Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

""வைகறை மேகங்கள்""

Featured Replies

  • தொடங்கியவர்

தொடரும்... - 23

என்

ஜன்னல் ஓரமாய் செல்மா கராமி

விசும்பி விசும்பி விக்கித்தழ

எழுந்தெழுந்து மிரண்ட இலக்கிய ராத்திரி...

பொன்மாலைப் பொழுது

ஒலிப்பதிவு செய்து ஓடோடிவந்து

உடம்பெல்லாம் ருசியாக

எண்பதுமுறை செவிமடுத்த

இன்னிசை ராத்திரி...

மாஸ்கோ ரயிலில்

இருபடுக்கை கொண்ட ஒரு பெட்டியில்

மொழிபெயர்க்க

உடன்வந்த வெள்ளைதேவதை

என்

புறங்கையை முத்தமிட்டுப்

போர்த்துவிட்டு தூங்கிபோக

ரணப்பட்டுப் பண்பாடுகாத்த

ரஸசிய ராத்திரி...

கன்றுகுன்றாய் ஏறி இறங்கி

கல்லறைக்குள் உள்ளவர் தவிர

எல்லாரையும் விசாரித்து

கார்ல்மார்க்ஸ் கல்லறை

கண்டுபிடித்துத்தொழுது

அதில் அல்லிமலர் வைத்தழுது...

அந்தச் சூரிய மனிதனை

நினைத்து நினைத்து

ஆடும் நாற்காலியில்

ஆடிக்கொண்டேயிருந்த

லண்டன் ராத்திரி...

கோமகன் ராஜீவ் கொல்லப்பட

திசையெல்லாம் தீப்படிக்க

என்கார் பெட்ரோலில்

என்வீட்டை எரியுட்ட

என்

மார்போடு மனைவியும்

தோளோடு பிள்ளைகளும்

சத்தமிட்டழுத ரத்த ராத்திரி...

இப்படி...

இன்னபிற ராத்திரிகள் இருந்தாலும்

மனதிலின்னும் மையம் கொண்டிருப்பது

அவசரத்தில் - அறியாமையில்

தோற்றுப்போன முதல் ராத்திரிதான்....!

தொடரும்..- 24

  • Replies 54
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தொடர்...- 24

திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்...

புதுக்கவிதை

என்பது

சொற்கள் கொண்டாடும்

சுதந்திர விழா...

யாப்ப எனும் குதிருக்குள்

இலக்கணம் போட்ட

உத்தரவுக்கு பயந்து உறங்கும்

சோம்பேறிச் சோற்களுக்காகா

''நீங்கள்

கவிதை என்று கட்டியங் கூறுவீர்...???''

ஒன்று கேட்க்pறேன்

உறைக்குல் இருந்தால்தான்

அதற்கு

வாள் என்று பெயரா?

பதுக் கவித எனும் போர்வாள்

இலக்கண உறையிலிருந்து

கவனமாகவே

கழற்றப் பட்டிருக்கிறது...

ஏனெனில்

சுவர்கோழிகள் கூவிப்

பொழுது விடியாது

என்பதந்தப்

போர்வாளுக்குப்

புரிந்தே இருக்கிறது....

மரபுக் கவிதைககோ-

மண்ணில் இருந்தாலும்

விண்ணையெ பார்த்து கொண்டிருக்கும்

மலர்வக்கங்கள்...

புதுக்கவிதைகளோ-

விண்ணிலிருந்தாலும்

மண்ணையே பார்த்து கொண்டிருக்கும்

சூரிய சந்திரர்கள்...

மரபுக் கவிதைகள்

ஜாதகங்கள்

புதுக்கவிதைகளோ

முகவரிகள்...

இது மட்டும் சத்தியம்

சமூகத்தின் காயங்களுக்குக்

கட்டு போடுதற்கு

உங்கள்

காவிய படுதாக்களை விடவும்

இந்த கைக் குட்டைகளே

கச்சிதமானவை.....

தொடரும்....25

  • தொடங்கியவர்

தொடர்...- 25

'' எம்

புதுக்கவிதைகளெல்லாம் :angry: :angry:

பேனாக்கள் என்னும்

சோதனைக் குழாய்கள்

சூல் கொண்ட சிசுக்கள்''

அவை

மரணத்தையே

சுவாசித்துவிடும்

மகத்துவம் கொண்டவை....

ஆதனால்தான்

புதுக்கவிதையின் முகத்தில்

கரும்புள்ளி செம்புள்ளி

குத்திய கைகளே

இன்று

திருஸ்டிப் பொட்டுவைக்கத்

தீர்மாணித்துள்ளன....

யாப்பின் அரியாசனத்தில்

கொலு விருப்பதால் மட்டுமே

செத்த வார்த்தைகளுக்கு

வெண்சாமரங்கள்

வீசமுடியாது....

