Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்கா ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தை எச்சரிக்கிறார் மஹிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுடனான 'எட்கா' ஒப்பந்தத்தை படிப்படியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றும், வர்த்தக சமூகத்தினர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும், சாதாரண மக்கள் அதுபற்றி தீர்மானம் எடுப்பதற்காகவும் குறித்த ஒப்பந்தத்தின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (எட்கா) தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுடனான 'எட்கா' ஒப்பந்தத்தை படிப்படியான முறையில் முன்னெடுக்க வேண்டும் என்றும், வர்த்தக சமூகத்தினர் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கும், சாதாரண மக்கள் அதுபற்றி தீர்மானம் எடுப்பதற்காகவும் குறித்த ஒப்பந்தத்தின் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

   

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படவிருக்கும் "எட்கா "ஒப்பந்தம் தொடர்பில் நேற்று விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தமானது படிப்படியாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். முதற்கட்டமாக இரு நாட்டுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் காணப்படும் பிரச்சினைகளை அமுல்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும். இரு நாட்டுக்கும் இடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு தற்பொழுது உக்கிரமடைந்திருக்கும் இருநாட்டு மீனவர் பிரச்சினை இக்காலகட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும். அத்துடன் இலங்கைக்கு திருப்தியளிக்கும் வகையில் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை சில வருடங்களுக்கு கடைப்பிடித்த பின்னர் அடுத்த கட்டமாக "எட்கா" ஒப்பந்தத்தை நோக்கி இலங்கை செல்ல முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் உத்தியோகபூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்டிருக்கும் எட்கா ஒப்பந்தம் தொடர்பான வரைபில் எந்தவிதமான விரிவான தகவல்களும் இல்லை. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் வர்த்தக உறவுகள் முக்கியமானவை. வர்த்தக ஒப்பந்தம் என்பது எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பான நீண்டகால ஆய்வுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். 1998ஆம் ஆண்டு இந்தியாவுடன் செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமுல்படுத்தும்போது எதிர்கொண்ட பிரச்சினைகளை நாம் பாடமாகக் கொள்ள வேண்டும்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு அப்பால் இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இவ்வாறான நிலையில் "எட்கா "ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விடயமும் தெளிவாக இருக்க வேண்டும். சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் போது எமக்குக் கிடைத்த படிப்பினையை நாம் அனுபவமாகக் கொள்ள வேண்டும். எனவே, அரசாங்கம் அவசர அவசரமாக ஒரு சில விடயங்களை முன்வைத்துவிட்டு பின்னர் அது பற்றி பேசலாம் எனக் கூறாமல் சகலவற்றையும் திட்டமிட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்க வேண்டும்.

தற்பொழுது 4000 மில்லியன் அமெரிக்க பெறுமதியான இந்திய பொருட்களுக்கு நாம் சந்தையை வழங்குகின்றோம். இந்தியாவிலிருந்தான ஏற்றுமதி மற்றும் அந்நாட்டுக்கு நாம் அனுப்பும் பொருட்களின் பெறுமதி என்பவற்றில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152880&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பறிவு இல்லை என சொல்கிறார்.

மிகப்பெரிய சந்தை கதவைத்திறக்கிறது. மிகச் சிறிய சந்தை கதவைப் பூட்டிவை என்றால்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.