக நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான அப்போட்டியில், வாசிம் அக்ரம், இம்ரான் கான், முஸ்தாக் அகமது ஆகியோர் உள்ளடங்கிய உலகின் தலைசிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு 83 பந்துகளில் 91 ரன் குவித்தார் குரோவ். நியூசிலாந்து அணி 262 ரன்கள் சேர்க்க, குரோவிற்கு காயத்தின் ரூபத்தில் பிரச்னை வந்தது. காயம் கடுமையாக இருந்ததால் ஜான் ரைட்டிடம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தார் குரோவ். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் வெல்ல,  முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. “நான் ஒரு வகையில் பந்துவீச்சாளர்களை உபயோகித்திருப்பேன். ஆனால் ஜான் ரைட்டிற்கென்று ஒரு மூளை உள்ளதல்லவா, அது வேறு வகையில் வேலை செய்து விட்டது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

“எனது வாழ்நாளில் நான் நினைத்து வருந்துபவை இரு தவறுகள்தான். அந்த உலகக்கோப்பை அரையிறுதியும், 299ல் கேட்சானதும்தான். அந்தத் தவறுகள்தான் என் மனதில் ஆழமாக இறங்கி என் நோயை மேலும் கொடுமைப்படுத்துகிறது போல” என சமீபத்தில் தனது பழைய சோகங்களைப் பகிர்ந்திருந்தார் குரோவ்.

crow_3.jpg


குரோவ், இவ்விளையாட்டை தனது உயிரினும் மேலாய் மதித்தவர். நியூசிலாந்து கிரிக்கெட்டை உலக அரங்கில் முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் சென்றவர். முன்னாள் கேப்டன் ஃபிளெமிங், ராஸ் டெய்லர் போன்ற பல வீரர்களுக்கும் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். இன்று அவரது மறைவானது நியூசி கிரிக்கெட் அணிக்குப் பேரிழப்பாகும். 2015 உலகக்கோப்பையையாவது நியூசிலாந்து அணி வெல்ல வேண்டுமென்ற அவரது கனவும் கரைந்து போக, இந்த டுவென்டி20 உலகக்கோப்பையை நியூசிலாந்து அணி வெல்வதே இருபது ஓவர் போட்டிக்கு வித்திட்ட குரோவிற்குச் செய்யும் கடைசி மரியாதையாக இருக்கும். அதன் மூலமாகவேனும் அந்த ஜாம்பவானுடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.

vikatan

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்ததோர் வீரர்...ஆத்மா சாந்தியடையட்டும்

1992 உலகக்கோப்பையின் போது,  மிகச்சிறப்பாக நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான அப்போட்டியில், வாசிம் அக்ரம், இம்ரான் கான், முஸ்தாக் அகமது ஆகியோர் உள்ளடங்கிய உலகின் தலைசிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு 83 பந்துகளில் 91 ரன் குவித்தார் குரோவ். நியூசிலாந்து அணி 262 ரன்கள் சேர்க்க, குரோவிற்கு காயத்தின் ரூபத்தில் பிரச்னை வந்தது. காயம் கடுமையாக இருந்ததால் ஜான் ரைட்டிடம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தார் குரோவ். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் வெல்ல,  முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. “நான் ஒரு வகையில் பந்துவீச்சாளர்களை உபயோகித்திருப்பேன். ஆனால் ஜான் ரைட்டிற்கென்று ஒரு மூளை உள்ளதல்லவா, அது வேறு வகையில் வேலை செய்து விட்டது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இந்த விடயம் எனக்கு புதிதாக இருக்கு ,

1992 உலக கோப்பை வென்றது பாகிஸ்த்தான் ஆனால் அவர்கள் காலிறுதிக்கு வந்ததே நியுசிலாந்து விட்ட பிழையால் தான் .இன்றும் அந்த வருட உலககோப்பையில் நியுசிலாந்து வெளியில் போனது நினைவில் இருக்கு .இவ்வளவிற்கும் நியுசிலாந்து பாகிஸ்தானிடம் தோற்று வெளியில் போகவில்லை .இரண்டு ஆட்டங்கள் ஒரு முடிவை எடுத்ததாக நினைவு 

ஆறுதலாக திரும்ப ஒருமுறை பார்த்து  விபரம் எழுதுகின்றேன் 

எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆட்டக்காரர் அவர் ஆத்மா சாந்தியடையட்டும் 

  • தொடங்கியவர்
16 hours ago, arjun said:

1992 உலகக்கோப்பையின் போது,  மிகச்சிறப்பாக நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை வழிநடத்திச் சென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான அப்போட்டியில், வாசிம் அக்ரம், இம்ரான் கான், முஸ்தாக் அகமது ஆகியோர் உள்ளடங்கிய உலகின் தலைசிறந்த பந்துவீச்சை எதிர்கொண்டு 83 பந்துகளில் 91 ரன் குவித்தார் குரோவ். நியூசிலாந்து அணி 262 ரன்கள் சேர்க்க, குரோவிற்கு காயத்தின் ரூபத்தில் பிரச்னை வந்தது. காயம் கடுமையாக இருந்ததால் ஜான் ரைட்டிடம் கேப்டன் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓய்வெடுத்தார் குரோவ். ஆனால் அப்போட்டியில் பாகிஸ்தான் வெல்ல,  முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. “நான் ஒரு வகையில் பந்துவீச்சாளர்களை உபயோகித்திருப்பேன். ஆனால் ஜான் ரைட்டிற்கென்று ஒரு மூளை உள்ளதல்லவா, அது வேறு வகையில் வேலை செய்து விட்டது” என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இந்த விடயம் எனக்கு புதிதாக இருக்கு ,

1992 உலக கோப்பை வென்றது பாகிஸ்த்தான் ஆனால் அவர்கள் காலிறுதிக்கு வந்ததே நியுசிலாந்து விட்ட பிழையால் தான் .இன்றும் அந்த வருட உலககோப்பையில் நியுசிலாந்து வெளியில் போனது நினைவில் இருக்கு .இவ்வளவிற்கும் நியுசிலாந்து பாகிஸ்தானிடம் தோற்று வெளியில் போகவில்லை .இரண்டு ஆட்டங்கள் ஒரு முடிவை எடுத்ததாக நினைவு 

ஆறுதலாக திரும்ப ஒருமுறை பார்த்து  விபரம் எழுதுகின்றேன் 

எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆட்டக்காரர் அவர் ஆத்மா சாந்தியடையட்டும் 

அர்ஜுன் தகவல் சரி..

http://www.espncricinfo.com/ci/content/video_audio/854403.html

http://www.espncricinfo.com/wctimeline/content/story/820725.html

https://de.wikipedia.org/wiki/Cricket_World_Cup_1992

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.