குருவிகள்

தொலைக்காட்சி

கோபுரத்தில்

கூடு கட்டுவதால் மட்டுமே

திரையிலும் கூட தெரியுமா என்ன? <_<:blink:

தமிழன்

பழைய புத்தக கடையில்

படிந்திருக்கும் தூசுகளை

நிஜமகரந்தங்கள் என்று

நிருபித்தது போதும்......தொடரும்... - 26

நன்றி நண்பரே உங்கள் பதிவுகளுக்கு

  • தொடங்கியவர்

தொடர் - 26

புராண காலத்துப்

பு~;பக விமாணத்தைக்

கால்நடையாகச் சென்றே

கண்டுபிடிக்கும் தீர்மாணத்தை

வாலிபர் கூட்டம் இனியும்

வழி மொழியாது.....

இலக்கணக் குறிப்புகளுக்காகவே

நாம்

கவிதை வரிகளை கற்றது போதும்

சமூகத்தின் தளைகளை விடவும்

நாம்

கவிதையின் தளைகளுக்கே

கவலை பட்டது அதிகம்....

எம்

புத்துலக்கியத்தில் தான்

வாழ்க்கை

விசாரணைக்கு வருகிறது...

இங்கு

பழையது ஒவ்வொன்றும்

பரிசீலிக்கப்படும்....

முள்ளை முள்ளால் எடுப்பது

முன்னோர் வழிதான்

ஆனால்

கண்ணுக்குள் விழுந்த முள்ளுக்கு

அந்தப்

பழைய தத்துவம் பயன்படுமா?

தொடரும்...- 27

  • தொடங்கியவர்

தொடர்...27

நிகழ்கால தீயில்

தேசம் கருகும் போது

நிச்சயமாக நாங்கள்

நீரோக்கள் அல்ல....

பேனாக்கள் எமக்கு

பிடிகளும் அல்ல...

வாழையடி வாழையாய்

இலக்கியத்தில் படிந்த

வாழை கறையழிக்க

எம் பேனாவிலிருந்து

மைத்துளிகள்

எலுமிச்சம் பழச்சாறாய்

இறங்குகின்றன...

நெருப்பாய்க் கிளர்ந்தாலும்

நிதானமாகவே எரிகிறோம்...

ஏன் எனிலோ...

பொய்க்கு எப்போதும்

முரசடித்தே பழக்கம்

உண்மை எப்போதும்

புல்லாங்குழல் வாசிப்பதே வழக்கம்....

சூரியன் கூட

கிழக்கு மேற்கென்னும்

யாப்பிற்கு கட்டுபட்டே

தன்

கிரணக் கவிதைகளைக்

கிறுக்கி வருகிறது.....

தொடரும்...- 28

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்...- 28

அப்படிக் கூட நாங்கள்

அவதிப் படுவதில்லை..

எங்கு உதித்தால்

வெளிச்சம்

எல்லார்க்கும் கிட்டுமென்று

திசைகளை நாங்களே

தீர்மானித்து உதிப்போம்..

ஆகாயத்தில்

வானவில்லுக்கு அடித்த

வர்ணம்

காய்ந்து விட்டதா என்று

தொட்டு பார்க்க

எம் விரல் நீள்வதில்லை....

ஏழையின்

கண்ணீரைத் துடைத்துக்

காயவைக்கத்தான்

பத்து விரல்களும்

பட படக்கின்றன...

விமர்சனம் வீசும்

கணைகளால்

எப்படி எமக்குத்

காயங்களில்லையோ

அப்படியே

அது சொரியும்

புக்களாலும் எமக்குப்

புளங்கிதமில்லை..

இதுவரை

நம் சமுகத்தின்

ஊமை விசாரணையில்

உரைக்கப்பட்டதெல்லாம்..

கிழட்டு சட்டங்களைப்

பார்த்து எழுதிய

பழந்தீர்ப்புக்கள்

அந்தச்

சட்டங்களையே தண்டிக்க

இவை

திருத்தி எழுதிய தீர்ப்புக்கள்...

இவை

மானுடத்தை மறுதலிக்கும்

சம்பிரதாயச் சட்டங்களின்

சட்டையைப் பிடித்து உலுக்கும்...

இனி-

இந்தத் தீர்ப்புகளே

சாசுவதமான

சட்டம் இயற்றும்.

தொடரும்... - 29

வன்னிமைந்தன் ஏன் நீங்கள் வைரமுத்துவின் கவிதைகளை இங்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்? உங்கள் கவிதைகளே அழகாக உள்ளது. வைரமுத்துவை தள்ளிவிட்டு உங்கள் சொந்தச் சரக்கை அவிழ்த்து விடுங்கள். வாசிப்பதற்கு நாம் உள்ளோம். கவிப்பேரரசாக ஒருவரும் உலகத்தில் வந்து குதிப்பதில்லை. உழைப்பும், வியர்வையுமே அவர்களை இந்நிலைக்கு உயர்த்தியுள்ளது. நீங்களும் முயன்று பாருங்கள்!

