Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோசித ராஜபக்ஸ பிணையில் விடுதலை!

Featured Replies

யோஷிதவுக்குப் பிணை
 

article_1457930026-sas.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுதியான இரண்டு சரீரப்பிணை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி ஏ.ஏ. ஹேயந்துடுவ அனுமதித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/168089/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A3-#sthash.W9wWkgPe.dpuf

நிஷாந்த தவிர்த்து யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு பிணை கிடைத்தது!

நிஷாந்த தவிர்த்து யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு பிணை கிடைத்தது!

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐவர் கடந்த ஜனவரி மாதம் 30ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கடுவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களில், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு இன்று பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இவர்களை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், நீதிமன்றத்தின் அனுமதி இன்றி சந்தேகநபர்கள் வௌிநாடு செல்லவும் தடை விதித்துக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் தனியாக பிணை மனு தாக்கல் செய்துள்ளதாகவும், ஏனைய நால்வருடனும் அவரது பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் அவரது பிணை மனு குறித்த விசாரணை இன்று பகல் இடம்பெறவுள்ளது.
 

நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ உட்பட நால்வரும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யோசித ராஜபக்ஸ உட்பட நால்வருக்கும், ஒரு லட்சம் ரூபா ரொக்க பிணையிலும், பத்து லட்சம் ரூபா படி இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்ற உத்தரவின்றி இவர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

இவர்களில் நிசாந்த ரனதுங்கவிற்கு பிணை வழங்கப்படவில்லை. இதற்குக் காரணம் அவர் தனது பிணைமனுவை தனியாக தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது நிசாந்த ரனதுங்கவின் மனைவியும் மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmuyDSYSXnv5I.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.