Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரால் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டிருக்கும் ஈழப் பெண்கள்!

Featured Replies

போரால் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டிருக்கும் ஈழப் பெண்கள்!

08 மார்ச் 2016
Bookmark and Share
 

உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு: குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா:-

போரால் பல்வேறு துயரங்களை சுமந்துகொண்டிருக்கும் ஈழப் பெண்கள்!


இன்று அனைத்துலகப்பெண்கள் தினமாகும். உலகப் பெண்கள் எழுச்சி தினத்திற்கு ஈழத்துப் பெண்கள் மிகவும் உன்னதமான பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஈழப் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு முக்கொடுத்துள்ள நிலையில் ஈழப் பெண்களின் வரலாறு மற்றும் பங்களிப்பு பற்றிய விடயங்களை மீளப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.


வெறும் பன்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அடிமைகளாகவும் பார்க்கப்பட்ட தமிழ் பெண்கள் நவீன உலகத்தில் ஆளுமை மிக்க பெண்களாக உருவெடுத்திருக்கிறார்கள். அதிலும் நவீன உலகின் பொருளாதார அரசியல் மோதல்களிலும் உரிமைகளுக்கான போர்க்களங்களிலும் ஈழத்துப் பெண்கள் வகிக்கும் இடமானது, ஈழத்துப்பெண்களை பெரும் கவனத்திற்கும் அர்த்தத்திற்கும் உள்ளாக்கியிருக்கிறது.


சரிநிகராய் நின்ற பெண்கள்


ஈழத்து மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் ஈழப்பெண்கள் சரிநிகரான இடத்தை வகித்தார்கள். பெண் என்ற அடையாளத்தினால் எழும் அடையாளச் சிக்கல்களை ஆயுதப்போராட்டம் கடக்க உதவியது. ஈழத்துப் பெண்கள் இலக்கத்தியத் துறையிலும் களப் போராட்டப் பணிகளிலும் மனித உரிமைக்காக குரல் எழுப்பிய எழுச்சிகளும் தமிழ் மக்களின் வரலாற்றில் தனித்துவமான இடத்தை கொண்டிருக்கிறார்கள். தவிர உலகப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து முற்றாக விலகி பன்பாட்டுச் சித்திரங்களாகவும் சமூக அமைப்புக்களின் மரபுச் சட்டங்களுக்குள் சிக்குண்டவர்களாகவும் இருந்த பொழுது ஈழப் புரட்சி ஈழப்பெண்களை அத்தகைய நிலையிலிருந்து மீட்டது.


ஈழத்து மண்ணில், ஈழ மக்களின் போராட்டங்களில் இந்தப் பெண்கள் உழைத்த தருணங்களும் அதற்காக அவர்கள் கொல்லப்பட்ட தருணங்களும் மனித உரிமைகளுக்காக வாழ்ந்த தருணங்களும் அதிகமானது. 'சிங்களச் சகோதரிகளே இனி உங்கள் யோனிகளுக்கு வேலை இல்லை' என்று எழுதியவர் ஈழப் பெண்கவிஞர் கலா. 'கோணேஸ்வரிகள்' என்ற அவரது கவிதை மட்டடக்களப்பில் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு யோனியில் குண்டு வைத்து சிகதறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கோணேஸ்வரி என்ற குழந்தைகளின் தாயான பெண் பற்றி ஆவேசத்துடன் குறிப்பிடுகிறது.


கோணேஸ்வரி, சாரதாம்பாள், கிருஷாந்தி, தர்சினி, இசைப்பிரியா என்று பல பெண்கள் இராணுவ வலயங்களில் இப்படி வன்புணர்ந்து கொல்லப்பட்டவர்கள். பேசாலை, அல்லைப்பிட்டி போன்ற பல இடங்களில் மக்கள் கொலை செய்யப் பட்ட பொழுது பெண்கள் இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னும் வன்புணரப்பட்டார்கள்.


1996களில் செம்மணிப்புதைகுழியில் பல பெண்கள் இப்படி கொன்று புதைக்கப்பட்டார்கள். வன்னி யுத்தத்தில் பலபெண்கள், சிறுமிகள், போராளிப் பெண்கள் இப்படி புணர்ந்தழிக்கப்பட்டார்கள். உரிமைகள் மீறப்பட்டன. ஈழப்பெண்கள் இலங்கை அரசால் அழித் தொழிக்கப்பட வேண்டும் என்றும் ஒடுக்கப்பட வேண்டும் என்று முக்கிய இலக்குகளாக மாறிப் போயிருக்கின்றன. இலங்கையில் இன அழிப்பின்போது பெண்கள் முக்கிய இலக்குகளாகப்பட்டு அழிக்கப்பட்டது. அவர்களின் உரிமைகள் மீறப்பட்டன.