  • தொடங்கியவர்

வணக்கம் ஜயா..

''உங்கள் கருத்துக்கு நன்றி''

இங்கே இந்த தொடரை வெளியிடுவதற்கு பல காரணம் உள்ளது

இங்கே துளிர்விட்டு கொடியாக கவி சமைக்க முனைந்த பல உறவுகளை

சில விசமிகள் அவர்களின் சிந்தையை மழுங்கடித்து

அவர்களை தொடராய் எழுத விடாது தடுத்தமையை அறிந்தே பின்னே

இந்த தொடரில் பல தாயக. புலம்பெயர். இந்திய .கவிஞர்களின்

கவிதைகளை தொடராய் வெளியட முனைந்தேன்.

இங்கு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள்

சொன்ன வைத்த கருத்து ''என்ன இது கவிதையா''..?

அதன் பின்னே எனது ஆவண களஞ்சியத்தில் உள்ள பல கவிதை தொகுப்புக்களை

அந்த நபர்கள் முன் பார்வைக்கு விடுகிறேன்....

அவர்கள் இவர்களின் ஆக்கங்களை படித்தறியட்டும்

அது உங்களுக்கும் உதவியாக இருக்கும்...

தாங்கள் தங்களது சொல்லாடல்களையும்..அந்த மமதை பேச்சையும்

தவிர்ப்பது சாலச்சிறந்தது....

இதில் குறிப்பாக ''தம்பி மோகன்'' நான் எழுதிய சில படைப்புக்களை

இதில் இருந்து அகற்றினர் அதற்கு அவர் சொன்ன காரணம் அதில்

வன்சொற்கள் இருந்ததாக.

ஆனால் இதில் முதலாவது கவிதையில் அந்த சொல் வருகிறது

இதற்கு அவர் மறுப்போ அன்றி அந்த சொல்லை தனிக்கை செய்யவோ இல்லை ஏன்..?

மரபு கவிதை பற்றி இங்கு பேரரசு என்ன சொல்கிறார்..?

புதுக்கவிதை பற்றி அவர் என்ன சொல்கிறார் ..?

என்பதை இதை தொடராய் படிப்பவர்களுக்கு புரியும்...

அடுத்து விமர்சித்தவர்கள்

ஒன்றன் பின் ஒன்றாக வரிகளை அடுக்கி

கவிதை எழுதுவது முறையல்ல என முழங்கினர்

ஆனால் இங்கே இந்த பதிவுகளில் அவ்வாறே உள்ளது...

இந்த தொடர் கவிதை தொகுப்பிற்கு ''கலைஞர் '' ஆய்வுரை

எழுதி உள்ளார் அதில் இன்னாருடைய கவிதை பற்றியதும்..

கவிகள் பற்றியதும் சிறப்பாக செப்பியுள்ளார்...

அவர் அதில் இவ்வாறும் கூறியுள்ளார்...

''ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அக உண்டு.

ஒவ்வொரு கவிதை தொகுதியிலும் ஆயிரம் முகம் உண்டு..''

எனவே இந்த தொடரை பார்த்த பலர் மின்னஞ்சல் ஊடாக

வாழ்த்தையும் இதை இடைவிடாது தொடராய் எழுதவும் என வலியுறத்தியுள்ளார்கள்.

இந்த தொகுப்பை தொடராய் நாம் இட முனைந்த பிறகு

இங்கு விமர்சனமோ...அன்றி மாற்ராரை மழுங்கடித்தலோ குறைந்து விட்டது..நிறுத்தப் பட்டுவிட்டது..

ஏனெனில் அவ்வாறு இங்கு வந்து வாதமிட முனைபவர்கள் அவர்களின் முக திரை இதில்

கிழியும் என்பதால்...

ஆகவே இதை நான் இடுவதில் தப்பில்லை என்கிறேன்..

ஏனெனில்..வாசிப்பு..ஒருத்தனை..ம

  • தொடங்கியவர்

;மு.மேத்தாவின் ''புதுக்கவிதை போராட்டம்...''

என்ற கவிதை தொகுப்பை..இதில் வெளியிடுகின்றேன்...

இந்த கவிதை ஆனந்த விகடனில் பிரசுரமானது...

அதில் மக்களிடை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது...

;;சற்றே இரும் பிள்ளாய் என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையைத் தொடர்ந்து வாசகர்களும்

கவிதைக் களத்தில் குதித்தார்கள். ஆதரவுக்

கட்டுரைகள் 946 வந்தன. 10.543. எதிர்ப்புக் கவிதைகள் வந்தன.

இனி கவிதைக்குள் நுழைவோம்..

சற்றே இரும் பிள்ளாய்....

