Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூளைமேடு துப்பாக்கி சூடு - டக்ளஸ் இன்று சாட்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று ஈபிடிபி  செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் செய்துள்ளது. 1986ஆம் இடம்பெற்ற சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானமை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை செசன் மேல்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் செய்துள்ளது. 1986ஆம் இடம்பெற்ற சூளைமேடு துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானமை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டு சென்னை செசன் மேல்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

   

இந்தநிலையில் குறித்த வழக்கில் கைது உத்தரவை பெற்றுள்ள டக்ளஸ் தேவாdந்தா, பாதுகாப்பு கருதி தமிழகம் சென்று சாட்சியமளிப்பதில் விரும்பவில்லை. இதனையடுத்து வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அவருடைய சாட்சியம் இன்று பெறப்படவுள்ளது. இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த சாட்சியப்பதிவு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தில் இருந்து மேற்கொள்ளப்படவுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=152739&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
daklas_devananda_100.jpg
சூளைமேட்டு சம்பவத்திற்கு மூன்றாம் நிலை சாட்சியமளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தார்கள். அதற்கிணங்க இன்று காணொளி உரையாடல் மூலம் சாட்சியமளித்திருந்தேன் என ஈபிடிபி கட்சியின் தலைரும் பாராளுமன்ற உறுப்பினருமான  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சூளைமேட்டு சம்பவத்திற்கும் எனக்கும் நேரடியாக சம்பந்தமில்லை. சம்பவம் நடந்த பிறகுதான் நான் அவ்விடத்திற்கு சென்றேன். நான் அதைப் பார்க்க போயிருந்த பொழுது காயமடைந்த காரணத்தினால் என்னை அதில் சம்பந்தப்படுத்தினார்கள்.

இது தொடர்பாக லங்காசிறி ஊடகம் வினவிய போது டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணை எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லைதெளிவுபடுத்தினார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் நாட்டின் சூளை மேட்டில் 1986ம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் சூளைமேட்டில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சென்னை செசன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து காணொளி மூலமாக சமூகமளித்து விட்டு வருகை தந்தபோது, ஊடகவியலாளர்கள் கேள்விகளை முன்வைத்த போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 1986ம் ஆண்டு சூளைமேட்டில் ஈ.பி.ஆர். எல்.எப் உறுப்பினர்களுக்கும், உள்ளுர்வாசிகளுக்குமிடையே சச்சரவொன்று நடைபெறுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்தே அந்த இடத்துக்குச் சென்றிருந்தேன்.

பொலிஸாரின் வழக்குத் தாக்கலிலும், அந்த வழக்கில் கூட அந்தச் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே அந்த இடத்துக்கு வருகை தந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, கொலைக் குற்றச்சாட்டிலிருந்தும், அங்கு கலகம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்று எனது வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்திருந்தார்.

இன்றைய தினம் தமிழக அரசு சார்பில் முன்னிலைப் படுத்தப்பட்ட நான்கு சாட்சிகளில் மூவர் என்னை அடையாளம் காட்ட முடியவில்லை என்று கூறியிருக்கின்றார்கள்.

ஒருவர் மட்டும் நான் அந்த சம்பவத்தில் காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி மீது மேல் மாடியிலிருந்து துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதே சாட்சியானவர் முன்னர் ஒரு தடவை சாட்சியமளிக்கும் போது, நான் சம்பவத்தின் போது நான்கு பேருடன் சேர்ந்து கீழே இருந்து சுட்டதாகத் தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

எனவே சூளைமேட்டில் நடந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பவமும் இல்லை. ஆனால் இங்கே சில ஊடகங்கள் இச் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது கவலையளிக்கின்றது.

எனவே எதிர்காலத்திலாவது என்னை தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் என்னுடன் தெளிவு படுத்திக் கொண்டு வெளியிட்டு உதவுமாறு நான் ஊடகங்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்த செயலாளர் நாயகம் அவர்கள், சாட்சியங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி அரச தரப்பு குறிப்பிட்ட ஐந்து சாட்சிகளில் மேலும் ஒருவர் அடுத்த தினத்தில் சமுகமளிக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியதோடு வழக்கை இம்மாதம் 1ம் திகதி ஒத்திவைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

daklas_devananda_1.jpg

daklas_devananda_2.jpg

daklas_devananda_3.jpg

daklas_devananda_4.jpg

daklas_devananda_5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.