இவைகளுக்கு எதிராகவும் ஈழப் பெண்கள் எழுந்தனர். பெண் பூமி உருவாகும் உடல் என்ற வகையில் புனிதம் பெறுகிறது. பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் பெண் குறித்து மிகவும் பின்தங்கிய கருத்துக்களை விதைத்த ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஈழப்பெண்கள் தமிழ் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் புதிய அடையாளத்தை கொடுத்திருந்தார்கள். ஈழப் பெண்கள் களப் போராளிகளாக சாதனை நிகழ்த்திருந்தார்கள்.


போராளிகளாய் உருவெடுத்த பெண்கள்


காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் பெண் போராளியான ஈ.பீ.ஆர்.எல்.எவ் சோபாவுக்கு அடுத்து மாலதி ஈழப் போராட்டத்தில் முதன் முதல் மாவீரர் என்ற அடையாளத்தை பெறுகிறார். அங்கயற்கன்னி முதன் முதலில் கரும்புலியாக தற்கொலையாக வெடித்து எதிர்தரப்பை அழித்தவர். சோதியா, விதுசா, துர்க்கா, சுரேந்தினி, பூபாலினி, தமிழகி, திவாகினி போன்ற பல ஈழப் பெண் போராளிகள் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டக் களத்தில் முக்கிய பங்கை வகித்திருக்கிறார்கள்.


இவர்கள் போர்கள ஆற்றலும் வலிமையும் கொண்ட பெண்களாக பரிணமித்தவர்கள். பெண் பற்றிய தவறான கருத்து வளர்க்கப்பட்ட தமிழ் சமூகத்தில் இப்படியான போராளிப் பெண்களின் எழுச்சி நிலைகள் புதிய அர்த்தத்தையும் நம்பிக்கையும் வலிமையுடன் சமூகத்திற்கு ஊட்டியிருந்தன. தமிழ் இலக்கியத்தில் கவிதையில் ஈழப்பெண்கள் பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழகம் தமிழ் இலக்கியத்தில் முன்னோடி என்ற பொழுதும் ஈழத்துப் பெண்களின் கவிதைகளின் எழுச்சியே முழுத் தமிழுக்கும் நவீன தமிழ்ப் பெண் கவிதைகள் பற்றிய அர்த்தத்தை மெய்ப்பித்திருந்தன.


சங்கரி, ஒளவை, சிவரமணி, செல்வி, சன்மார்க்கா, மைத்திரி என்று தொடங்கும் ஈழப்பெண் கவிதை வரலாறு தமிழகத்து பெண்கவிதைகளில் கடும் தாக்கத்தை செலுத்தியிருந்தன. ஈழப் பெண்கவிதைகள் போர்க்களத்தின் உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் வலிய குரல்களாக கிளம்பின. கப்டன் கஸ்தூரி, கப்டன் வானதி, மேஜர் பாரதி போன்ற போராளிப் பெண்கவிஞர்கள் போர்க்கள அனுபவங்களை வீரச்செறிவுடன் மனிதாபிமானக் குரல்களுடன் எழுதினார்கள்.


செல்வி, சிவரமணி போன்ற பெண்கவிஞர்கள் போர்க்களத்திற்கு வெளியில் இருந்து போர்வாழ்வையும் மனிதாபிமானச் சிதைவுகளையும் மிக வலிய குரல்களில் எழுதினார்கள். மனிதாபிமானமற்ற ஈழ நிலத்தை கண்டு சிவரமணி தன்னை தானே எரித்து கொலை செய்து கொண்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியான செல்வி மனிதாபிமானத்திற்காக கேள்வி எழுப்பியதனால் கொல்லப்பட்டவர். அதேபோல் ஒரு வைத்திய கலாநிதியாக யாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய போதும் 80களின் பிற்பகுதியில் வடக்கில் தோன்றிய அனைத்து அராஜகங்களுக்கும் எதிரான தனது குரலை உயர்த்திய ரஜனி திரணகமவும் கொல்லப்பட்டார்., தமிழ்கவி, தமிழவள், வெற்றிச்செல்வி, உலகமங்கை, ஆதிலட்சுமி போன்றவர்களும் ஈழத்தின் முக்கியமான பெண் ஆளுமைகளாகும்.