போதுமய்யா! போதும்- இனிப்

புதுக்கவிதை எழுதாதீர்

பாவம்- அதை விட்டுவிடும்

பழிவந்து சேரும் முன்னே!

சற்றே இரும் பிள்ளாய்

சந்தைக் கடை நடுவே

பொற்றாமரை மலர்தான்

புக்காது ஒரு நாளும்!

''ஒற்றை வரிதன்னை

ஒடித்திரண்டாய்ப் போட்டுவிட்டால்

கவிதை கிடைக்கும் என்று

கனவு கண்ட கவிராயா!

பத்திரிக்கைத் துணுக்காகப்

படம் போட்டு வருவதனை

''புதுக்கவிதை''- என்றிங்கே

புகுத்த வந்த புலவரே!

''ஜோக்குகளைக் கவிதையெனச்

சொல்லி திரிகின்ற

நாக்குகளை அறுக்காமல்

நவ கவிதை பிழைக்காது....(தலைக்கனமா இல்லை சீர் திருத்தமா..?)தொடரும்.....30

  • தொடங்கியவர்

தொடரும்..- 31

காரிகைக் கற்றுக்

கவிபாட போவதிலும்

பேரிகை கொட்டிப்

பிழைப்பதுவே நன்றென்றார்!

நீங்களெல்லாம்

காரிகையும் கற்காமல்

கவிதையும் கற்காமல்

''கவிஞரென்று''

பேரிகை கொட்டியா

பிழைப்பை நடத்துகிறீர்...?

கம்பனை இளங்கோவைக்

கையசைத்து புறம்தள்ளிக்

கொம்பு குலுக்க வந்த

கோமான்கள்!

கவிதையென்றால்

கம்பு கேழ்வரகு

கருப்பட்டி என நினைப்பா?

ஜம்பம் அடிப்பதனால்

தலமை வரும்! தமிழ் வருமா?

அசோக வனத்துக்குள்

அடைபட்ட சீதையைப்போல்

இலக்கணச் சிறைபட்டு

இளைத்திருந்த கவிதையினை

அக்கினிக்குள்ளே மூழ்கி

அயோத்திக்கு கொண்டுவந்தோம்!

நீரோ

வெளுத்து துவைக்க வந்த

விடலைகளாய்க் கூடியிங்கு

காமத்தின் நாக்குகளால்

கசக்கி பிழிந்துவிட்டீர்!

பல்லாக்கு சுமந்துவந்த

பரம ரசிகரெல்லாம்

தாமே பல்லாக்கில்

தாவி அமர்ந்ததினால்

பல்லாக்கு உடைகிறது...

பல்லாக்கில் வந்தவர்கள்

பல்லுமிங்கு உடைகிறது...

பரிதாபம் தெரிகிறது.....!

தொடரும்....- 32

  • தொடங்கியவர்

தொடர்... - 32

''வடமொழியை ஆங்கிலத்தை

வாய்க்குவந்த வார்த்தைகளை

இடையிடையே அள்ளி

இறைத்து வந்த பெரும்புலவீர்!..''

திரைகளினைக் கிழிக்கத்தான்

தெரிவித்தோம் மார்க்கமதை- நீரோ

ஆடையையும் கிழித்தன்றோ

அசிங்கப் படுத்திவிட்டீர்..!

கண்ணில் கனல்தெறித்த

காளையர்கள்! நீங்களெல்லாம்

கத்தினால் போதும்

கவிதை வரும் என்றுரைத்தீர்!

''கவிதை வரவில்லை அங்கு

கழுதை வரப் பார்த்திருந்தீர்!'' :D:):D

குப்பைக் கூடைகளைக்

கொலுவில் வைக்கக் கேட்டதுண்டோ?

துப்பும் வார்த்தையெல்லாம்

கவிதை என ஆவதுண்டோ? :P :P :D

கறைபட்டுச் சமுதாயம்

கண்கலங்கி நிற்கையிலே

உறையென்ற மரபுக்குள்

ஒடுங்கிக் கிடந்திருந்த...

கூர்வாளை உருவிக்

குத்துதற்கு நாம் கொடுத்தோம்;!-

நீரோ

வாளை...வளைத்து

வளையல்களாய் போட்டுவிட்டீர்...! :huh::D

பகைவெட்டும் கத்திகளைப்

பரிசளித்தோம்! நீரதனை

நகம்வெட்டும் கத்திகளாய்

நாடெங்கும் உலவவிட்டீர்!

''சொல்லுடைத்து பிழைக்கும்

துன்மதியை விட்டுவிட்டுக்

கல்லுடைத்துப் பிழைத்தாலும்

கதிமோட்சம் உமக்குண்டு!

தொடரும்...33

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்...- 33

''ஒரு நாள் பதிப்பகத்தில்

உட்கார்ந்து கொண்டிருந்தேன்''

என்னுடைய ரசிகரென

இரண்டொருவர் அங்கு வந்தார்!

ஜந்தாறு புத்தகங்கள்

அவர் வாங்கி கொண்டு சென்றார்

பதிப்பகத்தார் முகத்தினலே

பரவசப்பு புன்சிரிப்பு!

மாதங்கள் ஒன்றிரண்டு

மடியவிழ்ந்து உதறியபின்

பட்டப் பகலொன்றில்

பதிப்பகத்தை நானடைந்தேன்!

முன்னொரு நாள் நான் பார்த்த

மூன்று பேர் அங்கிருந்தார்!

''ஜயன்மீர்! எங்களை நீர்

ஆதரிக்க வேண்டுமென்றார்''!

தலைகால் புரியாமல்- நான்

தடுமாறும் வேளையிலே

பதிப்பாளர்'' இவர்களெல்லாம்

பாவலர்கள்'' என மொழிந்தார்!...

தொடரும் ... 34

((என் கருத்து....

மூத்த கவியென்றேன் உன்னையுரைத்தாய் -நீ

மூர்க்க வரி கொண்டேன் அவரை இழித்தாய்..??

பாவலர் அவரென்னறால்- அந்த

பாவலரை ஏற்க ஏன் நீ மறுத்தாய்..???

உன்னை விட கவியின்று

உலகில் இல்லையென்றோ

மா பாவி நீ அவரை

மழுங்கடிக்க நீ முனைந்தாய்..??

சிந்தனை வாதியென்றேன்

சிகரத்திலேறி முழங்குகின்றாய்

நீ எல்லாம் கவியென்றேன்

இவ்வுலகில் இருக்கின்றாய்...?? )

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்...34

பாவலர்கள் மூவரையும்

பக்குவமாய் நான் பார்த்தேன்

மூன்று கைகளிலும்- தலா

மூவாயிரம் ருபாய்கள்.....

புத்தகமாய் போடுதற்க்குப்

புதுக்கவிதை பரவசத்தில்

பக்கம் பலமிருக்கப்

பதிப்பாளார் பை வசத்தில்...

தமிழின் வளர்ச்சியை- இனித்

தடுக்கவே முடியாது

என்பதனால்

''கம்மென்று நான் இருந்தேன்

கவிவாணார் வாய்மலர்ந்தார்...

''உம்முடைய புத்தகத்தை

ஒரு மாதம் நாம் படித்தோம்

விம்மி விம்மி ரசித்தோம்

விவாதித்தோம்! கவிதையெனும்...

வெள்ளம் எமை இழுக்க

விழுந்து விட்டோம்! கரைசேர

உள்ளபடி எம்குருவே

உதவுவீர்!'' - என்றுரைத்தார்...

''முன்னுரையை வேண்டி நின்றார்

முதலுக்கே மோசம் வரும்

என்நிலையை நானுணர்ந்து

எழுந்து வெளி நடந்தேன்...

தொடரும் - 35

என் கருத்து...

பாவலர் நீர் என்று

பாலகர் நம்பியதால்

மூதாவி உன்னிடத்தில்

முன்னுரை வேண்ட வந்தார்...

காலால் எட்டி உதைத்து

காறியல்லவா நீ உமிழ்ந்தாய் - நீ

பாவலன் என்றேன்- இந்த

பாரினில் இருக்கிறாய்...???

''பக்குவத்தை நீ கொன்று

பாடையில் அனுப்பி விட்டு

கர்வத்தை ஏன் நீ

தலையில் அணிந்து கொண்டாய்..??''

அக்கம் நீ நின்றிருந்தால்

அறை நான் தந்திருப்பேன்

பக்கம் நீ இல்லாததினால்

பா நீ தப்பித்தாய்...

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்.. - 35

''....இவரும் ஒரு கவிஞரென

இருக்கிறார்! ''மண்டையிலே

விவரம் எதுவுமில்லை''

விடுங்கள்...இவரைவிடப்...

பெருங்கவிஞர் பலர் உண்டு

பேரறிஞர் பலர் உண்டு

தருவார்கள் எவ்வுரையும்

தருவதை நாம் தந்துவிட்டால்!

;;சந்திரனோ? சூரியனோ?

சடையப்பன் தன்மகனோ?

செந்தமிழை காப்பதற்க்கு

செங்கிஸ்கான் பிறந்தானோ...?

- என்றெல்லாம் முன்னுரைகள்

எழுதி கொடுப்பார்கள்!

மன்றத்தில் சபை நடுவே

மனசெல்லாம் தான் திறந்து

பாராட்டி பேச ஒரு

பட்டாளம் இங்குண்டு!

''பாரதிக்கு பின்- இவனே

பாரதி என்றுரைப்பார்கள்!

வேறென்ன கவலை...