ஈழத்து பெண்களின் கவிதை போக்குகளும் இலக்கியப் போக்குகளும் பண்டைய இலக்கிய மரபிலிருந்து முழுமையாக பார்வை நிலையிலும் குரல் எழு நிலையிலும் மாறுபட்ட எழுச்சியைக் கொண்டிருந்தன. இலக்கியம் ஆண்களால் படைக்கப்பட்டு ஆண்களுக்கானதாக ஆண் ஆதிக்கத்தில் இருந்த பொழுது பெண்களுக்கான குரல்களையும் ஆண்களே படைத்துக் கொண்டிருந்தனர். ஈழப் பெண்கள் இந்த மரபையும் பாரம்பரியத்தையும் தகர்த்து பெண் அடையாளத்தை இலக்கியத்தில் நிறுவினார்கள்.


பின்னைய காலத்தில் தமிழ்நதி, அனார், பஹீமாஜஹான், பிரதீபா, மாதுமை, பானுபாரதி, கற்பகம் யசோதரா, ஆழியாள், றஞ்சினி, நிவேதா, வினோதினி, மலரா, தாட்சாயினி போன்ற பல பெண்கள் எழுத்துலகில் முக்கிய பதிவுகளை நிகழ்தினார்கள். இவர்களின் எழுத்துக்களும் பார்வைகளும் பெண் உடல் மொழி, பெண் மனவெளிகள், பாலியல் உலகம், பாலியல் விடுதலை, பெண் பற்றிய ஆணின் அதீதங்கள், அடக்குமுறை வாழ்வு போன்ற பல விடயங்களைக் குறித்து தெளிவாக உரத்துப் பேசியிருக்கின்றன.


போருக்குப் பிறகு பெண்கள்


போருக்குப் பிந்திய இன்றைய ஈழத்து சூழலில் பெண்கள் மீண்டும் அடக்கப்படுகிற ஒடுக்கப்படுகிற பாலியல் பொருட்களாக பாவிக்கப்படுகிற நிலைகள் அதிகரித்துள்ளன. பாலியல் துன்புறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக சிறுமிகள்மீது பாலியல் பலாத்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. போருக்குப் பிந்தைய சூழலில் திட்டமிட்ட பாலியல் பலாத்காரங்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் என்பன அதிகரித்துள்ளன. இவைகள் கட்டுப்படுத்தப்படாமல் ஊக்குவிக்கப்படும் நிலையும் தமிழர் பகுதிகளில் காணப்படுகின்றன.


முழு இராணுவ வலயமாக்கப்பட்டு ஈழ நிலத்தில் சிறுமிகள், பெண்கள், கணவரை இழந்த பெண்கள், முன்னாள் பெண்போராளிகள் என்று சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலமைக்கு பெண்கள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பெண்நிலைச் செயற்பாடுகளும் பெண் எழுத்துக்களும் இன்று ஈழத்தில் தடைப்பட்டுள்ளன. பல அனுபவங்களும் சாதனைகளும் கண்ட ஈழப் பெண் சூழலில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் இத்தகைய துயரங்கள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.


போரினால் 90ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதைவிட பல ஆயிரம் பெண்களது கணவன்மார் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர். போரில் கணவனை இழந்த பெண்கள், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் மனைவிகள், போரில் அநாதரவாக்கப்பட்ட பெண்கள், போரில் உடல் அவயகங்களை இழந்த பெண்கள் என ஈழப் பெண்கள் பல்வேறு நிலையில் துன்புறுகின்றனர். இவர்களது வாழ்வை மேம்படுத்த உரிய திட்டங்கள் எவையும் மேற்கொள்ளப்படாத நிலையும் தொடர்கின்றன.


தாயாகவும் யுவதியாகவும் குழந்தையாகவும் பெண்கள் இன்று அனுபவிக்கும் இன்னல்கள் மிகவும் கொடுமையானவை. எண்பதுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலைப் போராட்ட எழுச்சியினைத் தொடர்ந்து ஏற்பட்டபெண் நிலை சார்ந்த எழுச்சிகளும் முனைப்புக்களும் உரையாடல்களும் நடவடிக்கைளும் - தேச வீழ்ச்சியும் சமூக வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ள இன்றைய ஈழத்து பெண் சூழலில் மீண்டும் அவசியமாகின்றன என்பது இன்றைய உலகப்பெண்களின் தினத்தில் உணரப்பட வேண்டியது அவசியமாகிறது.


குளோபல் தமிழ் செய்திகளுக்காக ஆதிரா

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129789/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.