விட்டு விடும் எம்மிடத்தில்''

என்று

பரோபகாரியான

பதிப்பு கலையரசர்

கூறுகிற வார்த்தை மழை

கொட்டியதென் காதுகளில்!

அடடா...நிலைமை மிக

அவலமாய் போனதென்று

நடந்தால் - அந்த

நட்ட நடுத்தெருவில்...

பத்துப் பேர் கூடியுள்ளார்...

பக்கத்தில் போய் பார்த்தால்

ஒன்பது பேர் புதுக்கவிஞர்!

ஒருவர் அவர் யாரென்றால்...

போகும் வழி கேட்பவராம்

ஊருக்குப்

புதிpதாக வந்தவராம்!

அவ்விடத்தில்

ஜந்தாறு நாளிருந்தால்

அவரும் ஒரு கவியென்பார்!.......

தொடரும்...- 36

என் கருத்து....

உள்ளத்தில் அழுக்கோடு

உலவி திரிகின்ற

கள்ளத் தனம் கொண்டான்

கவியென்றாகலாமோ...???

நெஞ்சத்தில் அழுக்கோடு

பெருங் கவிஞன் தானென்று

பாரினில் ஏறியிவர்

பறையதை அடிக்கலாமோ...??

மூத்த கவியென்று

முன்னாடி வந்து நின்று

முன்னுரை கேட்டு நின்றால்- அவரை

பார்த்து பார்த்துயிவர்

பறந்தடித்து ஓடலாமோ...???

புதிதாய் வந்தவரை

புறம் தள்ளி எறிந்து விட்டு

பள்ள மேடுகளை

பார்த்தேறி ஓடுகிறாய்- நீ

பாவலனா....???

  • தொடங்கியவர்

தொடர் .. - 36

ஆதலினால்-

புத்துலகம் காண்பதற்க்குப்

புறப்பட்ட தோழர்களே!

புதுமைகளை இலக்கியத்தில்

புகுத்த வந்த சீலர்களே!

வித்தகரே! உங்களது

விரல்களை நான் வணங்குகிறேன்!

''போதுமய்யா போதும் இனிப்

புதுக்கவிதை எழுதாதீர்!''

வேலியை கொஞ்சம்

விலக்கியது எதற்கென்றால்

தாலி புதிதாகத்

தமிழுக்குத் தருவதற்கே!

நீரோ

வேலியில்லா வீட்டீல்

வீரர்போல் நுழைந்துவிட்டுத்

தாலியை அறுத்தும்

தரைமேலே வீசிவிட்டுக்

கூலியையும் கேட்டால்

கொழுப்பன்றோ...?

ஞானப் பெருந்தைகையீர்!

நல்லபடி சொல்லுகிறேன்

கட்டயமாய் இனிமேல்

கவிதை எழுதாதீர்.....

தொடரும்... 37

  • தொடங்கியவர்

தொடர்.. - 37

ஆன்ற புதுப் புலவீர்

அடியோனை எதிர்பதற்குச்

சான்றுகளை தேடாதீர்

சரிக்கட்ட ஓடாதீர்!

இறுதியாய் உமக்கிந்த

எச்சரிக்கை செய்கின்றேன்1

உயர்ந்த கவிதைகளையும்

ஒதுக்கும் நிலை வரவேண்டாம்!

''ஊருக்குள் புதுக்கிவிஞன்

ஒருவன் நுழைந்தானேல்

ஊரெல்லாம் கூடி

உதைக்கும் நிலை வரவேண்டாம்!''

போதுமய்யா! போதும்இனிப்

புதுக்கவிதை எழுதாதீர்

பாவம் அதைவிட்டு விடும்

பழி வந்து சேரும் முன்னே.....!

தொடரும் 38....

இவருக்கு வந்த எதிர்ப்பு கவிதைகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

;மு.மேத்தாவின் ''புதுக்கவிதை போராட்டம்...''

என்ற கவிதை தொகுப்பை..இதில் வெளியிடுகின்றேன்...

இந்த கவிதை ஆனந்த விகடனில் பிரசுரமானது...

அதில் மக்களிடை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது...

;;சற்றே இரும் பிள்ளாய் என்ற கவிஞர் மு.மேத்தாவின் கவிதையைத் தொடர்ந்து வாசகர்களும்

கவிதைக் களத்தில் குதித்தார்கள். ஆதரவுக்

கட்டுரைகள் 946 வந்தன. 10.543. எதிர்ப்புக் கவிதைகள் வந்தன.

இனி கவிதைக்குள் நுழைவோம்..

சற்றே இரும் பிள்ளாய்....

போதுமய்யா! போதும்- இனிப்

புதுக்கவிதை எழுதாதீர்

பாவம்- அதை விட்டுவிடும்

பழிவந்து சேரும் முன்னே!

சற்றே இரும் பிள்ளாய்

சந்தைக் கடை நடுவே

பொற்றாமரை மலர்தான்

புக்காது ஒரு நாளும்!

''ஒற்றை வரிதன்னை

ஒடித்திரண்டாய்ப் போட்டுவிட்டால்

கவிதை கிடைக்கும் என்று

கனவு கண்ட கவிராயா!

பத்திரிக்கைத் துணுக்காகப்

படம் போட்டு வருவதனை

''புதுக்கவிதை''- என்றிங்கே

புகுத்த வந்த புலவரே!

''ஜோக்குகளைக் கவிதையெனச்

சொல்லி திரிகின்ற

நாக்குகளை அறுக்காமல்

நவ கவிதை பிழைக்காது....(தலைக்கனமா இல்லை சீர் திருத்தமா..?)தொடரும்.....30

''ஒற்றை வரிதன்னை

ஒடித்திரண்டாய்ப் போட்டுவிட்டால்

கவிதை கிடைக்கும் என்று

கனவு கண்ட கவிராயா!

உண்மையை உண்மையாய் சொல்லியிருக்கார்.....

  • தொடங்கியவர்

தொடர்..38

என் கவிதையை எதிர்த்து

கவிஞர் சீதா பாரதி சீறுகிறார்....

''பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்''

முத்து முத்தாய்க் கண்ணீரை

மு.மேத்தா வடிக்கின்றார்

நித்தம் வளர்ந்து வரும்

நிறை இளைஞர்களைச்

சத்தமிட்டுக் கண்டித்துச்

சபையெல்லாம் முழங்குகின்றார்....

போதுமய்யா இளைஞர்களே

புதுக்கவிதை எழுதாதீர் - என்ற

போர்காலத் தடையை இன்று

பொருத்தமின்றி விதிக்கின்றார்....

தனக்கு நிகர் இல்லையெனத்

தலை தூக்கி திரிந்தோரை

''உமக்கு மட்டும்தான் கவிதை

உரிமையா''? எனக் கேட்க்கப்

புதுப் புதுக் கவிஞர் வந்தால்

பொல்லாய்ப்பாய்க் கருதலாமோ....?

கைப் பணத்தைச் செலவழித்துக்

கவிதை நூல் போடுவதைக்

கடுமையுடன் சாடுகிறார்...

இவர் மட்டும் என்ன செய்தார்...???

கைப்பணத்தை போட்டு

கண்ணீர்ப் புக்கள் எனும்

கவிதை நூல் போட்ட

கதையினை ஏனிவர் மறந்தார்...?

பல்லாக்கு தூக்குகிற

பரிவார ரசிகரெல்லாம்

பாவாணராகி விட்டால்

பல்லாக்கு சுகமெல்லாம்

பறிபோக நெறிடுமோ- என்ற

பயம் பிடித்த காரணமோ...?

விசிறிகள் எல்லோரும்

வேகமாய்க் கவிஞரெனும்

பதவி உயர்வடைந்தால்

பார்த்து மகிழமால்- இந்தப்

பரிதாப் புலம்பல் ஏன்...?

புதுக்கவிதை பலருக்கும்

பொதுச் சொத்து- ஆனால்

அனுபவ உரிமை மட்டும்

அடியெனுக்கு என்று

அடம் பிடித்தால் பயனென்ன...??

தொடரும்- 39

  • தொடங்கியவர்

தொடர் - 39

''என்னை விட்டால் தமிழ்நாட்டில்

எவனுண்டு கவிஞனென்று..?''

பேசித்திரிகின்ற

பெரு மகன்கள் மத்தயிலே...

''உம் நூலைப் படித்ததினால்

உருவானோம் கவிஞர்களாய்'' என்று

உண்மை சொல்லும் இளைஞர்களை

உருக்குலையை விடலாமா..?

முத்தெடுக்கக் கடலுக்குள்

மூழ்குபவர் எல்லோரும்

மூச்சடக்கிக் கொண்டுவரும்

அத்தனை சிப்பியிலும்

ஆணிமுத்து கிடைப்பதில்லை...

அதற்க்காக

மூழ்குவதே தவறென்று

மூத்த கவிஞரெல்லாம்

முனகிக் கொண்டிருக்காலாமோ...?

இப்படித்தான் இன்றைக்கு

இளைய கவிஞர் சிலர்

இலக்கிய கடலுக்குள்ளே

முத்து குளிப்பதற்க்கு

முயற்சிகளை செய்கின்றார்....

மூழ்காதே என்று சொன்னால்

ஆணிமுத்து நம் கைக்கு

அகப்பட போவதில்லை...

தரம் வாய்ந்த நூல்களின்

தடமழிந்து போவதில்லை..

தரமற்ற புத்தகங்கள்

தலைதூக்கி வாழ்வதில்லை...

கவிதைகளின் தலை விதியைக்

காலம் கணிக்கட்டும்..

''கவிதை

எழுதுகிற இளைஞரெல்லாம்

எழுதி கொண்டிருக்கட்டும்...''

இவற்றுள் ஏதேனும்

அன்னை தமிழ் மொழிக்கு

ஆபரண முத்தாக

அகப்படும் காலம் வரும்...

தொடரும்.. - 40

  • தொடங்கியவர்

தொடர் - 40

ஆனந்த விகடனில் பிரசுரமான சில

எதிர்ப்பு கவிதைகள்...

ஆருர் தமிழ் நாடன்...

கவிதைகளைக்

காட்டுக்கனுப்பச் சொல்லும்

சேவர்களின் கட்டளை

செல்லு படியாகாது!

ஏனெனில்-

இவைகளைக் காக்க

இங்கே சில

கவிதை வீரர்களின்

கைகளும்

காத்திருக்கின்றன.

கவிதையானது

எந்தத்

''தாத்தா'' விற்க்கும்

தனியுடமையாகாது!

தொடரும் - 41

  • தொடங்கியவர்

கே. பி. ரசூல்....

ஜம்பம் அடிப்பதனால்

தலமை வரும்

தமிழ் வருமா என்பவரே!

தமிழ் வரும்

நீர் மட்டும்

ஜம்பம் அடிக்கலாமோ..?

தலைமப் பெண்மேல்

உண்மையில்

உமக்கு ஒரு கண்-

இல்லாமலா

''சீதையாய் இருந்த கவிதையை

சிலுக்காக்கி

சினிமாவுக்குக் கொண்டு வந்தீர்...?

முன்னுரை வேண்டுவோரிடம்

முகச்சுழிப்பு ஏனய்யா..?

கவிதை பிள்ளைகளைக்

கருத்தரித்து கொண்டு

பிரசுர பிரசவத்திற்க்காக

நிறைமாத கர்ப்பினியாய்த்

திரிந்த காலையில்....

நீர் மட்டும்

நிமிர்ந்தா நடந்தீர்...?

''நீர் பிடித்தால் தான் கொடி

நாங்களெல்லாம் பிடித்தால்

அது அழுக்கு தணிதனா...?''

தொடரும்...

  • தொடங்கியவர்

ஜான் போஸ்கோ....

இந்தப் பனித்தளிகள்

மீது

இரத்தம் எழுதிப் பார்க்க

ஆசை வரலாமா...?

பல்லாக்கு சுமந்தது

எங்கள் தவற...

என்ன செய்வது

''பதவி சுகம்'' இங்கே

பரிகசிக்கிறது!

உண்மையை சொல்லுங்கள்

ஒடுங்கிய கூர்வாளையும்

சிகை வெட்டும்

கத்தியையும்

எங்களுக்குக்

கொடுத்து விட்டு

உங்கள் கவிதையில்

காதல் காயங்களுக்குத் தானே

கட்டுப் போட்டீர்....?

வேண்டாம் கவிஞரே

இந்த நக்கீர வேடம்!

தொடரும்...

  • தொடங்கியவர்

தொடர்.. - 44

எஸ் . மோகன்

ஓட்டப் பந்தயத்தில்

ஓடுபவர்கள் எல்லாருமே

முதலில் தான் வர வேண்டும்.

கடைசியாய் யாருமே

வரக்கூடாதென்று

கட்டளையிட்டால்

நடக்கிற காரியமா...?

எனக்கு மட்டுமே உரிமையுண்டு.

கைதட்டுவதோடு உங்கள்

கடமை முடிந்ததென்று

கட்டளையிடுபவர்கள்

அஞ்சி நடுங்கியபடி

எழுதுங்கள்

எல்லோருமே எழதுங்கள்...

  • தொடங்கியவர்

தொடர் - 45

ஓரமாய்

தூரமாய்

ஒரு கதைச்சிதைவு!

இது

அந்தக் கவிஞனின்

அறிவுக்கூட்டுக்குள் நிகழ்ந்த

நெரிசல் விபத்து!

பொறாமை வானிலே

ஓரிரு நட்சத்திரங்கள்

உதிர்ந்து விழலாம்...

நிலவும் கூடவா..?

ஓ..! மேத்தாவே

நீங்களும் கூடவா..?

ஒரு சிலர்

உமது வாளை வளைத்து

வளையல்கள் போட்டிருக்கலாம்!

நீர் என்

அதை வைத்த

வளைகாப்பு நடத்துகிறீர்..?

ஒரு நாள்

மகன் தந்தையாகிறான்

ரசிகன் கவஞனாகிறான்

இயற்க்கையை எதிர்த்து

ஏனய்ய புலம்பல்...?

ஒரு வேளை

எங்கள் வரவால்

எப்போதும் போலில்லையோ

உமது வரவு....!

எதிர்கவி புனைந்தவர் -- மரியா

தொடரும் - 46

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.